2:26. குர்ஆன் வழிகெடுக்குமா? வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு
யுழில்லு பிஹி கதீ(ஸீ)ரன் இதைக் கொண்டு (இதன் மூலம்) பலரை வழிகெடும்படி செய்கிறான். இது 2:26.வது வசனத்தில் உள்ள ஒரு பகுதி. இந்த ஒரு பகுதி வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு. குர்ஆன் வழி கெடுக்கும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
"இதன் மூலம்'' என்றுள்ளதை "இந்தக் குர்ஆன் மூலம்'' என்கிறார்கள். இப்படி சொல்பவர்கள் அப்பாவி மக்கள் அல்ல. மக்களால் ஆலிம்கள் என்று சொல்படுபவர்கள் தான் பிரச்சாரம் செய்தார்கள், செய்கிறார்கள். குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கம் என்பவர்களுக்கு எதிராக பேசியவர்கள் தான் இப்படி பிரச்சாரம் செய்தார்களா?
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/226.html
குர்ஆன் ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொன்ன அறிஞர்கள் குழுக் கூட்டமும். இப்படி பிரச்சாரம் செய்து இருக்கிறார்கள். குர்ஆன் வழி கெடுக்கும் என்றபோது குர்ஆன் வழிகெடுக்குமா? என்ற சந்தேகம் இருந்தது. அஹ்லே குர்ஆன்களை பார்த்த பிறகு இந்த சந்தேகம் நீங்கி விட்டது. இப்படி அஹ்லே குர்ஆன்களுக்கு எதிராக பேசும்போது கூறி இருக்கிறார்கள். .
அல்லாஹ்வோ குர்ஆன் நேர்வழி காட்டக் கூடியது மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காகத் தான் குர்ஆனை அருளினேன், வழிகெடுப்பதற்காக அல்ல என்று குர்ஆனில் பல இடங்களில் பல முறை கூறியுள்ளான்.
குறிப்பாக குர்ஆன் அருளப்பட்ட ரமழான் மாதத்தில் நோன்பை கடமையாக்கிக் கூறும் 2:185. வசனத்தில். இது போன்ற கருத்துடையவர்கள் மண்டையில் குட்டிக் கூறுவது போல் கூறுகிறான்.
மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். என்று.
ஆகவே "இதன் மூலம்'' என்றுள்ளதை "இந்தக் குர்ஆன் மூலம்'' என்று பொருள் கூறுபவர்கள் பெரும் பாவத்தைத் தான் செய்கின்றார்கள்.
2:26. ல் ஒரு உதாரணத்தைக் கூறுகிறான் அல்லாஹ். அதன் பிறகு தான் "இதன் மூலம் வழி கெடுப்பான்' என்று கூறுகிறான்.
எனவே "இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "இவ்வுதாரணத்தின் மூலம்' என்று பொருள் கொள்வதே சரியாகும். "இதன் மூலம்' என்ற சொற்றொடருக்கு "குர்ஆனின் மூலம்' என்று பொருள் கொள்ள முடியாது.
ஏனெனில் இந்த வசனத்தில் குர்ஆனினைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை என்பதில் அறிஞர்களில் சிறந்தவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
மேலும் இதில் இடம் பெற்றுள்ள 14 மொழி பெயர்ப்புகளையும் பார்த்து தெளிவு பெறுங்கள்

இனி சொல்லுக்கு சொல்
إِنَّ - இன்ன
திண்ணமாக - திடமாக – திடனாக- திட்டமாக - உறுதியாக - நிச்சயமாக
اللَّهَ - அல்லாஹ்
இறைவன்
لَا يَسْتَحْيِي - லா யஸ்தஃஹ்யிய்
வெட்கப்படமாட்டான் - வெட்கப்படுவதில்லை - வெட்கங் கொள்வதில்லை. - வெட்கமடையமாட்டான்
أَن يَّضْرِبَ - அன் யழ்ரிப
அவன் ஆக்குவான் - அவன் கூறுவதற்கு - (உதாரணம்) காட்டுவதற்கு
مَثَلًا - மத(ஸ)ல(ன்)ம்
உதாரணமாக - உவமையாக
مَا - மா-
எதை - எது
بَعُوضَةً - பஃஊழதன்
கொசு
மா தனியாகவும் பஃஊழதன் தனியாகவும் தரும் பொருளைப் பார்த்தோம். அதுவே மா பஃஊழதன் என்று சேர்ந்து வரும்பொழுது தரும் பொருளைப் பாருங்கள்.
مَّا بَعُوْضَةً - மா பஃஊழதன்
கொசுவைக் கூட -கொசுவையோ,
فَ - Fப
இன்னும்
مَا - மா எதை - எது
فَوْقَ -Fபவ்ஃக
மேல் - மேலே
هَا -ஹா
அதற்கு
அதற்கும் மேற்பட்டது -அதற்கும் மேலாக இது நேரடி பொருள் என்றாலும். இந்த இடத்தில் அதை விட அற்பமானதையோ என்று தமிழாக்கம் செய்வதே பொருத்தமானது. எளிதில் புரியும் தமிழ் என்ற கருத்துடைய அறிஞர்களும் இருக்கிறார்கள்.
அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ , அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும், (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட, அதற்கு மேல் அற்பமான என்று தமிழாக்கம் செய்தவர்களும் இருக்கிறார்கள்.
فَأَمَّا - Fபஅம்மா
எனவே - ஆகவே
الَّذِينَ - அல்லதீ(ரீ)ய்ன
எவர்கள் - அவர்கள்
آمَنُوا - ஆமனுா
நம்பிக்கை கொண்டோர்
فَيَعْلَمُونَ - Fபயஃலமூன
அறிவார்கள் - அறிந்து கொள்கின்றனர் - அறிந்து கொள்வார்கள். - புரிந்து கொள்வார்கள்.
أَنَّهُ - அன்னஹு
உறுதியாக அது
الْحَقُّ - அல் ஹஃக்கு
உண்மை - சத்தியம் -மெய்
مِن - மின்
இருந்து From –லிருந்து
رَّبِّهِمْ - ரப்பிஹிம்
தங்கள் (தமது - தம்) இறைவனிடம்
وَأَمَّا - வஅம்மா
எனவே - ஆனால் - எனினும் - ஆகவே
الَّذِينَ كَفَرُوا - (அ)ல்லதீ(ரீ)ய்ன கFபரூவ்
காஃபிராகிவிட்டார்களே (மறுக்கும் - நிராகரிக்கும் ) அவர்கள்
فَيَقُولُونَ - Fபயஃகூலுான
கூறுவார்கள்
مَاذَآ - மாதா(ராா)
என்ன? - எதை?
أَرَادَ - அராத
நாடுகிறான் - நாடுகிறான் பி
اللَّهَ - அல்லாஹு
இறைவன்
بِ - பி
கொண்டு - மூலம்
هَٰذَا - ஹாதா(ரா)
இதை - இதன் - அது - இது
بِهٰذَا - பிஹாதா(ரா)
இதன் மூலம் - இதைக் கொண்டு
مَثَلًا ۘ - மத(ஸ)ல(ன்)
உதாரணமாக - உவமையாக
يُضِلُّ - யுழில்லு
வழிகேட்டில் விடுகிறான்.- வழிகெடும்படியும் செய்கிறான்.- வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்;
بِهِ - பிஹி
இதன் மூலம் - இதைக் கொண்டு
كَثِيرًا - கதீ(ஸீ)ரன்
பலரை - அதிகமானவர்களை -அநேகரை
وَّ - வ
وَّ - வ
இன்னும் - மேலும்
يَهْدِي - யஹ்தி
நல்வழிப்படுத்துவான் - நல்வழிப்படுத்துகிறான் - நேர்வழியில் செலுத்துகிறான் - நேர்வழி நடத்துகிறான்
بِهِ - பிஹி
இதன் மூலம் - இதைக் கொண்டு
كَثِيرًا - கதீ(ஸீ)ரன்
பலரை - அதிகமானவர்களை -அநேகரை
وَ - வ
இன்னும் - மேலும்
وَ - வ
இன்னும் - மேலும்
مَا يُضِلُّ- மா யுழில்லு
வழிகேட்டில் விடமாட்டான்
வழிகேட்டில் விடமாட்டான்
بِهِ - பிஹி
இதன் மூலம் - இதைக் கொண்டு
اِلَّاۤ- இல்லாாா
தவிர
الْفَاسِقِينَ - (அ)ல்பாஸிகீ(ன)ன்
குற்றம் புரிவோர்- தீயவர்கள்- பாவிகள் - கசடர்கள் - தீச்செய்கையுடையவர்கள்
குற்றம் புரிவோர்- தீயவர்கள்- பாவிகள் - கசடர்கள் - தீச்செய்கையுடையவர்கள்
இனி இணைத்துப் படிப்போம் அரபியில்
اِنَّ اللّٰهَ لَا يَسْتَحْـىٖۤ اَنْ يَّضْرِبَ مَثَلًا مَّا بَعُوْضَةً فَمَا فَوْقَهَا ؕ فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا فَيَعْلَمُوْنَ اَنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّهِمْۚ وَاَمَّا الَّذِيْنَ ڪَفَرُوْا فَيَقُوْلُوْنَ مَاذَآ اَرَادَ اللّٰهُ بِهٰذَا مَثَلًا ۘ يُضِلُّ بِهٖ ڪَثِيْرًا وَّيَهْدِىْ بِهٖ كَثِيْرًا ؕ وَمَا يُضِلُّ بِهٖۤ اِلَّا الْفٰسِقِيْنَۙ
அரபு தெரியாதவர்கள் தமிழ் அரபியில் படியுங்கள்
இனி தமிழாக்கங்களை காணுங்கள். அரபு தெரியாதவர்கள் தமிழ் அரபியில் படியுங்கள்
இன்னல்லாஹ லா யஸ்தஃஹ்யிய் அன் யழ்ரிப மத(ஸ)ல(ன்)ம் மா பஃஊழதன் Fபமா Fபவ்ஃகஹா Fபஅம்மால்லதீ(ரீ)ய்ன ஆமனுா Fபயஃலமூன அன்னஹுல் ஹஃக்கு மின் ரப்பிஹிம் வஅம்மால்லதீ(ரீ)ய்ன கFபரூவ் Fபயஃகூலுான மாதா(ராா) அராதல்லாஹு பி ஹாதா(ரா) மத(ஸ)ல(ன்) யுழில்லு பிஹி கதீ(ஸீ)ரன் வ யஹ்தி பிஹி கதீ(ஸீ)ரன் வ மா யுழில்லு பிஹி இல்லாால் பாஸிகீ(ன)ன்
கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமையாகக் கூறுவதில் அல்லாஹ் வெட்கங் கொள்வதில்லை. ஓரிறை நம்பிக்கையாளர்கள், திண்ணமாக இது தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்று அறிவார்கள். இறை மறுப்பாளர்களோ, "இந்த (அற்ப) உவமை மூலம் அல்லாஹ்வின் நோக்கம்தான் என்ன?" என்று (ஏளனமாகக்) கேட்கிறார்கள். உவமைகள் (கூறும் குர்ஆன்) மூலம் அவன் (அதை மறுப்பவர்களான) பலரை வழிகேட்டில் விடுகிறான். மற்றும் (ஏற்பவர்களான) பலரை நல்வழிப் படுத்துகிறான். அவன் வழிகேட்டில் தள்ளுபவர்கள் அனைவரும் கசடர்களே அன்றி வேறல்லர் (1.அதிரை ஜமீல்)
2:26. கொசுவையோ, அதை விட அற்பமானதையோ உதாரணமாகக் கூற அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் "இது தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை'' என்பதை அறிந்து கொள்கின்றனர். ஆனால் (ஏகஇறைவனை) மறுப்போர் "இதன் மூலம் அல்லாஹ் என்ன உவமையை நாடுகிறான்?'' என்று கேட்கின்றனர். இ(வ்வுதாரணத்)தின் மூலம்9 அல்லாஹ் பலரை வழிகேட்டில் விடுகிறான். இதன் மூலம் பலரை நேர்வழியில் செலுத்துகிறான். இதன் மூலம் குற்றம் புரிவோரைத் தவிர (மற்றவர்களை) அவன் வழிகேட்டில் விடுவதில்லை. (2.P.J.)
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை (7.இம்தாதி, 8. முஹம்மது ஜான்)
நிச்சயமாக அல்லாஹ் எந்த உதாரணத்தையும் விளக்க வெட்கப்பட
மாட்டான். கொசுவாயினும் அதற்கு மேற்பட்டதாயினும் (சரியே உதாரணம்
காட்டுவான்) ஆகவே, எவர்கள் விசுவாசங் கொண்டிருக்கின்றனரோ அவர்கள்
அ(வ்வுதாரணமான)து மெய்யாக தங்கள்
இரட்சகனிடமிருந்து (வந்து)ள்ள உண்மை என்று அறிகின்றனர். இன்னம் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கின்றனரோ அவர்கள் இவ்வுதாரணத்தைக் கொண்டு என்ன கருதுகின்றான் என்று (ஏளனமாகக்) கூறுகின்றனர். அ(வ்விறை)வன் இதனை கொண்டு பெரும்பாலாரை வழி கெடச் செய்கிறான். இன்னம் பெரும்பாலோரை இதனை கொண்டு நேர்வழி
பெறச் செய்கின்றான். மேலும் தீச்செய்கையுடையவர்களைத் தவிர்த்து (வேறு) எவரையும்
இதனால் வழி கெடச் செய்வதில்லை (3.அன்வாருல்
குர்ஆன்)
நிச்சயமாக
அல்லாஹ் (ஏதாவது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த) கொசு போன்ற மட்டமான வஸ்து)வையோ, அதைவிட (அற்பமான) இலேசானதையோ உதாரணம் காட்டிட வெட்கப்பட
மாட்டான். எனவே இறை நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் இறைவனிடமிருந்து
வந்த உண்மையே இது என விளங்கிக் கொள்கிறார்கள். ஆனால் நிராகரிப்பாளர்களோ (மட்டமான உதாரணத்தைக் கூறி)
அல்லாஹ் இந்த உதாரணத்தால் என்ன நாடி விட்டான் என்று கேட்கின்றனர். (இவ்விதமாக)
இதன் மூலம் பலரை அவன் வழி தவறச் செய்கிறான். பலருக்கு இதன் மூலம் நல் வழி
காட்டுகிறான். (ஆனால்) பாவிகளைத் தவிர (வேறு யாரையும்) இதன் மூலம் அவன்
வழிதவற விடுவதில்லை (4.ஸலாமத்
பதிப்பகம்)
அல்லாஹ், கொசுவையோ அதைவிட
அற்பமானதையோ உவமை காட்ட வெட்கப்பட மாட்டான். ஆதலால் இறை நம்பிக்கை கொண்டவர்கள். இது தம் இறைவனிடமிருந்து(வந்து)ள்ள சத்தியமே என்று தெரிந்து கொள்வார்கள் ஆனால் (இறையை) மறுத்து
விட்டவர்களோ, இந்த (அற்பமான) உவமையின்
மூலம் அல்லாஹ் என்ன (பெரிதாக) நாடிவிட்டான்? என்று கூறுவர். இதன் மூலம் பலரை அவன் வழி
தவறச் செய்கின்றான் மேலும் பலரை நேர்வழி பெறச் செய்கின்றான். ஆனால், (உண்மையை உணர மறுக்கும்) பாவிகளைத் தவிர வேறு யாரையும் இதன்
மூலம் அவன் வழி தவறச் செய்வதில்லை
(5.றஹ்மத் அறக்கட்டளை)
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதைவிட (அற்பத்தில்) மேற்பட்டதையோ எந்த உதாரணத்தையும் கூறிட வெட்கப்படமாட்டான். எனவே ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் காபிர்களோ இ(ந்த உதாரணத்தின் மூலம் அல்லாஹ் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். இதைக்கொண்டு பலரை அவன் வழி கெடச் செய்கிறான். இன்னும் இதைக்கொண்டு பலரை நேர்வழி பெறச் செய்கிறான். (ஆனால்) இதன் மூலம் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் வழி கெடச் செய்வதில்லை. ((6.திரீயெம் பிரிண்டர்ஸ்)
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, "இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை (7.இம்தாதி, 8. முஹம்மது ஜான்)
கொசு அல்லது அதைவிட (அற்பத்தில்) மேலான எதையும் உதாரணமாகக் கூறுவதற்கு அல்லாஹ் நிச்சயமாக வெட்கப்பட மாட்டான். ஆதலால் எவர்கள் (உண்மையாக) நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் (அவ்வுதாரணம்) தங்கள் இறைவனால் கூறப்பட்ட உண்மையான உதாரணம்தான் என்று உறுதியாக அறிந்து கொள்வார்கள். எனினும், (இவ்வேதத்தை) நிராகரிப்பவர்களோ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு அல்லாஹ் என்னதான் நாடுகிறான்? எனக் கூறுவார்கள். இதைக் கொண்டு பலரை வழிகெடும்படியும் செய்கிறான். இதைக் கொண்டு பலரை நேர்வழி பெறும்படியும் செய்கிறான். (ஆனால், இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்யமாட்டான். (9.அப்துல் ஹமீது பாகவி)
கொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆகவே நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆகவே, நிராகரிப்பாளர்கள் அல்லாஹ் இதன் மூலம் என்ன உதாரணத்தை நாடினான்? எனக் கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை வழிகெடுக்கிறான். இன்னும் இதன் மூலம் அதிகமானோரை நேர்வழி நடத்துகிறான். பாவிகளைத் தவிர (மற்றவர்களை) இதன் மூலம் வழிகெடுக்க மாட்டான். ( 10. அப்துல் ஹமீது பாகவி கொள்ளு பேரன் உமர் ஷரீFப்)
நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்?” எனக் கூறுவார்கள். (இவ்வாறாக) ஒரே விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் பலரை வழிகேட்டில் ஆழ்த்துகின்றான்; மேலும் அதனைக் கொண்டு பலருக்கு நேர்வழியும் காட்டுகின்றான். ஆனால் கீழ்ப்படியாதவர்களைத் தவிர வேறு எவரையும் இதனைக் கொண்டு அவன் வழிகேட்டில் ஆழ்த்துவதில்லை. (11. IFT)
நிச்சயமாக அல்லாஹ் கொசுவை, அதைவிட (அற்பத்தில்) மேற்பட்டதை உதாரணமாகக் கூறுவதற்கு வெட்கமடையமாட்டான்; ஆகவே, விசுவாசங்கொண்டிருக்கிறார்களே அத்தகையோர் நிச்சயமாக அது தங்கள் இரட்சகனிடமிருந்து வந்துள்ள உண்மை என்பதை அறிவார்கள். எனவே, நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்_ இதை உதாரணமாக்குவதைக் கொண்டு, அல்லாஹ் என்னதான் நாடுகிறான்?” என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். இதைக்கொண்டு அவன் அநேகரை, நேர் வழி பெறச்செய்கிறான்; இன்னும், தீயவர்களைத் தவிர (மற்றெவரையும்) இதைக் கொண்டு அவன் வழிதவறச் செய்யமாட்டான். (12. மன்னர் ஃபஹத் வளாகம்)
நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையும், ஏன் அதற்கு மேல் (அற்பமான) ஒன்றையும் உதாரணம் கூறிட வெட்கப்படமாட்டான். ஆகவே நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக இது உண்மையில் தங்கள் ரப்பிடமிருந்து வந்ததே என விளங்கிக் கொள்கின்றனர். மேலும் நிராகரிப்பவர்கள் இந்த உதாரணத்தில் அல்லாஹ் எதனைக் கருதுகிறான் என்று (ஏளனமாக) கூறுகின்றனர். அவன் இதனைக் கொண்டு பலரை வழி தவறச் செய்கிறான். மற்றும் பலரை இதன் மூலம் நேர்வழி பெறச் செய்கிறான். ஆனால் பாவிகளைத் தவிர (வேறு யாரையும்) அவன் வழி பெறச் செய்வதில்லை. (13 A.முஹம்மது சிராஜுத்தீன் நுாரி)
நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதைவிட (அற்பத்தில்) மேற்பட்டதையோ எந்த உதாரணத்தையும் கூறிட வெட்கப்படமாட்டான். எனவே நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் நிராகரிப்பவர்களோ இ(ந்த அற்பமான)வற்றை உதாரணமாக்கி அல்லாஹ் என்ன நாடுகிறான்?" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். இதைக்கொண்டு பலரை அவன் வழி கெடச் செய்கிறான். இன்னும் இதைக்கொண்டு பலரை நேர்வழி பெறச் செய்கிறான். (ஆனால்) இதன் மூலம் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் வழி கெடச் செய்வதில்லை. (14.மலிவு பதிப்பு)
Comments