கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள்

வாட்ஸ் அப்'பில் அவ்வப்போது சில தகவல்கள் வைரலாக பரவி அனைவரையும் கவர்வதுண்டு. அந்த வரிசையில் கண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் என்ற ஒரு செய்தி தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறது. அது இதோ... 

''நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ, கறையோ பட்டுவிட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளதை உள்ளபடி காட்டுகிறது அல்லவா? அதேபோல், உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதேபோல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாதபோது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…! அதேபோல், நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்".
http://mdfazlulilahi.blogspot.in/2002/12/blog-post_115571117747994287.html http://mdfazlulilahi.blogspot.in/2002/12/blog-post_115571117747994287.html

ஜிஹாத்! ஜிஹாத்!! ஜிஹாத்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... மவுலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் உலவி அவர்களுக்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. உங்களால் பொறுப்பு வழங்கப்பட்டவர்களுக்கு நான் பல விமர்சன கடிதங்கள் எழுதி இருக்கிறேன். 2001 மே மாதத்தில் நான் எழுதிய குற்றச் சாட்டுக் கடிதங்களுக்குப் பதில் போட முடியாமல் பதில் போட வேண்டாம் என்று கட்டளை இட்டு விட்டீர்கள். இப்படி கட்டளை இட்ட நீங்கள், எனது கடிதம் ஏற்படுத்திய விழிப்புணர்வை சமாளிக்க அவதூறு நோட்டீஸ்களும் அறிக்கைகளும் செட்டப் சி.டி.யும் 2002 ல் எழுதி 2001 தேதியிட்ட செட்டப் கடிதங்களுமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.