முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பார்த்து என்ன சொன்னான்?

பெரியார்கள்,  நாதாக்கள்,  ஸலபுகள், இமாம்கள்,  தலய்வர்கள், முப்திகள் என்று மக்களால்  நம்பப்படும்  மனிதர்கள்   விளங்கியவய்கள்   அவர்கள்  உள்ளத்தில் தோன்றியவய்கள்    மார்க்கம் ஆகாது.  


இதற்குரிய ஆதாரங்களய் ஆதித் துாதர் ஆதம்(அலய்) அவர்கள் மூலம் மனித சமுதாயத்துக்கு இடப்பட்ட முதல்  கட்டளய்யிலும்  கண்டோம். 


இறுதித் துாதர் முஹம்மது(ஸல்) அவர்களய்யும் நம்மய்யும் நோக்கி சொல்லப்பட்டுள்ள கட்டளய்களிலும்  கண்டோம்.  

https://mdfazlulilahi.blogspot.com/2020/10/blog-post_11.html

இதில் அல்லாஹ், முஹம்மது நபி(ஸல்) அவர்களய் நோக்கி  என்ன   கட்டளய் இட்டுள்ளான்?  என்பதய் பார்ப்போம்.

Fபஹ்கும்  பய்னஹும் பிமா அன்Zஸலழ்ழாஹ்

--- அல்லாஹ் அருளியதன் அடிப்படய்யில்  அவர்களிடய்யே தீர்ப்பளிப்பீராக!  என்றே கட்டளய்  இட்டுள்ளான். 


இதய்த்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களய்  நோக்கி இடப்பட்ட இந்தக் கட்டளய்யய்த்தான்   நன்கு  சிந்தித்துப்  பார்க்க வேண்டும்.  


முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பல சிறப்புக்கள் உடைய இறுதித் துாதராக இருந்தாலும் அவர்களய்யும்  பார்த்து அல்லாஹ்  என்ன சொல்லி உள்ளான்? 


ஆதம்(அலய்) அவர்களய் நோக்கி என்ன  சொன்னானோ அதே மாதிரிதான்  சொல்லி உள்ளான். 


உங்கள் மனதில்  தோன்றியதன்  அடிப்படய்யில் நீங்கள் தீர்ப்பு அளித்து விடக் கூடாது. 


காத்தமுன் நபி அவர்களே! நீங்கள் எனது கடய்சி துாதராக இருந்தாலும்  அல்லாஹ்வாகிய நான் இறக்கிய சட்டத்தய்க் கொண்டே நீங்கள் தீர்ப்பு அளிக்க வேண்டும்.


முத்திரய் நபி(ஸல்) அவர்களாக இருந்தாலும் கூட அல்லாஹ் அருளியதன் அடிப்படய்யில் தான் தீர்ப்பு கொடுக்க வேண்டுமே தவிர அவர்கள் விருப்பப்படி தீர்ப்பு கொடுக்கக் கூடாது.


சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் உடய்யது. அல்லாஹ்வின் சொல்லான வேதத்தில் உள்ளதய்க் கொண்டுதான் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

அல்லாஹ்விடமிருந்து வராத நபியின் மனதுக்கு நல்லது என்று பட்டதய் நபியின்  இஷ்டத்துக்கு  தீர்ப்பாக கூறி விட முடியாது.


அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள உண்மய்யய் (குர்ஆன் கூறும் சட்டத்தய்) அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சய்களய்ப்  பின்பற்றி  விடக் கூடாது.

 

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கய்த் திட்டத்தய்யும், வழியய்யும் அல்லாஹ்தான் ஏற்படுத்தி உள்ளான்.

இவய் மனிதர்கள்  மண்டய்யில் கருவாகி உருவான கற்பனய்க்  கட்டுக் கதய்கள் அல்ல.   

அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள  குர்ஆனில்  அல் மாயிதா - உணவுத் தட்டு என்ற  அத்தியாயத்தின்  48வது வசனத்தின் கரு.  அதில் இருந்து உருவானது தான்  நீங்கள் கண்டது.

.

இந்த வசனத்தில் உள்ள கட்டளய்கள்  ரசூலுல்லாஹ்வய்ப்  பார்த்து  இடப்பட்ட  கட்டளய்கள்  என்றாலும்  நம்மய்யும்  உள்ளடக்கும்.  


ரசூலுல்லாஹ்வுக்கே இந்தக் கட்டளய் என்றால், நம்மால்  நாதாக்கள்,   பெரியார்கள்,   ஸலபுகள், இமாம்கள்,  தலய்வர்கள், முப்திகள் என்று   அழய்க்கப்படும்  மனிதர்கள்   விளங்கியவய்கள்   அவர்கள்  உள்ளத்தில் தோன்றியவய்கள் எப்படி     மார்க்கம் ஆகும்?.  


இறுதி நபியய் நோக்கி இடப்பட்ட இந்த கட்டளய் இடம் பெற்றுள்ள  வசனத்தய் வார்த்தய்க்கு வார்த்தய் பாருங்கள். 


முன்னதாக  முழு வசனத்தய்ப் பாருங்கள். காப்பி பேஸ்ட்டாகவே  தந்துள்ளோம்.


உண்மையை உள்ளடக்கிய வேதத்தை உமக்கு அருளினோம். அது தனக்கு முன்சென்ற வேதத்தை4 உண்மைப்படுத்துவதாகவும், அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது.


எனவே அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் அவர்களிடையே தீர்ப்பளிப்பீராக!

 

உம்மிடம் வந்துள்ள உண்மையை அலட்சியம் செய்து அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்!

 

உங்களில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம்.

 

அல்லாஹ் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும் உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக484 (அவ்வாறு ஆக்கிடவில்லை.) எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் முரண்பட்டது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.


இறுதி துாதரய் நோக்கி இவ்வளவு தெளிவாகக் கூறி இருக்க.  இதய் அவர்களே மொழி பெயர்த்து இருக்க.

பெரியார்கள்,  நாதாக்கள்,  ஸலபுகள், இமாம்கள்,  தலய்வர்கள், முப்திகள் என்று மக்களால்  நம்பப்படும்  மனிதர்கள்  விளங்கியவய்கள்  அவர்கள்  உள்ளத்தில் தோன்றியவய்கள்  எப்படி  அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாக எடுத்துக் கொள்கிறார்கள்?

وَاَنْزَلْنَاۤ - வஅன்Zஸல்னா 

அருளினோம் - இறக்கினோம்  (நாங்கள் கீழே இறங்கினோம்)

اِلَيْكَஇலய்க 

உமக்கு - உங்களுக்கு (உனக்கு)

الْكِتٰبَஅல்கிதாப 

வேதத்தய் (புத்தகங்கள்)

بِالْحَـقِّபில்ஹக்கி 

உண்மய்யய் உள்ளடக்கிய உண்மய்யய்க் கொண்டுள்ள

مُصَدِّقًا -முஸத்திஃகன்  

உண்மய்ப்படுத்துவதாக - மெய்ப்படுத்தக் கூடியதாக (சரிபார்க்கப்பட்டது)


لِّمَا بَيْنَ يَدَيْهِ -ல்லிமா பய்ன யதய்ஹி

தனக்கு முன்சென்ற - தனக்கு முன்னுள்ளதய் - முன்னிருந்த (அவரது கய்களுக்கு இடய்யில்)

مِنَ -  மின

இருந்து

الْكِتٰبِ அல்கிதாபி 

வேதம் - வேதத்தய் (புத்தகங்கள்)

وَمُهَيْمِنًاவமுஹய்மினன் 

பாதுகாப்பதாகவும் - பாதுகாக்கக் கூடியதாகவும்

عَلَيْهِ ஃஅலய்ஹி 

அதய் - அவய்களய்  (அவர் மேல்)

فَاحْكُمْ Fபஃஹ்கும்

எனவே (ஆகவே)  தீர்ப்பளிப்பீராக! -  (உங்களுக்கு தீர்ப்பளிக்கவும்) 

 بَيْنَهُمْ - பய்னஹும் 

அவர்களிடய்யே - அவர்களுக்கு மத்தியில்

 بِمَاۤ اَنْزَلَ - பிமாஅன்Zஸல 

அருளியதன் அடிப்படய்யில் - இறக்கியதய்க் கொண்டே (கீழே அனுப்பப்பட்டவற்றோடு)

 اللّٰهُ -அழ்ழாஹ் 

وَلَا تَتَّبِعْ -வலா தத்தபிஃ 

பின்பற்றாதீர்! -  பின்பற்ற வேண்டாம்

اَهْوَآءَ அஹ்வாஃஅ

மனோ இச்சய்களய்ப் - விருப்பங்களய்

هُمْ -ஹும்

அவர்களின் - அவர்களுடய்ய (அவர்கள்) 

عَمَّا   ஃஅம்மா 

எதய்விட்டு

جَآءَكَஜாஃஅக 

உம்மிடம் வந்துள்ள - உமக்கு வந்தது 

مِنَ الْحَـقِّ‌ؕ- மினல் ஹக்கி  

உண்மய்யய் - உண்மய்யிலிருந்து 

لِكُلٍّ லிகுல்லி 

ஒவ்வொரு(வருக்கும்)

جَعَلْنَا ஜஃஅல்னா  

ஏற்படுத்தியுள்ளோம்   


مِنْكُمْ மின்கும் 

உங்களில் (உன்னிடமிருந்து)

شِرْعَةً ஷிர்ஃஅதன் 

திட்டத்தய் - ஒரு மார்க்கத்தய்(மரபய்)

وَّمِنْهَاجًا ‌ؕ- வமின்ஹாஜன் 

வழியய் - வழிமுறய்யய்

وَلَوْ شَآءَ வலவ்ஷாஃஅ 

நினய்த்திருந்தால் - நாடி இருந்தால் (அவர் விரும்பினால்)


اللّٰهُ -அல்லாஹ் 


 لَجَـعَلَـكُمْ -லஜஅலகும் 

உங்களய்  ஆக்கியிருப்பான் (உங்களய் உருவாக்கி) 

 اُمَّةً -உம்மதன் 

சமுதாயம் 

 وَّاحِدَةً -வாஹிததன்

ஒரே

 اُمَّةً وَّاحِدَةًஉம்மதன் வாஹிததன் 

ஒரே சமுதாயம் 

وَّلٰـكِنْ -வலாகின் 

எனினும் - ஆனால்


 لِّيَبْلُوَ -ல்லியப்லுவ

சோதிப்பதற்காக

كُمْ- கும்

உங்களய்

 لِّيَبْلُوَكُمْல்லியப்லுவகும் 

உங்களய்ச் சோதிப்பதற்காக


 فِىْ مَاۤ اٰتٰٮكُمْ -Fபீமா ஆதாகும்

உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் (கொடுத்தவற்றில்0 


فَاسْتَبِقُوا -Fபஸ்தபிஃகூ

எனவே  முந்திக் கொள்ளுங்கள்! - ஆகவே முந்துங்கள்


الْخَـيْـرٰتِ‌ؕ - அல் ஃகய்ராதி 

நன்மய்களுக்கு - நன்மய்களில் 

اِلَى - இல (இது துணய்ச் சொல் தனித்து பொருள் தராது)

யிடம் - பக்கம் 

   اللَّهِ -  அல்ழாஹி

அல்லா

إِلَى اللَّهِ -இலழ்ழாஹி 

அல்லாஹ்விடம் -அல்லாஹ்வின் பக்கம்

 مَرْجِعُكُمْ -மர்ஜிஉகும் 

நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டும் - உங்கள் மீளுமிடம்


جَمِيْعًا -ஜமீஅன் 

அனய்வரும் - யாவரும் - எல்லாரும் - ஒட்டுமொத்தமாக


فَيُنَبِّئُكُمْ -Fபயுனப்பிஃவுகும் 

உங்களுக்கு அறிவிப்பான் 

بِمَا -பிமா 

எதய்

كُنْتُمْ குன்தும் 

இருந்தீர்கள்

 فِيْهِ -Fபீஹி 

அதில் 

تَخْتَلِفُوْنَۙ‏ தஃக்தலிFபூன

முரண்படுகிறீர்கள் - மாறுபட்டீர்கள்





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு