பழனி பாபா இருந்திருந்தால் ஏதாவது செய்திருப்பார் என்று ஆதங்கப்பட்டு பதிவிடுபவர்களை நோக்கிய கேள்விகள்.
- Get link
- X
- Other Apps
Mohamed Madhar
இந்த மாதிரியான நேரத்தில் பழனி பாபா இல்லையே என்று ஒரு சிலர் ஆதங்கம், கவலைப்பட்டு, அவர் இருந்திருந்தால் டெல்லி கலவரங்கள், CAA NRC NPRக்கு எதிராக ஏதாவது செய்திருப்பார் என்பது போல பதிவு போடுவதை பார்க்க முடிந்தது.
பழனி பாபா மிக பெரிய சமுதாய போராளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, அவர் தனி ஆளாக பொதுக்கூட்ட மேடைகளில் ஆக்ரோஷமாக பேசியதை யாரும் மறுக்க இயலாது.
பழனி பாபா, முஸ்லீம்களுக்காக செய்த தியாகங்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டு, அவர் பாவங்களை மன்னித்து, சொர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை அவருக்கு தருவானாக.
இந்த பதிவு பழனி பாபா சமுக அக்கரையை இழிவுப்படுத்துவதோ, அல்லது அவரை குறை சொல்லவோ அல்ல, எதார்த்தத்தை சொல்ல மட்டுமே. (இதற்காக பலரும் என்னை திட்ட செய்வார்கள்.)
பழனி பாபா மக்களை ஒன்றினைத்து போராட கற்று தரவில்லை, என்பதை யாராலும் மறுக்க இயலாது. தனி ஆளாக மேடைகளில் மட்டுமே போராடினார்.
அவர் பாட்டாளி மக்கள் கட்சி வளரவே அதிகம் அதிகம் பாடுபட்டார்.
இறுதியில் ராமதாஸ், பழனி பாபா முதுகில் தான் குத்தினார்.
இந்நேரத்தில் பழனி பாபா இருந்திருந்தால் ஏதாவது செய்திருப்பார் என்று ஆதங்கப்பட்டு பதிவிடுபவர்களை நோக்கிய கேள்விகள்.
பழனி பாபா இருக்கும் போது தானே 1992ல் பாபரி மஸ்ஜிதை, சங்பரிவார பயங்கரவாதிகள் பட்ட பகலில் இடித்தார்கள்.
பழனி பாபா இருக்கும் போது தான் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு பிறகு, மும்பையில் நடந்த மிக பெரிய கலவரத்தில் முஸ்லீம்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டார்கள்.
பழனி பாபா இருக்கும் போது தானே இந்து முன்னணி ராம கோபாலனும், ராஜ கோபலனும் முஸ்லீம்களை சீண்டுவதற்காக நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களின் மனைவியரான, உம்முல் மூமின்களை பற்றி விவாதம் செய்து அராஜகம் செய்தார்கள்.
பழனி பாபா இருக்கும் போது தானே முஸ்லீம்கள் காரணமே இல்லாமல் தீவிரவாதிகள் என்று காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பழனி பாபா இருக்கும் போது தானே, ஜாமீன் இல்லாத தடா சட்டத்தில் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
காவல்துறை நாகூர் கலவர நேரத்தில் முஸ்லீம் பெண்களின் ஜாக்கெட்களில் கையை விட்டு பெண்களை சோதனை செய்தது.
அப்போது எல்லாம் பழனி பாபாவால் என்ன செய்ய முடிந்தது.?
அவர் மட்டும் அல்ல, வேறு யாராக இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது. நம் நாட்டின் சட்டம் அப்படி.! முஸ்லீம்களுக்கு எதிராக மட்டுமே தனது கடமையை?! சரியாக செய்யும்.! இறந்து இருபது வருடங்கள் கடந்த பிறகு, அவர் இருந்திருந்தால் நல்லா இருக்கும். இவர் இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று கவலைப்படுபவர்களே.!
பாபரி மஸ்ஜித் 1992ல் இடிக்கப்படும் போதும், தடா, பொடா சட்டத்தில் முஸ்லீம்கள் அரெஸ்ட் செய்யும் போதும்.
நாகூர் கலவரத்தில் முஸ்லீம்களின் வீடு வீடாக சென்று தீவிரவாதிகள் என்று முஸ்லீம்கள் கொத்து கொத்தாக கைது செய்த போதும்.
முஸ்லீம் மக்களை ஒன்றினைத்து காவி பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், அராஜக அரசாங்கத்திற்கு எதிராகவும் மக்களை ஒன்றினைத்து பழனி பாபா போராட கற்று கொடுத்தாரா.?
பாபரி மஸ்ஜித் இடிக்கப்படும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ, அல்லது போராடவோ வக்கற்ற முஸ்லீம் கட்சிகளாக, அமைப்புகளாக இருந்தது முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக், ஜமாத்துல் உலமா சபை, சுன்னத் ஜமாத் அனைத்தும்.
1992 பாபரி மஸ்ஜித் இடிப்பின் போதும், தடா சட்டத்தில் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்ட போதும் அதை எதிர்த்து, தமிழக மக்களை ஒன்றினைத்து போராட கற்றுக் கொடுத்தது யார்.?
முஸ்லீம் முன்னணி, முஸ்லீம் பேரவை என்கிற பெயரில் அமைப்பு தொடங்கி, போராட முயலும் போது காவல்துறையின் கிடுக்கி பிடியால், அந்த பெயர்களில் தொடர முடியாமல் போனது.
பின்பு லட்டர் பேடு கட்சியாக இருந்த குனங்குடி ஹனீஃபாவின் தமுமுக (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை) புணர் நிர்மானம் செய்து முஸ்லீம்களை ஒன்றினைத்து முதல் போராட்டத்தை நடத்தி, தமிழக முஸ்லீம்களுக்கு போராட கற்று கொடுத்தது யார்.?
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட கற்று கொடுத்தது யார்.?
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று முதல்வர் முற்றுகை, இது போன்ற ஏராளமான போராட்டங்களை அறிவித்தது யார் என்று வரலாற்றை போய் படிங்கள்.
20 வருடங்களுக்கு முன்பு இறந்த மனிதர் இப்போது இல்லையே என்று (இருக்கும் போதே மக்களை ஒன்றினைத்து போராட கற்று தராதவரை) நினைத்து ஆதங்கப்படுவதில் ஒரு பயனும் இல்லை.
போராட கற்று தந்தவர்களை மறந்து, நன்றிக் கெட்டவர்களாக இருப்பதில் பயன் என்ன.?
குறிப்பு:- உண்மையை சொல்வதற்காக திட்டுபவர்கள், வரிசையில் வந்து என்னை திட்டிக் கொள்ளலாம்.
Mohamed Madhar 26.02.2020
Comments