வீரியமிக்க உண்மையான சமுதாயப் போராளிகள் யாராவது எந்த அமைப்பிலாவது இருக்கிறீர்களா?

மேலப்பாளையத்தில் திட்டமிட்டு சுகாதாராக் கேட்டை உருவாக்கும்  நெல்லை மாநகராட்சி


தேர்தலில் ஓட்டுக் கேட்டு வரும்  அரசியல் கட்சி  செயல் வீரர்களே!  மேலப்பாளையத்தில் சுகாதாராக் கேட்டை  உருவாக்கும்  வேலையை   நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு செய்து வருகிறார்கள்.  ஊழியர்கள் கூட்டும் குப்பைகளை அள்ளிக் கொண்டு போகாமல் வீடுகள் பின்னே மலை போல் குவிக்கச் செய்து  வருகிறார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/03/blog-post_15.html


https://www.youtube.com/watch?v=iquyv4H47Us



கம்ளைண்ட் செய்தால் அது   நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் போட்டது அல்ல என்று கூறுகிறார்கள். பிறகு அந்தக் குப்பைகளை அகற்ற ஐநுாறு, ஆயிரம் என்று நகராட்சி அதிகாரிகள் லஞ்சப் பேரம்  பேசுகிறார்கள். 

ஐநுாறு, ஆயிரம்  லஞ்சம்  தருவது எங்களுக்கு பெரிய விஷயமல்ல. இப்படித்தானே  ஏழைகளிடமும் கேட்பீர்கள் என்று ஒவ்வொரு முறையும் போராடி அள்ள வைக்க வேண்டி உள்ளது.  பிறகு  ஐம்பது நுாறாவது தாருங்கள் என்று  மாநகராட்சி அதிகாரிகள் பிச்சை வாங்கிப்  போகிறார்கள்.

அதில் குப்பை அள்ளும் அப்பாவி  ஊழியர்களுக்கு கொடுப்பதும் இல்லை.  தங்களுக்கு லஞ்சப் பிச்சை  கிடைக்க வேண்டும் என்பதற்காக  மாநகராட்சி அதிகாரிகளே குப்பைகளைப் போட வைக்கிறார்கள்.


குப்பைகளை  நெல்லை மாநகராட்சி ஊழியர்கள் தான் கொண்டு வந்து போடுகிறார்கள் என்பதை மறுத்துக் கூறும் அதிகாரிகளுக்கு போட்டோ எடுத்து அனுப்பினால் பொய் என்கிறார்கள்.

இப்பொழுது   வீடியோ வந்துள்ளது.  அந்த வீடியோவில் உள்ளது மாநகராட்சி ஊழியரா இல்லையா என்று பாருங்கள்.


தேர்தலில் ஓட்டுக் கேட்டு வரும்  அரசியல் கட்சி  செயல் வீரர்களே!  உங்களில் வீரியமிக்க உண்மையான சமுதாயப் போராளிகள் யாராவது  எந்த அமைப்பிலாவது இருக்கிறீர்களா? இருந்தால் உடனே அகற்றச் சொல்லுங்கள். 

குப்பைகளை அகற்றா விட்டால். குப்பைகளை அள்ளி மாநகராட்சி ஆணையர் வீட்டில்  கொண்டு போடும்  மாபெரும் போராட்டம் அறிவியுங்கள்.  செய்வீர்களா?


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.