எங்கே போனது 5 ,47 ,085 ரூபாய்கள்? காசுக்கு காசுக்கு -
அயல்நாட்டு நிதி விசயத்தில் பீஜேயின் அப்பட்டமான
பொய்களையும், முரண்பாடுகளையும்
அலசிவரும் இந்த தொடரில், அபூதாவூத்
மொழிபெயர்ப்புக்காக (சுவர் முட்டி) லுஹாவுக்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டதையும், பின்பு (சுவர் முட்டி) லுஹா அபூதாவூதை மொழிபெயர்த்து தராததால் (ஏமாற்றியதால்) பீஜேயின் திர்மிதியை
வெளியிடுவதற்காக பீஜெயிக்கு ஒரு லட்சம் இஸ்லாமிய கல்விச் சங்கம் வழங்கிய விஷயங்களை
எழுதி, இவர்கள்
தானமாக தந்த தியாகிகள் அல்ல. துரோகிகள் என்று தெளிவு படுத்தியிருந்தோம். இந்த
தொடரில் திர்மிதி தொடர்பாகக பீஜே சொல்லும் இன்னொரு பொய்யை அலசுவோம்.
''பல
மாதங்கள் கடுமையாக உழைத்து தயார் செய்து வைத்ததை எங்களிடம் தாருங்கள். நாங்கள்
வெளியிடுகிறோம் என்று ஹாமித்பக்ரியும் சைபுல்லாஹ்வும் கேட்டனர். மற்ற
நிர்வாகிகளும் வற்புறுத்தியதன் அடிப்படையில் திர்மிதியை நான் அவர்களுக்கு
வழங்கினேன். மேலும், திர்மிதியை வெளியிட்டு அதை முழுமையாக ஜமாஅத்தில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை
விற்பனையாவதற்கு ஏற்ப பணம் போட்டவர்களுக்கு ஜமாஅத் திரும்பக் கொடுக்கும்.பணம் தந்தவர்கள்
பட்டியலை ஜமாத்திடம் தரவேண்டும் என்ற நிபந்தனை விதித்தோம்.
இந்த நூலை விற்பனை செய்யும் உரிமை சாஜிதா புக்
சென்டர் வசம் இருந்தது. அவர் விற்று பணம் தரும் போதெல்லாம் பங்கு
சேர்ந்தவர்களுக்கு உரிய தொகையை நாங்கள் கொடுத்து வந்தோம். ஆனால் திர்மிதி வெளியாகி
சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார். உடனே சாஜிதா புத்தக
வியாபாரியிடம் சென்று மீதிப் புத்தகத்தின் பணத்தை என்னிடம் தரவேண்டும்.ஜமாஅத்தில்
கொடுக்கக் கூடாது என்று கூறி அந்தப் பணத்தை சாப்பிட ஆரம்பித்தார். ஷேர்
கொடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டால் தவ்ஹீத் ஜமாஅத்தில் எல்லாப் பணத்தையும்
கொடுத்து விட்டேன் என்று கூறி அவர்களை விரட்டியடித்தார். பல நூறு ஏழை மக்கள்
இவரிடம் கொடுத்த பணத்தை இன்னும் திரும்பப் பெறவில்லை. அவர்களின் சாபமும்
பத்துவாவும் அவர் மீது உள்ளது'' இவ்வாறு பீஜே கூறியுள்ளார்.
உண்மை நிலை என்ன?
திர்மிதியை வெளியிடும் உரிமை இஸ்லாமிய கல்விச்
சங்கத்திடமும், அதை
விற்பனை செய்யும் உரிமை சாஜிதாவிடம் வழங்கப்பட்டது. சாஜிதா தரும் பணத்தை ஷேர்
ஹோல்டருக்கு விநியோக்கிக்கும் பொறுப்பு பீஜேயின் நம்பிக்கைக்கு பாத்திரமான அன்றும்
பொருளாளர், இன்றும்
பொருளாளராக இருக்கும் அன்வர் பாஷாவுக்கு வழங்கப்பட்டது. இதுவரைக்கும் பீஜே சொல்வது உண்மை.
அதற்கு பிறகு சொல்வது அவருக்கே உரித்தான
வழக்கமான பொய்.
திர்மிதி ஐந்தாயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டது.
அதை சென்னையில் அச்சடித்து பைண்டிங் செய்யப்படாமல், பிரிண்டிங் சிவகாசியிலும், பைண்டிங் சென்னையிலும் செய்யப்பட்டது. இதில் பீஜேயின் உறவினர் ஒருவர்
பலனடைந்தார். தேவைப்பட்டால் அவர் பெயரைச் சொல்வோம். பிரிண்டிங் ஓரிடத்திலும், பைண்டிங் ஓரிடத்திலும் நடந்ததால் அந்த நூலின் சுமார் எழுநூறு புத்தகங்கள்
அளவுக்கு சேதமானது. மேலும் பைண்டிங் சரியில்லை என்ற குற்றச்சாட்டு திர்மிதி
வெளியீட்டு விழாவிலேயே முன்வைக்கப் பட்டது. ஆக, விற்பனை செய்யும் தரத்தில் ஏறக்குறைய 4300 புத்தகங்கள் அளவுக்குத் தான் சாஜிதாவுக்கு கிடைத்தது. இதுபோக இந்த புத்தகங்கள்
தேங்கிய நிலையில், அவ்வப்போது
பீஜேயின் அனுமதியின் பேரில் 150 ரூபாய்களுக்கு சில நூறு பிரதிகள் விற்கப்பட்டது. ஆரம்பத்தில் சில்லறை விலை 230 ஆக இருந்ததை மாற்றி, 190 ரூபாய்
என்று அறிவிப்பு செய்யப்பட்டது. இதில் மொத்தமாக வாங்குபவர்களுக்கு கழிவு உண்டு.
இந்த நூலை விற்று வந்த சாஜிதா புக் சென்டர் நிறுவனர்
ஜக்கரியா அவர்கள்,
5 ,47 ,085 [ ஐந்து லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] ரூபாய்களை
அன்வர்பாஷாவிடம் வழங்கியுள்ளார். அதோடு பின்னாளில் ஒரு ஷேர் ஹோல்டருக்கு ஐயாயிரம்
வழங்கியுள்ளார். ஆக ஐந்து லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரத்து என்பத்தி ஐந்து
ரூபாய்கள் ஜக்கரியவால் திர்மிதி நூலுக்காக வழங்கப்பட்டுள்ளது. இதுபோக திடீரென்று பீஜே அருள் வந்தவராக மீதமுள்ள புக்குகளை மீடியா வேல்டிடம் ஒப்பைடைக்க
சொன்னார். பின்பு திரும்பவும் சாஜிதாவிடம் ஒப்படைக்கச் சொன்னார். இதில் மீடியா
வேல்டு எத்தனை நூல்கள் விற்றது; அந்த தொகை என்ன ஆனது என்பது பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
மேலும், திர்மிதி வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்பு சாஜிதா புக் வியாபாரியிடம் திர்மிதி காசை வாங்கி சாப்பிட்டார் என்று பீஜே
சொல்கிறாரே! சில நாட்களில் திர்மிதி ஐந்தரை லட்சத்துக்கு வியாபாரமாகி விட்டது
என்கிறாரா? பொய்
சொல்வதற்கும் ஒரு அளவில்லையா? திர்மிதி காசை ஹாமித்பக்ரி சாப்பிட ஆரம்பித்தார் என்று கதை விடும் பீஜே, ஜக்கரியா தந்த தொகையை லாவகமாக மறைத்தது ஏன்? அந்த தொகையை சொன்னால் இவர் சொல்லும் பொய் அடிபட்டுப் போகும் என்பதாலா?
திர்மிதி விசயத்தில் பீஜெயிடம் நாம் வைக்கும்
கேள்விகள்;
1.
திர்மிதிக்காக
இஸ்லாமிய கல்விச் சங்கத்திடம் ஒரு லட்சரூபாய் ராயல்டி வாங்கியது உண்மையா? இல்லையா?
2.
ஜக்கரியாவிடம்
5 ,47 ,085 [ ஐந்து
லட்சத்து நாற்ப்பத்தி ஏழு ஆயிரத்து என்பத்தி ஐந்து] வாங்கியது உண்மையா? இல்லையா?
3.
இந்த
தொகை யார் யாருக்கு எவ்வளவு விநியோகிக்கப்பட்டது என்ற வெள்ளையறிக்கை வெளியிடத்
தயாரா?
4.
ஹாமித்
பக்ரி வழங்கிய ஷேர் ஹோல்டர்கள் பட்டியலை வெளியிட்டு, இன்னினாருக்கு
நாங்கள் பணத்தை வழங்கிவிட்டோம்; இன்னின்னாரை
ஹாமித்பக்ரி ஏமாற்றி விட்டார் என்று வெளியிடவேண்டும்.
5.
திர்மிதி
வெளியான சில நாட்களில் ஹாமித்பக்ரி நீக்கப்பட்டார் என்பதற்கு திர்மிதி வெளியான நாளையும், ஹாமித்பக்ரி
நீக்கப்பட்ட ஆதாரத்தையும் வைத்து நிரூபிக்கத் தயாரா?
6.
ஹாமித்
பக்ரியிடம் அபூதாவூதுக்காக லுஹாவும், திர்மிதிக்காக
பீஜேயும் வாங்கிய தொகையையும், திர்மிதி
விற்று ஜக்கரியா தந்த தொகையையும் மறைத்த நோக்கம் என்ன?
நன்றி http://mugavaiabbas.blogspot.com/2012/04/ கோவை மசூது அவர்கள் கூறும், பி.ஜே.க்கு டாபர் மாமா வேலை பார்த்த தவ்ஹீது மவுலவிகளில் ஒருவனான சுவர் முட்டி லுஹா எழுதிய கடித ஆதரங்களைக் காண பிளாக்கரை கிளிக் செய்யவும்.
http://mdfazlulilahi.blogspot.com/2018/06/5-47-085.html
http://mdfazlulilahi.blogspot.com/2018/06/5-47-085.html
இந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ள கடிதங்கள் சம்பந்தமான ஆதாரங்கள்
1.ஜாமிஆ தாருஸ்ஸலாம் சிபாரிசு கடிதம் ஸலபுகள் நாங்கள்
2. இலங்கையிலிருந்து அரபி கடிதம்
Comments