இப்தாருக்கு ஆண்டுதோறும் பணம் அனுப்பிய அப்துல் கலாம் சொத்து விபரம்

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாமின் சொத்து விபரங்கள் வெளியீடு!
யாரும் தலை சுற்றி கீழே விழுந்து விடவேண்டாம். மார்க்க பிரச்சாரம் செய்யும் சாதாரண அண்ணன் தம்பிகளுக்கே பெரிய,பெரிய சூப்பர் மார்க்கெட் இருக்கும் போது ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாமுக்கு எவ்ளோ....சொத்து இருக்கணும்?

இதோ அவரது சொத்து விபரத்தை கலாமின் உதவியாளர் பொன்ராஜ் தருகிறார்:
கலாம் தன் சம்பாத்தியத்தில் வாங்கிய பெங்களூரு வீடு அவரது காலத்திலேயே விற்கப்பட்டு விட்டது. 

தற்போது ராமேசுவரத்தில் உள்ள பூர்வீக வீடு கலாமுக்காக அவரது தந்தை ஜெயினுலாபுதீன் விட்டுச் சென்றது. அந்த வீட்டை அவரது உடன் பிறந்த சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயர் பொறுப்பில் கலாம் கொடுத்து விட்டார்.
கலாம் உயில் எழுதி வைத்தி ருந்தாரா? அவரது கடைசி காலத்தில் வங்கி இருப்பு எவ்வளவு என்பது குறித்து எனக்கு துல்லியமாகத் தெரியாது. கலாமுக்கு பென்ஷன் பணம் வந்து கொண்டிருந்தது. அப்துல் கலாம் எழுதிய புத்தகங்களுக்கு ராயல்டி வந்து கொண்டிருக்கிறது.

'கலாமுக்கு பரிசாக அளிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள்தான் அவருடைய ஒரே சொத்து.'
இந்த புத்தகங்கள் அனைத்தும் டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் உள்ளன. கலாம் டெல்லியில் தங்கியிருந்த ராஜாஜி மார்க் இல்லத்தை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் கல்வி மையமாக்க வேண்டும் என்பதே கலாமின் உறவினர்கள், நண்பர்களின் விருப்பமாக உள்ளது.
@தான் வாழும் போதே நப்ஷானியத்திற்கு அடிமையாகாமல் தனது திறமையை பணமாக்காமல் தனது குடும்பத்துக்கு ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்காமல் அல்லாஹ்வை பயந்து வாழ்ந்து மறைந்த கலாமை அவரது புற வாழ்வின் செயல்பாடுகளை கொண்டு சொர்க்கம் நரகம் அளவீடு செய்யும் பக்கீர்ஷா கூட்டம் குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மர்ஹூம் அப்துல் கலாம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து அவருக்கு சுவனத்தின் உயரிய இடமளிக்க நாம் வல்லோனிடம் கையேந்துவோம்.
அன்புடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸிjahangeer hussain jahangeerh328@gmail.com

Indian President Dr. APJ Abdul Kalam, Every year used to sent Rs. One Lakh and Ten Thousands (Rs. 110,000) to Rameshwaram Jumma Masjid for IFTAR of the poor Muslims during the Holy month of Ramadhan. This year he sent the money before Ramadhan starts from his pension amount. Says Rameshwaram Muslim Jamath Administrator.
O Allah, forgive and have mercy upon him , excuse him and pardon him , and make honourable his  reception. Expand his  grave, and cleanse him with water, snow and hail [water], and purify him  of sin as a white robe is purified of filth.And exchange his  home for a better home, and his  family for a better family, and his spouse for a better spouse. Admit him  into the Garden, protect him  from the punishment of the grave and the torment of the Fire.
Courtesy : The Hindu Tamil & Dinathanthi

மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இராமேசுவரத்தில் உள்ள மசூதியில் நோன்பு காலத்தில் ஏழைகளுக்கு நோன்பு திறக்க உணவளிப்பதற்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அனுப்பி வந்துள்ளாா். 

இந்த வருடம் ரம்ஜானுக்கு முன்பாக தனது ஓய்வூதியத்தில் இருந்து பணம் அனுப்பி வைத்ததாக இராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் தெறிவித்துள்ளனர்.

இறைவா !
எங்களை விட்டும் மரணித்தவர்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக கருணை புரிவாயாக ; (மறுமையின் சோதனைகளிலிருந்து) அவர்களைக் காப்பாயாக ; அவர்கள் பாவங்களை மாய்ப்பாயாக ; அவர்களுக்கு நல்கப்படும் விருந்தை நல்லதாக்குவாயாக !

அவர்கள் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக ; அவர்களுடைய குற்றங்குறைகளிலிருந்து அவர்களை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் (கழுவி), அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்றுதூய்மைப்படுத்துவாயாக ;

மேலும், இங்குள்ள வீட்டைவிடச் சிறந்த வீட்டை அவர்களுக்கு வழங்குவாயாக ; இங்குள்ள குடும்பத்தைவிடச் சிறந்த குடும்பத்தை வழங்குவாயாக ; இங்குள்ள துணையைவிடச் சிறந்த துணையை அவர்களுக்கு வழங்குவாயாக ; அவர்களைச் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக ; அவர்களை மண்ணறையின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக / நரகத்தின் வேதனையிலிருந்து காத்தருள்வாயாக !)
ஆமீன்…. ஆமீன்…. ஆமீன்…. ஆமீன்…. ஆமீன்….
முகவைத்ரைசுத்தீன் 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு