2:21. தத்தஃகூ(ன)ன். முடியும்- கொள்வீர்கள்- உடையோராகளாம். -ஆகலாம்-
இந்த வசனத்தில் உள்ள தத்தஃகூ(ன)ன் என்பதற்கு தற்காத்துக் கொள்ளலாம் - காப்பாற்றிக் கொள்ள முடியும் - தப்பித்துக் கொள்வீர்கள் - தக்வா (இறையச்சமும், தூய்மையும்)
உடையோராகளாம்- இறையச்சமுடையோர்களாக ஆகலாம் - பயபக்தி உடையோராகலாம். இவ்வாறாக ஒவ்வொரு மொழி பெயர்ப்பாளர்களும் ஒவ்வொரு விதமாக மொழி பெயர்த்துள்ளார்கள். நீங்கள் ஆய்வுடன் படிக்க 1,டாக்டர். முஹம்மது ஜான் , 2. அன்வாருல் குர்ஆன் 3.அப்துல் ஹமீது பாகவி , 4.இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT), 5. மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி), 6. அதிரை ஜமீல், 7 இஸ்லாமிய நுால்கள் மலிவு பதிப்பு 8. பஷாரத். 9. KSR இம்தாதி, 10. P.J. ஆகிய பத்து மொழி பெயர்ப்புகளை உங்கள் முன் வைத்துள்ளோம். முதலில் வார்த்தைக்கு வார்த்தை
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/221.html
https://mdfazlulilahi.blogspot.com/2019/12/221.html
يٰۤا- யா
ஓ
النَّاسُ- அன்னாஸு
மக்கள் - மனிதர்கள்
أَيُّهَا النَّاسُ- அய்யு ஹன்னாஸு
மனிதர்களே! - மக்களே
اعْبُدُوا- ஃபுதுா
வணங்குங்கள்!- அடிபணியுங்கள்
رَبَّ- ரப்ப
இறைவன்
كُمُ -கு(ம்)மு
உங்கள்
الَّذِي- அல்லதீ(ரீ)
ஒருவன்
خَلَقَ- ஃகலஃக
உருவாக்கினான் - படைத்தான்
كُمْ-கும்
உங்களை
وَ - வ
இன்னும், மேலும், பின்னர், பின்பு,
அன்றி
الَّذِينَ- அல்லதீ(ரீ)ய்ன
அவர்கள் – எவர்கள்- சிலர்
مِن- மின்
இருந்து (FROM) லிருந்து
قَبْلِ - ஃகப்லி
முன்
كُمْ- கும்
உங்களுக்கு
مِن قَبْلِكُمْ - மின்ஃகப்லிகும்
உங்களுக்கு முன் சென்றோர் - உங்களுக்குமுன்னிருந்தோர்
لَعَلَّ - லஃஅல்ல
ஒருவேளை - இருக்கலாம்
كُمْ- கும்
நீங்கள்
تَتَّقُونَ- தத்தஃகூ(ன)ன்.
இறையச்சம் உடையோராக
இணைத்து ஓதுவோம்
يَا أَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَِ
யா அய்யு ஹன்னாஸுஃபுதுா ரப்பகுமுல்லதீ(ரீ) ஃகலஃக கும் வ ல்லதீ(ரீ) ன மின் ஃகப்லிகும் லஃஅல்லகும் தத்தஃகூ(ன)ன்.
10 பதிப்புகளிலிருந்து தமிழாக்கங்கள்
1. மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த368 உங்கள் இறைவனையே வணங்குங்கள்! இதனால் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொள்வீர்கள்(.PJ)
2. மனிதர்களே! நீங்கள் உங்களையும்
உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கு மட்டுமே அடிபணியுங்கள்;. (அதனால்) நீங்கள் (அவனுடைய தண்டனையிலிருந்து) தற்காத்துக் கொள்ளலாம்.
(அதிரை ஜமீல்)
3. மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு
முன்னிருந் தோரையும் படைத்த உங்கள் இறைவனுக்கே அடிபணியுங்கள்! (அவ்வாறு செய்வதனால்
மட்டுமே) நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். (IFT)
4,5 மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு
முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா
(இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (அன்வாருல்
குர்ஆன், ஜான்)
6. மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும்
படைத்த உங்கள் ரப்பையே வணங்குங்கள். (அதன் காரணமாக) நீங்கள் இறையச்சமுடையோர்களாக
ஆகலாம். (பஷாரத்)
7. மனிதர்களே! உங்களுடைய
(ஒரே) இறைவனை நீங்கள் வணங்குங்கள். அவன் எத்தகையவனென்றால் உங்களையும்
உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தான். (அவனை வணங்குவதால்) நீங்கள் பயபக்தி உடையோராகலாம்.
(மலிவு பதிப்பு)
8. மனிதர்களே! நீங்கள் உங்களையும்
உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள்
இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். (அப்துல் ஹமீது பாகவி)
9. மனிதர்களே! உங்களுடைய இரட்சகனை நீங்கள்
வணங்குங்கள்; அவன் எத்தகையவனென்றால் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோர்களையும் படைத்தான்; (அதனால்)
நீங்கள் பயபக்தியுடையோராகலாம். (சவூதி)
10. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு
முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சம்) உடையோராகலாம். (KSR)
Comments