ஹிஸ்புல்லாஹ்க்களா? ஹிஸ்புஷ் ஷய்த்தான்களா?

போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்த உடன் மதீனத்து மாமன்னர் முஹம்மது நபி(ஸல்) என்ன செய்தார்கள்? விளக்கம் கூறினார்கள். போரின் நிர்ப்பந்தத்தை புரிய வைத்தார்கள். காரியங்களில் அவர்களுடன் லோசனை செய்வீராக (அல்குர்ஆன் 03:159) என்ற கட்டளைப்படி மக்களிடம் ஆலோசனையும் கேட்டார்கள்.

எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும். ஆலோசனை செய்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில், ஒரு இயக்கத்தில், ஒரு ஊரில் ஒரு நாட்டில் தலைவராக இருந்தால். இந்த ஆலோசனை மிக மிக அவசியம். நான் எடுக்கக் கூடிய முடிவுதான் சரியாக இருக்கும் என்று நினைப்பது ஒரு முஃமினுக்கு அழகு இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறைவனுடைய துாதராக இருந்தாலும் அவர்கள் தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை. இதைத்தான் இங்கு நாம் படிப்பினையாகவும் வழிகாட்டுதலாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த தொடருக்கு தரப்பட்ட கால அளவு நிறைவு அடையப் போகிறது. அல்லாஹ் முந்தைய சமுதாயம் மற்றும் நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை  படிப்பினைக்காக சொல்லிக் காட்டி உள்ளான்

இறுதித் துாதரின் வாழ்க்கையை சுன்னத்தாக (பின்பற்ற வேண்டிய வழிமுறையாக) நமக்கு ஆக்கி தந்துள்ளான். இந்த நோக்கத்திற்கு மாற்றமாக அந்த வாழ்க்கை வரலாறுகள் பொழுது போக்கு கதைகள் போல் சொல்லப்பட்டது, பார்க்கப்பட்டது, படிக்கப்பட்டது. அந்த நிலை பெரும்பாலும் மாறி விட்டது.  

படிப்பினைகள் என்றால் என்ன?. வழிகாட்டுதல்கள் என்றால் என்ன? என்ற இந்த வித்தியாசங்களையும் அறிந்து செயல்படும் காலம் வந்து விட்டது. அந்த அடிப்படையில்தான் இந்த தொடரும் உள்ளது என்பதை அறிவீர்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஆய்ந்து அறிந்து செயல்படும் காலத்தில் எழுத வாய்ப்பு தந்தவர்களுக்கு அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உண்டாகட்டுமாக.

நபி (ஸல்) அவர்கள் அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) யோசனையை ஏற்றுக்கொண்டார்கள். நிச்சயம் நீர் நல்ல யோசனை கூறினீர்என்று பாராட்டினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திலிருந்து கிளப்பினார்கள். தங்களது படையினரை அழைத்துக் கொண்டு எதிரிகளுக்கு சமீபமாக உள்ள  நீர் நிலைகளுக்கு அருகில் போய் தங்கினார்கள். 

அந்நேரம் இரவின் பெரும் பகுதி கழிந்து ருந்தது. இருந்தாலும் தங்களுக்கு உட்பகுதியில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பானதாக ஆக்கினார்கள். சிறிய சிறிய நீர்த் தடாகங்களாக இருந்தாலும் உபயோகிப்பதற்கு வசதியாக தற்காலிக கட்டுமானமாகக் கட்டினார்கள். ஒருக்கால் பின்னடைவு ஏற்பட்டால். எதிரிகளுக்கு தண்ணீர் கிடைக்கக் கூடாது. இது அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரலி) அவர்களின் போர் தந்திரம். அதன்படி அக்கம் பக்கத்திலும் எட்டியும் உள்ள சிறிய சிறிய நீர் நிலைகளையெல்லாம் மண் போட்டு மூடினார்கள்.

இது போர்க் களத்தில் போர் செய்ய வந்தவர்களிடம் நடந்து கொண்ட முறை. போர் செய்ய வந்தவர்களிடம் போர்க் களத்தில் நடந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட முறை. இவற்றை வைத்துக் கொண்டு. போர்க் களத்தில் என்பதை போர்க் காலத்தில் என்று கூறிக் கொண்டு. பொது மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை குண்டு போட்டு அழித்துக் கொண்டிருக்கிறார்கள். கேட்டால் தங்களை ஹிஸ்புல்லாஹ்க்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

போர்க் களத்தில் பொய் சொல்ல அனுமதி உண்டு என்பதை ஆதாரமாக சொல்லிக் கொண்டு. காலமெல்லாம் பொய்களையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பிறர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை பரப்பிக் கொண்டும் திரிகிறார்கள். மேலும் தங்களை துாய அமைப்பினர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். 

இவர்களெல்லாம் ஹிஸ்புல்லாஹ்க்களா?  ஹிஸ்புஷ் ஷய்த்தான்களா?. பொது மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை எப்பொழுதும் அழிக்கக் கூடாது. அப்படி செய்பவர்களும் காலமெல்லாம் பொய் பேசி பிறர் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை பரப்பிக் கொண்டு திரிகின்றவர்ளும்.. ஹிஸ்புல்லாஹ்க்கள் அல்ல ஹிஸ்புஷ் ஷய்த்தான்களே!

ஆக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடித்துக் கொண்டு உறங்கப் போகிறார்கள். உறங்கக் கூடிய நேரம் வந்த உடன் என்ன நடந்தது? அல்லாஹ்வின் அருளால் இரவெல்லாம் மழை பொழிந்தது

இந்த மழை ஏன்? அதன் நோக்கம் என்ன? அது ஏற்படுத்திய தாக்கம் என்ன? என்பதை அல்குர்ஆன் 8:11ஆவது வசனத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டி உள்ளான். தொடரை முடிக்க வேண்டிய நிலை உள்ளதால். சுருக்க வேண்டி உள்ளது. எனவே இனி குறிப்பிடப்படும் வசனங்களின் கருத்துக்களை குர்ஆன் தர்ஜுமாக்களில் பார்த்துக் கொள்வது உதவியாக இருக்கும்.

பத்ருப் போரின் முன் பின் நாட்களில்தான் ஒட்டு மொத்த எட்டாவது அத்தியாயமும் இறக்கி அருளப்பட்டுள்ளது. இப்படி சொல்லும் அளவுக்கு எட்டாவது அத்தியாயம் உள்ளது. எல்லா வசனங்களையும் பார்த்தால் பத்ரு போர் சம்பந்தப்பட்ட வசனங்கள்தான் எட்டாவது அத்தியாயமான சூரத்துல் அன்பாலில் இருக்கிறது.

வானத்திலிருந்து மழையை பொழிவித்தது மட்டும் அல்லாமல். அன்று இரவு பத்ரு என்ற அந்த இடத்தில் சிறு உறக்கத்தை ஏற்படுத்தி நிம்மதி அடையச் செய்துள்ளான்.  அந்த சம்பவத்தை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இது யாருக்குமே தெரியவில்லை. அல்லாஹ் சொல்லிக் காட்டிய பின்தான் தெரிகிறது

8:11 வசனப்படி மழை பாலைவன மணலை உறுதி ஆக்கி விட்டது. நடப்பதற்கோ, விரட்டி ஓடுவதற்கோ, சண்டை போடுவதற்கோ தரை கொஞ்சம் உறுதியாக இருக்க வேண்டும். தரை உறுதியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். எனவே தரையை உறுதியாக்கி அதன் மூலம் முஸ்லிம்களின் உள்ளங்களை உறுதிபடுத்தியதை  சொல்லிக் காட்டிய அல்லாஹ். சிறு உறக்கத்தின்பொழுது நடந்த இன்னொன்றை 8;43இல் சொல்லிக் காட்டி உள்ளான்.

அங்கிருந்து வந்த அந்த எதிரிக் கூட்டத்தை அல்லாஹ் சொற்பமானதாகக் காட்டியுள்ளான். எதிரிகள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ் தனது துாதரின் கனவில் எப்படிக் காட்டினான்? ரொம்ப கம்மியாகக் காட்டினான்

ஸஹாபாக்கள் 300 பேர் என்றால். குறைஷிகளை 100 பேர் மாதிரி காட்டினான். ரொம்ப குறைந்தவர்களாக காட்டும்பொழுது. நம்மைவிடக் குறைவாக எதிரிகள் இருக்கின்றார்கள் என்றால். போகிற போக்கில் தட்டி விட்டு போய் விடலாம். மிக லேசாக வீழ்த்தி விடலாம் என்ற எண்ணம் வந்து விடும். அந்த எண்ணமே ஒரு தைரியத்தை ஏற்படுத்தும். இப்படி இரவிலேயே முஸ்லிம்களை தெம்பூட்டிய அல்லாஹ் போர்க் களத்தில் என்ன செய்தான்?

காலையில் களத்திற்கு வந்ததும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல குறைஷிகளுக்கும் முஸ்லிம்களை 300ஐ விட கம்மியாகக் காட்டினான். ஏனெனில் அபு ஜஹ்லைத் தவிர எல்லாரும் போருக்கு என புறப்பட்டு வரவில்லை என்பதுதான் எல்லாம் அறிந்த அல்லாஹ்வுக்குத் தெரியுமே

ஆக இரு தரப்பினருக்கும் எதிர் தரப்பை குறைவாகக் காட்டி நாம்தான் வெற்றி பெறுவோம் என்ற தெம்பை இரு தரப்புக்கும் ஏற்படுத்தினான். முஸ்லிம்களுக்கு தெம்பை ஏற்படுத்தியது நியாயம்தான். அபுஜஹ்ல் கூட்டத்துக்கும்  தெம்பை ஏற்படுத்தியது ஏன்? என்ற கேள்விக்கு 8;44இல் பதில் உள்ளது. அப்படியானால் பத்ருப் போரை திட்டமிட்டது யார்? பத்ருப் போர், பத்ருப் போர் என அபுஜஹ்ல்களை கத்த வைத்தது யார்?

தொடரும் இன்ஷாஅல்லாஹ்

http://mdfazlulilahi.blogspot.ae/2016/09/blog-post_22.html 


அடுத்த தலைப்பு

பத்ரு என்ற பெயர் எப்படி வந்தது?


முந்ததைய தலைப்பு

விசாரணை முடிந்ததும் விசாரணைக் கைதிகளை நபி(ஸல்) என்ன செய்தார்கள்?


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.