பெண்கள் வேலைக்குச் செல்வது சம்பந்தமான வீடியோவும் எதிர் வாதமும் சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?
என்ற தலைப்பில் பெரம்பலுார் நக்க சேலம் நாஸர் அலி கான் ஆற்றிய உரையை வெளியிட்டு இருந்தோம். அதற்கு மாற்றுக் கருத்தாக ஒரு சில மவுலவிகளின் வீடியோக்களை அனுப்பி இருந்தார்கள் சந்தோஷம்.
  • 29 views
  • 5 days ago
பெண்கள் செய்ய வேண்டிய வேலைகள் என இன்று உலகில் குறைந்தது 50 சதவீதம் உள்ளது.

விமான நிலையங்கள், துறை முகம், நாடு விட்டு நாடுகள் கடக்கும் எல்லைப் பகுதிகள் மெட்ரோ போன்ற இடங்களில்தான்  உடல் முழுவதும் தொட்டுப் பார்த்து செக்கப் செய்யும் நிலை இருந்தது. இப்பொழுது சில நேரங்களில் இரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் உடல் முழுவதும் தொட்டுப் பார்த்து செக்கப் செய்யும் நிலை உள்ளது. இந்த பணிகளில் ஆண்கள் மட்டுமே இருந்தால்.

மருத்துவத் துறையை எடுத்துக் கொள்வோம். விரிவாக விளக்கி தெரிய வேண்டியது இல்லை. இங்கும் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் பகுதிகளை தொட்டுப் பார்த்து செக்கப் செய்யும் நிலை உள்ளது. உடல் உறுப்புகளில் கைகளை விட்டுப் பார்த்தல் என்ற நிலைகளும் உள்ளது. இந்த பணிகளில் ஆண்கள் மட்டுமே டாக்டர்களாக இருந்தால்.

பெண்கள் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களாகவும் பெண்கள் கல்லுாரிகளில் பேராசிரியர்களாகவும் ஆண்கள் மட்டுமே இருந்தால். என்ன நடக்கும். என்ன நடந்தது.

இந்த பேச்சாளர்களே போராடி இருக்கிறார்கள். பெண்கள் கல்வி கூடங்களில் தலைமை ஆசியர், முதல்வர், கிளீனர் என அனைவருமே பெண்களாக இருக்க வேண்டும். பெண்களுக்கு பெண்களைக் கொண்டுதான் சோதனை செய்ய வேண்டும். காவல் நிலையத்தில் பெண் போலீஸ்கள் இருக்க வேண்டும். இவை கொள்கையா? வெறும் கோஷமா?பிரச்சனைகளைக் கூறி மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க போட்ட  வேஷமா?

இன்று உள்ளாடை உலகம் என்று உள்ள கடைகளில் பெண்களுக்கான பகுதியில் ஆண்கள் வேலை செய்வது சரியா? பெண்கள் வேலை செய்வது சரியா?

பெண்கள் வேலைக்கு செல்லக் கூடாது என்று பத்வா கூறியுள்ளவர்கள் தீர்ப்பாக என்ன எழுதியுள்ளார்கள். 

பெண்கள் வேலைக்குச் செல்வது மார்க்கத்தில் ஹராம் என்று நாம் கூறவில்லை. தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது அவ்வளவு சிறந்ததல்ல என்றே கூறுகிறோம். 

இப்படித்தான் அவர்களது தீர்ப்பை எழுதி விளைவுகளை பட்டியலிட்டுள்ளார்கள். பெண்கள் வேலைக்குச் செல்வதை இறைவனோ இறைவனின் துாதரோ ஹராமாக்கவில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதை தடுக்கும் உரிமையையும் அனுமதி அளிக்கும் உரிமையையும் கணவனுக்கு வழங்கி உள்ளது. இதுதான் இஸ்லாத்தின் நிலை. 

உலகமே சோதகனைக்காக உள்ளதுதான். நன்நடத்தைகள் மூலம் வெல்வதே இஸ்லாம். சட்டத்தை தான ஏற்று செயல்பட வேண்டும். விளைவுகளை பார்க்கக் கூடாது. அவரவா் செயல்கள் மூலம் தேடிக் கொண்டதே விளைவுகள். 

இஸ்லாமிய நெறிமுறைகளை பேணி பெண்கள் தற்காலத்தில் வேலைக்கு செல்வதென்பது கடினமான விஷயமாக உள்ளது எனவே கூடாது என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் பெண்கள் கல்லுாரிகளை மூடுவதில்லை. அங்கே வருவதும் பெண்கள்தானே.  

பெண்கள் கலந்து கொண்ட பல போராட்டங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போதெல்லாம் பெண்களை காப்பாற்றுகிறேன் என்ற பேர்வழி செய்த அட்டூழியத்தை டி.வி.யில் காட்டினார்கள். எனவே தங்கள் போராட்டங்களுக்கு பெண்களை அழைக்கக் கூடாது என்றார்களா? 

பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று பத்வா அளித்து உள்ளவர்களிடம் பெண்கள் சம்பாதிக்கலாமா என்ற தலைப்பில் பேசச் சொல்லுங்கள். 

பெண்களும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற சட்டமே சம்பாதிக்கலாம் என்பதை தெளிவுபடுத்தி விட்டது என்பார்கள். 

மேடைப் பேச்சாளர்களில் பெரும்பாலானவர்கள் கொடுத்த தலைப்புக்கு தகுந்தவாறு பேசக் கூடிவர்களே. ஒரு விஷயத்தை கூடும் என்று பேசச் சொன்னால் ஆயத்து ஹதீஸ்களை ஆதாரம் காட்டி கூடும் என்று பேசுவார்கள்.

கூடாது என்று பேசச் சொன்னால் அதே ஆயத்து ஹதீஸ்களை ஆதாரம் காட்டி கூடாது என்றும் பேசுவார்கள். இது அவர்களுக்கு உள்ள திறமை

உதாரணத்திற்கு ஒன்றுஎவரேனும் அழகிய (செயலுக்கு)  பரிந்துரை செய்தால் அதில் அவருக்கு பங்கு உண்டு. இன்னும் எவரேனும் தீய (செயலுக்கு) பரிந்துரை செய்தால் அதில் அவனுக்கும் பங்கு உண்டு. அல்லாஹ் அனைத்து பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். ( (திரு குர்ஆன் 4:85)

நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள் (திரு குர்ஆன் 5:2)

இந்த ஆயத்துக்களை ஆதாரமகக் காட்டி  ஓட்டு போடுவது ஹராம் என்று பத்வா  வழங்கி வந்தார்கள். தேர்தல் புறக்கணிப்புகளையும் செய்யச் சொல்லி பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஓராண்டல்ல ஈராண்டல்ல இருபது ஆண்டுகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

இந்த பத்வாவை வழங்கிய மவுலவிகளுக்கு 1998 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முக்கால்வாசிக்கு மேல் பிரச்சாரம் செய்து முடித்து விட்ட நிலை. இதே ஆயத்துகளைக் கூறி ஓட்டுப் போடச் சொன்னார்கள்.

2014 பாராளுமன்ற தேர்தலில் இடையில் அணி மாறியது போல் 1998இல் கொள்கை மாறினார்கள். இன்று ஓட்டு போட கூறி வருபவர்கள் ஓட்டு போடுவது ஹராம் என்று கூறிய பத்வாவை காண இதை கிளிக் செய்து பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு