2:66க்கு 20 அறிஞர்கள் குழுவினரால் தர முடியாத பதிலுக்கு PJ தந்த பதிலும் விளக்கமும்.


2:66 வசனத்திற்கு  இலக்கண ரீதியான கீழ் காணும் கேள்வி இரு மவுலவிகளிடமிருந்து  15-08-20ல் வந்தது. 


அந்தக் கேள்வி  இதில் உள்ளபடி 20 அறிஞர்கள்  குழுவை நோக்கியே இருந்தது. ஆகவே  சம்பந்தப்பட்டவர்களுக்கு  அனுப்பினோம். பதில் வரவில்லை. 

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/266-20-pj.html



அதனால் TNTJல் உள்ள மேலப்பாளையம்  அமீன் போன்ற எனக்குத் தெரிந்து TNTJல் உள்ளவர்களுக்கும். TNTJயினர்களோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் அனுப்பினோம்.

இணைப்பில் உள்ள ஸ்கிரீன் ஷாட் பைல்களை பார்த்துக் கொள்ளுங்கள்.


 TNTJல் உள்ள 20 அறிஞர்கள் குழுவிடம் கேட்டு  பதில் விளக்கம் தரும்படி கூறி இருந்தோம்.  யாராலும் பதில் பெற்று தர முடிந்ததில்லை.  


2:66க்கு தாருல் ஹுதா  உமர் ஷரீப் காஸிமி மொழி பெயர்ப்பு பற்றியும் கேள்வி  வந்தது.  

பாவப்பரிகாரம் - தண்டனை செயலுக்கா?செயலை செய்தவருக்கா?


என்ற கேள்வியை தாருல் ஹுதா (பஷீர்)  வாட்ஸப்புக்கும் அனுப்பினோம்   பதில் வரவில்லை. 


எனவே  தாருல் ஹுதா  உமர் ஷரீப் அவர்களுடன் நெருக்கமாக உள்ள நமது நண்பர் அதிரை அபுபக்கர் அவர்களுக்கு 11-09-20 வெள்ளியன்று பேசி  அனுப்பினோம். இணைப்பில் உள்ள பைலையும் அனுப்பினோம்.




அவரும்  தாருல் ஹுதா  உமர் ஷரீபிடமிருந்து  பதில்  பெற்றுத் தரவில்லை.  


TNTJல் உள்ள அமீன் போன்றவர்கள். பீ.ஜே.யிடமே விளக்கம் கேளுங்கள் என்று கூறி விட்டார்கள். ஆகவே  நமக்கு கேள்விகளை அனுப்பிய மவுலகளிடம் கேள்வியை  PJ யை  நோக்கியதாக ஆக்கி அனுப்புங்கள் என்றேன். 


மதிமுகம்  T.V.ல் நாம் கேட்டுள்ள மாதிரி கேள்வியை பீ.ஜே.யை நோக்கியதாக  அனுப்பினார்கள். அதைத்தான் வீடியோவாக பார்க்க உள்ளீர்கள். 

https://www.youtube.com/watch?v=MgWQwq0x34g


பீ.ஜே.க்கு அனுப்பட்ட கேள்வி.

இந்த 2:66ல் லிமா பைன யதைஹா வமா ஃகல்Fபஹா  என்ற அந்த வார்த்தைக்கு 

 

 

அதற்கு முந்தைய காலத்திற்கும்  அதற்கு பிந்தைய காலத்திற்கும் என்று மொழி பெயர்க்கக் கூடிய சொல் தான் அது.  

 
யதைஹா என்றால் முன்னாலும் கல்பஹா என்றால்  பின்னாலும்  என்ற பொருள் வரக் கூடிய வார்த்தைகள் தான் அது.

ஆனால்  உங்கள்  20 அறிஞர்கள் குழுவும் சேர்ந்து மொழி பெயர்த்ததாக கூறி உள்ளதில்   அக்காலத்தவருக்கும்,  அடுத்து வரும் 
காலத்தவருக்கும்  என்று மொழி பெயர்த்து உள்ளார்கள்.
அதற்கான விளக்கம் கிளார்ப்பிகேஷன் என்ன?

 
யதைஹா யதைஹி என குர்ஆனில் எத்தனையோ இடங்களில் வருகின்றன அங்கே எல்லாம் அதற்கு முன்னால் என்றே 20 அறிஞர்கள் குழுவும் மொழி பெயர்த்து உள்ளார்கள்.
 
2:97. 2:255. 3:3. 3:50 5:46 5:48. 6:92. 7:17.  7:57. 10:37
 
ஹா,  ஹி இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது ஹா பெண்பாலைக் குறிக்கும்  ஹி ஆண்பாலைக் குறிக்கும்  
 இது ஒரு மவுலவியின் விமர்சனம்.

---------------------
 
லிமா பைன யதைஹா வமா ஃகல்Fபஹா  என்பதற்கு 20 அறிஞர்கள் குழு. மனிதர்களாக மொழி பெயர்த்து உள்ளார்கள்
 
இணைப்பில் உள்ள மொழி  பெயர்ப்பில் அந்த மொழி பெயர்ப்பாளர் பாவம் என்று செயலுக்கு  மொழி பெயர்த்து உள்ளார்
 
ஆட்களுக்கு பாவப்பரிகாரம் என்கிறார்கள்  20 அறிஞர்கள் குழுவினர்
அவரோ செயலுக்கு  பாவப்பரிகாரம் என்கிறார்.
மா பைன என்பது உயர்திணை அல்ல அஃறிணை
 
லிமன்,வமன்
 
லிமன் பைன யதைஹா வமன் ஃகல்Fபஹா என்று சொன்னால்தான் உயர்திணையாகப் பயன்படுத்த முடியும்

அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும்  என்று சொல்ல முடியும் அதாவது உயர்திணையாக சொல்ல முடியும்

திணை இருவகைப்படும் உயர்திணை, அஃறிணை
உயர்திணை: மக்களைக் குறிக்கும் சொல் ...
மக்கள் அல்லாத உயிருள்ள, உயிரற்ற அனைத்தும் அஃறிணை ஆகும்
மற்றவர்கள் மொழி பெயர்த்தது பற்றி கேள்வி கேட்க மாட்டோம்  பீ.ஜே. மட்டும் என்றாலும் கேட்க மாட்டோம்

அக்காலத்தவருக்கும், அடுத்து வரும் காலத்தவருக்கும்  என்று ஆட்களாக  மொழி பெயர்த்தது 20 அறிஞர்கள் குழுவினர் சேர்ந்து செய்த மொழி பெயர்ப்பு என்றதால் கேட்கிறோம்.

 மாபைன என்பது உயர்திணை அல்ல அகறிணை (அஃறிணை
இது போன்ற  கேள்விகளை ஈ.முஹம்மது போன்ற அறிஞர்களுக்கு அனுப்பியதால் எனது வாட்ஸப்பை பிளாக் செய்து விட்டார்கள். ஆகவேதான் அவர்களை அறிஞர்களாக ஏற்றுள்ளவர்கள் மூலம் கேட்கிறோம்
76;6க்கும் அந்த அடிப்படையிலேயே கேட்டோம்


இதற்கான  பீ.ஜே. பதில்  காண இந்த யூடியூப் லிங்கை கிளிக் செய்யுங்கள்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு