வடக்கில் இருந்த யானை தலையை பொருத்த, பிள்ளையார் உருவம் வருகிறது.

* சிலை தான் கடவுளென நினைக்கும் நீங்கள்,  அக்கடவுளை ஆற்றில் கரைக்கப்படும்போது,  கடவுள் கரைக்கப்பட்டார் என சொல்லாமல் சிலை கரைக்கப்பட்டது என சொல்வது ஏன்? இன்னும் சிலை திருடபடும் போதும் கீழே விழுந்து நொறுங்கி விடும்போதும் கடவுளை திருடிவிட்டார்கள்,  கடவுள் கீழே விழுந்து விட்டார் என சொல்லாதது ஏன்??


0091 95669 06909 Mumtaj caterers

இன்று விநாயகர் பற்றி பார்க்கவிருக்கிறோம்!!
விநாயகர் தோன்றிய கதைகள்
பார்வதி என்பவர் சிவன் (அழிக்கும் கடவுள்) ன் மனைவி, ஒரு நாள் குளிக்கும் போது தன் மேனியில் பூசியிருந்த மஞ்சளை வழித்தெடுத்து உருண்டையாக்கினார், உயிரையும் கொடுத்தார். தான் குளிப்பதால் பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறு செய்தார், அப்போது வந்த சிவன் அவர்கள் உள்ளே வர முற்பட்ட போது அந்த பிள்ளை தடுக்க , அவர் அப்பிள்ளையின் கழுத்தை வெட்டிவிடுகிறார், பின்பு பார்வதி அவர்கள் வருத்தப்பட வடக்கில் இருந்த யானை தலையை பொருத்த,  அவ்வுருவம் வருகிறது. இது போன்ற சம்பவத்தை பலர் நம்புகின்றனர்.
அதே நேரத்தில் வேறு மாதிரியாகவும் கதை சொல்லப்படுகிறது
கயிலாய மலையின் மந்திர சித்திர மண்டபத்தில் சிவபெருமான் உமையம்மையோடு எழுந்தருளினார். அங்கு ஏழு கோடி மந்திர சித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றின் நடுவே சமஷ்டிப் பிரணவம் என்ற இரு மந்திரங்கள் அமைந்திருந்தன. சிவபெருமானும் உமையம்மையும் அவற்றை நோக்க அவ்விரு மந்திரங்கள் வடிவாய் யானை முகத்துடன் விநாயகர் அவதரித்தார். ( ரஜன பந்தன மகா கும்பாபிஷேக மலர்;4.6.1990;ஈச்சனாரி; விநாயகர் சதுர்த்தி)
இன்னும் வேறு மாதிரியாகவும் ..
சிவபெருமான் மற்றும் பார்வதி தம்பதியினர் யானைகளாக உருவம் தரித்து விநாயகரை பெற்றெடுத்தனர் என மகாபுராணங்களில் ஒன்றான இலிங்க புராணம் கூறுகிறது. ( http://temple.dinamalar.com/news_detail.php?id=10975 )
விநாயகரை கடவுளாக(?) நம்பிவரும் அன்பர்களே நண்பர்களே!!
உங்களிடம் சில அன்பான கேள்விகள்:-
* பார்வதி அவர்கள் குளிக்க சென்றதாக, மஞ்சள் தடவியதாக இவ்வாறெல்லாம் வருகிறதே!! மனிதன் தன்னை தூய்மைபடுத்திக் கொள்ளவேண்டும், இல்லையெனில் துர்நாற்றம் அடிக்கும் இவ்வாறான பலகீனம் கடவுளுக்கும் உண்டா??கடவுளும் மனிதரை போன்றா? 
* கடவுளும் உறவு கொள்வாரா?  இது கடவுளை (?) கொச்சைப்படுத்துவது இல்லையா? மனிதனுக்கு தானே இது போன்ற இச்சைகளும் தேவைகளும்,
*  விநாயகர் , பார்வதியினால் உண்டாக்கப்பட்டவர் என்ற கதையும் எவ்வாறு நம்புகிறீர்கள்? அழுக்கினால் படைக்கப்பட்டவரா கடவுள்?!
* விநாயகர் கடவுளென நினைக்கிறீர்களே, அவர் படைப்பாளனா? அல்லது அவர் ஒரு படைப்பா??
* பார்வதி தான்,  தன் அழுக்கை எடுத்து உயிர் கொடுத்து பிள்ளை உயிராக்கியதை நம்பிய நீங்கள்? சிவனால் அது பார்வதியினால் உண்டாக்கப்பட்ட பிள்ளை என்பதை கூட  தெரியாமல் போனது ஏன்? தெரியாமல் தான் தலையை வெட்டினார் என நம்புகிறீர்கள்?! நீங்கள் நம்பும் கடவுளுக்கு அறியாமையா??
* தலை வெட்டபட்டதால்,  யானை தலையை வெட்டி மாட்டியது ஏன்?  கடவுளால் மீண்டும் பிள்ளையை உருவாக்க முடியாதா?  அல்லது அதே தலையை தான் பொறுத்த சக்தி இல்லையா?
* படைக்கிறதிர்கான கடவுளான (?) பிரம்மா இருக்கும் போது,  பார்வதி எப்படி படைத்தார்?? முரண்படுகிறது தானே!!!
* கொழுக்கட்டை படைக்கிறீர்களே!! கடவுள் சாப்பிடுவாரா?? புராணங்களில் பல்வேறு கடவுளர்கள் (?) சாப்பிடுவது போலும்,  மாம்பழத்துக்கு சண்டையிடுவதும் இவையெல்லாம் நடக்கிறதே!! சற்று சிந்தியுங்கள் எல்லாம் வல்ல இறைவனுக்கு சாப்பாடு தேவையா?  சாப்பாடு இருந்தால் தான் உயிர் வாழ்வாரா?  சாப்பாடு சாப்பிடுவாரேனில் அவருக்கு இயற்கை தேவைகளும் உண்டா??
* கடவுளுக்கு குழந்தை தேவையா? நமக்கு ஏன் குழந்தை தேவை?! நாம் மகிழ்ச்சியுர,  பரம்பரைக்காக,  நாம் வயதான பிறகு நம்மை பார்த்துக் கொள்ள , கடவுள் ஏன் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
* இன்னும் யானையின் முகம் தும்பிக்கை கொடுத்து,  தொப்பையும் கொடுத்துள்ளீர்களே!! இதே போன்ற உடல் அமைப்பை உங்களுக்கு கொடுத்தால் ஏற்பீர்களா?  அல்லது இது போன்ற குழந்தை உங்கள் குழந்தை பிறந்தால் தான் ஏற்பீர்களா? மனிதனே தொப்பையை அசிங்கமாகவும் குறையாக கருதும் போது,  அவ்வாறான உடல் அமைப்பை உருவகப்படுத்தி அது கடவுள் என்கிறீர்களே!! எவ்வளவு பெரிய அபாண்டம் இது!!
* சிலை தான் கடவுளென நினைக்கும் நீங்கள்,  அக்கடவுளை ஆற்றில் கரைக்கப்படும்போது,  கடவுள் கரைக்கப்பட்டார் என சொல்லாமல் சிலை கரைக்கப்பட்டது என சொல்வது ஏன்? இன்னும் சிலை திருடபடும் போதும் கீழே விழுந்து நொறுங்கி விடும்போதும் கடவுளை திருடிவிட்டார்கள்,  கடவுள் கீழே விழுந்து விட்டார் என சொல்லாதது ஏன்??

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.