இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா?
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு வந்ததும்
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் பிரச்சாரக்
கூட்டங்கள் நடத்தும் வழக்கம் வந்து விட்டது.
இந்திய சுதந்திர போராட்டத்தில்
முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள். முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு என்ற இந்த தலைப்பு
உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான இந்த தலைப்பில் முஸ்லிம்கள்
பேசுவதுடன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டும் முஸ்லிம்கள் பேச வைக்கிறார்கள்.
மீலாது மேடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார்கள் அல்லவா.
அது போல் இந்த மேடையிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும்
மகிழ்ச்சியுடனும் பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என கிடைத்த வாய்ப்பை நன்றாக
பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு
வகித்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக நம்பும்படியாக பேசி விட்டுச்
செல்கிறார்கள்.
நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும்.
வரலாறு தெரியாத முஸ்லிம்களும் வரலாற்றை மறந்து விட்ட முஸ்லிம்களும் வராலற்றை மறைத்திடும் இந்த பேச்சாளர்கள் பற்றி, எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி விட்டார் என நம்பி விடுகிறார்கள். அதனால் ஆஹா என்ன அருமையான பேச்சு என்று பேசியவர்களை முஸ்லிம்களின் நண்பன் என புகழ ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்திய
சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு(தான்) வகித்தார்கள் என்று சொல்வது தவறு.
இதை ஆதாரப்பூர்வமான வரலாற்று நூல்களை கொண்டு ஆய்வு செய்துதான் தெரிய வேண்டும்
என்பதில்லை. அப்படி ஆய்வு செய்தாலும் முஸ்லிம்களின் உரிமைகள் எப்படி மோசடி
செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் விளங்க முடியும். இந்திய சுதந்திர
போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்று சொல்வது சரி அல்ல. இதை விளக்க
பாமரர்களும் நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும்.
முதலில் உதாரணத்தின் மூலம் விளங்குவோம்.
எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று இருக்கிறார்கள்.
இரு நூறு கிலோ எடையுள்ள ஒரு பொருளை ஒருவர் தூக்குகிறார். அவர் தூக்கும்பொழுது இரண்டு பேர் வந்து அவருக்கு உதவி செய்கிறார்கள். இப்பொழுது பொருளை தூக்கியவரை இரு நூறு கிலோ தூக்கியவர் என்றும் உதவி செய்தவர்களை அவர் தூக்க இவர்கள் உதவி பங்களிப்பு செய்தார்கள் என்றும் சொல்வோம்.
யாராவது வந்து உதவி
செய்தவர்களை இரு நூறு கிலோ தூக்கியவர்கள் என்றும் இரு நூறு கிலோ தூக்கியவரை
பங்களிப்பு செய்தவர் என்றும் சொன்னால் எந்த மடையனாவது ஏற்றுக் கொள்வானா? இந்திய முஸ்லிம்கள் ஏற்று
இருக்கிறார்கள். இன்னொரு உதாரணத்தின் மூலமும் விளங்குவோம்.
பொருளுக்குரியவர்கள் செய்த உயிர்
தியாகத்தால்.
ஒரு சமுதாயத்தாரிடம் பொருள் ஒன்று இருக்கிறது. அந்த பொருளின் உரிமையாளர்களான அந்த சமுதாயத்தவர்கள் அசால்ட்டாக இருக்கும்பொழுது கொள்ளைக் கூட்டம் வந்து அந்த பொருளை அபகரித்து விடுகிறது. பொருளை பறி கொடுத்தவர்கள் அதை மீட்பதற்காக உடனே போராட்டத்தில் குதிக்கிறார்கள். செத்தாலும் பரவாயில்லை தங்கள் பொருளை மீட்டே ஆக வேண்டும் என உயிரையே பணயம் வைத்து சண்டை போடுகிறார்கள். அப்பொழுது இன்னும் சில சமுதாயத்தவர்களும் வந்து சேர்ந்து உதவி செய்கிறார்கள்.
கொள்ளையடித்தவர்களோ பொருளுக்குரியவர்களை கொன்று விட்டால் மற்றவர்கள் ஒதுங்கி
விடுவார்கள். பொருளை தங்களுக்குரியதாக ஆக்கி விடலாம் என பொருளுக்குரியவர்களை
அழித்தொளிப்பதிலேய குறியாக இருக்கிறார்கள். அதனால் பொருளுக்குரியவர்களையே குறி
வைத்து அதிகமாக கொன்றார்கள். பொருளுக்குரியவர்கள் செய்த உயிர் தியாகத்தால் கொள்ளையர்களிடமிருந்து பொருள்
மீட்கப்படுகிறது.
உங்களுக்கும் பங்கு உண்டு என
பாராட்டுகிறோம்.
மீட்கப்பட்ட பின் பொருளை என்ன செய்ய வேண்டும். அந்த பொருள் எந்த சமுதாயத்திற்குரியதோ அந்த சமுதாயத்தவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். என்ன நடந்தது. உரியவர்களிடம் கொடுக்கவில்லை. என்ன செய்தார்கள். பொருளுக்குரியவர்களிடம் சொல்கிறார்கள். இந்த பொருளை மீட்க நாங்கள் அனைவரும் போராடினோம்.
நீங்களும் எங்களுடன் வந்து சேர்ந்து உதவி செய்து
உங்கள் பங்களிப்பை செலுத்தினீர்கள். உயிர்த் தியாகம் செய்தீர்கள். நீங்களும்
உங்கள் பங்களிப்பை செலுத்தி உயிர்த் தியாகம் செய்ததால் பாராட்டுகிறோம். எப்படி
பாராட்டுகிறோம்? இந்த
பொருளை மீட்டதில் உங்களுக்கும் பங்கு உண்டு என பாராட்டுகிறோம் என்றார்கள்.
இவர்கள் தான்
இந்திய முஸ்லிம்கள்.
பாராட்டி விட்டு பொருளை மற்றவர்கள் வைத்துக் கொண்டார்கள். நன்றாக கவனிக்க வேண்டும். இந்த பொருளில் உங்களுக்கும் பங்கு உண்டு என்று கூட சொல்லவில்லை. பொருளுக்குரியவர்கள் இது எங்கள் பொருள் என்று உரிமை கோரவுமில்லை. பொருளுக்குரியவர்களும் என்ன செய்தார்கள். ஆம் அந்த பொருளை மீட்டதில் எங்களுக்கும் பங்கு உண்டு என்று பெருமையாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் பொருள் என்பதையே மறந்து விட்டார்கள். இவர்களைப் பற்றி என்ன சொல்வீர்கள். இவர்கள் யார்? என்கிறீர்களா? இவர்கள் தான் இந்திய முஸ்லிம்கள்.
முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.
குட்டி குட்டி சமஸ்தானங்களாக இருந்தவற்றை இணைத்து ஹிந்துஸ்த்தான் என்ற பெரிய நாட்டை உருவாக்கியவர்களே முஸ்லிம்கள்தான். இதை முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள். அரபி, உருது, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து உண்டு. தமிழ் போன்ற மொழிகளில் ஹ என்ற அரபி உச்சரிப்புக்கு நிகரான எழுத்து இல்லை. எனவே தமிழ் போன்ற மொழி பேசுபவர்கள் இந்து என்ற வார்த்தையில் இருந்து வந்ததுதான் இந்தியா என யூகித்து விளங்கி உள்ளார்கள். இந்தியா என்று தமிழில் எழுதப்படும் நம் நாட்டுக்கு அல்-ஹிந்த், ஹிந்துஸ்தான் என பெயர் வைத்தவர்களே முஸ்லிம்கள்தான். இந்த உண்மையை முஸ்லிம்களே மறந்து விட்டார்கள்.
சமுதாய தலைவர்கள் என்போர் அப்படி
ஆக்கி விட்டார்கள்.
800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்கள் நாம் என்று பேசுவார்கள்.
ஆகவே இந்தியாவை ஆளும் உரிமை
முஸ்லிம்களுக்குத்தான் உண்டு என்று பேச மாட்டார்கள்.
ஆகவே இந்தியாவில் வாழ
முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்றுதான் பேசுவார்கள்.
இந்தியாவே முஸ்லிம்களுக்கு
உரியதுதான் என்று பேசத் தெரியாதவர்களாக ஆகி விட்டார்கள். சமுதாய தலைவர்கள் என்போர்
அப்படி ஆக்கி விட்டார்கள். இந்தியாவில் வாழ முஸ்லிம்களுக்கு உரிமை உண்டு என்பது
தவறு. இந்தியாவே
முஸ்லிம்களுக்கு உரியது என்பதே சரி.
இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து
வரும் கூட்டத்தின் மூதாதையர்கள்.
இந்தியா என்ற நாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தபொழுதுதான் வியாபாரிகளாக நுழைந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அபகரித்தார்கள். இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த முஸ்லிம்கள்தான், ஆட்சியை ஆங்கிலேயனிடம் பறி கொடுத்தார்கள்.
ஆட்சியை பறி கொடுத்த முஸ்லிம்கள்தான் இழந்த நாட்டை மீட்க, இழந்த ஆட்சியை பிடிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக களம்
கண்டார்கள். மற்றவர்கள் குறிப்பாக இன்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும்
கொச்சைப்படுத்தி இன உணர்வை தூண்டி குளிர் காய்ந்து வரும் கூட்டத்தின் மூதாதையர்கள்
ஆங்கிலேயனிடம் கிடைத்த பதவிகளை பெற்று சொகுசு வாழ்வு வாழ்ந்தார்கள்.
இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம்
என்கிறோம்.
இந்தியாவை மீட்க இழந்த ஆட்சியை பெற போராடி வந்த முஸ்லிம்களுடன் மற்றவர்களும் சேர்ந்தார்கள். நாட்டை இழந்த முஸ்லிம்கள் நாட்டை மீட்க போராடினார்கள். ஆட்சியை இழந்த முஸ்லிம்கள் ஆட்சியை திரும்ப பெற போராடினார்கள். இதைத்தான் இந்திய சுதந்திர போராட்டம் என்கிறோம். இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் முஸ்லிம்கள். சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்கள். இந்தியாவே முஸ்லிம்களுக்குரியது. இதை எல்லாரும் மறந்து விட்டோம்.
முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா.
எனவே இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தவறான சிந்தனையை பரப்பும் பணியில் நாம் ஈடுபடக் கூடாது. தமிழக முஸ்லிம்களால் பேரறிஞர், உத்தமர் என்று நம்பப்பட்ட -- . அவர்களால் சொல்லப்பட்டதுதான். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது.
அவர் யாரிடம் ரகசிய பங்கு வாங்கி விட்டு இப்படிச் சொன்னாரோ? அவர் கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தைச் சார்ந்தவர் என்பதை விளங்கி விட்டோம். அவரை இந்த விஷயத்தில் புறம் தள்ளி விட வேண்டும். இனி முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதே நமது இந்தியா என்ற உண்மையையே நாம் சொல்ல வேண்டும். இதையே நமது வாரிசுகளுக்கு உணர வைப்போம். இன்ஷா அல்லாஹ் நமது வாரிசுகள் இந்தியாவை ஆளும். எப்படிப்பட்ட இந்தியாவை ஆளும்?
அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி
இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில்.
சூழ்ச்சிக்காரர்களால் பிரிக்கப்பட்ட இந்தியா அல்ல. நம்மவர்களால் உருவாக்கப்பட்ட பாகிஸ்தான், பங்ளாதேஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்தியாவை ஆளும். அதற்கு நாம் இந்த சுதந்திர தினத்தில் உறுதி எடுப்போம். இன்னொன்றையும் உங்கள் கவனத்திற்கு தர விரும்புகிறேன்.
1947 ஆகஸ்ட் 15! அந்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் அரசியல் நிர்ணய சபையின் அத்தனை உறுப்பினர்களும் கூடி இருந்தார்கள். அந்த நேரத்தில் நிசப்தம் நிலவி இருந்தது. நிசப்தம் நிலவி இருந்த அந்த நேரத்தில் இந்திய விடுதலை பிறந்தது என்பதற்கு அறிகுறியாக பனிரெண்டு மணி அடித்து ஓய்ந்தது.
இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல்
கீதம்.
மணி அடித்து ஓய்ந்ததும் கணீரென ஒலித்தது சுதந்திர கீதம். அந்த சுதந்திர கீதத்தை திருமதி சுஸேதா கிருபளானி அவர்களும், டாக்டர் சுசீலா நய்யார் அவர்களும் குரலெடுத்துப் பாடினார்கள். அவர்களுடன் அங்கிருந்த அத்தனை தலைவர்களும் சேர்ந்து பாடினார்கள். அப்பொழுது ஒலித்த சுதந்திர கீதம் எது தெரியுமா? ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' இதுதான் இந்திய சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதம். சுதந்திர கீதம்.
விண்ணிலும் மண்ணிலும் ஒலித்த இந்திய
தேசிய கீதம்.
1984 இல் இந்தியாவும் சோவியத் ரஷ்யாவும் இணைந்து செலுத்திய விண் கலம் என்பது நினைவு. விண் கலத்தில் பயணம் செய்த முதல் இந்திய வீரர் ராகேஷ்; சர்மா விண் வெளியில் உலா வந்து கொண்டிருந்தார். அப்பொழுது பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் தொலை பேசி மூலம் ராகேஸ் சர்மாவுடன் பேசினார்கள். இந்த உரையாடலை உலகில் உள்ள அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒளிபரப்பினார்கள்.
அன்னை இந்திரா காந்தி
அம்மையார் அவர்கள் பேசும்பொழுது, விண்வெளியிலிருந்து இந்தியாவை பார்க்கும் போது எப்படித்
தெரிகிறது என்று கேட்டார்கள். ராகேஸ் சர்மா சொன்ன இரத்தின சுருக்கமான பதில் என்ன
தெரியுமா? '
'ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான்
அமாரா''
இதுதான் அந்த பதில். விண்ணிலும்
மண்ணிலும் ஒலித்த இந்திய தேசிய கீதம் ''ஸாரே ஜஹான்ஸே அச்சா ஹிந்துஸ்தான் அமாரா'' என்பதுதான்.
இந்த கீதத்தை, தேசிய கீதமாக
அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்?
இதே கீதத்தைத்தான் இந்திய முப்படை வீரர்கள் அணி வகுக்கும் போதும் எடுப்பான குரலில் இசையுடன் பாடி வந்தார்கள். இந்திய தொலைக்காட்சிகளின் எல்லா நிலையங்களிலிருந்தும் வானொலிகளிலும் இதே கீதத்தைத்தான் ஒவ்வொரு நாளும் ஒலி பரப்பி வந்தார்கள். சுதந்திர மண்ணில் ஒலித்த முதல் கீதத்தை, விண்ணிலும் ஒலித்த இந்த கீதத்தை, இந்தியாவிலுள்ள பெரும்பாலோருக்கும் உலகிலுள்ள பெரும்பானவர்களுக்கும் தெரிந்த மொழியில் உள்ள இந்த கீதத்தை, தேசிய கீதமாக அங்கீகரிக்கப்படவில்லை. அது ஏன்? இந்தியாவின் ஒரு மாநில மொழியாகிய வங்க மொழியில் உள்ள கீதத்தை ஏற்றுக் கொள்ளப்பட்டது ஏன்?
விரிவாக காண இதை கிளிக் செய்யவும்
Comments