இன்றுள்ள யாருக்கும் அல்லாஹ்வின் நற்சான்று உண்டா?
முஹம்மதுநபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ்வின் நற்சான்று உள்ளது. அதுபோல் இன்றுள்ள யாருக்கும் அல்லாஹ்வின் நற்சான்று உண்டா? ஆணவத்துக்காகவும் போர்கள் நடந்துள்ளன . நியாயத்துக்காக நாலு பேரை தனியாக ஒருவன் அடித்து விட்டு வருவான் . முதலில் அடித்தது நியாயத்துக்காகத்தான் இருக்கும் . அவனுக்கு ஈடாக ஆள் இல்லை என்றதும். அவனை தட்டிக் கேட்க ஆள் இல்லை என்றதும். ஆணவம் தலைக்கு ஏறி விடும் . சும்மா இருந்த பொருளை காலால் தள்ளி விட்டுப் போவான். உதாரணமாக ரோட்டில் திரியும் ரவுடிகளை எடுத்துக் கொள்ளுங்கள் . ரோட்டில் போய்க் கொண்டே இருப்பான் டூவீலர்களில் சாமானைக் கொண்டு வருபவரை பிடித்து நிறுத்துவான். சாமான்களை ரோட்டில் கொட்டி விட்டுப் போவான் . இது ரவுடிகளிடமுள்ள ஆணவத்தின் வெளிப்பாடு . இந்த மாதிரி ரவுடிகள். அட்ரஸ் இல்லாதவனாக இருந்து . பெரிய மனிதனாக, சமுதாயத்தில் அறியப்பட்டவனாக, பிரபலமானவனாக ஆகி விட்டால் ஆணவத்தின் வெளிக்காட்டல் எப்படி இருக்கும் தெரியுமா ? அவன் விருப்பத்திற்கு அவன் வசதிக்கு, அவன் தேவைக்கு எதையாவது செய்வான் . செய்யும்படிச் சொல்லுவான், அதை இஸ்லாம் என்பான் . ஒன்றாக இருந்த அமைப...