முஸ்லிகள் ஏன் மற்ற பண்டிகைகளில் கலந்து கொண்டு நல்லிணக்கம் பேணுவதில்லை ?-செங்கிஸ்கான்



உங்கள் பண்டிகைகளில்,சடங்குகளில் நாங்கள் கலந்து கொள்கிறோம் எங்கள் பண்டிகைகளில் சடங்குகளில் நீங்கள் ஏன் கலந்து கொள்வதில்லை ! படையல்களை ஏன் சாப்பிடுவதில்லை ? விநாயகர் சதுர்த்தி விழாக்களில் கலந்து கொள்ளும் ஒரு சில முஸ்லிம்களைக் கூட விமர்சிக்கின்றீர்கள் ஏன் இந்த நிலை ? இது மத நல்லிணக்கத்திற்கு நல்லதா ?

பதில் :
இந்தக் கேள்வி பல சகோதரர்கள் மனதில் உள்ள கேள்வி மட்டுமல்ல ஆசையும் கூட ! அதனால் தான் நேற்று ஒரு மத்திய அமைச்சர் கூட ''கலாம் ஒரு முஸ்லிம் ஆனால் தேசபக்தர்'' என்று கூறியுள்ளார் ! இதன் பொருள் மற்ற முஸ்லிம்களுக்கு தேசபக்தி கிடையாது என்பது தான் பொருள் ! இப்படி இருந்தால்தான் தேசபக்தர், நல்லிணக்கமாணவர் என்றெல்லாம் நினைக்கும் நிலை உருவா்கி இருக்கிறது !


முதலாவதாக முஸ்லீம்கள் பிற மத நிகழ்ச்சிகள் அனைத்தையும் புறக்கணிப்பதில்லை! எது தங்களது கொள்கைக்கு முரணாக இருக்கிறதோ அதில் மட்டும் கலந்துகொள்ள மாட்டார்கள்! இது அனைவரும் கடைபிடிக்கும் நடைமுறைதான்!

ஒரு அய்யரை, நான் உனது உணவான காய்கறி சாப்பிடுகிறேனே! நீ எனது உணவான மாமிசத்தை தின்றால் என்ன? என்று கேட்பது மத நல்லிணக்கத்தை உருவாக்குமா ?

ஒரு கடவுள் மறுப்பாளரை கோவில் திருவிழாவுக்கு அழைத்தால் வருவரா? வரமாட்டார்கள்!

புலால்மறுக்கும் ஜைன மதத்தவரை, வள்ளலார் பக்தரை ஆடறுக்கும் பக்ரீத் நிகழ்ச்சியில் அழைத்தால் வருவார்களா? வரமாட்டார்கள்!

இவ்வளவு ஏன் ஒரே கொள்கையில் உருவான இயக்கங்களான திமுக நிகழ்ச்சிக்கு அதிமுகவினரை அழைத்தால் வருவார்களா ? வரமாட்டார்கள்?

அவ்வளவு ஏன் ? நீங்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து இருக்கும் நிலையில் பிரியாணி விருந்துக்கு அழைத்தால் வருவீர்களா? வரமாட்டீர்கள்!

ஏனெனில் அது தன் கொள்கைக்கு எதிரானது என காரணம் கூறுவார்கள்! இந்த நிலைதான் ஒரு முஸ்லிமின் நிலையும்! மாலை போட்டு இருக்கும் நிலையில் உங்களை அசைவம் உண்ண அழைப்பது எப்படி நாகரீகமாக இருக்காதோ அது போலத்தான் எங்கள் நிலையும்!

ஏனெனில் உங்களை பொறுத்தவரை அனைத்தும் வணக்கத்திற்கு உரியது ! எங்களைப் பொறுத்தவரை வணக்கம் இறைவனுக்கு மட்டுமே உரியது!

மேலும் படைக்கபட்ட உணவுகள் எங்களுக்கு ஹராம் ! அது இல்லாமல் நீங்கள் கொடுக்கும் எந்த உணவையும் நாங்கள் புறக்கணிக்க மாட்டோம் !

மற்றவர்களின் மத நம்பிக்கைகளை மதிப்பதுதான் மத நல்லிணக்கத்தை உருவாக்குமே தவிர ஒருவரின் நம்பிக்கையை அடுத்தவரின் மேல் திணிப்பது நல்லிணக்கத்தை உருவாக்காது !

இதைப் புரிந்து கொண்டால் எல்லோரும் இணக்கத்தோடு வாழலாம்!
-செங்கிஸ்கான்

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு