3 வயதுச் சிறுவனின் இந்தச்சடலம் தான் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது




உலகை கடந்த இரு தினங்களாக உலுக்கிக் கொண்டிருக்கும் மனதைப் பிழியும் புகைப்படம்சிரியாவிலிருந்து தப்பித்து கடலில் படகு மூலம் துருக்கி அருகே வந்த போது படகு கவிழ்ந்து குடும்பமே மரணித்து கடற்கரையோரம் ஒதுங்கியது. 


அய்லான் குர்தி என்ற பெயருடைய 3 வயதுச் சிறுவனின் இந்தச்சடலம் தான் உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது.  இவனது தந்தை மட்டும் தப்பித்தார்.  



இன மோதல்களின் பயங்கரத்தை காட்டும் இந்தப் படமாவது மோதல்களைத் தூண்டும் அக்கிரமகாரர்களுக்கு புத்தி புகட்டட்டும்.                                    நன்றிJSR வாட்ஸப்பில் வந்தது.


அஸ்ஸலாமு அலைக்கும், 

கடந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். 

துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள், சுமார் 30 லட்சம் அகதிகளை அரவணைத்துக் கொண்டுள்ளன. அதிகப்படியான முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள், குடிமக்களின் உதவியோடு அகதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பல பள்ளிவாசல்கள் இம்மக்களுக்கான வசிப்பிடங்களாக திகழ்கின்றன.  இதுவரை ஒரு லட்சம் வரைக்குமான அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது ஜோர்டான். 

எகிப்து, இராக் போன்ற நாடுகள் சுமார் 1-5 லட்சம் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. 130 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே அளவுள்ள காசா, சில ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. 

தங்களின் அகதிகள் கொள்கை காரணமாக இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. இருப்பினும், அந்த விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது ஜெர்மனி (சுமார் 20,000). ஐரோப்பிய யூனியன் நாடுகளில், 85% அகதிகளுக்கு அடைக்கலம் தந்த நாடாக ஜெர்மனி திகழ்கின்றது. 'இம்மாதிரியான சமயங்களில் உதவில்லை என்றால் ஒரு தோல்வியடைந்த சமூகமாகவே நாம் எதிர்காலத்தில் கருதப்படுவோம்' என்ற ஜெர்மனி அதிபரின் கருத்து கவனிக்கத்தக்கது. 

மேலே காணும் தகவல்களுக்கான ஆதாரங்கள்: 
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் இது தொடர்பில் நடத்திய ஆய்வு மற்றும் Syrian Refugees இணையதளம். 

சகோதரத்துவத்துடன்,

ஆஷிக் அஹ்மத் அ 



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு