நாட்டிலுள்ள சூழலில் இது தேவையா? இஸ்லாமா இயக்கமா? அகதிகள் பிரச்சனைக்கு நபி வழியில் தீர்வு இல்லையா?


தி.மு.. சார்பில் பேச அழைக்கப்பட்ட ஒருவர் மட்டும் நான் தி.மு.. சார்பில் பேச வரவில்லை எனது சமுதாயத்தின் சார்பில் பேச வந்திருக்கிறேன்  என்றார். அவர் யார் என்ன பெயர் தெரியுமா?

அஸ்ஸலாமு அலைக்கும்  என்பதில் உள்ள அரபு எழுத்து லா மை. தமிழ் எழுத்து லா வை  நீக்கி விட்டால்.  அஸ்ஸாமு என்று வரும்.   

அசாம் என்பதற்கு அந்த மாநில மொழியில் ஒரு நல்ல அர்த்தம் இருக்கலாம்.   அரபியில் அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் உங்கள் மீது சாந்தி - அமைதி உண்டாகட்டுமாக என்று பொருள்.  
யூதர்கள் முஸ்லிம்களை பார்த்து ஸலாம் - முகமன் கூறும் போது லாமை   நீக்கி விட்டு  அஸ்ஸாமு அலைக்கும் என்பார்கள். அதாவது உங்கள் மீது சாவு மரணம் உண்டாகட்டும் என்பார்கள். அதனால் நபி(ஸல்) அவர்கள் யூதர்கள் ஸலாம் சொன்னால் வ அலைக்கு முஸ்ஸலாம் என்று பதில் சொல்லாதீர்கள். 

வ அலைக்க _  உன் மீதும்  என்று மட்டும் சொல்லுங்கள். யூதர்கள் சொன்னது ஸலாம் என்றால் அவர்கள் மீது அந்த சாந்தி - அமைதி உண்டா கட்டும். 

அஸ்ஸாமு _ சாவு உண்டாகட்டுமாக என்று சொன்னால்  அதுவே அவர்கள் மீது உண்டாகட்டுமாக என்ற பொருள்பட பதில் கூற கூறினார்கள்.  

அந்த அஸ்ஸாமு என்ற பெயரில் உள்ள அசாம் மாநிலத்தில் பெயருக்கு ஏற்றால் போல் சாவுகள் நிகழ்ந்து வருகின்றன.  இது  சிராஜுல் மில்லத் என்று அழைக்கப்பட்ட ஆ.கா.அ. அப்துஸ் ஸமது ஸாஹிபு அவர்கள் 1982, 83 மேடைகளில் பேசியது மணி விளக்கு மாத இதழில் எழுதியது. 

ஆக அசாம்  அகதிகள் பிரச்சினை இன்று உருவானது அல்ல. 1971ல் உருவானது.  இண்லேன்ட் லட்டர் 10 பைசா என்றால்.  பங்களாதேஷ் அகதிகளுக்கு என்று 5 பைசா ஸ்டாம்ப் கூடுதலாக ஒட்ட வேண்டும். 



போஸ்ட் கார்டு 6 பைசா என்றால் வங்க அகதி படம் போட்ட 5 பைசா ஸ்டாம்ப் சேர்த்து ஒட்ட வேண்டும்.  இப்படி பல வழிகளில் பங்களாதேஷ்  அகதிகளுக்காக வசூலித்தார் இந்திரா காந்தி.  

அந்த பங்களாதேஷ் மக்களின் இன்றைய நிலை என்ன? பெரும்பாலான  அரபு நாடுகள் பங்களாதேஷ்காரர்களுக்கு விஸா கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். விஸா கொடுக்காததற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக உள்ளே நுழைந்து விட்டார்கள். 

5  லட்சம் 10 லட்சம் என்று ஒவ்வொரு அரபு நாடுகளிலும் விஸா இல்லாமல் இருக்கிறார்கள். பொது மன்னிப்பு அளித்தும் போதிய அளவு வெளியேறவில்லை. விஸா இல்லாமல் ஓவரில் தங்கி உள்ளவர்கள் விஸா மாற்றிக் கொள்ள அனுமதி அளித்தது. 

மாற்று விஸா கிடைக்காதவர்கள் வேலை தேடிக் கொள்ள வசதியாக 6 மாத வேலை தேடும் விஸா கொடுத்தது. அப்படி இருந்தும் லட்சக்கணக்கானவர்கள் விஸா மாற்றிக் கொள்ளவில்லை. காரணம் பாஸ்போர்ட்டே இல்லாமல் நுழைந்தவர்களாக இருக்கிறார்கள். 

மார்க்கட்டுகளில் பொருள்களை உள் ஒன்றும் மேலே ஒன்றுமாக வைக்கும் கோல்மால் வேலைகளில் அவர்கள் தான் இருப்பார்கள். மேலே உள்ள நல்ல பொருளை நாம் பார்க்கும் வண்ணம் கண் முன்னே பைக்குள் போடுவார்கள். அடியில் கெட்ட பொருளும் மேலே நல்ல பொருளும் வரும் வண்ணம் போட்டு விடுவார்கள். எப்படித்தான் போடுவார்களோ தெரியாது.

காய்கறிகளிலிருந்து கம்யூட்டர் வரை எல்லா கோல் மால்களிலும் கை தேர்ந்தவர்களாக இருப்பதை அரபக பர்ச்சேஸிங் மார்க்கட்களில் உள்ளவர்கள் அறிவார்கள்

விஸிட் விஸா கூட அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. விஸிட்டில் வந்து வாஸ்த்தா - சிபாரிசு வைத்து  வேலை தேடினாலும் மிZஸ்ரஅ விஸா தான் கிடைக்கும்.  

காடுகளில் உள்ள தோட்டத்தில் வேலை செய்யும் விஸா தான் கிடைக்கும். அதாவது வயல் காட்டில் வேலை செய்யும் விஸா தான் கிடைக்கும்.

பங்களாதேஷ் மக்களை இக்கதிக்கு ஆளாக்கியது யார்?  இந்த மாதிரி இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் பற்றி கேள்விகள் கேட்டால் பல யோக்கிவான்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வரும்.  

மார்க்கத்தின் அடிப்படையில் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டால். நாட்டிலுள்ள சூழலில் இது தேவையா? என்று ஒரு சாரார்

இயக்கங்கள் கூடாது என்போர் இயக்கங்கள் போராடுவதை. இயக்கத்தை முன்னிறுத்த போராடுகிறார்கள். என்று விமர்சித்து வருகிறார்கள்

இயக்கங்கள் கூடாது என்போர் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இயக்கங்களின் உதவிகளை நாடாமலா இருக்கிறார்கள் என்பது இயக்கத்தவர்களின் கேள்வி.


1981 லும் 1992 லும் மேலப்பாளையத்தில் நடந்த கலவரத்தை ஒட்டி நெல்லையில் பீஸ் - அமைதி கமிட்டி கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

அதில் கலந்து கொண்ட மேலப்பாளையம் முஸ்லிம்கள் பேசும்போது நான் தி.மு.. சார்பில் பேசுகிறேன். நான் அ.தி.மு.. சார்பில் பேசுகிறேன். நான் காங்ரஸ், ஜனதா, கம்யூனிஸ்டு வலது, இடது என தாங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளை முன்னிறுத்தி பேசினார்கள்.

தி.மு.. சார்பில் பேச அழைக்கப்பட்ட ஒருவர் மட்டும் நான் தி.மு.. சார்பில் பேச வரவில்லை எனது சமுதாயத்தின் சார்பில் பேச வந்திருக்கிறேன்  என்றார். அவர் யார் என்ன பெயர் தெரியுமா? அவர் பெயர் சிதம்பரம். நான் எனது தேவர் சமுதாயத்தின் சார்பில் பேச வந்திருக்கிறேன் என்றார்.

அன்று முஸ்லிம்கள் முன்னிறுத்தியது முஸ்லிம் அல்லாதவர்களை தலைவராக கொண்ட அரசியல் கட்சிகளை. 

இன்று முஸ்லிம்கள் முன்னிறுத்துவது முஸ்லிம்களை தலைவர்களாகக் கொண்ட இயக்கங்களை.

இன்றைய உலகளாவிய பிரச்சனையே அகதிகள் பிரச்சனைதான். அகதிகள் பிரச்சனைக்கு நபி(ஸல்) அவர்கள்  எப்படி தீர்வு கண்டார்கள்? இதை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் எடுத்து சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு உள்நாட்டு பிரஜைகளான அன்சாரி (உதவி செய்தவர்)களே  அதிகமாக இருந்தார்கள். 

அதன் பின்னர் முஹாஜிர்கள் எனும் அகதிகள் வர வர உள்நாட்டு பிரஜைகளான அன்சாரி(உதவி செய்தவர்)களைவிட அகதிகள் அதிகம் ஆகி விட்டார்கள். 

பிரச்சனை  அல்லாஹ்வின் துாதரிடம் சென்றது. உள்நாட்டு பிரஜைகளான அன்சாரிகளைப் பார்த்து சொன்னார்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் – அருள் செய்வானாக என்று.

இன்று எந்த நாட்டில் உள்நாட்டு மக்களை விட அகதிகள் அதிகமாக குடியேறி இருக்கிறார்கள்? எங்கும் கிடையாது. 

ஒரு மாநிலத்தில் கூடுதல் கூடுதலாக அகதிகள் ஒரு கோடி என்றால் உள்ளூர் மக்கள் 3 கோடி என்ற நிலைதான் உள்ளது. அன்று மதீனாவில் உள்ளூர் மக்களை விட அகதிகள் அதிகம் குடியேறி விட்டார்கள்.

அகதிகள் அதிகம் ஆகி விட்டதால் அதற்கு தீர்வாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அகதிகள் முகாம் அமைத்தார்களா? இல்லை நிச்சயமாக இல்லை. அகதிகள் முகாம்கள் அமைத்து வசூல் வேட்டை செய்யவில்லை.  

ஒவ்வொரு உள் நாட்டு பிரஜைகளுக்கும் ஒவ்வொரு அகதிகளை சகோதரர்களாக ஆக்கி தீர்வு  கண்டார்கள்

உதாரணமாக தமிழ் நாட்டில் தமிழ் தமிழ் என்று சொல்லும் ஒவ்வொரு சீமானும், வை.கோ.க்களும்  ஆளுக்கொரு இலங்கை தமிழனை சகோதரனாக ஏற்றுக் கொண்டால் யாருக்கும் பாரம் இல்லாத எளிமையான முறையில் அகதிகள் பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம்.

இதுதான் அனாதைகள், முதியோர்களுக்கான தீர்வும் ஆகும். வீட்டுக் கொரு அனாதை, முதியோர் என ஏற்றுக் கொண்டால் எளிதில் தீர்வு கண்டு விடலாம்

அனாதைகள் இல்லங்களில் அநியாயமாக பல கோடி மோசடி.  முதியோர் இல்லங்களில் முப்பது கோடி மோசடி என்ற விவகாரங்கள் பிரச்சனைகள் இந்த நபி வழியில் வராது.

நானும் அனாதைக்கு அபயமளிப்பவரும் - காப்பாளரும் சுவனத்தில் இவ்வாறு இருப்போம் என நபிகள் (ஸல்) அவர்கள் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்” (புகாரி) அனாதைக்கு என்று ஒருமையில் தான் ஹதீஸ் உள்ளது. தவிர அனாதைகள் காப்பாளரும் என்று பன்மையில் ஹதீஸ் இல்லை. ஆகவே நபி வழியை எத்தி வைப்போம்.

வமா அலைனா இல்லல் பலாஃக் 
எமது பணி எத்தி வைப்பதை தவிர வேறில்லை.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு