இப்பொழுது சொல்லுங்கள் தஃகீது சொற்களை மொழி பெயர்க்காமல் விட்டவர் யூதக் கைக்கூலி என்றவர்கள்.
யாருமே தஃகீது சொற்களை மொழி பெயர்க்காமல் விட்டதில்லை என்று அடித்துப் பேசியவர்கள் நிலை என்ன?
காரைக்கால் ஆ.கா.அப்துல் ஹமீத் பாகவி, தென்காசி E.M. அப்துர் ரஹ்மான் நூரிய்யி, பாஜில் பாகவி போன்றவர்கள் உட்பட நாம் எடுத்துக்காட்டி உள்ள 13 தர்ஜமாக்கள் 13.
அந்த மொழி பெயர்ப்பு பணியில் ஈடுபட்ட இந்தியா, ஸ்ரீலங்கா மௌலவிகள் 100க்கும் மேற்பட்டவர்கள். அவர்கள் அனைவரும் தஃகீத் சொற்களை மொழி பெயர்க்காமல் தான் விட்டுள்ளார்கள்.
எதனால் தஃகீத் சொற்களை மொழி பெயர்க்காமல் விட்டார்கள் என்ற விளக்கங்களை அவர்கள் சொல்லவில்லை.
விளக்கம் சொல்லி உள்ள பீ.ஜே.யை மட்டும் விமர்சிக்கிறார்கள். பீ.ஜே. காயல்பட்டிணத்தில் அளித்த விளக்க வீடியோ இணைப்பில் உள்ளது.
இன்ன, அன்ன போன்றவற்றை.வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்க்க இயலாது.
இன்ன, அன்னவுக்கு நிச்சயமாக என்ற பொருள் கிடையாது என்பதை பல முறை விளக்கி விட்டோம்.
ஆகிய தலைப்புகளிலும் இன்ன, அன்ன பற்றி விளக்கி உள்ளோம்.
இந்த வசனத்தில் நான்கு இடங்களில் வாவு இடம் பெற்றுள்ளது. இது பற்றியும் 2:5 2:38
2:39 2:40.ஆகிய வசனங்களின் சொல்லுக்கு சொல்லில் விளக்கி உள்ளோம்.
وவாவுக்கு இன்னும் மேலும் என்று மொழி பெயர்க்க வேண்டும் என்று விளங்கி உள்ளவர்கள் கருத்துப்படி நாம் இணைத்துள்ள 15 தர்ஜமாக்கள் அத்தனையிலும் 4 இன்னும் மேலும் இருக்கின்றதா? என்று ஆய்வுடன் படியுங்கள்.
وவாவு இடத்துக்கு தக்கவாறுபல அர்த்தங்கள் தரக் கூடிய இடைச் சொற்களில் ஒன்றாகும்.
ஒரு வார்த்தையின் துவக்கமாகவோ முடிவாகவோ வரும்போதுபொருள் தராது. ஒரு வார்த்தையின் துவக்கம் முடிவு என விளங்கிக் கொள்ள வேண்டும். என்ற விளக்கப்படியே உள்ளதை புரிவீர்கள்.
இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை. - (PJதொண்டி)
இதற்குப் பின்னும் உங்களுடைய உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவைகளைவிடக் கடினமானவைகளாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. (பிளந்தால்) வெடித்து அதிலிருந்து நீர் புறப்படக் கூடியவைகளும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக்கூடியவைகளும் அவற்றில் உண்டு. (ஆனால் யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. = (ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி,காரைக்கால்)
இதன்பின்னரும்உங்கள்இதயங்கள்இறுகிவிட்டன, அவைகற்பாறையைப்போல்ஆயினஅல்லது, (அதைவிடவும்)அதிகக்கடினமாயின (ஏனெனில்) திடமாகக்கற்பாறைகள்சிலவற்றினின்றுஆறுகள்ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சிலபிளவுபட்டுத்திடமாகஅவற்றினின்றுதண்ணீர்வெளிப்படக்கூடியதுமுண்டு. இன்னும், திடமாகஅல்லாஹ்வின்மீதுள்ளஅச்சத்தால்சில(கற்பாறைகள்) உருண்டுவிழக்கூடியவையும்உண்டு. மேலும், அல்லாஹ்நீங்கள்செய்துவருவதுபற்றிகவனிக்காமல்இல்லை. - ஜான் டிரஸ்ட்
பிறகு,உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகிவிட்டன.அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் மிகக் கடின மானவையாக உள்ளன.
நிச்சயமாக கற்களில் நதிகள் பீறிடக்கூடியவையும் திட்டமாக உண்டு.
நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு.
நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் ( உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பற்றி கவனமற்றவனாக இல்லை. - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)
அப்பால்
உங்களுடைய இதயங்கள் இதற்குப் பின்னும் (கல் நெஞ்சாகி) கடினமாகி விட்டன; அவை, கற்பாறையைப்
போல் அல்லது இறுக்கத்தால் (அதைவிட) மிகக் கடினமாக இருக்கின்றன (ஏனென்றால்) கற்பாறையிலும்
அதிலிருந்து தானாக ஆறுகள் வெடித்து பாய்ந்தோடிக் கொண்டிருப்பவைகளும் உண்டு; நிச்சயமாக
அதில் விரிசல் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து தண்ணீர் வெளிப்படக்கூடியதும் உண்ட;. நிச்சயமாக அதில் அல்லாஹ்வின் பயத்தால் (உருண்டு) கீழே விழக்கூடியதும் உண்டு; மேலும்,
அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி பாராமுகமானவனல்லன். =(அல்-மதீனா அல்-முனவ்வரா)
ஆனால் இத்தகைய சான்றுகளை நீங்கள் பார்த்த பின்னருங்கூட
உங்கள் இதயங்கள் இறுகிவிட்டன. அவை கற்களைப் போல் ஆகிவிட்டன. ஏன் அவற்றை விடவும் மிகக்
கடினமாகி விட்டன. ஏனெனில் சில கற்களில் இருந்துகூட நீரூற்றுகள் பொங்கி எழுகின்றன; இன்னும்
சில கற்கள் பிளந்து அவற்றிலிருந்து தண்ணீர் வெளிப்படுகின்றது. இன்னும் சில அல்லாஹ்வின்
அச்சத்தால் நடுங்கி கீழே விழுந்து விடுகின்றன. நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இழிசெயல்கள்
பற்றி அல்லாஹ் கவனமற்றவனாய் இல்லை. - (இஸ்லாமிய
நிறுவனம் டிரஸ்ட் -IFT)
இவ்வளவுக்குப் பின்னரும் உங்கள் உள்ளங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறையைப்போல், -அல்ல;அல்ல - அதை விடவும் அதிகக் கடினமாகி விட்டன. (ஏனெனில்) சில கற்பாறைகளின் வழியே நதிகள் சலசலத்தோடுவதுண்டு. பிளவுபட்டுத் தண்ணீர் வெளிப்படக் கூடியபாறைகளும் உள்ளன. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் ஆடிப்போய் விழக்கூடிய கற்பாறைகளும் உள. அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி மெத்தனமாக இல்லை.- - (அதிரை ஜமீல்)
from Muqrin date Jan 17, 2008 9:20 PM subject மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்? mailed-by gmail.com தூய்மையானவன் ஆகிய அல்லாஹ் மறுமை நாள் வரும்போது மனிதனை அவனது வால்போன்ற ஓர் எலும்பிலிருந்து மீண்டும் உயிர்ப்பிர்த்து எழுப்புவான். மக்கள் அனைவரும் வித்துக்களிலிருந்து செடிகள் முளைத்து வருவதைப்போன்று புத்தம் புதிய படைப்பாக எழுந்து வருவார்கள். செருப்பணியாதவர்களாக , ஆடை உடுத்தாதவர்க ளாக, விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக கப்ருகளில் இருந்து வெளிப்பட்டு வருவார்கள். வண்ணத்துப் பூச்சிகள் அல்லது வெட்டுக்கிளிகளின் வேகத்தில் மஹ்ஷர் மைதானத்தை நோக்கி விரைந்தோடுவார்கள். அம்மைதானத்தின் வழியை அவர்கள் தவறவிட மாட்டார்கள். காட்டுப்புறாக்கள் தங்கள் இலக்கை அறிந்திருப்பதை விட அவர்கள் அம்மைதானத்தின் வழியை நன்கறிந்திருப்பர். முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்காகவே பூமி வெடித்துத் திறக்கும். அவர்களே முதன் முதலாக உயிர் கொடுக்கப்படுவார்கள். அல்லாஹ்வின் நேசராகிய இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுவார்கள். மக்கள் அனைவரையும் பயமும் திகிலும் ஆட்கொண்டிருக்கும். ந
1959ல் மொழி பெயர்க்கப்பட்ட தப்ஸீரின் ஒரு பக்கத்தை சேம்பிளுக்காக இதில் இணைத்துள்ளோம். நான் என்பதை அக்காலத்தில் யான் என்று எழுதி உள்ளார்கள் என்பதை இந்த பக்கத்திலிருந்து அறியலாம். அக்னி, நெருப்பு, தீ நரகம், நரக நெருப்பு என்று அவரவர் கால வழக்கப்படி மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 141 ஆயத்துகளில் உள்ள அந்த வித்தியாசமான மொழி பெயர்ப்புகளை புளு - நீல கலரில் ஹை லைட் செய்து பிளாக்கரில் இடம் பெறச் செய்துள்ளோம். குர்ஆன் இன்டக்ஸ் முன்பு அஃராப், அநியாம், அக்கிரமம், அநியாயம் என்ற தலைப்புகளில் 4 பாகம் வெளியிட்டுள்ளோம். இது 5வது பாகம் https://mdfazlulilahi.blogspot.com/2019/11/blog-post.html 1. ஒருவன் நெருப்பை - தீயை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அவர்களின் ஒளியைப் போக்கி , பார்க்க முடியாமல் இருள்களில் அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது. 2:17. 2. நிச்சயமாக – திண்ணமாக உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு
தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு [ "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனும் வார்த்தைக்கு "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்" எனும் அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர்.] தினமும் நாம் ஓதுகின்ற திருமறைக் குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்த பேரறிஞர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள் திருமறைக் குர்ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம் அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள். அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள். 26. 11. 1876ம் ஆண்டு பிறந்த
Comments