யார் இப்லீஸ்? யார் காபிர்கள்? அல்லாஹ் யாரை காபிர் என்று கூறி உள்ளான்?


என்னுடைய இறைவனே என்னுடைய கடவுளே என்று அல்லாஹ்வை அழைத்து ஷய்த்தான் துஆ கேட்டானா? இப்லீஸ் ஏன் காபிராக ஆனான்?

காபிர்கள் என்றால் முஸ்லிமல்லாத ஆண்டி, அம்பலம் மணி போன்றவர்கள்தான் காபிர்கள் என்றும், அல்லாஹ்வை அறியாதவர்களெல்லாம் காபிர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 

திருமறை குர்ஆனில் அல்லாஹ், கிறிஸ்தவர்களை கிறிஸ்தவர்கள் என்றும் யூதர்களை யூதர்கள் என்றும் மஜுஸிகளை மஜுஸிகள் என்றும்தான் குறிப்பிடுகின்றான். எடுத்த எடுப்பிலேயே யாரையும் காபிர்கள் என்று அல்லாஹ்  கூறவில்லை. 

https://mdfazlulilahi.blogspot.com/2019/12/blog-post_63.html

எனவே எடுத்த எடுப்பிலேயே கக்கனா அவன் காபிர். குகனா அவன் குப்பார் என கூறக் கூடாது. இந்துக்களை இந்துக்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். இதற்கு ஏராளமான ஹதீஸ்களும் ஆயத்துகளும் உள்ளன. 

ஆதம் (அலை) அவர்களை படைத்ததும் முதன் முதலில் காபிராக ஆனவன் இப்லீஸ். அந்த இப்லீஸ் ஏன் காபிராக ஆனான். அல்லாஹ் இல்லை என்று சொன்னானா? இல்லை,

நிச்சயமாக  அல்லாஹ்தான் கடவுள் என்பதையும் அந்த அல்லாஹ்வின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்பதையும் சந்தேகமற, தெளிவாக, உறுதியாக அறிந்து அல்லாஹ் பற்றி ஈமான் (நம்பிக்கை) கொண்டுள்ளவன்தான்  இப்லீஸ். 

இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. தனது  விருப்பத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு தரும்படி இப்லீஸ் அல்லாஹ்விடம்தான் வேண்டி பிரார்த்தித்துள்ளான். இதற்கு அல்குர்ஆனின் 15:36,39. 17:64 , 7:16,17. ஆகிய வசனங்கள் ஆதாரங்களாக உள்ளன.  

படைத்து வளர்த்து பரிபாலித்து காத்து வரும் கடவுள் அல்லாஹ்தான் என்ற கடவுள் கொள்கையில் அசைக்க முடியாத ஈமான் உடையவன்தான் இப்லீஸ்.

அந்த இப்லீஸ் அல்லாஹ்வை அழைக்கும்போது, படைத்து வளர்த்து பரிபாலித்து காத்து வரும் இறைவனே என்ற பொருள்படும் ரப்பு என்ற வார்த்தையால் அல்லாஹ்வை அழைத்து பிரார்த்தித்துள்ளான். 

அதுவும் இறைவனே, கடவுளே என்ற பொருள்பட ரப்பு என பொதுவாக அழைக்கவில்லை. ரப்பீ  என்னுடைய இறைவனே என்னுடைய கடவுளே என்றுதான் அல்லாஹ்வை நோக்கி ஷய்த்தான் அழைத்துள்ளான். இதை திருமறை குர்ஆனின் 15:36,39 ஆகிய வசனங்களில் அல்லாஹ் சொல்லிக் காட்டியுள்ளான்.

அல்லாஹ்தான் கடவுள் என்பதை அறிந்துள்ள, அல்லாஹ்வை ரப்பீ| (என்னுடைய இறைவனே) என்று அழைத்து பிரார்த்தித்துள்ள இப்லீஸ் ஏன் காபிராக ஆனான்?

ஆதமுக்கு பணியுங்கள் என்று அல்லாஹ் கட்டளை இட்டான். அல்லாஹ்வின் அந்த கட்டளையை இப்லீஸ் செயல்படுத்த மறுத்து வாதம் வைத்தான். இது அல்லாஹ்வின் சொல் – கட்டளை - இல்லை என்று நம்பாமலா மறுத்தான்?

ஆதமுக்கு பணியுங்கள் என்பது அல்லாஹ்வின் சொல்(கலாம்)தான் கட்டளை தான் என்று (ஈமான் கொண்டு) நம்பித்தான் அதை செயல்படுத்த மறுத்து புறக்கணித்தான். அதனால் அவன் காபிராக ஆனான். இதை திருமறை குர்ஆனின் 2:34. 38:74. ஆகிய வசனங்கள் மூலம் அறியலாம்.

எனவே மேற்கண்ட ஆயத்துகளின் அடிப்படையில் ஓரிறைக் கொள்கையில் தவ்ஹீதில் உறுதியாக இருந்து கொண்டு ஷய்த்தான் வாதம் வைத்து மறுத்த மாதிரி, அல்லாஹ்வின் சொல் கட்டளை என்று தெரிந்த பிறகும் செயல்படுத்த மறுத்து தனது மனோ இச்சையை செயல்படுத்த வாதம் வைத்தால் அவர்கள் யார்? அவர்களும் ஷய்த்தானைப் போன்று காபிர்கள்தான். அவர்கள் தான் அசல் இப்லீஸ்.

குபுர் (இறை நிராகரிப்பு) செய்தல், காபிராகிப் போதல் என்றால் அல்லாஹ் இல்லை என்பதும் அல்லாஹ்வை கடவுளாக ஏற்க மறுப்பதும்தான் குபுர் (இறை நிராகரிப்பு) என பலர் விளங்கி வைத்துள்ளார்கள். 

அல்லாஹ்வின் சொல் தான் – கட்டளை தான் என்று தெரிந்து நிராகரித்தால் அதற்குப் பெயரும் குபுர் (என்ற இறை நிராகரிப்பு)தான் என்ற உண்மையை விளங்கி செயல்பட அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக ஆமீன்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு