கடையநல்லுாருக்கு வந்த கடத்தல் கப்பலும் கோபாலனும்
ஒருவர் இறந்துவிட்டார் என்பதற்காக அவரை புகழ்ந்து தள்ள வேண்டுமா?
" மண்ணாசை , பெண்ணாசை உள்ளிட்ட அனைத்து ஆசைகளையும் துறந்வர்களை துறவி என்பார்கள். ஆனால் துறவி என சொல்லிக்கொள்ளும் உங்கள் பெருக்கு முன்னால் வீரத்துறவி என பட்டம் போடுவது சரியா?
https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post.html
இராம கோபாலன் இறந்து விட்டார் ஆகவே அவரது நற் செயல்களை மட்டுமே பேச வேண்டும் என்று ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் யார்? கூலிக்கு மாரடிக்கும் கூடாரத்தில் தவ்ஹீது வேடதாரிகளாக இருந்து வரும் வேடதாரிகளில் ஒரு வேடதாரியாக இருந்த கள்ள தவ்ஹீதி.
இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான நம்ரூது, ஷத்தாது, பிர்அவ்ன் பட்டியலில் உள்ளவர்தான் இராம கோபாலன்.
அபுஜஹ்லும் அவனது கூட்டத்தாரும் இறந்த உடன் ரசூல்(ஸல்) அவர்கள் அவர்களது நற்செயல்கள் பற்றி பேசவில்லை.
அபுஜஹ்லும் அவனது கூட்டத்தாரும் கூட ரசூலுல்லாஹ் பற்றி கூறாத நாகூசும் வார்த்தைகளை கூறியவன்.கூறும் கூட்டத்தை உருவாக்கியவன் இராம கோபாலன்,
1997ல் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த இராம கோபாலன், முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கடையநல்லுாருக்கு கடத்தல் கப்பல் வருகிறது என்றார்.
கடையநல்லுாரில் கடலே இல்லையே எப்படி கப்பல் வரும்? என்று ஒரு நிருபர் எதிர் கேள்வி கேட்டார்.
உடனே கோபம் அடைந்த இராம கோபாலன், நான் சொல்லறதை மட்டும் கேளுங்கள் எதிர் கேள்வி எல்லாம் கேட்கப்படாது என்றார். இப்படிப்பட்டவர்தான் இராம கோபாலன்.
இதன் பின்னரும் போகின்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம்கள் நிறைந்து வாழும் கடையநல்லுாருக்கு கடத்தல் கப்பல் வருகின்றது என்ற கதையை சொல்லாமல் இருந்தது இல்லை.
இராம கோபாலனுடன் எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம்! என்று ஒரு முன்னாள் நிருபர் எழுதியதைக் கண்டேன். அதைத் தரும் முன். ஒரு விஷயம்.
இராம கோபாலன் முஸ்லிம் அல்லாதவர் என்பதால் அவரை விமர்சிக்கவில்லை. முஸ்லிமாக இருந்தாலும் நாம் விமர்சிக்காமல் விட்டதில்லை.
சண்டமாருதம் என்று புகழ்ப்பட்ட முஸ்லிம் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். அவரைப் பற்றி 1985லும் அதன் பிறகு 1993ல் மீள் பதிவாகப் போட்டதை நினைவுபடுத்தினோம். இதோ அந்த நினைவூட்டல். எழுத்து வடிவிலும் பைலாகவும்
---------------------------
மிக்க ஆவலுடனும் பரபரப்பான எதிர்பார்ப்புகளுடனும் துவங்கிய அவரது உரையின் ஆரம்பத்திலேயே காலையிலிருந்து உரையாற்றிய அத்தனை சொற்பொழிவாளர்களின் கருத்துக்களிலும் ஒரு துளி நஞ்சைக் கலந்தார்.
இரண்டு நபர்களுக்கிடையே எப்போது நட்பு உருவாக முடியும் என்பதை விளக்கத் தலைப்பட்டவர், இருவருக்கிடையே நட்பு உருவாவதற்கு அவ்விருவருக்கும் சமமான தகுதியும், தரமும் இருப்பது அவசியம் என்று புதுமை (?) விளக்கம் தந்தார்.
எங்கேயோ ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த ஒருவன் மீது பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் அய்யூப் கானுக்கு அன்பு ஏற்பட்டதாம். உடனே அவனை பாகிஸ்தானுக்கு வரவழைத்து, அவனது தரத்தை தனது தரத்திற்குச் சமமாக உயர்த்தினாராம்.
பிறகு தான் அவன் மீது நட்பு கொண்டாராம். ஆமாம்! பாகிஸ்தானுக்கு எப்போது இரண்டு அதிபர்கள் இருந்தார்கள் என்பது நமக்குப் புரியவில்லையே! என்றெல்லாம் நீங்கள் கேள்வி கேட்கக் கூடாது. பேசாமல் அந்தக் கருத்தாழம் மிக்க உரையை (?) தலையை ஆட்டிக் கொண்டு ரசிக்க வேண்டும்.
ஆம்! அப்படித் தான் மேடையிலிருந்த பெரும் பெரும் தலைப்பாகைகள் எல்லாம் ஆடிக் கொண்டிருந்தன. அவர் எடுத்து வைத்த ஆதாரத்தின் அடிப்படையில் அல்லாஹ் ஒருவர் மீது நேசம் கொள்ள வேண்டுமானால் அவரைத் தனது தரத்திற்கு உயர்த்திய பிறகு தான் நேசம் கொள்கிறானாம். சமமான தகுதியுடைய இருவருக்கு மத்தியிலேயே தவிர நட்பு மலர வழியே இல்லையாம்.
அண்ணலாருடன் அவர்கள் தம் தோழர்கள் நட்பு கொண்ட போது அவர்கள் அனைவரையும் அண்ணலாரின் தரத்திற்கு உயர்த்தப் பட்டதா? அல்லது அண்ணலார் அவர்கள் நிலைக்கு இறங்கி வந்தார்களா? என்று யாரும் கேட்கவில்லை. நீங்களும் கேட்காதீர்கள்.
அத்தோடு விடவில்லை, அந்த மகானுபவர்! இங்கே கூடியிருப்பவர்கள் அனைவரையும் அல்லாஹ்வின் தரத்திற்கு உயர்த்தி அவர்களை அவனது தோழர்களாக மாற்றி விட்டுத் தான் இந்தக் கூடடம் கலையும் என்று வேறு பிதற்றினார். தட்டிக் கேட்க ஆளில்லாத வீட்டில் தம்பி சண்டப்பிரசண்டம் செய்த கதை தான்.
இவைதான் 1985லும் அதன் பிறகு 1993ல் மீள் பதிவாகப் போட்டது
இனி இராம கோபாலனுடன் எனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவம்! என்று ஒரு முன்னாள் நிருபர் எழுதியது எனக்கு வாட்ஸப்பில் வந்தது அதை காணுங்கள்.
1998-ம் ஆண்டு நான்
கரூரில் தினமணி நாளிதழ் செய்தியாளராக பணிபுரிந்தபோது இந்து முன்னணி சார்பில் பிரஸ்மீட் நடத்தப்பட்டது.
செய்தியாளர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட இராம. கோபாலன், செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது பெயர், பணிபுரியும் நாளிதழின்
பெயரைக் கூறி அறிமுகம் செய்யுமாறு தெரிவித்தார். அதன்படி, எனக்கு இடதுபுறம்
அமர்ந்திருந்த மாலை முரசு செய்தியாளர் கவிஞர் கோ செல்வம் தனது பெயர் மற்றும்
பணிபுரியும் பத்திரிகையின் பெயரை கூறிவிட்டு அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து நான்
எழுந்து நின்று எனது பெயர் மற்றும் பணிபுரியும் நாளிதழின் பெயரை கூறி அறிமுகம்
செய்து விட்டு சேரில் அமர்ந்தேன். அதைத்தொடர்ந்து, எனக்கு அடுத்து அமர்ந்திருந்த
தினகரன் செய்தியாளர் சொக்கலிங்கம் எழுந்து தன்னை அறிமுகம் செய்தார். ஆனால், அவர் சொல்வதை
கவனிக்காமல், என்னையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இராம. கோபாலன், செய்தியாளர்
சொக்கலிங்கத்தை உட்காரும்படி தனது கையால் சைகை செய்து விட்டு, "உங்கள் பெயர்
என்ன? மீண்டும் ஒருமுறை கூறுங்கள்" என என்னிடம் கூறினார். அதற்கான காரணத்தை
உணராத நான் மீண்டும் எழுந்து 'எஸ்.இர்ஷாத் அஹமது, செய்தியாளர், தினமணி' என
அறிமுகம் செய்து விட்டு அமர்ந்தேன். இப்போது நண்பர் சொக்கலிங்கம் எழுந்து நின்று மீண்டும் அறிமுகம்
செய்ய முயன்றபோது 'கொஞ்சம் பொறுங்க' என அவரை மீண்டும் தடுத்து நிறுத்திய இராம
கோபாலன், என்னைப் பார்த்து, "நீங்க எப்படி தினமணியில்? " எனக் கேட்டார்.
என்னை ஏன் இரண்டாவது முறையாக அறிமுகப்படுத்திக் கொள்ள கேட்டார் என்பது அப்போது
தான் புரிந்தது.
என்னை செய்தியாளராக
பார்க்காமல் ஒரு இஸ்லாமியனாக அவர் பார்க்கிறார் என்பதை உணர்ந்த நான், " அதை
நீங்கள் எங்கள் எடிட்டரிடம்தான் கேட்கணும்' எனக் கூறி விட்டு அமர்ந்தேன்.
தினமணி நாளிதழில் ஓரு
இஸ்லாமியர் பணிபுரிவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. பேட்டி முடியும் வரை
அவ்வப்போது என்னை ஒருவித சிந்தனையுடன் பார்த்துக்கொண்டே இருந்தார். எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாக
இருக்கவே கடைசிவரை நான் அவரிடம் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அமைதியாக உட்கார்ந்து
மற்றவர்களின் கேள்விக்கான அவரது பதில்களை குறித்துக்கொண்டேன்.
பேட்டி முடிந்தபின்
அனைவரும் எழுந்து நின்று புறப்படத் தயாரான போது, இராம கோபாலன் அவர்கள் என்னை சுட்டிக்காட்டி, ' நம்ம நண்பர்
கடைசிவரை என்னிடம் கேள்வி எதுவுமே கேட்கவில்லையே? ' எனக்கூறினார். அத்தோடு
நிறுத்தாமல், நீங்கள் ஏதாவது கேள்வி
கேட்டால்தான் உங்களுக்கு என் மீது
எந்த வருத்தமும் இல்லை என அர்த்தம் ஆகும். நான் சந்தோசமடைவேன்' என கூறினார்.
எனக்கு அவர்மீது எந்த கோபமும் வருத்தமும் கிடையாது என நான் கூறியபோதும், அவர் அதை
ஏற்றுக் கொள்ளவில்லை. "எனது திருப்திக்காக நீங்கள் ஏதாவதொரு கேள்வி கேளுங்க. நீங்கள் என்ன
கேள்வி கேட்டாலும் நான் வருத்தப்படமாட்டேன்' எனக்கூறி கேள்வி கேட்குமாறு
வற்புறுத்தினார்.
அதைத் தொடர்ந்து நான், " மண்ணாசை ,
பெண்ணாசை உள்ளிட்ட அனைத்து ஆசைகளையும் துறந்வர்களை துறவி என்பார்கள். ஆனால் துறவி என சொல்லிக்கொள்ளும் உங்கள்
பெருக்கு முன்னால் வீரத்துறவி என பட்டம் போடுவது சரியா? எனக் கேட்டேன்.
இதைச் சற்றும் அவர்
எதிர்பார்க்கவில்லை. கோபத்தில் அவர் முகம் சிவந்தது. என்னை முறைத்துக்கொண்டே,
"நான் போடவில்லை. என்மீது உள்ள அன்பு காரணமாக தொண்டர்கள் தான் வீரத்துறவி என
போடுகிறார்கள்" என பதில் அளித்து சமாளிக்க முயன்றார்.
நான் விடவில்லை. "
பெயருக்கு முன்னால் பட்டம் போடக்கூடாது என கூறி தொண்டர்களை தடுத்து இருக்கலாமே. அப்படியானால் நீங்கள்
அதுபோன்ற பட்டங்களை பார்த்து மனதுக்குள் ரசிக்கிறீர்கள் என்றுதானே நினைக்கத்
தோன்றும்" என்றேன்.
கொஞ்ச நேரம் என்னை
முறைத்துப்பார்த்த இராம கோபாலன், " நீங்கள் சொல்வதும் சரிதான். அனைத்து
ஆசைகளையும் துறந்வர்களை துறவி என்பார்கள். அந்த வகையில் ஒருவேளை நான் வீரத்தை
துறந்தவன் எனக்கருதி வீரத்துறவி என போடுகிறார்கள் என நினைக்கிறேன் " என
பதிலளித்துவிட்டு மிகவும் சிரமப்பட்டு புன்முறுவல் செய்துவிட்டுப் புறப்பட்டுச்
சென்றார். அத்துடன் அவர் சும்மா
இருக்கவில்லை. சென்னை திரும்பியதும் முதல் வேலையாக எனது அலுவலகத்தில் என்மீது புகார் செய்துவிட்டார்.
அவர் புகார் செய்தது
எனக்குத் தெரியாது. ஆறு மாதங்கள் கழித்து ஒருநாள் நான் சென்னை அலுவலகத்துக்கு
போனேன். என்னிடம் பேசிக் கொண்டிருந்த தினமணி ஆசிரியர் இராம. திரு. சம்பந்தம்
திடீரென, " ஆமாம்ப்பா.. உனக்கும் இராம கோபாலனுக்கும் என்ன பிரச்சனை? "
என்றார். இதைச் சற்றும் எதிர்பாராத நான் 'ஒரு பிரச்சனையும் இல்லை' எனக்கூறி
சமாளிக்க முயன்றேன். அதற்கு அவர், ஒரு பிரச்சனையும் இல்லாமலா அவர் தினமணி
நிர்வாகியின் புகார் செய்வார் என்றார். அப்போது தான் இராம கோபாலன் என்மீது புகார்
செய்திருப்பது எனக்குத் தெரிந்தது. எனவே, கரூரில் பிரஸ்மீட்டில் நடந்தவற்றை உள்ளது உள்ளபடி கூறினேன்.
அதைக்கேட்டு சிரித்தபடியே ரசித்த ஆசிரியர் சம்பந்தம், " நீ சரியா தான்
கேட்டிருக்கப்பா... அவன் கிடக்கிறான்... அந்த புகாரை நான் பார்த்துக் கிறேன். நீ எதைப்பற்றியும்
கவலைப்படாமல் வேலையை பாருப்பா" எனக்கூறி என்னை வழியனுப்பி வைத்தார் .
Comments