உரை கேட்க வந்தவர்களிடம் கேள்வி கேட்கப்பட்ட வித்தியாசமான நிகழ்ச்சி

மேலப்பாளையம் சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெருவில் 18-11-12 ஞாயிறு மாலை இஸ்லாமிய பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. மவுலவி எல்.கே.எம். காஜா மைதீன் ரியாஜிஅவர்கள் சிறப்புரையாற்றினார்.

 பிறகு உரை கேட்க வந்தவர்களிடம் கேள்வி  கேட்டு பதில் பெறும் வித்தியாசமான நிகழ்ச்சி நடைபெற்றது.
 
கேள்வி 1.
இன்று ஆங்கில ஆண்டு 2012 என்பது எல்லாருக்கும் தெரியும். ஹிஜிரி ஆண்டு எத்தனை?  என்ற கேள்விக்கு எல்லாரும் அமைதியாக இருக்க ஓ.எஸ். முஹம்மது இன்ஸ்மாம் என்ற சிறுவர் 1433 என்று கூறியதும் அனைவரும் விழிப்படைந்து 1434 என்று கூறினார்கள்.
 
கேள்வி 2.
 உலகில் முதன் முதலில் ஆண்டுகளை கணக்கிட துவங்கியவர்கள் யார். அது என்ன ஆண்டு. கணக்கிட துவங்கியவர்கள் முஸ்லிம்கள் அது ஹிஜிரி ஆண்டு என்று சிறுமி எல்.எம். புஷ்ரா பதில் கூறினார்.
 
 கேள்வி 3.
முஸ்லிம்கள் காலத்தைக் கணக்கிட சூரியனை பயன்படுத்துகிறார்களா? சந்திரனை பயன்படுத்துகிறார்களா? இரண்டையுமா? என்ற கேள்விக்கு பெரும்பாலானவர் சந்திரனை மட்டும் என்றும் சிலர் சூரியனை என்றும் பதில் கூறினார்கள்.
 
இஸ்லாத்தில் குறித்த காலத்தில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளின் நேரங்களை சூரிய சந்திர ஓட்டங்களின் அடிப்படையில் தான் அமைத்து தரப்பட்டுள்ளது. ''சூரியனும் சந்திரனும் (அவைகளுக்கு இறைவன் ஏற்படுத்திய) கணக்கின்படியே இயங்குகின்றன'' என்கிறது அல்குர்ஆன் 55:5வது வசனம். எனவே காலத்தை கணக்கிட முஸ்லிம்கள் சூரியன் சந்திரன் ஆகிய இரண்டையும்தான் பயன்படுத்தப்படுத்தி வருகிறோம்.

இருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் காலத்தை கணக்கிட முஸ்லிம்கள் சந்திரனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் சந்திரனை மட்டும்தான் பயன்படுத்தி வருகிறோம் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தினமும் தொழ வேண்டிய ஐங்காலத் தொழுகைகளுக்கான நேரங்களை சூரிய ஓட்டத்தை கணக்கில் கொண்டுதான் தொழ (அல் குர்ஆனின் 11:114, 17:78, 20:130, 30:17-18, 50:39-40 ஆகிய வசனங்கள் மூலம்) கட்டளையிடப் பட்டுள்ளோம். இந்த அடிப்படையில்தான் சூரிய ஓட்ட கணக்கை பயன்படுத்தி ஐங்காலத் தொழுகைகளை தொழுது வருகிறோம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
 
கேள்வி 4.
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எந்த ஆண்டில் பிறந்தார்கள்?என்ற கேள்விக்கு கி.பி. 570 என்று பலர் பதில் அளித்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு என்பதெல்லாம் கணக்கில் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் கி.பி. ஆண்டு என்பது இருந்திருந்தால் நிச்சயம் ஹதீஸ்களில் இடம் பெற்றிருக்கும். ஹதீஸ் நூல்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு இறைத் தூதரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு வரும் ஆண்டு இருந்திருந்தால், அதை இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக சொல்லி இருப்பார்கள். நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள சம்பவங்களையும், அவர்களுக்கு முந்தைய நூற்றாண்டின் சம்பவங்களையும் கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டே நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பார்கள். எந்த ஒரு சம்பவத்தையும் நபி(ஸல்) அவர்கள் கி.பி. ஆண்டின் நாட்களை குறிப்பிட்டு கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப் படையை கொண்டு வந்தான். அந்த யானைப் படையை அல்லாஹ் கூட்டம் கூட்டமான பறவைகளைக் கொண்டு அழித்தான். இதை அல்குர்ஆனின் 105வது அத்தியாயத்தின் மூலம் அறிகிறோம். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அரபுகள் யானை ஆண்டு அமைத்துக் கொண்டார்கள். யானைப் படை நிகழ்ச்சி நடந்த சில மாதங்களில் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள். இந்த அடிப்படையில்தான் நபி(ஸல்) அவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள் என்று  அறிவிப்பு உள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

கேள்வி 5
கி.பி, கி.மு. வகுக்கப்பட்டதா? தொகுக்கப்பட்டதா?
கி.பி, கி.மு. வகுக்கப்பட்டதுதான் தொகுக்கப்பட்டது அல்ல.

கேள்வி 6.
உலகில் முறையாக தொகுக்கப்பட்ட வராலாறு யாருடையது?
இறுதித் தூதர் முஹம்மது நப(ஸல்) அவர்களுடையதுதான்.

கேள்வி 7.
ஹிஜ்ரத் செய்ய வேண்டும் என்று எந்த மாதத்தில் முடிவு செய்தார்கள்?
முஹர்ரம் மாதத்தில் முடிவு செய்தார்கள்.

கேள்வி 8.
எந்த மாதத்தில் புறப்பட்டார்கள்?
ஸFபர் மாதத்தில் புறப்பட்டார்கள்.

கேள்வி 9.
எந்த மாதத்தில் மதீனா வந்தடைந்தார்கள்?
ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தடைந்தார்கள்.

கேள்வி 10.
ஆரம்ப நாள் முதல் - முதல் நாளிலிருந்து - தொடக்க நாளிலிருந்து ஆரம்ப தினத்திலேயே - ஆரம்ப நாளிலிருந்தே ஒவ்வொரு மொழி பெயர்ப்பிலும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும் அல்குர்ஆன் 9;108ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ள  வாசகம் அவ்வல யவ்மின் என்பதாகும். அதில் கூறப்பட்டுள்ள தக்வா பள்ளி எது அது எங்குள்ளது?
தக்வா பள்ளி குபா. அது மதீனாவில் உள்ளது

ஜமாஅத் தலைவர் சேமர் முஹம்மது மைதீன் அவர்களிடம் பரிசு பெறுவது சிறுமி கே.எம். இஸ்ரா


கவுஸ் அவர்களிடம் பரிசு பெறுவது சிறுமி கே.எம். நிஃமத்
 
 
மவுலவி எல்.கே.எம். காஜா மைதீன் ரியாஜி அவர்களிடமிருந்து பரிசு பெறும் இளைஞர் எஸ்.ஜே. அம்மார்.
 
கப்பல் ஹபீப் அவர்களிடமிருந்து திருமதி ஆரிபா மலக் அவர்கள் சார்பில் பரிசு பெறுகிறார் சேமர் சேட்.
 
 
ஜாகிர் அவர்களிடமிருந்து மகள் K.K.சுலைகா பானுவுக்காக பரிசு பெறுகிறார் அவரது தந்தை ஸாஹிபு காஜா அவர்கள்


மேலும் கேள்விகளும் படங்களும் அடுத்த வெளியீட்டில் காணலாம்.

 

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு