அவர் கடவுள் இல்லை. கட்சித் தலைவர்." இந்தக் கருத்துக்கு செங்கிஸ்கான் அவர்களின் பதில்
"மதம் மாறினால்தான் கடவுள் ஆசிர்வதிப்பார் என்றால் அவர் கடவுள் இல்லை. கட்சித் தலைவர்." இந்தக் கருத்துக்கு என்ன பதில் சொல்வது என ஒரு சகோதரர் கேட்டதற்கு...சகோதரர்.செங்கிஸ் கான் அவர்களின் பதில்
மனிதனுக்கு உள்ள அதிகாரம் கூட
கடவுளுக்கு இல்லையா ?
தனக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என கட்சித் தலைவர் நினைத்தால் அது சரி !
தனக்கு மட்டுமே தன மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என கணவன் நினைத்தால் அது சரி !
தான் பெற்ற பிள்ளை தன்னை மட்டுமே தந்தை என அழைக்க வேண்டும் என மனிதன் நினைத்தால் அது சரி !
தனக்கு மட்டுமே விசுவாசமாக தன் பணியாளன் இருக்க வேண்டும் என முதலாளி நினைத்தால் அது சரி !
கிரிக்கெட்டில் கூட சொந்த நாட்டுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும் என மனிதன் நினைத்தால் அது தேசப்பற்று !
தனது மண்ணில் தன் மொழி மட்டுமே இருக்க வேண்டும் என தமிழன் நினைத்தால் அது மொழிப்பற்று !
ஆனால் அண்ட சராசரங்களையும் படைத்து பரிபாலித்து, கருவிலே இருந்தே நம்மை உருவாக்கி உணவளித்து ரட்சிக்கும் இறைவன் தனது கட்டளைக்கு கட்டுப்பட வேண்டும் என நினைத்தால் அவர் கட்சித் தலைவரா ?
விதிகளுக்கு புறம்பாக நடப்பவர்களை பாராளுமன்ற மற்றும் சட்ட மன்றங்களில் இருந்து வெளியேற்ற சபாநாயகருக்கு உள்ள அதிகாரம்
விதிகளுக்கு புறம்பாக நடப்பவர்களை பள்ளி கல்லூரியில் இருந்து வெளியேற்ற ஒரு முதல்வருக்கு உள்ள அதிகாரம்
விதிகளுக்கு புறம்பாக நடப்பவர்களை விளையாட்டுப் போட்டிகளில் இருந்து வெளியேற்றும் ஒரு நடுவருக்கு உள்ள அதிகாரம்
தன் கட்டளைக்கு கட்டுப்படாதவரை வேலையில் இருந்து நீக்க ஒரு முதலாளிக்கு உள்ள அதிகாரம்
சர்வ வல்லமை படைத்த கடவுளுக்கு இல்லை என்கின்றீர்களா ?
கடவுள் மதம் மாறச் சொல்லவில்லை. தன கட்டளைக்கு கட்டுப்படச் சொல்கிறார்! கட்டுப்படாதவருக்கு மனிதன் உபகாரம் செய்ய மாட்டான் ! ஆனால் கடவுள் தன்னை ஏற்றுக் கொண்டவர் ஏற்காதவர் அனைவருக்கும் இவ்வுலகில் வாழ்வாதாரத்தை அளிக்கத்தான் செய்கிறார் ! ஆனால் நாளை தீர்ப்பு நாளில்தான் கட்டளையை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு பரிசும் ஏற்காதோருக்கு தண்டனையும் வழங்குகிறார் !
Comments