கத்தார் அணி செய்தியை மீண்டும் மீண்டும் அனுப்பும் சகோதரர்கள் கவனத்திற்கு

ஈமானே பெரியது :வெளியேறியது கத்தார் அணி .!!  என்ற பழைய செய்தி மீண்டும் மீண்டும் வருகிறது. பொதுவாக செய்திகள் பழையதாக இருந்தாலும் புதியதாக இருந்தாலும் தேதியிட்டு அனுப்புவது நல்லது. 

ஹிஜாப் இல்லாமல் விளையாட முடியாது ..கொரியாவில் அரங்கை விட்டு வெளியேறிய கத்தார் மகளிர் அணி

 என்ற செய்தி 2014இல் நடந்ததுதானே என்று கேட்டேன் அனுப்பியவர்கள் பதில் தரவில்லை.  இறைவனிடம் வெற்றிப்பெற்றது கத்தார் பெண்கள் அணியே என்று 200 கோடி முஸ்லிம்களின் சார்பாக அறிவிக்கிறோம்.

என்று 2014இல் செய்தி வந்தது இப்பொழுது  200 கோடி நீக்கப்பட்டு இறைவனிடம் வெற்றிப்பெற்றது கத்தார் பெண்கள் அணியே என்று உலக முஸ்லிம்களின் சார்பாக அறிவிக்கிறோம். என்று வந்துள்ளது

கொரியாவில் நடைபெற்றுக்  கொண்டிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று கத்தார் மற்றும் மொங்கோலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருந்தது. 

போட்டியில் கலந்துகொள்ளும் கத்தார் வீராங்கனைகள் ஹிஜாபுடன் மைதானாத்துக்குள் நுழைந்தார்கள். ஆனால் ஹிஜாப் அணிந்து விளையாட நடுவர் தடை விதித்தார். அப்போது நடுவர்களுக்கும் போட்டியாளர்களுக்குமிடையில் நடந்த நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகும் நடுவர் ஹிஜாப் அணிந்து விளையாட அனுமதி மறுத்ததால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு அரங்கைவிட்டு வெளியேறியது பெண்கள் அணி.

போட்டி நடத்தமாலேயே மொங்கோலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சர்வதேச போட்டியை விடவும் ஹிஜாபுமும், மார்க்கமும் முக்கியம் என கருதி வெளியேறிய கத்தார் வீராங்கனைகள் பாராட்டுக்குரியவர்கள். இவ்வுலக வெற்றியை விட இறைவனின் மறுமை வெற்றியே பெரிதானது. இவ்வுலக தோல்வி கால் செருப்பு கூட சமமில்லை. 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு