மேலப்பாளையம் ஜின்னா திடல் தீர்வு யார் கையில்?
செல்லுங்கள் என்பதற்கும் முந்திக் கொள்ளுங்கள்! என்பதற்கும் உள்ள
வித்தியாசம் என்ன? எல்லாரையும் ஒரே அணியாக
ஆக்கி ஒற்றுமையாக இருக்கச் செய்ய முடியுமா?
மேலப்பாளையம் ஜின்னா திடல் தொடர் இருப்பு போராட்டத்திற்க்கு காவல் துறை நெருக்கடியா? எதன் மூலம் நெருக்கடி?) உயிரே போனாலும், ஷஹீதே ஆனாலும் ஜின்னா திடலை விட்டு நகர மாட்டோம். இது
நேற்றிலிருந்து மேலப்பாளையம் வாட்ஸப்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. பெரிய
கொத்பா பள்ளியில் நடந்ததை வித விதமாக வீடியோ பண்ணி வெளியிட்டவர்கள் அந்த
முஹல்லாவாசிகள் தான்.
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_29.html
https://mdfazlulilahi.blogspot.com/2020/02/blog-post_29.html
அப்படி
இருக்க சில மாதங்களுக்கு
முன்பு கொத்துவா பள்ளியில் சிறு பிரச்சனை நடந்தது அந்த பிரச்சனை சமூக வலைதளங்களில்
போட்டு நாலு பேருக்கு தெரிய கூடிய விஷயங்களை 4 லட்சம் பேருக்கு
தெரிய வைத்தவன் என்று மொட்டையாக ஒரு
புண்ணியவான் போட்டு விட்டு சாபமும் கேட்டுள்ளார். அந்த
சாபம் உரியவர்களுக்கு போய் சேரும்.
நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் தவ்ஹீது வந்து ஒற்றுமையைக் கெடுத்து விட்டது என்று ஒப்பாரி வைத்தவர்களே! இப்பொழுது உங்கள் ஒற்மையைக் கெடுத்தது யார்? எது? என்று அந்த வீடியோக்களை மேற்கோள் காட்டி கேட்டு இருந்தோம் அவ்வளவுதான்.
நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் தவ்ஹீது வந்து ஒற்றுமையைக் கெடுத்து விட்டது என்று ஒப்பாரி வைத்தவர்களே! இப்பொழுது உங்கள் ஒற்மையைக் கெடுத்தது யார்? எது? என்று அந்த வீடியோக்களை மேற்கோள் காட்டி கேட்டு இருந்தோம் அவ்வளவுதான்.
மேலப்பாளையத்தில்
அனைத்துக் கட்சி என்று ஒரு சாரார் கூடினால் சர்வ கட்சி என்ற பெயரில் இன்னொரு
சாரார் கூடியது. வியாபாரிகள் சங்கம் என்று ஒன்று இருக்கவே அவர்களைப் பிரித்து
அனைத்து வியாபாரிகள் சங்கம் கண்டு இரண்டாக ஆக்கியது. இது போன்றவற்றுக்கு
எப்படிப்பட்டவர்கள் காரணமோ அப்படிப்பட்டவர்களே இன்றுள்ள நிலைகளுக்கும் காரணம்.
சில
அல்லறை சில்லரைகள் எமக்கு எதிராக பேஸ்புக்கில் பேயாட்டம் ஆடினாலும்.
விபரமுள்ளவர்கள் ஒற்றுமைக்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள் என்று என்னைத்தான்
எல்லாக் காலங்களிலும் தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் ஹாமித் பக்ரி
கூட பாளை ரபீக் பெயரை குறிப்பிட்டு அவரிடம் பேசுங்கள். அழகிய உபதேசம் செய்யுங்கள் என்று பேசி அனுப்பினார்.
அந்த ஆடியோவை பாளை ரபீக் அவர்களுக்கே பார்வேடு செய்து விட்டேன்.
தி.மு.க,
காங்ரஸ் போன்ற பெரிய கட்சிகளில் எல்லா காலங்களிலும், எல்லா ஊர்களிலும் இரண்டு அணிகள்
போட்டி அணிகள் இருந்து வந்துள்ளன.. அது போல் மேலப்பாளையத்திலும் இருந்தது. இன்றும்
இருக்கிறது. ஏற்கனவே தொடர் போராட்டம் நடத்தி வருபவர்கள் ஜின்னா திடலில் 21வது நாளை
அடைந்துள்ளார்கள். அந்த அணியில் தி.மு.க, காங்ரஸ்களிலிருந்து ஒரு சாரார்
இருக்கிறார்கள்.
அதே
ஜின்னா திடலில் 6 ம் தேதி மாநாடு அறிவித்துள்ளவர்கள் அணியில் தி.மு.க, காங்ரஸ்களிலிருந்து இன்னொரு சாரார்
இருக்கிறார்கள். அவர்கள் இவர்களுக்குள்ளும் குழப்பம் என்று பதிவு போடுகிறார்கள். அல்லாஹ்வின்
சாபமும் கேட்டுள்ளார்கள்.
தி.மு.க, காங்ரஸ் போன்ற கட்சிகளில் உள்ளவர்கள் இரண்டு அணிகளிலும் இருக்கிறார்கள். பாளை ரபீக் இருக்கும் அணிக்குள் இருந்து கொண்டே பாளை ரபீக் பற்றிய பஸாதுகளை எழுதி அனுப்பியவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் முஸ்லிம் அமைப்பில் உள்ளவர்கள் தான்.
தி.மு.க, காங்ரஸ் போன்ற கட்சிகளில் உள்ளவர்கள் இரண்டு அணிகளிலும் இருக்கிறார்கள். பாளை ரபீக் இருக்கும் அணிக்குள் இருந்து கொண்டே பாளை ரபீக் பற்றிய பஸாதுகளை எழுதி அனுப்பியவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும்
அவை
அனைத்தையும் நாம் பரப்பவில்லை. ஒருவர் ஆதாரம்
என்று கடந்த மாதம் அனுப்பினார். ஆதாரமாகத் தெரிந்ததால் அதை பாளை
ரபீக் அவர்களுக்கு பார்வேடு செய்தேன். யார் அனுப்பியது என்று
நான் குறிப்பிடாத நிலையில் பாளை ரபீக் அவர்கள் அவரது அணியில் உள்ள ஒரு முஸ்லிம் கட்சி ஆள் பெயரைக் கூறி
பதில் தந்தார். அதைக் கூட சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு மாதமாக
அனுப்பவில்லை.
தொடர்
போராட்டத்தை 21வது நாளாக நடத்தி வரும் ஜின்னா திடலில் மாநாடு அறிவித்துள்ள பாளை ரபீக்
இருக்கும் அணிக்குள் இருப்பவர்கள் அவருக்கு எதிராக ஏதாவது அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்று (28-02-2020) கூட
அவர் அணியில் உள்ள ஒருவர் அனுப்பியது.
முஸ்லிம்கள் ஒரே தலைமையின் கீழ் இருக்க வேண்டும் என்பதில்
மாற்றுக் கருத்து இல்லை. ஜ.உ.சாவின் தலைமையின் கீழ் ஒரே தலைமையாக ஆக
வேண்டும் என்று பேசி உள்ள பாளை ரபீக்
கொள்கை என்ன?
சுன்னத் ஜமாத் பின்னால் நின்று தொழுவது கூடாது என்பதுதானே? அதனால்
தானே அவரும் அவரைச் சார்ந்த ஆட்களும் தனி மர்க்கஸ் உருவாக்கி தொழுது வருகிறார்கள். இப்பொழுது
ஜ.உ.சாவின்
தலைவர் PAK பின்னால் நின்று தொழுது ஒற்றுமையை நிரூபிப்பாரா?
இவரே ஒரு அமைப்பை இயக்கத்தை இரண்டாக உடைத்து விட்டு ஒற்றுமைக்கு
வேட்டு வைத்து விட்டுத்தானே வெளியே வந்தார்.
பெரிய கொள்கை ரீதியான காரணம் எல்லாம் இல்லையே. இவர் த.மு.மு.க, ம.ம.க.வின் மாவட்ட செயலாளராக இருந்த போது அந்த பதவியை
மாற்றி வேறு ஒரு பதவி கொடுத்தார்கள். இது கொள்கை
பிரச்சனையா? அதில் அவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக நினைத்து விட்டார். அதனால் இவர் மட்டும் வெளியே போனாரா?
கடும் முயற்சி செய்து ஒரு பெரிய கூட்டத்தையே பிரித்துக்
கொண்டு போனார். பழைய
கட்சியின் பெயரிலிருந்தே காப்பி பேஸ்ட் பண்ணி கழகம், மனித
நேய என்ற வார்த்தைகளுடன் கட்சி கண்டார். கொடியும் அதே மாதிரி
தான். இப்படி எல்லாம் பண்ணி விட்டு இப்ப ஒற்றுமை பற்றி பேசக்
கூடாது என்று சொல்ல மாட்டோம்.
அவரது சொல்லுக்கு அவரே முன் மாதிரியாக இருந்து செயல்பட்டுக்
காட்ட வேண்டும். Ex MLA நிஜாமுத்தீன்
தனது இயக்கத்தைக் கலைத்து அமைப்புகளின் எண்ணிக்கையை குறைத்த மாதிரி. நம்ம அண்ணன் பாளை ரபீக் அவர்களும் தனது கட்சியை கலைத்து அது மாதிரி
செய்தாரா? இப்படியாக நேற்று இந்தியாவிலிருந்து என்னிடம்
கேட்ட அந்த சகோதரர் அணியும் பாளை ரபீக் கூட்டணியில்தான் இருக்கிறது.
முஸ்லிம்கள் பிளவுபட்டு பிரிந்து போகாத ஒரே சமுதாயமாக ஒற்றுமையுடன் இருக்கக் கூடிய ஒரே
அணியாக இருக்க. அல்லாஹ் நினைத்திருந்தால் / நாடி இருந்தால் / விரும்பினால் ஆக்கி இருக்க
முடியும். ஆக்கியிருப்பான். ஆனால் ஆக்கவில்லை ஏன் ஆக்கவில்லை சோதிப்பதற்காகவே? ஆக்கவில்லை எப்படி சோதிக்க?
முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றில்
/ கொடுத்திருப்பதைக் கொண்டு முஸ்லிம்ளைச்
சோதிப்பதற்காகவே ஒரே அணியாக ஆக்கவில்லை. பல கூறுகளாக கட்சியினராக வைத்துள்ளான்.
எனவே எது நல்லதோ, நன்மையோ அதை நோக்கி / அதன்
பக்கம் அதாவது இஸ்லாம் காட்டிய வழியில் செல்லுங்கள் என்று சொல்லவில்லை. Fபஸ்தபிகுல் கைராத்(தி)
فَاسْتَبِقُوا الْخَـيْـرٰتِؕ
முந்திக் கொள்ளுங்கள்! போட்டி போடுங்கள் என்று சொல்கிறான். நன்மை செய்வதில் முதல் ஆளாக இருங்கள் என்று
கூறுகிறான்.
ஜின்னா திடல் விவகாரத்தில் எது நன்மை
தரும்? விட்டுக் கொடுப்பதா? விடாப்பிடியாக நிற்பதா? இதில் எது சிறந்தது? எல்லா
அணிகளிலும் பெரிய பெரிய மவுலவிகள் இருக்கிறார்கள். அவர்கள் அவரவர் அணிகளுக்கு வழி
காட்டட்டும்.
நீங்கள் அனைவரும் இறுதியில் அல்லாஹ்விடமே
திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் முரண்பட்டு மாறுபட்டு விவாதம்
செய்து கொண்டு இருந்தீர்களோ அது பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
தீர்ப்பு அளிப்பான். 73 கூட்டங்களில் / அணிகளில் ஒரு கூட்டத்தின் /அணியின் செயல் தான் நல்லதாக நன்மையானதாக இருக்கும். இந்தக் கருத்து அல்குர்ஆன் 5:48. ல் இடம் பெற்றுள்ளது.
ஆகவே எல்லாரையும் ஒரே அணியாக ஒற்றுமையாக ஆக்கி வைக்க யாராலும் முடியாது. 72 ல் ஒன்றா? 72 லும் இல்லாத ஒன்றா? உங்கள் உள்ளத்தைக் கேளுங்கள். அது உங்களுக்கு பதில் சொல்லும்
தீர்ப்பு அளிப்பான். 73 கூட்டங்களில் / அணிகளில் ஒரு கூட்டத்தின் /அணியின் செயல் தான் நல்லதாக நன்மையானதாக இருக்கும். இந்தக் கருத்து அல்குர்ஆன் 5:48. ல் இடம் பெற்றுள்ளது.
ஆகவே எல்லாரையும் ஒரே அணியாக ஒற்றுமையாக ஆக்கி வைக்க யாராலும் முடியாது. 72 ல் ஒன்றா? 72 லும் இல்லாத ஒன்றா? உங்கள் உள்ளத்தைக் கேளுங்கள். அது உங்களுக்கு பதில் சொல்லும்
Comments