ஜிஹாத் என்றால் என்ன ? அல்கொய்தா IS போன்ற இயக்கங்களின் நடவடிக்கைகள் .

காய்ந்த ரொட்டி துண்டுகளை தாங்கள் வைத்து கொண்டு புதிய ரொட்டிகளை கைதிகளுக்கு கொடுத்து மனித நேயத்தில் உலகிற்கு ஒரு எடுத்துகாட்டாய்  இருந்த நபி தோழர்கள் எங்கே ,பினைய கைதிகளாய் அப்பாவிகளை அறுக்கு இந்த காட்டுமிராண்டிகள் எங்கே !

0091 94438 81908 -MD sithik
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஜிஹாத் என்றால் என்ன ?
"லா இலாஹ இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்"
என்ற கருப்பு கொடியை
கையில் பிடித்து யார் கையில் கிடைத்தாலும்
பிடித்து கழுத்தை கரகர வென அருப்பது
பெயர் ஜிஹாத் அல்ல.
அல்லாஹ் திருக்குர்ஆன் கூறுகிறான்:
உங்களோடு சண்டையிடுபவரோடு
நீங்கள் சண்டையிடுங்கள் மேலும் 
வரம்பு மீறிவிடாதீர்கள். நிச்சயமாக வரம்புமீறுபவர்களை அல்லாஹ் 
நேசிப்பதில்லை (அல்பகரா)
இந்த வசனம் இஸ்லாத்தில் முதல் முதலாக போர் செய்ய அனுமதிக்கப்பட்ட 
வசனம் ஆகும்.
இவ்வசனம் ஜிகாத் பற்றிய சரியான 
புரிதலை தருகிறது உங்களுக்கு எதிராக 
வாள் ஏந்துபவருக்கு எதிராக 
வாள் ஏந்தி சண்டையிடு. உன்னோடு
சண்டைக்கு வருபவனுடன்
உமக்கு அநீதி இழைப்பவனுடன்
சண்டையிடு என்ற கருத்தை கூறுகிறது .
மேலும் போரின் வரம்புகளை இஸ்லாம் 
கற்று தருகிறது 
நபிகள் பெருமனார் (ஸல்) அவர்கள் 
போரின் வரம்புகளை கூறுகிறார்கள்
" போரில் பெண்கள் குழந்தைகளை முதியவர்களை
கொல்ல கூடாது மரம் செடி கொடிகளை
வெட்ட கூடாது 
கிருஷ்துவ, யூத தேவாலயங்களை
எந்தவித சேதமும் செய்ய கூடாது 
என்று வகுத்து கொடுத்துள்ளார்கள்
எம்பெருமானார்.
இப்போதைய அல்கொய்தா IS போன்ற
இயக்கங்களின் நடவடிக்கைகள் 
இஸ்லாத்திற்கும் இஸ்லாமிய ஷரியத்திற்கும்
எதிரான செயல்களை செய்து வருகிறது .
அப்பாவி பத்திரிகையாளர்கள் ஆண்
பெண் பாரபட்சமின்றி கொடூறமாக
கொலைசெய்து இஸ்லாமிய சமூகம் 
என்றால் பிற மதத்தினரால் வெறுக்க
தக்க இஸ்லாத்தை பற்றி அறிய
நினைப்பவரை கூட பயமுறுத்தி
இஸ்லாத்தின் வளர்ச்சி பெரும் தடைகற்களாக
நின்றுகொண்டிருக்கிறது.
நபிஸல் அவர்கள் கூறினார்கள் 
அநியாயம் செய்பவன் முஸ்லிம்
என்பதால் அவனை ஆதரிப்பது 
இனவெறி "என்றார்கள்
ஒரு போர்களத்தில் நபி (ஸல்)
அவர்கள் ஒரு பெண் கொலை
செய்ய பட்டு கிடப்பதை கண்டு 
இந்த கொடூடரத்தை செய்தது யார்
இந்த கொலையை செய்தது யார் ?
என சினம் கொண்டவர்களாக முகம்
சிவந்தார்கள். அப்போது ஒரு சஹாபி
நான் தான் செய்தேன் என்றவுடன் 
நபிஸல் அவர்கள் இரு கையேந்தி
இறைவனிடம் யா அல்லாஹ் இந்த இரத்ததிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் 
கிடையாது என இறைவனிடம் 
கையேந்திய நபி எங்கே 
ஒரு பெண் பத்திரிகையாளர் கழுத்தை
கரகர வென அறுத்து போட்ட இந்த
அமைப்பினர் எங்கே !!!!
ஜிஹாத் என்பது அப்பாவி மக்களை
குண்டு வைத்து கொள்வதும் அப்பாவிகளை
பினைய கைதியாய் பிடித்து கழுத்தை
அறுப்பதும் அல்ல.
ஜிஹாத் என்பது மனித உரிமை மீட்பு
இறைவன் ஒருவனுக்காக உடல் பொருள் ஆவி அனைத்தையும் இறைவனுக்காக
இறைபாதையில் துறப்பதாகும்.
போரில் கைதிகளாக பிடித்தவர்களுக்கு
எம்பெருமானர் தன் கரங்களால்
உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள் 
மேலும் ஒரு சமயம் சகாப தோழர்கள் காய்ந்த ரொட்டி துண்டுகளை தாங்கள் 
வைத்து கொண்டு புதிய ரொட்டிகளை
கைதிகளுக்கு கொடுத்து மனித
நேயத்தில் உலகிற்கு ஒரு எடுத்துகாட்டாய்
இருந்த நபி தோழர்கள் எங்கே
,பினைய கைதிகளாய் அப்பாவிகளை
அறுக்கு இந்த காட்டுமிராண்டிகள் எங்கே !

இந்த கொடியவர்களால் ஜிஹாத்
என்றால் தீவிரவாதம் என்று சொல்லும்
அளவிற்கு அதன் புனிதத்தை கெடுத்த
பொறுப்பு அவர்களையே சாரும்.
இந்திய இளைஞகளே
எச்சரிக்கை யாரும் இதுபோன்ற 
தீய செயலின் பக்கம் சாய்ந்து இஸ்லாத்தின் 
வளர்ச்சிக்கு இடையூறு செய்ய 
வேண்டாம் .
இந்தியாவின் முக்கியமான உலமா
சபை தேவ்பந்த் உலமாக்கள் இந்த 
அல்கொய்தா,IS இயக்கங்கள்
இஸ்லாமிய ஷரியத்திற்கு முரணான
நடவடிக்கைகள் கொண்டுள்ளது .
�என்று கூறிகூறியுள்ளனர்
இந்திய முஸ்லிம்கள் அமைதியான 
வாழ்க்கை வாழ்கிறார்கள் அதில்
ஃபித்னாக்களை உருவாக்கி விடாதீர்கள்
அல்லாஹ் திருக்குர்ஆனில்
அமைதிக்கு பிறகு குழப்பம் ஏற்படுத்து கூடாத செயல் "என்று கூறுகிறான்
அமைதியான நிலத்தில் திரியை பற்றி
போடுவது இறைவன் அனுமதிக்காத செயல்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு