வரலாற்றில் இன்று கர்நாடகம். அன்று இதே நாளில் த.மு.மு.க.வின் 2ஆவது போராட்டம் ஏன்? எது?

இன்று செப்டம்பர் 16, 2016இல் கர்நாடகத்தில் நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்து கடை அடைப்பு போராட்டம். 



21 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் ஒரு போராட்டம். அது என்ன போராட்டம் என்று அறியும் முன்.

இதில் பிறரை துாண்டி விடுபவன், துாண்டி விட்டவர்களைக் காட்டிக் கொடுத்தவன், கயவன், மூளையாகவும் துாண்டுகோளாகவும் இருந்தவன். சட்டாம்பிள்ளை ஷைத்தான், தூண்டி விட்ட அயோக்கியன், முடிச்சுகளில் ஊதும் ஷைத்தான் என்றெல்லாம் உள்ளது. அவன் யார்? அவன் பெயரை வெளியிடுங்கள் என்று யாரும் கேட்காதீர்கள். முடிவில் கூறி உள்ளதை மட்டும் செய்யுங்கள் என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம். 

இன்று கர்நாடகத்தில் காவேரித் தண்ணீர் பெயரால் கலவரத்தைத் துாண்டி முஸ்லிம்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பின்னணியில் இருப்பவன் பி.ஜே.பி.க்காரன் என்பது வெட்ட வெளிச்சம். அன்று பின்னணியில் இருந்தவன் யார்? முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை, வாலிபத்தை கெடுத்து நடுத் தெருவில் விட்டவன் யார்? என்று கேட்காதீர்கள். கடைசியில் கூறி உள்ளதை மட்டும் செய்யுங்கள்

புணரமைக்கப்பட்ட த.மு.மு.க. சார்பில் 1995 ஆகஸ்டு 25 ஆம் தேதி  நடத்தப்பட்ட முதல் போராட்டம் சென்னை முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி.  இதை  இந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி அன்று நிகழ்வின் போட்டோக்களுடன் நினைவூட்டினோம். புணரமைக்கப்பட்ட த.மு.மு.க. சார்பில் நடத்தப்பட்ட இரண்டாவது போராட்டம் என்ன? ஏன்? என்பதை நிகழ்வின் போட்டோக்களுடன் இதில் நினைவூட்டுகிறோம்.


பிறரை துாண்டி விடுவது. துாண்டி விட்டவர்களை காட்டிக் கொடுப்பது. பிறகு சட்டாம்பிள்ளையாக ஆகி தண்டிப்பது. இப்படிப்பட்டவற்றை தொழிலாகக் கொண்ட அயோக்கிய ஷைத்தான்கள் நிறைந்த உலகம்தான் இன்றைய உலகம். இப்படிப்பட்டவர்களின் தலைமை ஷைத்தான் தான் அமெரிக்கா என்றால் அது மிகை ஆகாது.

அப்படிப்பட்ட சட்டாம் பிள்ளை ஷைத்தானான எவனோ ஒரு ஷைத்தான் துாண்டி உள்ளான். அந்த அயோக்கியனின் துாண்டுதலை ஏற்று யாரோ ஒருவர் போஸ்ட் மூலம் பார்சல்களில் குண்டு அனுப்பி உள்ளார். 3.7.1995இல் இந்த சம்பவம் நடந்து உள்ளது. உண்மைக் குற்றவாளியான துாண்டி விட்டு காட்டிக் கொடுக்கும் கயவனை. அபுஜஹ்லைவிட மோசமானவனை காவல் துறை எப்பொழுதுமே கைது செய்யாது. ஏனென்றால் அந்த கயவன்தான் காவல் துறையின் ஏஜெண்ட் ஆயிற்றே.

இந்த வழக்கில்  முதலில் கைது செய்யப்பட வேண்டியவன் யார்? மூளையாகவும் துாண்டுகோளாகவும் இருந்தவன்தான் கைது செய்யப்பட வேண்டும். அதுதான் நியாயம். காவல்துறையோ அநியாயமாகயாரைக் கைது செய்தது.? இன்றைய த.மு.மு.. தலைவர் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரஷாதி அவர்களை கைது செய்தது. எப்பொழுது? 

மதுரை ராஜா உசேன் அவர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது காவல்துறை. அவருக்குப் பதிலாக அவரது அண்ணன் சீனி நைனா முஹம்மதுவை கைது செய்தது. பிறகு தேடப்படாத ராமநாதபுரம் ராஜா உசேனுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்று பாக்கர் அவர்களை கைது செய்தது. சிரிப்பு வருகிறதா?  உலகமகா சிரிப்புதான் காவல்துறையின் இந்த செயல்.

இது பற்றிய விபரத்தை த.மு.மு.க.வுக்கு சொந்தமான முஸ்லிம் மீடியா டிரஸ்டின் உணர்வு வார இதழில் ஆசிரியராக வேலை செய்த இறைநேசன் என்பவர் 1997 செப் 6- அக் 2 உணர்வு இதழில் எழுதியுள்ளதைப் பாருங்கள். 



பாக்கர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த பேரணிக்கு காரைக்காலில் இருந்து பெருந்திரளான மக்களை திரட்டிக் கொண்டு வந்தார் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரஷாதி. அப்பொழுது அவர் காரைக்கால் அல்புஷ்ரா அரபிக் கல்லூரியில் முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்தார். பேரணி முடிந்த ஒரு வாரத்திலேயே பெண்கள் கல்லுாரிக்கு சென்றது காவல்துறை. மவுலவி ஜே.எஸ். ரிபாஈ ரஷாதி அவர்களை பிடித்துச் சென்றது. பிறகு 06-09-1995 புதனன்று கைது செய்ததாக அறிவித்தது.

அப்பொழுதுதான் இரண்டாவது போராட்டம் புணரமைக்கப்பட்ட  த.மு.மு.க.  சார்பில்  அறிவிக்கப்பட்டது.  16.09.1995 அன்று சென்னை  பாரிமுனை குறளகம் எதிரில் குணங்குடி ஹனீபா தலைமையில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. என்ன போராட்டம்? அதுதான் உண்ணாவிதப் போராட்டம்.

மற்றவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் காலை 6 மணிக்கு என அறிவிப்பார்கள். 10 மணிக்குத்தான் ஆரம்பிப்பார்கள். அதையும் மாலைக்குள் முடித்து விடுவார்கள். பிரதமர் வாக்களித்து விட்டார் என்றும் இடையில் நிறுத்தி மதிய உணவு நேரத்திற்கு முன்பு வீடு போய் சேர்ந்து விடுவார்கள். த.மு.மு.க.வின் உண்ணாவிரதம் அந்த மாதிரி நடக்கவில்லை. 

எம்.ஜி.ஆர். உண்ணாவிரதம் இருந்தார். அவரைக் காண லட்சக் கணக்கான மக்கள் வந்தார்கள்.. வந்து வரிசையாக நின்று அவரைப் பார்த்து விட்டு போனார்கள். எல்லா போராட்டங்களிலும் பங்கு கொள்ளும் பொது மக்கள் யாரும் உண்ணாவிரத போராட்டங்களில் மட்டும் கலந்து கொள்ளவே மாட்டார்கள். பிரமுகர்கள் மட்டுமே இருப்பார்கள். பிற முகர்கள் இருக்கவே மாட்டார்கள். 

கருணாநிதி, வை.கோ, குமரி அனந்தன் போன்றவர்கள் நடை பயணப் போராட்டம் செய்தபோது ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சுகருக்காக நடந்தார்களா? என்பது தெரியாது. பெருங் கூட்டம் வந்தது. அதே தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்த போதும் பொதுமக்கள் கலந்து கொள்ளவே இல்லை. . இந்த வரலாற்றை புரட்டிப் போட்டது. .மு.மு..வின் உண்ணாவிரதம்.

எல்லா அமைப்புகளையும் போல் 50லிருந்து 100 பேர் வரை பிரமுகர்கள்தான் உண்ணாவிரத நிகழ்ச்சியில் இருப்போம் என்று ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி, குணங்குடி ஹனீபா போன்றவர்கள் எண்ணி இருப்பார்கள் போலும்.  அந்த அளவில்தான் இருக்கைகளும் போட்டு இருந்தார்கள். எதிர்பாராவிதமாக பொதுமக்கள் வந்து விட்டார்கள். 

நாற்காலிகள் வரவழைக்கப்பட்டு கொண்டே இருந்தன. நாற்காலி இருக்கைகள் இல்லை என்றதும் தரையில் உட்கார்ந்து விட்டார்கள். அதுவும் மூவாயிரத்துக்கும் மேல். பொது மக்கள் கலந்து கொண்ட முதல் உண்ணாவிரதம் இதுதான். இதன் பிறகுதான் அரசியல் கட்சிகள் உண்ணாவிரதத்தில் நிர்வாகிகள் மட்டும் இருப்பது கேவலம் என்ற முடிவுக்கு வந்தன. பொது மக்களை கொண்டு வர வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டது.

மற்றவர்கள் இருந்தது இருப்பது எல்லாம் உண்ணா நோன்புதான். பசி பட்டினியாக எல்லாம் இருக்க மாட்டார்கள். அவர்கள் உண்ணாவிரதம் என்றால் திடப் பொருள்தான் சாப்பிட மாட்டார்கள்திரவப் பொருள்களையெல்லாம் குடித்துக் கொண்டுதான் இருப்பார்கள். பசி எங்கிருந்து வரும்? இதை எப்படி உண்ணாவிரதம் என்று சொல்ல முடியும்? இதற்கு பட்டினிப் போர் என்றும் விளம்பரம் செய்வார்கள். அதிலும் என்ன நடக்கும்? . இடை இடையே ஒவ்வொருவராகப் போய் பிரியாணி சாப்பிட்டு விட்டு வருவார்கள். இங்கே அப்படி நடக்கவில்லை. வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வுக்காக நோன்பு வைத்து விட்டு வந்து இருந்தார்கள்.

இது பற்றி முடிச்சுகளில் ஊதும் ஷைத்தான் சந்தர்ப்பத்துக்கு தக்கவாறெல்லாம் ஊதுவான். வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வுக்காக நோன்பு வைத்து விட்டு வந்து இருந்தார்கள் என்று சில இடங்களில் ஊதுவான். 

அது என்ன உண்ணாவிரதமா? நடந்தது! அவன் அவன் இடை இடையே போய் சாப்பிட்டு விட்டு வந்தான் என்று சில இடங்களில் ஊதுவான். 

அவன் சுய நலத்துக்காக சந்தர்ப்பத்துக்கு தக்கவாறு எப்படியெல்லாம் ஊத வேண்டுமோ அப்படியெல்லாம் ஊதுவான். வந்த முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வுக்காக நோன்பு வைத்து விட்டு வந்து இருந்தார்கள் என்பதுதான் உண்மை. வரலாற்று சிறப்புமிக்க அந்த நிகழ்ச்சியின் காட்சிகளை கீழே காண்போம் அதற்கு முன் வரலாற்றில் ஒரு ஏட்டை நினைவு கூறிக் கொள்வோம்.

காரைக்கால் அரபிக் கல்லூரியில் முதல்வராக இருந்த மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களை. 06-09-1995 புதன் அன்று கைது செய்ததாக அறிவித்த காவல்துறை. நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கை அவர் மீது பதிந்தது. இன்று ஜாமீன் கிடைத்து விடும் நாளை ஜாமீன் கிடைத்து விடும் என்று சமுதாய மக்கள் எண்ணினார்கள். மார்க்கட்டில் எல்லா மீனும் கிடைக்கிறது ஜாமீன் மட்டும் கிடைக்கவில்லை என்ற கதையாக நாட்கள் ஓடியது.

கடைசியில் 90 நாட்களுக்குப் பிறகு நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்று உறுதியாக நம்பப்பட்டது. 90 நாட்களும் கழிந்தன. பொது மக்களும் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களின் மனைவி மக்களும் நாகப்பட்டிணம் நீதி மன்ற தீர்ப்பை எதிர் பார்த்து இருந்தார்கள். சிறையில் இருந்தவரின் எதிர் பார்ப்பை சொல்லவும் வேண்டுமா?

கடைசியில் கோர்ட்டிலிருந்த நீதிபதி ஜாமீன் வழங்குவதாகக் கூறினார். இதைக் கேட்டதும். வெளியில் வரப் போகிறார் என்ற மகிழ்ச்சியில் பொது மக்கள். வீடு வரப் போகிறார் என்ற ஆவலுடன் மனைவி மக்கள். மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வெளி உலகைக் காணப் போகிறோம் என்று J.S.R.ம் இருந்தார். என்ன நடந்தது தெரியுமா?

நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து ஜாமீன் பெற்ற மறு நிமிடமே நாகப்பட்டிணம் பார்சல் குண்டு வெடிப்பு வழக்கும்  மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்கள் மீது  பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறி கைது செய்தார்கள். விடுதலையாகி விட்டோம். வீட்டுக் போகப் போகிறோம் என்று கனவு கண்டு கொண்டு இருந்தவரை மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றார்கள்.

90 
நாட்களுக்குப் பிறகு விடுதலை கனவோடு இருந்தவரை மீண்டும் சிறைவாசம் அழைத்துக் கொண்டது. இதை ஒவ்வொருவரும் இந்த நிலைக்கு நாம் ஆகி இருந்தால் நமது நிலை எப்படி இருக்கும்? என்று எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் இதில் உள்ள கஷ்டமும் நஷ்டமும் தெரியும். உள்ளம் கனத்து கண்கள் குளமாவது புரியும். இறையருளால் அடுத்த 90 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார். ஆக 180 நாட்கள் சிறையிலிருந்தார். அத்தோடு முடிந்ததா? 18 ஆண்டுகள் அந்த வழக்கு அவரை ஆட்டி அலைக்கழித்தது.

இது போன்ற செயல்களை எந்த தெரு நாய் தூண்டி விட்டதோ, அந்த தெரு நாய் மாடியில் உல்லாச வாழ்வு வாழ்ந்து கொண்டு இருந்தது. அப்பாவி ரிபாஈ 18 வருடங்களாக நெல்லை  நாகை, நெல்லை- சென்னை என கோர்ட்டுகளுக்கு அலைந்து கொண்டிருந்தார். இதனால் எதையெல்லாம் இழந்தார். எவ்வளவு பொருளாதாரங்களை இழந்தார் என்பதை பட்டியலிட்டால் அதற்கு வேறு நோக்கம் ஏற்பட்டு விடும். அல்லது கற்பித்து விடுவார்கள். அவரது தியாகத்திற்கு  ஈருலகிலும் நற்பாக்கியங்களை வழங்கிட அல்லாஹ்வே போதுமானவன். 

நபியே! உமக்கும், நம்பிக்கை கொண்டவர்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன் (அல்குர்ஆன் 08:64)


அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு  அவருக்கு அவன் (அல்லாஹ்வே) போதுமானவன்,   (அல்குர்ஆன் 65:3)

இங்கே இன்னொன்றையும் கூறிக் கொள்கிறோம். த.மு.மு.க. உதய தினம் எது?  என்ற தலைப்பில் 1987 ஆம் ஆண்டு  ஒரு அமைப்பின் தலைவர் குடியரசு தினத்தை கறுப்புத் தினமாக அறிவித்து விட்டார்  என்று எழுதி இருந்தோம். தனி நபர் தாக்குதல் போல் இருந்து விடக் கூடாது என்பதற்காகவே அப்படி எழுதி இருந்தோம். அதைப் பார்த்தவர்கள். யார் அந்த தலைவர் பெயரை வெளியிடுங்கள் என்றார்கள் வெளியிட்டோம்.


இதில் பிறரை துாண்டி விடுபவன், துாண்டி விட்டவர்களைக் காட்டிக் கொடுத்தவன், கயவன், மூளையாகவும் துாண்டுகோளாகவும் இருந்தவன். சட்டாம்பிள்ளை ஷைத்தான், தூண்டி விட்ட தெரு நாய் அயோக்கியன், முடிச்சுகளில் ஊதும் ஷைத்தான் என்றெல்லாம் உள்ளது. அவன் யார்? அவன் பெயரை வெளியிடுங்கள் என்று யாரும் கேட்காதீர்கள். அந்த அயோக்கியனால் மவுலவி ஜே.எஸ். ரிபாஈ போன்று நிறைய பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள். 

பாதிக்கப்பட்டவர்கள் அநீதி இழைத்தவனுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. அநியாயமாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் நம் சமுதாயத்தினர். எனவே நம் சமுதாய இளைஞர்களை துாண்டி விட்டு நாசப்படுத்திய கயவன் யார் என்று தெரிவதைவிட, அபுஜஹ்லை விட மோசமான அவனுக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.


..அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்துள்ளார்கள். (புகாரி 1496) ஆகவே பாதிக்கப்பட்டவர்களின் கொள்கைச் சொந்தங்களே அநியாயக்காரனுக்கு எதிராகத் துஆச் செய்யுங்கள். http://mdfazlulilahi.blogspot.ae/2016/09/2.html 



பட்டினிப் போரில் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், S. ஹைதர்அலி, Er. அப்துஸ்ஸமது

குரு கோபி கணேசன், குணங்குடி ஹனீபா
தலித் மக்களின் உற்ற தோழன் ஹாஜி பாக்கரை உடனே விடுதலை செய்
நாற்காலி இன்றி தரையில்



கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளா?

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.