பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதற்கு மட்டும் எத்தனை விதமான மொழி பெயர்ப்புகள்?

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
 மொழி பெயர்ப்புகளை   பாருங்கள் படியுங்கள் ஆய்வு செய்யுங்கள்.
திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் 113 அத்தியாயங்களின் துவக்கங்களிலும் அந்நம்ல்-எறும்பு எனும் 27ஆவது அத்தியாயத்தில் 30ஆவது வசனமாகவும் இடம் பெற்றுள்ளது பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். இதற்கும் ஒவ்வொரு அறிஞர்களும் ஒவ்வொரு விதமாக மொழி பெயர்த்துள்ளார்கள்.


இக்திலாபில் அஇம்மா ரஹ்மதுல் உம்மா. அறிஞர்களிடையேயான கருத்து வேறுபாடுகள் சமுதாயத்துக்கு அருள் என்ற அடிப்படையில் இதனைப் படித்துப் பாருங்கள். நீங்களும் ஆய்வு செய்யுங்கள்.

தமிழில் பல தர்ஜுமாக்கள் வெளி வந்து விட்டன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு சாராரின் தர்ஜுமா மட்டும்  கடும் விமர்சனங்களை கண்டுள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்களிடம் இது போய் சேர வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டது என்பதை இந்த தர்ஜுமாவை எடுத்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம்.

தர்ஜுமாக்கள் எல்லாமே வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாய் படிக்கும் வாக்கில் அமைந்துள்ளன. 

அதாவது அரபி நூல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஆனால் இந்த தர்ஜுமாவோ தமிழ் ஆங்கில நூல்களின் அடிப்படையில் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் வெளியான தர்ஜுமாக்கள் பெரும்பாலும் பிற மதத்தவர்களை கருத்தில் கொள்ளவே இல்லை. ஆனால் இந்த தர்ஜுமாவோ பிற மதத்தவர்களையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிமுகத்துடன் பத்து ஆண்டுகளுக்கு முன் (2002ல்) வெளியான பீ.ஜே. தர்ஜுமா கடும் எதிர்ப்புகளை கண்டுள்ளது. தமிழ் ஆங்கில நூல்களின் அடிப்படையில்   இடது    பக்கத்திலிருந்து  வலது  பக்கமாக அமைந்துள்ளதால் யூதக் கைக் கூலி என்ற விமர்சனங்களையும் கண்டுள்ளது. 

இடது    பக்கத்திலிருந்து  வலது  பக்கமாக அமைந்துள்ளதால் யூதக் கைக் கூலி என்றால் யாரெல்லாம் யூதக் கைக் கூலி லிஸ்ட்டில் வருவார்கள்? பாருங்கள்.

1926ல் வெளியான தாவூத்ஷா மொழிபெயர்ப்பு, 

1937ல் வெளியான ஹமீதிய்யா மொழிபெயர்ப்பு, 

அன்வாருல் குர்ஆன்,

1996லிருந்து வெளியாகி வரும் திருக்குர்ஆனின் நிழலில், 

1989(1-16) I.F.T.வெளியீட்டிலும் 1996லிருந்து வெளியாகி வரும் I.F.T. வெளியீடுகளிலும் தர்ஜுமாக்கள்  யாவும் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாகத்தான் அமைந்துள்ளன. 

இந்த உண்மைகளை மறைத்து  பீ.ஜே. தர்ஜுமா மட்டும் இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக அமைந்துள்ளது போன்று விமர்சித்து யூதக் கைக் கூலி பட்டம் வழங்கி மகிழ்ந்து வருகிறார்கள். இதனை மனதில் கொண்டு தலைப்புக்குச் செல்வோம்.

 பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதற்கு யார் யார் என்ன என்ன மாதிரி  தமிழாக்கம் செய்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.

 1926இல் வெளியான தாவூத்ஷா மொழிபெயர்ப்பு
அருளாளனும் அன்புடையோனுமாகிய அல்லா(ஹ்)வின் திருநாமத்தால் 

1937 இல் வெளியான ஹமீதிய்யா மொழிபெயர்ப்பு
(துன்யாவில் சகலருக்கும்) கருணை புரிபவனும் (ஆகிறத்தில் ஈமானுள்ளவர்களுக்கு மட்டும்) அருள் பாலிப்பவனுமான அல்லாஹு(தஆலா)வுடைய திருநாமத்தால் (இதை ஓத ஆரம்பஞ் செய்கின்றேன்.)

அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்ப்பு தாருல் ஹுதா வெளியீடு
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(ஓதுகிறேன்)

அதே தாருல் ஹுதா வெளியீடு 2012 மேய் பதிப்பில்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஓதுகிறேன்)    திரு என்பதை நீக்கி உள்ளார்கள்.


1983 இல் வெளியான ஜாண் ட்ரஸ்ட் நமக்கு கிடைக்கவில்லை.

1987இல்P.S.அலாவுதீன் மன்பஈ, P.ஜைனுல் ஆபிதீன் உலவி, S. கமாலுத்தீன் மதனி ஆகியோர் மொழி பெயர்ப்பில் வெளியான புகாரி முதல் பாகத்தில்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

1994இல் P.ஜைனுல் ஆபிதீன் உலவி மொழி பெயர்ப்பில் ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட புகாரி முதல் பாகத்தில்

அளவற்ற அருளாளனும், கருணையன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.

 ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்ட புகாரி 4ஆவது பாகத்தில்


அளவற்ற அருளாளன் கருணையன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 P.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களால் திருத்தம் செய்யப்பட்டு1988 முதல் வெளி வந்து கொண்டிருக்கும் ஜாண் ட்ரஸ்ட்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகின்றேன்). 

மணப்பாறை முஹம்மது இக்பால் மதனி, ஆத்தூர் அப்துஸ்ஸமதுமதனி  குழுவினரால் மொழி பெயர்க்கப்பட்ட 1993இல் சவூதி வெளியீடு
அளவற்ற அருளாளன்  நிகரற்ற  அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)

அதே முஹம்மது இக்பால் மதனி  1992க்கு முந்தைய தப்ஸீர் நிகழ்ச்சிகளில், இவ்வுலகில் அனைவருக்கும் மறுமையில் நல்லடியார்களுக்கு மட்டும் அருள்பாலிக்கக் கூடிய அல்லாஹ்வின் பெயரால் என்று மொழிபெயர்ப்பு செய்து வந்தார்கள்.

 1989, 1996 I.F.T.வெளியீடு
அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

2001இல் P.ஜைனுல் ஆபிதீன் உலவியின் மொழி பெயர்ப்பில் வெளியான ஜாமிவுத் திர்மிதீ

அளவற்ற அருளாளனும் நிகரில்லா பேரன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

2002 ஜுன்முதல் வெளி வந்து கொண்டிருக்கும் பஷாரத் மொழிபெயர்ப்பு

அளவற்ற அருளாளனும், அளவிலா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (ஆரம்பம் செய்கிறேன்).

2002 டிசம்பர் முதல் வெளி வந்து கொண்டிருக்கும்  P.ஜைனுல் ஆபிதீன் உலவியின் மூன் பப்ளிகேஷன்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1988இல் P.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்களால் திருத்தம் செய்யப்பட்ட ஜாண் ட்ரஸ்ட்டில் திரு இருந்தது. இதில் நீக்கப்பட்டுள்ளது.


அருளாளன்  அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால். என்று மொழி பெயர்ப்பதே சரி. மற்றவையெல்லாம் விரிவுரை என்ற கருத்துடையவர்களும் இருக்கிறார்கள்.

ஆய்வுகளும் மொழி பெயர்ப்புகளும் காலத்திற்கு காலம் மற்றும் அறிவு வளர்ச்சியின் அடிப்படையிலும் மாறுபடும். ஆய்வு செய்தல் எல்லாருக்கும் சொந்தமானது. அல்லாஹ் நாடினால் மொழி பெயர்ப்புகளில் உள்ள வித்தியாசங்களின் தொகுப்புகள் தொடரும்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு