2:80 குறிப்பிட்ட நாட்களா? எண்ணப்பட்ட நாட்களா?

இந்த வசனத்தில் உள்ள மஃதுாததன்  என்ற  வார்த்தைக்கு எண்ணப்படுகின்றன என்ற நேரடி பொருளில்   அய்யாமன்   மஃதுாததன்  என்பதற்கு    எண்ணப்பட்ட  நாட்கள் என்று பலர் மொழி பெயர்த்து உள்ளனர்.

https://mdfazlulilahi.blogspot.com/2020/11/280.html

ஒரு சில  நாட்கள் என்று சிலர் மொழி பெயர்த்து உள்ளார்கள். 



குறிப்பிட்ட நாட்கள்  என்று ஆய்வில் சிறந்த அறிஞர்கள் மொழி பெயர்த்து உள்ளார்கள். அவரவர் ஆய்வுக்கு தகுந்தவாறான இந்த மொழி பெயர்ப்புகளை நாமும் ஆய்வுடன் படித்தால் அறிஞர் ஆகலாம்.

---------------

வ ஃகாலுா    என்ற   வார்த்தையில்  வாவு  இடம் பெற்றுள்ளது. வேதத்தை சுமந்துள்ளவர்கள் கொள்கைப்படி வாவுக்கு  இன்னும் / மேலும்  என்று மொழி பெயர்த்தாக வேண்டும். ஆனால்,  இந்த வசனத்தில்

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி

தென்காசி  E.M. அப்துர் ரஹ்மான், நூரிய்யி, பாஜில் பாகவி

ஜான் டிரஸ்ட்

உமர் ஷரீப் காஸிமி

றஹ்மத் அறக்கட்டளை

K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி

அதிரை ஜமீல் ஆகியோர் அப்படி மொழி பெயர்க்கவில்லை. 

-------------------

லன்தமஸ்ஸனான்னாரு என்பதிலும் Fபலன் யுஃக்லிFப   என்பதிலும்  உள்ள லன்   தஃகீது சொல்லாகும். 


தஃகீது சொல்லுக்கு நிச்சயமாக என்று மொழி பெயர்த்தாக வேண்டும் என்பது அரபு  கல்லுாரியில்  படித்தவர்கள் நிலை. 


இந்த வசனத்தில்  ஸலாமத் பதிப்பகத்தாரை தவிர நிச்சயமாக என்று யாருமே மொழி பெயர்க்கவில்லை.  ஸலாமத் பதிப்பகத்தார் கூட 2ல் ஒன்றுக்கு  மட்டுமே மொழி பெயர்த்துள்ளார்கள்.


தஃகீது சொல்லுக்கு நிச்சயமாக என்று மொழி பெயர்க்காமல் விடுவது யூதக் கொள்கை என்று அடித்துச் சொன்னவர்களின் மேலான கவனத்திற்கு  இதையும் தந்துள்ளோம்.

---------------

وَقَالُوا لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَةً ۚ قُلْ أَتَّخَذْتُمْ عِندَ اللَّـهِ عَهْدًا فَلَن يُخْلِفَ اللَّـهُ عَهْدَهُ ۖ أَمْ تَقُولُونَ عَلَى اللَّـهِ مَا لَا تَعْلَمُونَ ﴿٨٠﴾


وَقَالُوا -  வ ஃகாலுா 
கூறினர்

لَن تَمَسَّنَا லன்தமஸ்ஸனா 
எங்களை அறவே தீண்டாது - நாங்கள் தொடப்பட மாட்டோம்

النَّارُ -  அன்னாரு 
 நெருப்பு - நரகம்

إِلَّا - இல்லா 
தவிர

أَيَّامًا - அய்யாமன் 
நாள்கள்

مَّعْدُودَةً - மஃதுாததன் 
எண்ணப்பட்டவை -குறிப்பிட்ட 

قُلْ - குல் 
கூறுவீராக

أَتَّخَذْتُمْ அத்தக(ர்)துதும் 
செய்துள்ளீர்களா? - எடுத்துக் கொண்டீர்களா - பெற்றுள்ளீர்களா

عِندَ اللَّـهِ இன்தழ்ழாஹி 
அழ்லாஹ்விடம்


عَهْدًا - அஹ்தன் 
உடன்படிக்கை - உறுதிமொழி

فَلَن يُخْلِفَ - Fபலன் யுஃக்லிFப
மீறவே மாட்டான் - மாற்றவே மாட்டான்

اللَّـهُ அழ்லாஹ்

عَهْدَهُ -  அஹ்தஹு 
தனது உடன்படிக்கையை - தன் உறுதிமொழியை

أَمْ அம்
அல்லது

تَقُولُونَ -  தகூலுான 
கூறுகிறீர்கள்

عَلَى اللَّـهِ அலழ்ழாஹி 
அல்லாஹ்வின் மீது

مَا மா 
எதை

لَا تَعْلَمُونَ - லா தஃலமூன
அறிய மாட்டீர்கள்

தமிழ் நடையில்  மொழிப்பெயர்ப்புகள் :


குறிப்பிட்ட நாட்கள் தவிர நரகம் எங்களைத் தீண்டாது எனவும் அவர்கள் கூறினர். "அல்லாஹ்விடம் (இது பற்றி) ஏதாவது உடன்படிக்கை செய்துள்ளீர்களா? (அவ்வாறு செய்திருந்தால்) அல்லாஹ் தனது உடன்படிக்கையை மீறவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?'' என்று கேட்பீராக! - (PJதொண்டி)

 

விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். "அல்லாஹ்விடமிருந்து அவ்வாறு உறுதிமொழி ஏதும் பெற்றிருக்கிறீர்களா? அப்படிப் பெற்றிருந்தால் அல்லாஹ் தன் உறுதிமொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான். அஃதன்றி, நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?" என்று (நபியே! அந்த யூதர்களிடம்) கேட்பீராக!. (அதிரை ஜமீல்)

 

எண்ணப்பட்ட (சில) நாள்களைத் தவிர நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது எனக் கூறினர். (நபியே) கூறுவீராக : அல்லாஹ்விடம் ( அவ்வாறு ஏதேனும் ) ஒர் உறுதிமொழியை ( நீங்கள் ) எடுத்துக் கொண்டீர்களா ? ( அப்படியெனில் ) அல்லாஹ் தன் உறுதிமொழியை மாற்றவே மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது ( பொய்) கூறுகிறீர்களா ? - (K.S.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி, கடையநல்லுார்)


ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது” என்று அவர்கள் கூறுகிறார்கள். “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?” என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.- ஜான் டிரஸ்ட்

 

"ஒரு சில நாள்களைத் தவிர நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது" என அவர்கள் கூறுகின்றார்கள். (அதற்கு நபியே! அவர்களை) நீங்கள் கேளுங்கள்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் உறுதிமொழியை நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின் நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்கு மாற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) சொல்கின்றீர்களா?-( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

மேலும் “குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர நெருப்பு எங்களை ஒருபோதும் தீண்டாது” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: “அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதாவது உறுதிமொழி நீங்கள் பெற்றிருக்கின்றீர்களா? அப்படியானால் அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான்! அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா?” (உங்களை நரக நெருப்பு ஏன் தீண்டாது?)- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

மேலும், “எண்ணப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரக)நெருப்பு எங்களைத் தீண்டவே மாட்டாது” என அவர்கள் கூறுகின்றார்கள்; (அதற்கு நபியே! அவர்களிடம்) நீர் கேளும்: அல்லாஹ்விடம் ஏதேனும் (அவ்வாறு) ஓர் வாக்குறுதியை நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா? அவ்வாறாயின், நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (கற்பனை செய்து) கூறுகின்றீர்களா? -(அல்-மதீனா அல்-முனவ்வரா)




Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.