#மேலப்பாளையத்தை_சீர் குலைக்கும்_நிலத்திருடர்கள்
வாகனபெருக்கம் பொசுமுட்டை ஏற்படுத்துகிறது.
#அவசரகதியாக_ஆம்புலன்ஸ் ஊருக்குள்ளோ,தெருக்குள்ளோ செல்லவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும் என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் திணருகிறார்கள்.
#தெருக்களை_அகலமாக_அமைத்திடுங்கள்_என்ற_நபிகளாரின் போதனைப்படி #நமதூர்_முன்னோர்கள் எதிர்கால நிலையை அறிந்து 80 அடி முதல் 100 அடி வரை விஸ்த்திரமான தெரு அமைப்புகளை ஆரம்பகாலத்திலேயே உருவாக்கி வைத்திருந்தனர்.
ஆனால் இன்றோ #சமூகஅக்கரையற்ற_சுயநல ஆசாமிகளின் கைங்கர்யத்தால் 100 அடி தெருக்கள் கூட 50 அடியாக சுருங்கி நிற்பதை என்னவென்பது.
#120_அடி_நீளமுள்ள வீட்டை கட்டுபவர் தெருப்புறத்தில் 5 அடி முதல் 10 அடி வரை #திருடுவதை_எப்படி_கண்டும் காணாமல் விடமுடியும்.
சர்வ சாதாரணமாக நமதூர்காரர்கள் இப்போது இந்த திருட்டுத்தனத்தை செய்து வருகின்றனர்.
#ஒருவர்_வீடு கட்டும்போது செய்கின்ற #கயவாளிதனத்தை பயன்படுத்தி நூல் பிடித்தாற்போல அதையே அண்டை வீட்டுக்காரர்களும் செய்கிறார்கள்.
#மேலப்பாளையம்_நகர் முழுவதும் இன்று சுருங்கி, ஒடுங்கி நகரின் மாண்பு கெட்டு இந்த #திருடர்களால்_நாசம் செய்வதை சகித்துக்கொள்ள முடியவில்லை.
#பல_தெருக்கள் 10 வருடங்கள் முன்பு இருந்த நீள, அகலங்களை இன்று இழந்துள்ளது.
இது பற்றி சம்பந்தப்பட்டவரிடம் கூறினால் கூட அலட்சியமாக கடந்து செல்வதை பார்க்க முடிகிறது.
அதுபோல பலரும் வீடு கட்டும்போது #இன்ஜினியர்கள் இது தவறு என்று எடுத்துக்கூறினாலும் அதனை எல்லாம் அசட்டை செய்கின்றனர்.
இனிமேல் #இன்ஜினியர்கள் இதுபோன்று #நிலமோசடியில் ஈடுபட்டு வீடு கட்டும் பட்சத்தில் கட்டமாட்டோம் என்று எடுத்துரையுங்கள்.
இது ஒருபுறம் என்றால்
வாகனத்தை விட்டு நிலம் ஆக்கிமிரப்பு வேறு நடைபெறுகிறது.
அதேசமயம் வாகனத்தை இஷ்டத்துக்கு விட்டு பிறரின் சாபவார்த்தையை வாங்கிக்கட்டிக் கொள்கின்றனர்.
நாம் நமது வாகனத்தை தெருப்புறத்தில் நிறுத்த அனைத்து உரிமைகளும் உள்ளன. அதை மறுக்கவியலாது.
ஆனால் #நடுவீதியில்_நான்கு_கம்புகளை_ஊன்றி_தார்ப்பாய் அமைத்து வாகனங்களை நிறுத்துவது எவ்வளவு பெரிய #திருட்டுத்தனம்.
இதில் வேதனை என்னவென்றால் சமுதாய போராளி, மேடையில் முழங்கக் கூடிய குருமார்கள் கூட இந்த விவகாரத்தில் அசட்டுத்தனமாக இருப்பது எல்லாம் வேதனைக்குரிய விஷயம்.
தயவு செய்து இந்த விஷயத்தில் யாரேனும் தார்ப்பாய் டெண்ட் அமைத்து நிலத்தை அபகரித்தால் #ஊர்க்காரர்கள் அவர்களை கண்டித்து அதனை அகற்றச்சொல்லுங்கள்.
தெருக்களை ஆக்கிரமிப்பதால் மழை நீர் அப்பாவிகளின் வீடுகளில் தஞ்சம் புகுந்துவிடுகிறது.
நாற்றமெடுக்கும் சாக்கடைகள் உங்களின் #கொழுப்பெடுத்த தனத்தால் அப்பாவிகளை வாட்டுவதையும்,தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதையும் சகித்துக்கொள்ள முடியாது.
இந்த திருட்டுத்தனத்தில் ஈடுபடுபவர்கள் திருந்தாவிட்டால் இது புகாராக கொண்டு செல்வோம்.
அரசு அதிகாரிகள் ஊருக்குள் வந்தால் பாதி வீடுகள் பொக்லைன் இயந்திரத்திற்கு பலியாக நேரிடும்.
இதனை இனிமேலும் அசட்டை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் கம்பிளைன்ட் பிறப்பிக்கப்படும்.
நபிகளார் கூறினார்கள் யார் பிற ருடைய நிலத்தை அநியாயமாக ஆக்கிரமிக்கிறார்களோ மறுமை நாளில் அல்லாஹ் அவருடைய கழுத்தில் ஏழு நிலங்களை வைத்து அழுத்துவான் என்ற
நபிகளாரின் போதனையை பின்பற்றி பிறருக்கு இடைஞ்சல் தராத நல்ல மக்களாக வாழுவோம்.
தீர்வு:
ஆலிம்கள் ஜும்மா பயான்களில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
இஞ்ஜினியர்கள் சர்வே படியே வீடு கட்டவும்
Comments