நாட்டு சூழலில் நமது நிலை என்ன? எத்தகைய ஆபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது என்று தெரிகிறதா?
தமிழக காவிகள் தலைவராக மாறிவிட்ட முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி ஏப்ரல் முதல் முஸ்லிம்களுக்கு எதிரான சதிவேலையை செய்ய உள்ளதாக அறிவித்து
விட்டார்.
அப்படி அறிவித்து விட்டால் பாஸ்போர்ட், சொத்துரிமை, வேலைவாய்ப்பு
உரிமை, கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை உள்ளிட்ட அனைத்தையும்
இழந்து தடுப்பு முகாம்களில் நாம் அடைக்கப்பட்டு மடிவதைத் தவிர வேறு வழியில்லை.
இதை முறியடிக்க நம்முன் இருக்கும் கடைசி வழி என்ன செய்வது? ஒரு
முஸ்லிம் கூட NPR க்கு எந்தத் தகவலும் அளிப்பதில்லை என்று எடுக்கும் உறுதியான
முடிவு தான்
இதை முறியடிக்க நம் முன்னால் உள்ள ஒரே வழி என்ன? என்பது பற்றி அனைத்து ஊர்/மஹல்லா முஸ்லிம் ஜமாஅத்தார்களுக்கும் NTF சார்பாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்ததை அப்படியே தருகிறோம். வரப்போகும் NPRம் நமதுஅடுத்த கட்ட செயல்பாடும் என்ற வீடியோவும் இணைத்துள்ளோம். நாட்டு சூழலில் நமது நிலையை உணர்ந்து செயல்படக் கூடிய நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக ஆமீன். நாட்டு சூழலை அறிந்து நம்மை செயல்பட விடாமல் திசை திருப்ப முயற்சிக்கும் ஷய்த்தானின் தோழர்களாகி விட்ட பாவிகளான ஒவ்வொரு சமுதாய துாரகிகள் மீது அல்லாஹ்வின் பிடி இருகட்டுமாக ஆமீன்.
அனைத்து ஊர்/மஹல்லா முஸ்லிம் ஜமாஅத்தார்களுக்கு
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் (NTF) அன்பான
வேண்டுகோள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….
முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை
நாடற்றவர்களாக ஆக்கி திறந்த வெளி சிறைகளிலும் அகதிகள் முகாம்களிலும் அடைத்து
வைக்கும் திட்டத்தை தற்போது பாஜக அரசு எடுத்துள்ளது.
2004 ஆம் ஆண்டுக்கு முன்னால் இந்தியாவில்
குடியேறிய முஸ்லிமல்லாதவர்கள் ஐந்து ஆண்டுகள் வசித்தால் அவர்களுக்கு இந்தியக்
குடியுரிமை வழங்கப்படும் என்ற சட்டத்தை CAA என்ற பெயரில் கொண்டு வந்துவிட்டது.
இது இந்தியாவில் வாழும் முஸ்லிம்களைப் பாதிக்காது என்று
பசப்பு வார்த்தைகளைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறது.
இது உண்மை என்றால் அஸ்ஸாமுடன் அதை நிறுத்திக் கொண்டு இருக்க
வேண்டும். அஸ்ஸாமைப் போல் நாடு முழுவதும் கணக்கெடுத்து வெளிநாட்டில் இருந்து
வந்தவர்களை கண்டறிவதற்காக NRC சட்டத்தைக் கொண்டு வருவதாக அறிவிப்பு செய்தது
ஏன்?
நமது பெற்றோர்கள் இந்தியாவில் சுதந்திர இந்தியாவில்
பிறந்தார்கள் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது.
எந்தப் பதிவேடும் இல்லாத காலத்தில் வாழ்ந்த அல்லது வாழ்ந்து
மறைந்த நமது பெற்றோர்கள் இந்தியாவில் பிறந்தார்கள் என்ற ஆதாரம் யாரிடமும் இல்லை.
இதைக் காரணம் காட்டி நீங்கள் இந்தியர்கள் இல்லை என்று முதலில் முடிவு செய்வார்கள்.
அதன் பின்னர் இந்தியர் அல்லாதவருக்கான சட்டமாகிய CAA
வைப் பயன்படுத்தி நம்மை
இந்தியர்கள் அல்ல என்று அறிவிப்பது தான் இவர்களின் திட்டம்.
இவர்களின் இந்தச் சதித்திட்டத்தை அறிவு ஜீவிகளும், சமூகப்
போராளிகளும், மாணவர்களும் முஸ்லிமல்லாத மக்களும் புரிந்து கொண்டு
கடுமையான எதிர்வினையாற்றியதால் NRC யை கொண்டு வரும் திட்டம் தற்போது இல்லை என்று
மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதை அறிவிக்கும் அதே நாளில் National
Population Register (NPR) என்ற
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப் போகிறோம் என்று அறிவித்துள்ளார்கள்.
இது வழக்கமாக பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சாதாரண
நடைமுறை என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் வழக்கமாக எடுக்கப்பட்டு வரும் மக்கள் தொகைக்
கணக்கெடுப்பில் 15 விபரங்களை மட்டும் தான் கேட்பார்கள். அவை குடியுரிமையுடன்
தொடர்பு இல்லாதவை ஆகும். ஆனால் இப்போது அறிவித்துள்ள National Population Register (NPR) என்பதில் முன்னர் கேட்கப்பட்ட 15 விபரங்களுடன்
மேலும் ஆறு விபரங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
அந்த ஆறு விபரங்கள் என்னவென்றால் உங்கள் தாய் எந்த ஆண்டு
பிறந்தார்? உங்கள் தந்தை எந்த ஆண்டு பிறந்தார்? ஆகிய
விபரங்களை ஆதாரத்துடன் கொடுக்க வேண்டும்,.
மேலும் தாய், தந்தை எந்த ஊரில் பிறந்தார்கள் என்பதையும்
ஆதாரத்துடன் கொடுக்க வேண்டும்.
மேலும் உங்கள் தாய் தந்தைய்ர் கடைசியாக வசித்த இடம் எது
என்பதையும் ஆதாரத்துடன் கொடுக்க வேண்டும்.
NRC யில் கொண்டு வந்த அதே ஆபத்தான விதிகளை இதில்
இணைத்துள்ளார்கள்.
மிக அதிமான மக்களால் தங்கள் பெற்றோர் பிறந்ததற்கான ஆதாரம்
கொடுக்க முடியாது.
அப்படி கொடுக்காதவர்கள் சந்தேகமான குடிமகன் என்ற் தலைப்பில்
கொண்டு வரப்படுவார்கள்.
சில ஆண்டுகள் கழிந்ததும் நீங்கள் சந்தேகமான குடிமகன்
என்பதால் NRC சடப்படி இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும் என உத்தரவு
போடுவார்கள்.
அப்படி நிரூபிக்காத முஸ்லிம்களை பாகிஸ்தானில் இருந்து
அல்லது பங்களா தேசில் இருந்து அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என
முடிவு கட்டி CAA சட்டப்படி நீங்கள் இந்தியர்கள் அல்ல என்று அறிவிக்க
உள்ளார்கள்.
எத்தகைய ஆபத்து நம்மைச் சூழ்ந்துள்ளது என்று தெரிகிறதா?
இதை உடைத்து எறிவதற்காக நாம் சகல விதமான போரட்டங்களையும்
செய்து வருகிறோம். இனியும் செய்து வருவோம்.
ஆனால் முஸ்லிம்களை ஒழித்துக்கட்டவே ஆர் எஸ் எஸ் உருவானது
என்பதால் எந்தப் போராட்டத்துக்கும் அசைந்து கொடுக்காமல் வரும் ஏப்ரல் மாதம் மகக்ள்
தொகைக் கணக்கெடுப்பு என்ற பெயரில் நம்மை நாடற்றவர்களாக்கும் முயற்சிக்கு நாளும்
குறித்து விட்டார்கள்.
தமிழக காவிகள் தலைவராக மாறிவிட்ட முதல்வர் எடப்பாடி
பழனிச்சாமி ஏப்ரல் முதல் இந்தச் சதிவேலையை செய்ய உள்ளதாக இன்று அறிவித்து
விட்டார்.
அப்படி அறிவித்து விட்டால் பாஸ்போர்ட், சொத்துரிமை, வேலைவாய்ப்பு
உரிமை, கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை உள்ளிட்ட அனைத்தையும்
இழந்து தடுப்பு முகாம்களில் நாம் அடைக்கப்பட்டு மடிவதைத் தவிர வேறு வழியில்லை.
இதை முறியடிக்க நம்முன் இருக்கும் கடைசி வழி என்ன செய்வது? ஒரு
முஸ்லிம் கூட NPR க்கு எந்தத் தகவலும் அளிப்பதில்லை என்று எடுக்கும் உறுதியான
முடிவு தான்
இதை முறியடிக்க நம் முன்னால் உள்ள ஒரே வழி.
உத்தேசமாக சுமார் ஒரு கோடி முஸ்லிம்களையாவது நாடற்றவர்களாக
ஆக்கி நெருக்கடி தந்து, முஸ்லிம்களை ஒடுக்க வேண்டும் என்று
கருதுகிறார்கள். அந்த ஒரு கோடியில் நாமும் ஒருவராக இருக்கலாம்.
ஒரு முஸ்லிம் கூட எந்த ஆவணமும் தர மாட்டோம் என்று அனைவரும்
சேர்ந்து உறுதியாக இருந்தால்
30 கோடி முஸ்லிம்களையும் நாடற்றவர்கள் என்று
அவர்களால் அறிவிக்க முடியாது.
30 கோடி மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து
வைக்க முடியாது.
30 கோடி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி
செய்யமுடியாது
இத்னால் பாஜகவின் இத்திட்டம் முழுத் தோல்வியடையும். இந்தச்
சட்டம் வெறும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கும். நடைமுறைப்படுத்த முடியாது.
கடைசி முயற்சியாக இந்த முடிவை எடுத்து அறிவிப்பது தான் நம்
முன்னே இருக்கும் ஒரே வழியாகும். இதை அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர்
நடைமுறைப்படுத்தினால் அதனால் ஒரு பயனும் ஏற்படாது. நம்மை வெளியேற்றுவதில் அவர்கள்
வெற்றி பெற்றுவிடுவார்கள்.
அனைவரும் சேர்ந்து இம்முடிவை எடுப்பது மட்டுமே நம்
அனைவருக்கும் பாதுகாப்பானது.
எனவே உங்கள் ஜமாஅத்தில் கீழ்க்கண்ட தீர்மானத்தை
நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
NPR க்கான கணக்கெடுப்புப் பணிக்கு அதிகாரிகள்
வந்தால் எங்கள் ஜமாத்தார்கள் எந்த ஆவணமும் தர மாட்டோம்; கடுகளவும்
அதற்கு ஒத்துழைக்க மாட்டோம்
இப்படி தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய உள்துறை
அமைச்சகத்திற்கும், தமிழக முதல்வருக்கும் ஒப்புகையுடன் (Acknowledgement) கூடிய
பதிவுத் தபாலில் அனுப்பவும். அதைச் செய்தி ஊடகங்களுக்கும் அறிவிப்பு செய்யுமாறு
சமுதாய அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு அல்லாஹ்வின் அருளால் நம்மை நாமே
பாதுகாத்துக் கொள்ள வல்ல இறைவன் அருள்புரிவானாக!
சமுதாய அக்கறையுடன்
P.ஜைனுல் ஆபிதீன்
தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு (NTF)
Comments