வந்தவர்களிடம் கேள்வி கேட்கப்பட்ட நிகழ்ச்சி 5

கப்பல் ஹபீப் அவர்களிடமிருந்து பரிசு பெறுவதுO.M.முஹம்மது நூருதீன்
 
 

மருமகள்கள் செய்னபு, ஹுதா ஆகியவர்களுக்காக பரிசை பெற்றுக் கொள்கிறார் தாய்மாமன் அப்துல் ஹமீது

 
 தஸ்லீமா

ஸாஹிபு முஹம்மது மைதீன் அவர்களிடம் பரிசு பெறுகிறார் அபுபக்கர் சித்தீக்
 
1. நயவஞ்சகனின் நான்கு அடையாளங்களைக் கூறுக.
பதில்: பேசினால் பொய் பேசுவான், வாக்களித்தால் மாறு செய்வான், நம்பினால் துரோகம் செய்வான், தர்க்கம் செய்தால் (வழக்காடினால்) நேர்மை தவறுவான் (பாவம் புரிவான், வரம்பு மீறுவான்).
 
2. திடலில் நிறைவேற்றப்பட வேண்டிய தொழுகைகள் எவை?
பதில்: பெருநாள் தொழுகை, மழைத் தொழுகை
 
3. தொழுவதற்கும் மய்யித்தை அடக்கம் செய்வதற்கும் தடை செய்யப்பட்ட மூன்று நேரங்கள் யாவை?
பதில்: சூரியன் உதிக்கும் போது, சூரியன் உச்சியில் இருக்கும் போது, சூரியன் மறையும் போது.
 
4. குர்ஆன் ஒதுவதற்குரிய கூலி என்ன?
பதில்: 1. ஒரு எழுத்திற்குப் பத்து நன்மை. 2. ஒரு எழுத்துக்கு ஒரு நன்மை. ஒரு நன்மை என்பது அது போன்று பத்து மடங்காகும். (இந்த இரண்டில் எது எழுதினாலும் சரி)
 
5. நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் நபி(ஸல்) அவர்கள் கூறிய உதாரணம் யாது?
பதில்: கஸ்தூரி வைத்திருப்பவன், இரும்பு உலையில் ஊதுபவன்
 
6. அரஃபா நோன்பின் சிறப்பு யாது?
பதில்: முன் சென்ற ஓராண்டு பாவங்களுக்கும் பின் வரும் ஓராண்டு பாவங்களுக்கும் பரிகாரமாகும்.
 
7. பயணியும் சொந்த ஊரில் இருப்பவரும் காலுறைக்கு எத்தனை நாள் மஸஹ் செய்யலாம்?
பதில்: பயணி 3 நாள், சொந்த ஊரில் இருப்பவர் ஒரு நாள் வரை மஸஹ் செய்யலாம்
 
8. உலகில் உள்ள இடங்களில் அல்லாஹ்வுக்கு விருப்பமான மற்றும் வெறுப்பான இடம் எது?
பதில்: பிரியமான இடம் பள்ளிவாசல், வெறுப்பான இடம் கடைவீதி
 
9. தினமும் 12 ரக்அத் யார் சுன்னத் தொழுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு
  மாளிகையை எழுப்புகிறான் என்பது நபிமொழி. அந்த 12 ரக்அத்கள் எவை?
பதில்: பஜ்ருக்கு முன் 2, லுஹருக்கு முன் 4, பின் 2, மக்ரிபுக்குப் பின் 2, இஷாவுக்குப் பின் 2
 
10. பாவமன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்படுவது எது வரை?
பதில்: உயிர் தொண்டைக் குழியை அடையும் வரை. (அல்லது) கியாமத் நாள் வரும் வரை. (இந்த 
இரண்டில் எது எழுதினாலும் சரி)
 
11. தொழுகை என்ற நற்செயலில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது எது?
பதில்: தொழுகையை அதன் நேரப்படி தொழுவது.
 
12. மனிதர்களை சொர்க்கத்தில் புகுத்தும் பெரும்பாலான காரியங்களில் இரண்டைக் கூறுக?
பதில்: நற்குணம், இறையச்சம், (இஸ்லாத்தின் ஐம்பெரும் கடைமைகளில் 2 ஐ எழுதினாலும் சரி)
 
13. இரண்டு அருட்கொடைகள் விஷயத்தில் பெரும்பாலான மக்கள் நன்மையை இழந்து விடுகின்றனர்.
   அவ்விரண்டு அருட்கொடை எவை?
பதில்: ஆரோக்கியம், ஓய்வு

14. பயணி ஓரிடத்தில் தங்கும் போது என்ன கூற வேண்டும்?
பதில்: அவூது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்

15. மல ஜலம் கழிப்பதில் சாபத்தை ஏற்படுத்தும் செயல்கள் எவை?
பதில்: நடை பாதையிலும், நிழல் தரும் மரங்களின் கீழும் மலஜலம் கழிப்பது.

16. இயற்கையான சுன்னத்துகள் எத்தனை? அவை எவை?
பதில்: (இயற்கையான சுன்னத்துகள் ஐந்து. 1. கத்னா செய்வது, 2. மர்ம உறுப்பின் முடிகளை நீக்கு வது, 3. நகம் வெட்டுவது, 4. அக்குள் முடிகளை நீக்குவது. 5. மீசையைக் குறைப்பது.) (அல்லது) (இயற் கையான சுன்னத்துகள் பத்து. 1. மீசையைக் குறைப்பது, 2. தாடியை விடுவது, 3. பல் துலக்குவது, 4. நாசிக்கு தண்ணீர் செலுத்தி சுத்தம் செய்வது, 5. நகம் வெட்டுவது, 6. விரல்களின் மூட்டுக்களை கழுவு வது, 7. அக்குள் முடிகளை நீக்குவது, 8. மர்ம உறுப்பின் முடிகளை நீக்குவது, 9. சிறு நீர் கழித்து விட்டு சுத்தம் செய்வது. 10. பத்தாவது ஹதீஸில் குறிப்பிடப்படவில்லை.) (இந்த  இரண்டில் எது எழுதினா லும் சரி) 

17. ஒரு மனிதன் மரணித்ததும் மூன்றைத் தவிர அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வருகின்றன. அவை?
பதில்: நிலையான தர்மம், பயனுள்ள கல்வி, தனக்காக துஆ செய்யும் ஸாலிஹான குழந்தை

18. செருப்பு அணியும்போதும் கழற்றும்போதும் நடந்து கொள்ள வேண்டிய நபிவழி என்ன?
பதில்: வலது காலிலிருந்து அணிய வேண்டும் இடது காலில் இருந்து கழற்ற வேண்டும்.

19. பயணத்தில் உயரமான இடத்தில் ஏறும்போதும் தாழ்வான இடத்தில் இறங்கும்போதும் என்ன கூற வேண்டும்?
பதில்: உயரமான இடத்தில் ஏறும்போது அல்லாஹு அக்பர் என்றும் தாழ்வான இடத்தில் இறங்கும் போது சுப்ஹானல்லாஹ் என்று கூற வேண்டும்.

20. நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றால் அவருக்காகப் பிரார்த்திப்பது எப்படி?
பதில்: 1. லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ் 2. அத்ஹிபில் பஃஸ ரப்பன்னாஸ் வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமன், 3. அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபாஅன் லா யுகாதிரு ஸகமன், (இந்த மூன்றில் ஏதாவது ஒன்று எழுதினால் சரி)

21. மழை பொழியும்போது என்ன கூற வேண்டும்?
பதில்: 1. அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபிஆ 2. அல்லாஹும் மஜ்அல்ஹு ஸய்யிபன் நாஃபிஆ (இந்த இரண்டில் ஏதாவது ஒன்று எழுதினால் சரி)

22. துன்பம் நேரும் போது என்ன கூற வேண்டும்?
பதில்: இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும் மஅஜுர்னீ ஃபீ முஸீபதீ வஅக் லிஃப்லீ கைரன் மின்ஹா. (அல்லது பின் வரும் மூன்று துஆக்களில் ஏதேனும் ஒன்று எழுதினால் சரி)
لَا إِلَهَ إِلَّا الله الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا الله ُ رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
لَا إِلَهَ إِلَّا الله الْعَظِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا الله رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا الله رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
لَا إِلَهَ إِلَّا الله الْعَلِيمُ الْحَلِيمُ لَا إِلَهَ إِلَّا الله رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ لَا إِلَهَ إِلَّا الله رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ
 
23. உளுவுக்குப் பிறகு ஓத வேண்டிய திக்ரைக் கூறு.
பதில்: 1. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு 2. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அல்லாஹும் மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன், 3. அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (இந்த மூன்றில் ஏதாவது ஒன்று எழுதினால் சரி)
 
24. இரண்டு கூலியைப் பெற்றுத் தரும் தர்மம் எது?
பதில்: உறவினருக்குச் செய்யும் தர்மம்

25. சிறந்த தர்மம் எது?
பதில்: 1. தேவைக்குப் போக எஞ்சியதை தர்மம் செய்வது, 2. ஒரு மனிதன் ஆரோக்கியமாகவும், கருமியாகவும் வறுமையை அஞ்சியவராகவும், செல்வத்தின் மீது ஆசை கொண்டவராகவும இருக்கும் போது கொடுக்கின்ற தர்மம். (இவ்விரண்டில் ஏதாவது ஒன்று எழுதினால் சரி)
 
 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.