TNTJ மார்க்கத்தில் விளையாடியது துரோகங்கள் மோசடிகள் செய்தது பற்றி பீ.ஜே.
கொள்கைச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
கொள்கைச் சகோதரர்களாகிய உங்களால் தான் இந்த ஜமாஅத் உருவாக்கப்பட்டது. கொள்கை, நீதி, நேர்மை, நாணயம், தியாகம் ஆகியவை காரணமாகவே இந்த ஜமாஅத்தில் நாம் பயணித்து வருகிறோம்.
ஆனால் கடந்த சில மாதங்களாக மாநில நிர்வாகிகளின் செயல்பாடுகள் மார்க்கத்துக்கு விரோதமாக அமைந்துள்ளதை நாம் காண்கிறோம்.
மார்க்கத்தில் விளையாடியது
1. பிறை குறித்த தகவல் வியாழன் பின்னேரம் ஏழு மணிக்கு கிடைத்து உறுதியான பின்பும் வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அறிவிப்பு செய்யாமல் தாமதம் செய்து சனிக்கிழமை பெருநாள் என்று அறிவித்தது.
2.கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வெள்ளிக்கிழமை பெருநாள் மற்ற மாவட்டங்களுக்கு சனிக்கிழமை பெருநாள் என்று அறிவித்து மார்க்கத்தைக் கேலி செய்தது.
3. ஹதீஸ் அடிப்படையில் வெள்ளிக்கிழமை பெருநாள் தொழுகை தொழுத சகோதரர்களை ஜமாஅத்தில் இருந்து நீக்கியது
4. சுபுஹ் நேரம் பிறை பார்த்த தகவல் கிடைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஏற்று அன்றே பெருநாள் தொழுகை என்று அறிவித்த ஹதீஸ் உள்ளது. பிறை பார்த்த தகவல் அதற்கு முன்பே மாநில நிர்வாகத்துக்கு கிடைத்தும் கூட்டம் காட்டும் நோக்கில் சனிக்கிழமை பெருநாள் என்று அறிவித்தது.
5. இவர்களின் இம்முடிவுக்கு எதிராக உள்ள ஹதீஸை வெளியிட்டு விட்டு அவசரமாக அதை முகநூல் அறிக்கையில் நீக்கியது
6. எங்கள் நிலைபாட்டுக்கு மாற்றமாக இருந்ததால் அந்த ஹதீஸை நீக்கினோம் என்று கூறி மாநிலத் தலைவர் வஹீயை மறுத்தது.
7. சனிக்கிழமை பெருநாள் கூடும் என்று மாநிலத் தலைவரும், கூடாது என்று மேலாண்மைக் குழுத் தலைவரும் முரண்பட்டுக் கூறி மார்க்கத்தில் விளையாடியது.
8. பிறை பார்த்த சாட்சி இருந்தும் தெளிவாக இல்லை எனக் கூறி அதை மாநிலத் தலைவரும், மேலாண்மைக் குழுத் தலைவரும் நிராகரித்து மார்க்கத்தில் விளையாடியது.
9. குமரி மாவட்டம் எங்களிடம் அனுமதி வாங்கிவிட்டு வெள்ளிக்கிழமை பெருநாள் தொழுதார்கள்; திருவள்ளூர் மாவட்டம் எங்களிடம் அனுமதி வாங்காமல் தொழுகை நடத்தியதால் தான் நடவடிக்கை என்று அறிவித்தது
10. அதிகாரமுடையோருக்குக் கட்டுப்படுங்கள் என்ற வசனத்தை ஆதாரமாகக் காட்டி பிறை அறிவிப்பில் நாங்கள் சொல்லி விட்டால் அதற்கு எதிராக கேள்வி கேட்கக் கூடாது என்று ஈ. முஹம்மத் சொன்னது.
11. பெருநாள் தொழுகை கட்டாயக் கடமை என்ற ஜமாஅத்தின் சரியான நிலைபாட்டுக்கு மாற்றமாக பெருநாள் தொழுகை சுன்னத் என்று கோவை ரஹ்மதுல்லா பத்வா கொடுத்தது
12. மாலை நான்கு மணிக்கு ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் அவர் அப்போதே நோன்பு வைக்க வேண்டும் என்று கோவை ரஹ்மதுல்லா விசித்திரமான பத்வா கொடுத்தது
13. எருமை மாட்டைக் குர்பானி கொடுக்கலாம் என்பது ஜமாஅத்தின் நிலைபாடாக இருக்க கொடுக்கக் கூடாது என்று கோவை ரஹ்மதுல்லா பத்வா கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்தியது
14. அப்படி ரஹ்மதுல்லா சொல்லவில்லை என்று எம்.எஸ்.சுலைமான் பொய் சொல்லி ரஹ்மதுல்லாவுக்கு வக்காலத்து வாங்கியது
15. நான் அப்படி சொல்லவில்லை என்று கோவை ரஹ்மதுல்லா அப்பட்டமாக பொய் சொன்னது
16. பெருநாள் தொழுகை தக்பீரை மறந்து விட்டு அல்ஹம்து சூராவுக்குப் பின் அந்த தக்பீரை கூறி தொழுவித்து அப்துல் கரீம் அதை நியாயப்படுத்தியது
இப்படி அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடி உள்ளனர். இதற்கான தக்க பதில் என்ன? இது தவறு என்றால் பகிரங்கமாக சம்மந்தப்பட்ட ஒவ்வொருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இரண்டு பெருநாளையும் பாழாக்கியவர்கள் எந்தப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது என்பது தான் இதற்கான பரிகாரமாக இருக்க முடியும்
துரோகங்கள் மோசடிகள்
1. 120 சிறுவர்களுக்கு ஒரு ஆண்டுச் செலவு அறுபது லட்சம் ஆகும் எனும் போது ஆறு கோடியே அறுபத்தி ஏழு லட்சம் செலவு என்று பொதுக்குழுவில் அறிவித்தது. அதாவது ஆறுகோடி ரூபாய் ஆட்டையைப் போட்டது
2. 70 முதியோருக்கு 54 ஆயிரம் தான் செலவாகும் என்று இருக்க ஒரு கோடியே எண்பத்தி நாலு லட்சம் என்று செலவு கணக்கு காட்டியது.
3. பொதுக்குழு உறுப்பினர் அல்லாத மதரஸா மாணவர்களை பொதுக்குழுவுக்கு அழைத்து வந்து எதற்கெடுத்தாலும் அல்லாஹு அக்பர் என்று கூறும் அடியாட்களாகப் பயன்படுத்தியது
4. பொதுக்குழு உறுப்பினர்களை இதன் மூலம் ஏமாற்றியது
5. பீஜே கள்ள ஐடியில் ஜமாஅத்துக்கு எதிராக எழுதினார் என்று ஆதராமில்லாமல் கூறி மாணவர்கள் எழும் அடியாட்களைக் கூச்சல் போடவைத்து தீர்மானம் நிறைவேற்றியது
6. அதற்கு ஆதாரம் கேட்ட மக்களுக்குப் பதில் சொல்லாமல் போக மாட்டோம் என்று சொல்லி விட்டு பதில் சொல்லாமல் மாநில நிர்வாகிகள் ஓட்டம் பிடித்து துரோகம் செய்தது.
7. அன்வர் பாஷா மரணித்த பின் பப்ளிசர் பெயரை முறைப்படி மாற்றாமல் உணர்வு வார இதழை வெளியிட வேண்டாம் என்று உணர்வு இதழின் சேர்மன் பிஜே அவர்கள் மாநிலத் தலைமைக்கு மெயில் போட்ட பின் நிர்வாகத்தில் இல்லாத கலீல் ரசூலை பப்ளிசர் என்று போட்டு உணர்வு இதழ் அச்சிட்டு வருவது.
8. ஹலீல் இப்ராஹீம் என்ற பெயரில் ஹாமீம் இப்ராஹீம் குறித்து இழிவுபடுத்தும் செய்தியைப் பரப்பியது நிருபணமான பின்பும் அவர் மீது நடவடிக்கை எதுவும் அறிவிக்கப்படாமல் அவருக்கு மட்டும் கள்ள ஐடிக்கு சலுகை அளித்தது.
9. நாகூர் கனி என்ற பெயரில் பதிவிட்டவர்களுக்கு கோவை ரஹ்மதுல்லா தான் ஆக்கங்கள் அனுப்பி வந்தார். இதை பொதுக்குழுவில் மறுத்து பொய் சொன்னது
10. பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நடவடிக்கை எடுக்கப்பட்டவருக்கு எப்படி ஆலிம் பட்டம் கொடுக்கலாம் என்ற கேள்விக்கு அவர் மீது உள்ள நடவடிக்கையை ரத்து செய்து பட்டம் கொடுத்தோம் என்று திமிராக அறிவித்தது
11. கலீல் ரசூல் ஸ்கூலில் ஊழியராக அவர் இருப்பதால் பைலாப் படி நடவடிக்கை எடுத்து விட்டு பைலாவுக்கு மாற்றமாக அவரை மீண்டும் சேர்த்து அவருக்குப் பட்டம் கொடுத்து நடவடிக்கையில் பாரபட்சம் காட்டியது
12. சிறுவர் இல்லம் முதியோர் இல்லம் ஆகியவற்றுக்கு வசூல் செய்தால் அதற்கும் கமிஷன் வாங்கி விட்டு அதற்கு கமிஷன் கிடையாது என்று கோவை ரஹ்மதுல்லா துணிந்து பொய் சொன்னது
13. அதற்கு நடவடிக்கை கோரி ஒருவர் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் சலுகை காட்டியது
14. சம்சுல்லுஹா மகனுக்கு நடவடிக்கை ரத்து குறித்து கேள்வி கேட்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்தது
15. உயர்நிலைக் குழுவைக் கூட்டாமல் நிர்வாகிகளாக இல்லாத கலீல் ரசூல், எம்.எஸ்.சுலைமான், லுஹா ஆகியோர் எந்த விசாரணையும் நடத்தாமல் பீஜேயை நீக்கி விட்டு பின்னர் உயர்நிலைக் குழுவில் சொன்னது
16. பெண் தரப்பில் புகார் கொடுக்காமல் அவரது உறவினர் அளித்த புகாரை ஏற்று பீஜே மீது நடவடிக்கை எடுத்து மார்க்க வரம்பை மீறியது
17. குற்றத்தை விசாரித்து நிரூபிக்காமல் ஜமாஅத் குட்வில் நற்பெயரைக் காக்க நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளதாக பீஜேயிடம் வாக்குமூலம் கேட்டது
18. புகார் கொடுத்தவர்களை எதிரிகள் மிரட்டுகின்றனர்; புகார் கொடுத்தவர்களின் குடும்பத்துப் பெண்களைக் குறித்து ஆடியோ வெளியிட உள்ளதாக மிரட்டுகின்றனர். ஆபாச ஆடியோவில் பேசியது நான் தான் என்று பீஜே பகிரங்கமாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே அவர்கள் திருப்தி அடைவார்கள், எனவே ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் தாருங்கள் என்று மிரட்டி உயர்நிலைக் குழுவினர் பீஜேயிடம் வாக்கு மூலம் கேட்டது
19. பீஜே மூன்று நாட்களுக்கு முன் ராஜினாமா செய்திருந்தும் மாநிலத் தலைவரை தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியதாக மோசடியான அறிவிப்பு செய்தது
20. எட்டு நிமிட ஆபாச ஆடியோவுக்கு கால் ஹிஸ்டரியை அந்தப் பெண்வீட்டார் தந்துள்ளனர் என்று கிளைகளுக்கு பொய்யான தகவலைப் பரப்பியது
21. ஜமாஅத்தில் இருந்து எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்த பீஜே அவர்கள் ஒரு கோடி ராயல்டி கேட்டதாக ஆதாரமில்லாமல் பொய்யை மெய்யாக நம்ப வைத்தது
22. பீஜே அயோக்கியன் என்று சொல்லி மதரஸா மாணவர்களை அதற்கு தக்பீர் சொல்ல வைத்தது
23. ஜமாஅத் சார்பில் ஜமாஅத் பொருளாதாரத்தை பாதுகாத்து வந்த ஒருவருக்கு பதினைந்து லட்சம் கடனாகக் கொடுத்தது பீஜேயின் தன்னிச்சையான முடிவு என்று பொதுக்குழுவில் பொய் சொன்னது
24. பீஜேயின் நூல்களை அறிஞர் குழு என்று போட்டு பொய் சொல்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டு இருந்தும் அப்படி வெளியிடுவோம் என்று அறிவித்தது
25. இலங்கை தலைமையில் இருந்து ஜமாஅத் தாயியான ரஸ்மின் பற்றி அவதூறு பரப்பும் செய்தியை காமில் என்ற தவ்ஹீத் எதிரிக்கு தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைத்து எதிரிகளுடன் கள்ளக் கூட்டணி வைத்தது.
உள்ளிட்ட பல குற்றங்களை நிர்வாகிகளும் அறிவிக்கப்படாத தலைவராக செயல்பட்டு வரும் கலீல் ரசூல் என்ற அயோக்கியனும் செய்துள்ளனர்.
இதற்கு இரண்டில் ஒரு நியாயம் கிடைக்க வேண்டும்.
ஒன்று இவற்றுக்கு ஏற்கத்தக்க பதிலைத் தர வேண்டும்.
ஏற்கத்தக்க பதில் இல்லாவிட்டால் மேற்கண்ட குற்றங்களில் யாருக்கு பங்கு உள்ளதோ அவர்கள் எந்தப் பொறுப்புக்கும் வராமல் நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கிளையில் உள்ள உறுப்பினர்களும் கொடையாளர்களும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை வழங்குமாறு மாவட்ட நிர்வாகிகளையும், மாநில நிர்வாகத்தையும் வற்புறுத்த வேண்டும்
விளக்கமும் தராமல், கேடுகெட்டவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்காமல் மழுப்பினால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உறுப்பினரில் இருந்து நீங்கினால் நமது உழைப்பில் உருவான மர்கஸ்களில் நமக்கு எந்த உரிமையும் இல்லாமல் போய்விடும்.
மேலும் அவர்கள் தன்னிஷ்டத்துக்கு ஆட்டம் போட நாமே வழிவகுத்து கொடுத்ததாக ஆகிவிடும்.
போராட்டங்களில் பங்களித்தல் நிதியுதவி அளித்தல் ஜமாஅத் சதனைகள் குறித்து பதிவிடுதல் உள்ளிட்ட எந்தப் பணிகளும் செய்ய மக்கள் தயாரக இல்லை என்று தெரிவிக்க வேண்டும். அவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் தொழுகை பயான் உள்ளிட்டவைகளை நடத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு எதிராக அவர்கள் காவல் துறையை அணுகினால் நாங்கள் மக்களிடம் வசூலித்து கொடுத்த பணத்தில் எட்டு கோடி ரூபாய்களைக் களவாடி விட்டனர். இதற்கு கணக்கு கேட்பதால் ரவுடித்தனம் செய்கின்றனர் என்ற உண்மையை காவல் துறையில் தெரிவிக்க வேண்டும்.
இப்படி செய்தால் பதில் சொல்ல முடியாமல் ஓட்டம் எடுப்பார்கள்.
அல்லது தக்க பதில் தருவார்கள்.
அல்லது தவறை ஒப்புக் கொண்டு அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்.
ஜமாஅத்தை விட்டு விலகினால் ஜமாஅத்தில் இல்லாதவர்கள் குழப்பம் விளைவிக்கிறார்கள் என்று புகார் சொல்லி எளிதாக ஏமாற்றி விடுவார்கள்
அதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்கக் கூடாது.
Comments