CAA -NRC -NPR க்கு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' கூறுவோமா?


CAA -NRC -NPR எனும் முஸீபத்துகளுக்கு எதிராக முஸ்லிம்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து  போராடிக்  கொண்டிருக்கிறோம். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் இறப்புச் செய்தி கேட்டால் தான்  'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்எனக் கூற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 'இன்னாலில்லாஹி ..... கூறச் சொல்லும் 2:156வசனத்திற்கு முந்தைய  2:155 வசனத்தில் அல்லாஹ் என்ன சொல்லி உள்ளான்?
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/caa-nrc-npr.html
ஓரளவு பயத்தாலும், பசியாலும் (பொருள்கள், உடைமைகளாகிய)  செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும்  இழப்பை - சேதத்தை ஏற்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

என்று கூறி விட்டுத்தான் நற்செய்தி பெற்றவர்கள் கூறும் வார்த்தையாக 'இன்னாலில்லாஹி .....யை கூறி உள்ளான். ஆகவே CAA -NRC -NPR க்கு   'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்' கூறுங்கள்.

துன்பம் ஏற்படும் போது  என்ன செய்ய வேண்டும்? 'ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது இறைவன் கட்டளையிட்டவாறு 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்எனக் கூற வேண்டும் பிறகு.


اللَّهُمَّ أْجُرْنِى فِى مُصِيبَتِى وَأَخْلِفْ لِى خَيْرًا مِنْهَا.


'அல்லாஹும்ம மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா


இறைவா! எனது இத்துன்பத்துக்காக நீ கூலி தருவாயாக! இதை விடச் சிறந்ததை எனக்குப் பகரமாகத் தருவாயாக! 

என்று துஆ கேட்க வேண்டும். இப்படி துஆக் கேட்டால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் அவருக்குப் பகரமாக்காமல் இருப்பதில்லை என்று உறுதி அளித்து அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபிகள் (ஸல்) அவர்கள் நமக்கு வழி காட்டி உள்ளார்கள். இதை நாம் மறந்து விட்டோம். 

அதனால் காபிரான தலைவர்களுக்கு ஈமான் கொண்டுள்ள ஓட்டுப் பொறுக்கிகள்  CAA -NRC -NPR எனும் முஸீபத்துகளுக்கு எதிராக முஸ்லிம்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து  போராடிக்  கொண்டிருப்பதில் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.  இப்படி முஸ்லிம்களின் பிணத்தின் மீது ஆதாயம் தேடித் திரிவர்கள் மீது அல்லாஹ்வின் பிடி இறுகட்டுமாக ஆமீன். 


CAA -NRC -NPR க்கு   'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்'  சொல்வோம்.  அது  செத்து விடும்.  'அல்லாஹும்ம மஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப்லீ கைரன் மின்ஹா'  இறைவா! எனது இத்துன்பத்துக்காக நீ கூலி தருவாயாக! இதை விடச் சிறந்ததை எனக்குப் பகரமாகத் தருவாயாக! என்ற துஆவை நபி மீது நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் கேட்போம். அல்லாஹ் நமக்கு சிறந்த பலனை தருவான்.








Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.