ஜாக்கிலிருந்து விலகியது ஏன்? திருச்சி அரிஸ்ட்டோ ஹோட்டலில் PJஅளித்த வாக்கு மூலம்.
பழனிபாபா இஸ்லாத்தினுடைய அடிப்படைக்கே எதிரானவரு அவரிடம் இஸ்லாமிய வாழ்க்கையே கிடையாது தனிப்பட்ட வாழ்க்கை சுத்தம் கிடையாது. பொருளாதாரத்திலே சுத்தம் கிடையாது. அகீதாவுலே சுத்தம் கிடையாது என்று பழனிபாபா பற்றி பீ.ஜே. குறை கூறினாரா?
பேஸ் புக், வாட்ஸப் என்று வந்து விட்ட பிறகு சார்புத்தன்மையால் பொய்களை பரப்புதல் என்பது எல்லை மீறி விட்டது. தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொண்டு சு. ப. பு. என்று பேசுகிறார்கள்.
யாராக இருந்தாலும் குர்ஆனில் உள்ளது என்று கூறினால் குர்ஆனை எடுத்து பார்த்து இது குர்ஆன் ஆயத்துதான் என தெரிந்து கொள்ள முடியும்.
பேஸ் புக், வாட்ஸப் என்று வந்து விட்ட பிறகு சார்புத்தன்மையால் பொய்களை பரப்புதல் என்பது எல்லை மீறி விட்டது. தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொண்டு சு. ப. பு. என்று பேசுகிறார்கள்.
யாராக இருந்தாலும் குர்ஆனில் உள்ளது என்று கூறினால் குர்ஆனை எடுத்து பார்த்து இது குர்ஆன் ஆயத்துதான் என தெரிந்து கொள்ள முடியும்.
ஹதீஸ்களில் உள்ளது என்று கூறினாலும் ஹதீஸ் நுால்களை எடுத்து பார்த்து கூறியது ஹதீஸ் தான் என அறிய முடியும். அவற்றை அப்படியே எத்தி வைப்பதன் மூலம் ஆயத்து ஹதீஸ்களை எத்தி வைத்த நன்மை கிடைக்கும்.
குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வுகளை யார் கூறினாலும் நாமும் சிந்திக்க வேண்டும். சிந்தித்து சரி என தெரிந்தால் எத்தி வைக்கலாம். சரியாக இருந்தால் 2 நன்மை தவறாக இருந்தால் ஒரு நன்மை.
குற்றச்சாட்டுகளுக்கும் இதே அளவுகோல்தான். ஒரு வித்தியாசம் மார்க்க விஷயத்தில் தவறு செய்தால் திவாலாகும் நிலை கிடையாது. சிந்திக்காமல் எவ்வித ஆய்வும் செய்யாமல் சார்புத்தன்மையால் மக்களிடம் செய்திடும் மார்க்க பிரச்சார பணியினால் நஷ்டமே ஏற்படும்.
முப்லிஸாகி (திவாலாகி)ப் போவது மனிதர்களுக்கு செய்திடும் தீங்குகளால்தான். இதை முப்லிஸ் யார்? என்று கேட்டு இறைத்துாதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பதில் அளித்து விளக்கிய ஹதீஸை உங்கள் நினைவுக்கு கொண்டு வாருங்கள். பிறகு நமது ஆதாரத்தை படியுங்கள்.
ஆதாரங்களை கண்ட பின்பும் மனமுரண்டாக செயல்பட்டால் முப்லிஸாகப் போவது நீங்கள்தான். தஃவா பணி செய்து இலாபம் அடையுங்கள். தாவா (விதாண்டா வாத) பணி செய்து திவாலாகி விடாதீர்கள். இந்த வேண்டுகோளை வைத்து விட்டு மேலே உள்ள கேள்விக்கான பதிலை தருகிறேன்.
''அன்பிற்குரிய
சகோதரர்களே, தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய அமைப்பாளர் என்ற ரீதியிலே. அது சம்பந்தமான சில
உண்மை விபரங்களை. உங்களில் பல பேருக்கு தெரிஞ்சு
இருக்காத உண்மைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள நான் விரும்புகிறேன்...
முதலிலே இந்த டிசம்பர்
ஆறு 1992க்கு பிறகு முஸ்லிம் சமுதாயம் வந்து ஒரு இக்கட்டான ஒரு
நெருக்கடியான நிலையில் இருந்ததை எல்லாருமே உள்ளுணர்வோடு உணர்ந்தோம். அதை ஒட்டி ஏற்பட்ட கலவரங்களில் ஒரே நாளில் ரண்டாயிரம் பேரு
பம்பாயிலே காலியான போது இன்னொரு பெரிய அதிர்ச்சிக்கெல்லாம் நாம ஆளானோம். இந்த சமுதாயம்
ஒரு நிர்க்கதியான நிலைக்கு இருக்குது.
இந்த ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும்பொழுது தான் இது மாதிரியான ஒரு சிந்தனையே நம்மளுக்கு வர ஆரம்பித்தது. நமக்கு என்றால் எனக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இந்த ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும்பொழுது தான் இது மாதிரியான ஒரு சிந்தனையே நம்மளுக்கு வர ஆரம்பித்தது. நமக்கு என்றால் எனக்கு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இப்ப இதற்கு ஏதாவது ஒன்னு பண்ணனுமே. வட நாட்டில் உள்ள
நிலைமை தமிழகத்தில் வந்து விடக் கூடாதே வட
நாட்டில் வந்திடுச்சி. தமிழகம் திராவிட பாரம்பரியம் என்கிறாய்ங்க அவிங்ளும்
ஆரியத்தை நோக்கி போய்க்கிட்டு இருக்கிறான்.
ஒரு கட்டத்திலே நாளைக்கு வட இந்தியாவாக தமிழகம் வந்திடக்
கூடாதேன்னு சிந்திக்கிற போதுதான் அப்ப இருந்தே பல விபரங்களை வந்து நாங்க அமீர் (கமாலுத்தீன் மதனி) ஸாப்டே
பேசுவோம்.
டிசம்பர் ஆறு 92லே இருந்தே ''இதற்கு
ஒரு தீர்வு காணணும் இதற்கு பல வகையிலே முயற்சிகள் பண்ணனும் அப்படிங்க மாதிரி
கருத்துகள் இருந்திச்சு... அதற்காகத்தான் நான் (ஜாக்) ஷுராவிலிருந்து
கூட ரிஸைன் பண்ணினேன். சில
காரியஞ் செய்வதற்காக வேண்டி ஒப்புதலோட
சில காரியங்கள் நம்ம செய்யும்பொழுது அதனால நமக்கு ஏற்படுகிற
சிக்கல் வந்து ஜாக்குங்கிற அமைப்புக்கு
வரக்கூடாது. என்ன காரியம்னு உங்களுக்கு விளங்கிக்கிடும் இதிலே இருந்தே.
அது
வந்துடக் கூடாதுங்கிறதுக்கு வேண்டியே நான் (ஜாக்குடைய) ஷுராவில்
இருக்க மாட்டேன். நான் சில சமுதாய பாதுகாப்புகளுக்காக வேண்டி சில ஏற்பாடுகள்
பண்ணனும். அதனால இதிலே எந்த நிர்வாகப் பொறுப்பும் வேண்டாம்னு சொல்லி. அதனாலே தான்
வேறு ஒரு காரணத்துக்கும் ஜாக் ஷுரா
விலிருந்து ரிஸைன் பண்ணவில்லை. எல்லோருக்கும் தெரியும். காரணத்தோடுதான் நாம ரிஸைன்
பண்ணினோம்.
(இவ்வாறு 1.5.97இல் வாக்கு மூலம் அளித்துள்ள பீ.ஜே. 2002இல் வெளியிட்டுள்ள வீடியோவில் 1994 லேயே ராஜினாமா கொடுக்கும் அளவுக்கு போகிறேன் என்றால் அவர்களது நடவடிக்கை சரியில்லை என்று நான் கொடுத்து இருப்பேனா? என்று வாத ரீதியாக கேட்கிறார் . )
(இவ்வாறு 1.5.97இல் வாக்கு மூலம் அளித்துள்ள பீ.ஜே. 2002இல் வெளியிட்டுள்ள வீடியோவில் 1994 லேயே ராஜினாமா கொடுக்கும் அளவுக்கு போகிறேன் என்றால் அவர்களது நடவடிக்கை சரியில்லை என்று நான் கொடுத்து இருப்பேனா? என்று வாத ரீதியாக கேட்கிறார் . )
சில
காரியங்கள் சமூக பாதுகாப்புக்குள்ள ஏற்பாடுகளையும் இன்னைக்கும் நாளைக்கும் நாம
செஞ்சிருக்கிறோம்.. அனுமதியோட
தெரிஞ்சி சொல்லி என்னது செய்கிறோம்ன்னுட்டு (எஸ்.கே.க்கு)
தெரியாது. ஆனால் அதுக்காகத்தான் விலகுகிறேங்குறத சொல்லிட்டு செஞ்சிருக்கிறோம்.
எந்த கருத்து வேறுபாடும் இங்கு வரவே இல்லை.''
(புாிந்ததா, தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று தாஇகள் உருவாகிவிட்டார்கள். சொல்லப்பட வேண்டிய எல்லா மஸாயில்களும் சொல்லப்பட்டு விட்டது. மிக முக்கிய தீமையான ஷிர்க்கை தெளிவுபடுத்தி விட்டோம். நாட்டு சூழலில் இனி நம்மீது உள்ள கடமை ஜிஹாதுதான். நானே ஸ்பாட்டுக்கு போவேன், (இப்படிச் சொன்னால், இப்படிச் சொல்லி யாரையாவது பலி ஆக்கப் போகிறார் என்று அர்த்தம். இதை இப்பொழுது எல்லோரும் தெரிந்து கொண்டோம் என்பது தனி விஷயம்.) ஷஹீதாவேன், அல்லது பிடிக்கப்படுவேன். எதுவும் நடக்கலாம்.
ஜாக் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று உருவான அமைப்பு. அது இருந்தால் தான் தவ்ஹீது பிரச்சாரம் நடைப்பெறும். நம்மால் அது பாதித்து விடக்கூடாது என்று 1994இல் சொன்னார். இது அல்லாஹ்வின் மேல் ஆணை. தொடரும் அவரது உரையை பாருங்கள்)
(புாிந்ததா, தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று தாஇகள் உருவாகிவிட்டார்கள். சொல்லப்பட வேண்டிய எல்லா மஸாயில்களும் சொல்லப்பட்டு விட்டது. மிக முக்கிய தீமையான ஷிர்க்கை தெளிவுபடுத்தி விட்டோம். நாட்டு சூழலில் இனி நம்மீது உள்ள கடமை ஜிஹாதுதான். நானே ஸ்பாட்டுக்கு போவேன், (இப்படிச் சொன்னால், இப்படிச் சொல்லி யாரையாவது பலி ஆக்கப் போகிறார் என்று அர்த்தம். இதை இப்பொழுது எல்லோரும் தெரிந்து கொண்டோம் என்பது தனி விஷயம்.) ஷஹீதாவேன், அல்லது பிடிக்கப்படுவேன். எதுவும் நடக்கலாம்.
ஜாக் தவ்ஹீது பிரச்சாரத்திற்கு என்று உருவான அமைப்பு. அது இருந்தால் தான் தவ்ஹீது பிரச்சாரம் நடைப்பெறும். நம்மால் அது பாதித்து விடக்கூடாது என்று 1994இல் சொன்னார். இது அல்லாஹ்வின் மேல் ஆணை. தொடரும் அவரது உரையை பாருங்கள்)
ஆனாலும் மக்கள்ட ஏற்பட்ட இந்த
எழுச்சியை இந்த ஒரு வெற்றிடம் இருக்கு பாருங்க. இதை தெரிஞ்சுகிட்ட சில இயக்கங்கள் வந்து தமிழத்திலே
தீவிரமாக ஊடுருவினாங்க. யார்
ஊடுறுவுனா? பழனி பாபா
ஊடுறுவுனாரு, பழனி பாபா
யாருன்னு கேட்டா. இந்த
சமுதாய பிரச்சனைகளை நல்ல தீவிரமாக பேசுவாரு.
ஆனால் இஸ்லாத்தினுடைய அடிப்படைக்கே
எதிரானவரு அவரு. அவரிடம்
இஸ்லாமிய வாழ்க்கை கிடையாது எல்லாருக்குமே தெரியும். நெருங்கி பழகின யாருக்குமே அவரிடம் இஸ்லாமிய வாழ்க்கையே
கிடையாது தனிப்பட்ட வாழ்க்கை சுத்தம் கிடையாது. பொருளாதாரத்திலே சுத்தம் கிடையாது. அகீதாவுலே சுத்தம்
கிடையாது. அது போக மார்க்க அடிப்படையில் கூட அந்த பிரச்சனைகளை அணுகாம
நாளைக்கு வரக் கூடிய சண்டையை இன்னைக்கே இழுத்து வுடுற மாதிரி
பாதுகாப்புக்குன்னு ஒரு இயக்கத்தை
இறக்கி உட்டு பாதுகாப்பின்மையை ஒரு இடத்தில பேசி விட்டு போனா நாளைக்கு 10 முஸ்லிம்
வெட்டப்படுவான். அந்த
மாதிரி ஒரு நிலையிலே சமுதாயத்தை கொண்டு போயிட்டு இருக்காங்க அதையும் பார்க்கிறோம்.
(இப்படி 1997 மே
முதல் தேதியில் பாபா பற்றி விமர்சிக்கும் பி.ஜே. சரியாக
மூன்று மாதங்களுக்கு முன் பழனி பாபா பற்றி என்ன பேசினார். 1997 ஜனவரி 28ஆம் நாள் ரமழான் மாதத்தில் பழனிபாபா வெட்டி படுகொலை செய்யப்பட்டார் 29ஆம் தேதி ஜாண் ட்ரஸ்டில் நடந்த குர்ஆன்
கிளாஸ் நிகழ்ச்சியில் பீ.ஜே.
யாரையும் நாமாக ஷஹீது அவ்லியா ஹாஜி அல்ஹாஜ்
என்றெல்லாம் சொல்லக் கூடாது என்று பிரச்சாரம் செய்த பி.ஜே. அல்ஹாஜ்
பழனி பாபா. ஷஹீது பழனி பாபா என்று புகழ்ந்து பேசி அழுதார். மூன்று மாதங்களுக்கு பின் முதல் பாரா) தொடரும் வாக்கு மூலத்தை பாருங்கள்.
அதுக்கப்புறம் இன்னொரு பக்கம் கேரளாவிலிருந்து
பி.டி.பின்னுட்டு ஒரு
அமைப்பு கொண்டாந்து இறக்கி கிட்டு குமரி மாவட்டங்களிலெல்லாம் பலமாக கால் ஊன்ற
ஆரமம்பி்ச்சுது. எந்த அளவுக்கு வந்துச்சுன்னு சொன்னா குமரி
மாவட்டத்திலிருந்து 32 இளைஞர்கள்
வந்து கையெழுத்து போட்டு எனக்கு கடிதம் எழுதுறாங்க..
அதாவது நீங்க அமீருக்கு
கட்டப்படணுட்டு நாம இந்த மாதிரி அமைப்பு எல்லாம் இல்லீல்ல. த.மு.மு.க.வெல்லாம் இல்லை. இதை நான் சொல்றது
வந்து 92லே நடந்த
சம்பவங்கள் இதெல்லாம். 1992லே அந்த பி.டி.பி
வந்து ஊடுருவக் கூடிய நேரத்திலே கடிதம் எழுதுறாங்க. என்ன கடிதம் தெரியுமா?
எங்களை பாதுகாத்து கொள்வதற்கு இந்த
தலைமையால் முடியாது. ஜாக் என்ற தலைமையினால் முடியாது. அது ஒரு சின்ன ஒரு அமைப்பா
இருக்குது. அதனாலே எங்கள் நாங்கள் பாதுகாத்து கொள்வதற்கு எங்கள் பெண்டு பிள்ளைகளை
பாதுகாத்து கொள்வதற்கு நாங்கள் பி.டி.பி.யிலே போய் சேரலாமா?
நீங்க வந்து எங்களுக்கு தெளிவான
விளக்கம் தரணும். அப்படிண்டு ஒரு கடிதம் எதற்கு நான் சொல்ல வருகிறேன்னு சொன்னா
தவ்ஹீதுவாதிகளும் கூட தங்களுடைய பாதுகாப்பின்மையை விளங்கி உணர்ந்து ஒரு ஷிர்க்கு
செய்றவனுடைய தலைமையை ஏத்துக்றனுங்ற அளவுக்கு இறங்கி வந்தாங்க. நிலைமைக்கு சொல்ல
வா்றேன்.
அந்த ஆளு பயங்கர ஷிர்க். யாரு நாஸர் மதானிங்றவரு கூட்டத்திலே பேசும்பொழுது
சமுதாயத்தை பேசும்பொழுது ஸலாத்துன்னாரியா ஓதித்தான் பேசுறது. அதுக்கப்புறம்
ஓதுங்கண்ணு சொல்றது. சமுதாய பாதுகாப்புக்கு எல்லோரும் புர்தா ஓதுங்க என்பான்
கடைசியாக முடிக்கும்போது.
இப்ப எதெல்லாம் வேணாங்றமோ அதையெல்லாம்
நம்மள கூட்டி கொண்டாந்து வந்து பேசுறது அப்பதான் நாங்க ஒரு ஐடியா பண்ணினோம் இந்த
ஒரு வெற்றிடம் காலியான இடம் இருக்கிறது. இந்த இடத்தை வந்து அவன்
பயன்படுத்திக்கிட்டு அவனுடைய தலைமையின் கீழ் நம்ம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நம்ம தவ்ஹீதுவாதி போறான்.
ஏன் என கேட்டால் அந்த இடம் இங்கே
காலியாக இருக்கிறதுனாலே காலியா இருக்கிறது மட்டுமல்ல முடியவும் செய்யாது.
(முடியும் என்பதை 1995 தடா
எதிர்ப்பு பேரணி மூலம் நிரூபித்து இருக்கிறோம். 2004இல் த.மு.மு.க.விலிருந்து
விலகிய பின் தவ்ஹீதுவாதிகளால்தான் முடியும் என இவரே பேசி இருக்கிறார்)
பாதுகாப்பு என்ற பிரச்சனை வரும்பொழுது
எல்லாரும் சேரணும். தவ்ஹீதுவாதி மட்டும்
சேர்ந்தால் பாதுகாத்து கொள்ள முடியாது. அதாவது எதிரிகளிடமிருந்து வர்ற ஆபத்தை
பாதுகத்து கொள்வதற்கு அது மாத்திரம் பத்தாது என்ற அடிப்படையிலே அந்த பக்கம் போகக்
கூடிய ஒரு நிலைமை உருவாச்சு. திருவிதாங்கோடுலே உண்டாச்சு உங்க ஊருலே உண்டாச்சா
இல்லியா?
உங்க ஊரிலே பி.டி.பி. பூராவும் யாரு
தவ்ஹீதுவாதி இல்லையா? காயல்பட்டிணம் அமீர் நம்ம அமீர் கூட்டத்துக்கு அமீராக
இருக்கக் கூடிய ஹாமித் பக்ரி உடைய ஊரிலே அதே பி.டி.பி. நாஸர் மதானி தலைவராக
ஏற்றுக் கொண்டு பின்னாடி ஒரு கூட்டம் போகுது எல்லாரும் யாருன்னு கேட்டா குர்ஆன்
ஹதீஸை நிலை நாட்டுவதற்காக பாடுபட்டவன்.
ஏண்டா போறேன்னுட்டு கேட்டா எங்களை
பாதுகாக்க வேண்டாமா? எங்களை வந்து அடிச்சிட்டு போனான்னா வெட்டும்போது சுன்னத்
ஜமாத் தவ்ஹீது பாத்தா வெட்டுறான். கற்பழிக்கும்போது அத பாத்துக்கிட்டா செய்றான்.
கொள்ளை அடிக்கும்போது இது தவ்ஹீதுகாரன் கடை என்றா செய்றான் ஒட்டு மொத்தமாக
எல்லாருக்கும் சேர்த்து பாதுகாப்பு வேணும்.
எல்லா இடத்திலேயும் நம்மள காத்து
கொள்ளணும். இந்த இடத்தை காலியாக விடக் கூடாது
என்கிற மாதிரி வரும்பொழுதுதான் நம்ம என்ன பண்ணினோம். இதை ஷிர்க்குக்காரன்
பின்னாடி நம்ம ஆளை கொண்டு போய் விடுறதுக்கு பதிலா நம்ம தலைமையின் கீழ் அவனை கொண்டு
வருவோமே. அவனுக்கு பின்னாடி நம்மளை கொண்டு போய் விட்டோம் என்று சொன்னா நம்மள ஷிர்க்கு
ஏத்துவான் அதுதான் ஆகி இருக்கும்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
இல்லை என்று சொன்னால், அந்த கட்டத்திலே நாங்கள் ஆரம்பித்து இருக்கவில்லை என்று
சொன்னால் அதனுடைய விளைவு என்ன என்று சொன்னால் இந்த நாஸர் மதானி கிட்டயோ பழனிபாபா
இடத்திலேயோ இந்த சமுதாயம் தவ்ஹீது ஆட்களிலே யாரெல்லாம்
அதாவது தவ்ஹீதுவாதிகள் நீங்களெல்லாம்
நினைத்துக் கொள்ளக் கூடாது வலுவா இருக்கிற ஊர்களிலே மேலப்பாளையம் நாங்க நல்லா
இருக்கிறோம்னு நினைக்கக் கூடாது. ஒரு ஊரிலே 25 குடும்பம்
இருப்பான். 1000 குடும்பம் அவன் இருப்பான் அவனுக்கு என்ன
பாதுகாப்பு.
அந்த மாதிரியா பாதுகாப்பற்ற நிலையில்
இருக்கிறவனுக்குத்தான் இதனுடைய அவசியம் என்ன செய்யுது விளங்கி இருந்துச்சு. அப்புறம்தான் என்ன
பண்ணினோம். சரி இதை
வந்து நம்ம கையிலே வந்து எடுப்பதன் மூலமாக அவர்களை விட திட்டமிட்டு பிளான் பண்ணி
செய்வதன் மூலமாக இதுக்கு வந்து நம்முடைய
அதாவது தவ்ஹீதுவாதிகளுக்கு கீழே அவனை
கொண்டு வரணும். அவனை
கொண்டு வரும்போது இந்த இயக்கத்தை வந்து இன்னும் சொல்கிறேன்
பழனிபாபா கையிலேயோ அல்லது நாஸர் மதானி
கையிலேயோ இந்த சமுதாயம் போயிருந்தால் யாரோ ஒண்ணு சொன்னாங்களே. தவ்ஹீது
பிரச்சனை வரும்போது தலையிட மாட்டாங்கண்டு யாரோ
சொன்னாங்களே நீங்கதான் சொன்னீங்களா? இம்தாதி
சொன்னீர்களா இல்லையா? நான் அமைப்பாளராக இருக்கிறதுனாலேதான்
அது பற்றி எதிர் பார்க்க வேண்டியது இருக்கிறது என்று யாரோ சொன்னாங்களே
இப்ப என்ன ஆகி இருக்கும் தெரியுமா? பழனிபாபா
கையிலேயோ நாஸர் மதானி கையிலேயோ
போயிருந்தால் தவ்ஹீதுக்கும் தவ்ஹீது அல்லாதவர்களுக்கும் ஒரு விவகாரம் ஏற்பட்டால்
அவர்களுக்கு இருக்கிற அரசியல் செல்வாக்கை இதுக்கு எதிராக பயன்படுத்துவான். அதை நல்லா தெரிந்சு கொள்ளணும். நடுநிலை வகிக்க
மாட்டான்.
நாஸர் மதானி என்ன செய்வான் இந்த
பயலுகள அடிச்சு பிடிச்சு ஒடை ஏன்னா அந்த மாதிரி சக்திக்கு போலீஸ் மதிப்பு
கொடுப்பான் போலீஸாருடைய அந்த பலத்தை வைச்சுகிட்டு தவ்ஹீதை அழிக்கிறதுக்கு அந்த
செல்வாக்கை பயன்படுத்துவான். இன்னைக்கு என்ன நிலைமை நம்ம என்ன சொன்னாலும்
கவர்மெண்டு கேட்கிற நிலையில் இருக்கிறது.
நம்ம என்ன சொன்னாலும் மேலதிகாரிகள்ட
டி.ஜி.பி.கிட்ட போய் இன்னைக்கு பேசுற அளவுல இருக்கு எந்த ஒரு விவகாரமாக
இருந்தாலும் செய்யுது. அப்ப நம்ம எத்தனையோ விஷயமா அந்த பட்டியல் அப்புறமா வரும்.
தவ்ஹீதுவாதிகளுக்கு அங்கங்கு பிரச்சனை
ஏற்படும்பொழுது த.மு.மு.க. அன்அபீஷியலா என்ன என்ன செஞ்சதுங்கிற என்னுடைய
செல்வாக்கை பயன்படுத்தி என்ன என்ன செஞ்சிருக்கிறோங்றதையும் அதையும் தனியா விபரத்தை
பின்னாடி சொல்கிறேன். ஏன்னா அதுக்காக கூடி இருக்கிறதுனாலே ( இப்படி நீண்ட அவர் உரையில் )
''ஏன்னா
அது ஒரு ஆபத்தான வேலை நாங்க எடுத்துக் கொண்ட அந்த வேலை இருக்குதே ஆரம்ப கட்டத்துலே
ஆபத்தான வேலை. இன்னைக்கு அந்த நிலை வேலை விலகிடுச்சு. அன்னைக்கு என்ன மாதிரி
வேண்டும்னாலும் கவ்ர்மெண்ட் செய்யலாம்.
நான் எடுத்துக் கொண்ட அந்த துறைக்காக வேண்டி. அன்னைக்கு உசுர வெறுத்துதான் இறங்கினோம். இதை வைச்சு அழிக்கலாம்... இதை வைச்சு சுத்தமா யாரெல்லாம் பாடுபட்டாங்களோ அவ்வளவு பேரையும் புடிச்சி தடாவுலே போடலாம். அந்த மாதிரியான ஒரு இதுதான். ஆனா யாராவது செய்யலேன்னா இதாப் போயிடுங்கறதுக்குத்தான் அன்னைக்கு நாங்க இறங்கினோம்.
நான் எடுத்துக் கொண்ட அந்த துறைக்காக வேண்டி. அன்னைக்கு உசுர வெறுத்துதான் இறங்கினோம். இதை வைச்சு அழிக்கலாம்... இதை வைச்சு சுத்தமா யாரெல்லாம் பாடுபட்டாங்களோ அவ்வளவு பேரையும் புடிச்சி தடாவுலே போடலாம். அந்த மாதிரியான ஒரு இதுதான். ஆனா யாராவது செய்யலேன்னா இதாப் போயிடுங்கறதுக்குத்தான் அன்னைக்கு நாங்க இறங்கினோம்.
அப்ப
அந்த மாதிரி ஒரு ஆபத்துகள் இருந்ததுனாலே நம்ம அமைப்பு தவ்ஹீது உடைய வளர்ச்சியும்
சேர்த்து கெடுக்கிற மாதிரி. நமக்கு வரக் கூடிய ஆபத்து. தவ்ஹீதுக்கும் சேர்ந்து
வந்துடக்கூடாதுங்கிற அக்கரை... அதாவது தெரியாம நம்ம வந்து ஜாக்குடைய கலர்லேயே
அதைச் செஞ்சோம்னு சொன்னா. என்ன செய்வான் நம்மளக்கு போடக்கூடிய தடை ஜாக்குக்கும்
வரும். மர்க்கஸ் மூடப்படும்... ... இந்த செய்தி யெல்லாம் நிறைய பேருக்கு
தெரியாது...(இப்படியாக பீ.ஜே. வாக்கு மூலம் தொடர்கிறது
புரிந்து கொண்டீர்களா? ஜாக்கிலிருந்து விலகியது ஏன்? இன்னும் இருக்கிறது அரிஸ்டோ ஆடியோ முழுமையாக வெளியிடப்படும். இந்த நிகழ்ச்சியில் த.மு.மு.க. வைத்து தவ்ஹீது வளர்ந்தது என்பார். த.மு.மு.க.வை விட்டு விலகியபோது தவ்ஹீதை வைத்து த.மு.மு.க.வளர்ந்தது என்பார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மவுலவிகள் பட்டியலைக் காண கீழே கிளிக் செய்யவும்.
திருச்சி அரிஸ்டோ ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மவுலவிகள் பட்டியல்.
விரைவில் 6 ஆடியோவும் அப்லோடு செய்யப்படும்
Comments