கேள்வி கேட்போம் பதில் சொல்ல வாருங்கள் என்றால் வருவார்களா?

கேள்வி கேட்க வாருங்கள் என்றால் வருவார்கள். நாங்கள் கேள்வி கேட்போம் பதில் சொல்ல வாருங்கள் என்றால் வருவார்களா? வந்தார்கள், அவா்கள் யார்?

வால் போஸ்ட்டா்கள் ஒட்டவில்லை. பிட் நோட்டீஸ்கள் வினியோகிக்கவில்லை.  29.11.12  வியாழன் அன்று நிகழ்ச்சி நடத்திய இடத்தில்  மாலை 6 மணிக்கு மேல் அமைத்திருந்த ஒலி பெருக்கிகள் மூலம் அறிவித்தோம். இஷாவுக்குப் பின் 8 மணிக்கு மார்க்கம் சம்பந்தமாக நாங்கள் கேள்வி கேட்போம். நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்ல வாருங்கள் என்று அழைத்தோம். வந்தார்கள் பதில் சொன்னார்கள் அவா்கள்தான் சிறார்கள். 

கேள்வி -1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று சொன்னவா்  யார்?

இந்தக் கேள்விக்கு அரசியல் கட்சிகளிலுள்ள  பெரியவா்களாக இருந்தால் அண்ணா  சொன்னார் என்று சிலரும்.  கலைஞா் சொன்னார்  என்று சிலரும். சொல்லி இருப்பார்கள். 

ஏழையின் சிரிப்பில் இறைவன் என்பதைச் சொன்னால் தலைவன் அண்ணல் அவா் சொல்லிய சொல்லை எந்நாளும் மறந்தது இல்லை என்ற பாடலை பாடியும்  காட்டி இருப்பார்கள். 

சிறுவா்களோ ஏழையின் சிரிப்பில் இறைவன் என்று சொன்னவா் இறைத்துாதா் முஹம்மது நபி(ஸல்) அவா்களே என்று ஹதீஸ் ஆதாரம் கூறினார்கள்.  உரை நடையில் - பேச்சு வழக்கில் அவா்கள் கூறிய விரிவான பதில் எழுத்து நடையில் கடைசியில்  தந்துள்ளோம்.


கேள்வி- 2. எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்று எதில் கூறப்பட்டுள்ளது?

இந்தக் கேள்விக்கு பலரும் பல தமிழ் நுால்களையே கூறுவா். குறிப்பாக ஆசிரியா்களை  கவுரவிக்க, இதில் உள்ள இணை வைப்பை மறந்து இந்த வாசகத்தைக் கூறுவார்கள்.  ஆசிரியா் தினங்களில் இந்த இணை வைப்பை அதிகம் செய்வார்கள். இறைவன்தான் எழுத கற்றுத் தந்தான் என்ற உண்மைபை் பொருளை அறிய வேண்டி இடத்திலிருந்து அறியத் தவறினார்கள்.  அதனால் எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்ற வார்த்தையை தவறாக  விளங்கி விட்டார்கள்.

எழுத கற்றுத் தந்தவன் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்தான். எழுத்தறிவித்த இறைவன் அல்லாஹ்தான். என்று அல்குர்ஆனில் 96-4, 2-282   ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது  என்று  சிறுவா்கள் பதில் கூறினார்கள்.

கேள்வி -3. உலகின் முதல் உணவு அமைச்சர் ரேஷன் முறையை எதற்காக கொண்டு வந்தார். 

பஞ்சம் வரும் என்பதால் ரேஷன் முறையை  கொண்டு வந்தார்.




கேள்வி -4. வறுமையில் உள்ளவா்களுக்கு மலிவு விலையில்  அரிசி, மற்றும் உணவுப் பொருள்கள், தா்மமாக இலவச அரிசி -விலையில்லா அரிசி வழங்கிட முன் மாதிரி யார்? 

அம்மா கட்சியினா் அம்மா என்றும் ஐயா கட்சியினா் ஐயா என்றும் தான் கூறுவார்கள். சிறுவா்களோ அல் குா்ஆன் 12-88ஆவது வசனத்தை ஆதாரமாகக் காட்டி நபி யூசுப்(அலை) அவா்கள்தான்  மலிவு விலை  அரிசி,விலையில்லா அரிசி வழங்கிட முன் மாதிரி என்று கூறினார்கள்.

கேள்வி-5. பாதிக்கப்பட்ட மக்களுக்க விலையில்லா வீடுகளை முதன் முதலில் கட்டிக் கொடுத்தவா்கள் யார்? 
இந்தக் கேள்விக்கு முஹம்மது இன்ஸாமுல் ஹக் சிறுவா் மட்டும் அல்குா்ஆன்  10-87ஆவது வசனத்தை ஆதாரமாகக் காட்டி நபி மூஸா(அலை) அவா்களும் அவரது சகோதரா் நபி ஹாரூண்(அலை) அவா்களும் என்று பதில் அளித்தார்.


ஏழையின் சிரிப்பில் இறைவன்
அல்லாஹ் இறுதித் தீர்ப்புநாளில் கூறுவான்: ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு உணவளிக்கும்படி கேட்டேன்ஆனால் நீ உணவளிக்கவில்லை.

அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் உணவளித்து அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்கநான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும் ?

அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய பசிக்கு உணவளிக்கும்படிக் கேட்டான். ஆனால் நீ மறுத்து விட்டாய் நீ அவனுக்கு உணவளித்திருந்தால்,அதை நீ எனக்கு அளித்ததாக பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது நீ என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?
   
ஆதமின் மகனே! நீ உலகில் வாழ்ந்து கொண்டிருந்த பொழுது ஒரு நாள் நான் உன்னிடம் எனக்கு நீர் புகட்டும் படிக்கேட்டேன்ஆனால் நீ மறுத்து விட்டாய்.

அதற்கு மனிதன் கூறுவான்: என் அதிபதியே! அனைவருக்கும் நீர் புகட்டி அகிலமனைத்தையும் பராமரித்துக் காப்பவன் நீயே! அப்படியிருக்கநான் எப்படி உனக்கு நீர் புகட்ட முடியும் ?

அப்பொழுது இறைவன் கூறுவான்: உன்னிடம் என்னுடைய இன்ன அடியான் அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கேட்ட பொழுது  நீ அதை மறுத்து விட்டாய் நீ அவனுடைய தாகத்திற்கு தண்ணீர் கொடுத்திருந்தால்நீ எனக்கு நீர் புகட்டி என் தாகத்தை தனித்ததாக நான் கருதி பெருமைப் பட்டிருப்பேன் அதற்கான வெகுமதியை இப்பொழுது என்னிடமிருந்து பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதாஎன்று இறைவன் கூறுவதன். என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஆதார நூல் (முஸ்லிம்)

ஒரு வேளை உணவைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத வறியவர் ஒருவர் தனது வீட்டு வாசலில் பசியோடும்,தாகத்தோடும் நின்று கையேந்தும் பொழுது அவருக்கு தேவையான உணவையும், நீரையும் புகட்டினால் அவர் உண்டு புசித்து அவரது பசி அடங்கும் போது உங்களை நோக்கி புன்முறுவல் பூப்பார் அங்கு இறைவனைக் காண்பீர்கள் என்று கருணையே உருவான காருண்ய நபி(ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களிடம் கூறினார்கள்.











Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.