10:87 வசனத்திற்கு பள்ளிகளாக -கிப்லாவாக போன்ற மொழி பெயர்ப்புகள் சரியா?
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ وَأَخِيهِ أَن تَبَوَّآ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُيُوتًا وَاجْعَلُوا بُيُوتَكُمْ قِبْلَةً وَأَقِيمُوا الصَّلَاةَ ۗ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ
10ஆவது அத்தியாயமான சூரத்துல் யூனுஸ் உடைய 87ஆவது வசனமாக இந்த வசனம் உள்ளது. இதில் இடம் பெற்றுள்ள கிப்லதன் என்ற வார்த்தைக்கு எல்லா தமிழ் மொழி பெயர்ப்பாளர்களும் பள்ளிகளாக -கிப்லாவாக என்றே மொழி பெயர்த்துள்ளார்கள்.
1988 ஆம் ஆண்டு மவுலவி பி.ஜைனுல் ஆபிதீன் உலவி ஜாக் அமைப்பாளராக இருந்தபோது அவர்களால் திருத்தப்பட்ட ஜான் ட்ரஸ்ட் மொழி பெயர்ப்பிலும் அப்படித்தான் உள்ளது.
மேலப்பாளையம் நிஜாமுத்தீன் உதவியாளராக இருந்து P.J. யால் திருத்தப்பட்ட ஜான் ட்ரஸ்ட் மொழி பெயர்ப்பில் 10:87 வசனம்
ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்: “நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (கிப்லாவாக) ஆக்கி அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!” என்று வஹீ அறிவித்தோம்.
கிப்லா என்றால் முன்னோக்குதல், முன்னோக்கும் இலக்கு என்பது பொருள் என்றுதான் எல்லாரும் விளக்கம் எழுதியுள்ளார்கள். பெரும்பாலான வசனங்களுக்கும் அதே அடிப்படையில்தான் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். அதற்கு ஆதாரங்களாக உள்ள சில வசனங்களைப் பாருங்கள்
.
12:71 قَالُوا وَأَقْبَلُوا
عَلَيْهِم مَّاذَا تَفْقِدُونَ
12:71. (அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
12:82 وَاسْأَلِ الْقَرْيَةَ الَّتِي كُنَّا فِيهَا
وَالْعِيرَ الَّتِي أَقْبَلْنَا فِيهَا ۖ
وَإِنَّا لَصَادِقُونَ
12:82. “நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
15:47 وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِم مِّنْ غِلٍّ
إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
15:47. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
28:31 وَأَنْ أَلْقِ عَصَاكَ ۖ
فَلَمَّا رَآهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَانٌّ وَلَّىٰ مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ ۚ يَا مُوسَىٰ أَقْبِلْ وَلَا تَخَفْ ۖ إِنَّكَ مِنَ الْآمِنِينَ
28:31. “உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
37:27 وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ
يَتَسَاءَلُونَ
37:27. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
37:44 عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
37:50 فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ
يَتَسَاءَلُونَ
52:25 وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ
يَتَسَاءَلُونَ
56:16 مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
68:30 فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ
يَتَلَاوَمُونَ
68:30. பின்னர், அவர்களில் சிலர் சிலரை நிந்தித்தவர்களாக முன்னோக்கினர்.
நன்றி;-தமிழில் குர்ஆன்
வஅக்பலூ, அக்பல்னா, முதகாபிலீன், போன்ற வார்த்தைகளுக்கு நோக்கி, முன்னோக்கி என்றுதான் மொழி பெயர்த்துள்ளார்கள் இவை யாவும் கிப்லா என்ற வார்த்தையிலிருந்து உள்ளதுதான்.
எல்லா இடங்களிலும் நோக்கி, முன்னோக்கி என்று மொழி பெயர்த்தவர்கள், இந்த 10:87 வசனத்தை மொழி பெயர்க்கும் போது மட்டும் அவர்கள் எழுதிய விளக்கத்தை மறந்து விட்டார்கள். அல்லது மதி மயங்கி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
நன்றி;-தமிழில் குர்ஆன்
வஅக்பலூ, அக்பல்னா, முதகாபிலீன், போன்ற வார்த்தைகளுக்கு நோக்கி, முன்னோக்கி என்றுதான் மொழி பெயர்த்துள்ளார்கள் இவை யாவும் கிப்லா என்ற வார்த்தையிலிருந்து உள்ளதுதான்.
எல்லா இடங்களிலும் நோக்கி, முன்னோக்கி என்று மொழி பெயர்த்தவர்கள், இந்த 10:87 வசனத்தை மொழி பெயர்க்கும் போது மட்டும் அவர்கள் எழுதிய விளக்கத்தை மறந்து விட்டார்கள். அல்லது மதி மயங்கி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.
10:87க்கு ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழி பெயர்ப்பு (1929)
(ஆகவே) மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம். ''நீங்கள் இருவரும் உங்கள் மக்களுக்காக 'மிஸ்ரில்' பல வீடுகளை அமைத்துக் கொண்டு, உங்கள் அவ்வீடுகளையே பள்ளிகளாக்கி (அவற்றில்) தவறாது தொழுது வாருங்கள். அன்றி, (நீங்கள் விடுதலையடைந்து விடுவீர்கள் என்றும் ) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.''
10:87க்கு S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி அவர்களின் மொழி பெயர்ப்பு (1950)
இன்னும், ''மூஸாவுக்கும், அவர் சகோதரருக்கும், உங்களது (ஜனக்) கூட்டத்தாருக்காக மிஸ்ரில் வீடுகளை அமையுங்கள்; இன்னும் உங்கள் வீடுகளுக்கு கிப்லாவை ஏற்படுத்துங்கள்; இன்னும் தொழுகையை (நிலை) நிறுத்துங்கள்; இன்னும் மூமின்களுக்கு நற்செய்தி கூறுவீராக'' என்று நாம் வஹி அறிவித்தோம்.
1989(1-16) 1996 I.F.T.வெளியீடு
மேலும், நாம் மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் வஹீ அறிவித்தோம்; "உங்களுடைய சமுதாயத்தாருக்காக எகிப்தில் சில இல்லங்களை அமைத்துக் கொள்ளுங்கள். மேலும், உங்களுடைய அந்த இல்லங்களை கிப்லா ஆக்கிக் கொண்டு தொழுகையை நிலை நாட்டுங்கள். மேலும், இறை நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி அறிவியுங்கள்!"
திரீயெம் பிரிண்டர்ஸ்(1992)
மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும் ''நீங்கள் இருவரும் உங்களிருவரின் சமுதாயத்தினருக்காக, ''எகிப்தில்'' பல வீடுகளை அமைத்து, உங்களுடைய (அவ்)வீடுகளையே கிப்லாவாக-பள்ளிகளாக ஆக்கி (அவற்றில்) தொழுகையைக் கடைப்பிடித்து வாருங்கள்; (அப்பொழுது வெற்றி கிடைக்கும் என்று) இறை நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக'' என்று நாம் "வஹீ" அறிவித்தோம்.
K.முஹம்மது இக்பால் மதனி அவர்களின் மொழி பெயர்ப்பு (1993)
"இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!''என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.
10:87 ஆவது வசனத்தில் உள்ள "கிப்லதன்" என்ற வார்த்தைக்கு பி.ஜெ.யின் மொழி பெயர்ப்பும் விளக்கமும்தான் சரியாக உள்ளது. ஹதீஸ் ஆதாரமும் காட்டியுள்ளார்.
S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி மொழி பெயர்ப்புக்கும் (ஹமீதிய்யா வெளியீடு) மற்றும் I.F.T. வெளியீடுகளுக்கும் விளக்கம் அளித்துள்ளார்கள். அவர்களது விளக்கங்களுக்கு எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் காட்டவில்லை.
10:87 ஆவது வசனத்தில் உள்ள "கிப்லதன்" என்ற வார்த்தைக்கு பி.ஜெ.யின் மொழி பெயர்ப்பும் விளக்கமும்தான் சரியாக உள்ளது. ஹதீஸ் ஆதாரமும் காட்டியுள்ளார்.
Comments