விசாரணை முடிந்ததும் விசாரணைக் கைதிகளை நபி(ஸல்) என்ன செய்தார்கள்?

கண்ணியத்திற்கும் மரியாதைக்கும் உரிய தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தியாகத் திருநாளாம்  ஹஜ்ஜூப்  பெருநாள்  நல் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறைஷிகளைப் பற்றி நீங்கள் எனக்கு சொல்லுங்கள்என்று நபி (ஸல்) கேட்டார்கள்.  “நீங்கள் பார்க்கும் அந்தப் பெரிய மேட்டிற்குப் பின் குறைஷிகள் இருக்கிறார்கள்என்றனர். அவர்கள் எத்தனை நபர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். எண்ணிக்கை தெரியாததால் ”மிக அதிகமாக இருக்கின்றனர்என்று அவர்கள் கூறினார்கள்.


அவர்களிடம் எப்படிப்பட்ட தயாரிப்புகள் உள்ளனஎன்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் தெரியாதுஎன்று கூறினர். இதன் பிறகும் அவர்கள் எவ்வளவு எண்ணிக்கை இருப்பார்கள் என்பது பிடிபடவில்லை. மறுபடியும் கேட்கிறார்கள் என்ன உணவு சமைக்கிறார்கள்? என்ன  சாப்பிடுகிறார்கள்? ஒட்டகங்கள் அறுக்கிறார்களா? என்று. 

ஆம் ஒட்டகங்கள் அறுக்கிறார்கள் என்றார்கள். அவர்கள் ரு நாளுக்கு எத்தனை ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் ஒரு நாளுக்கு ஒன்பது. ஒரு நாள் பத்து ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்என்று கூறினார்கள்.

உடனே அறிவின் சிகரம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கணக்கு பண்ணினார்கள். ஒரு ஒட்டகம் நுாறு பேருக்கு உரிய உணவு. ப்படியானால்அவர்கள் தொள்ளாயிரத்திலிருந்து ஆயிரம் நபர்கள் வரை வந்திருக்கலாம்என்று கணித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எதிரிகளின் எண்ணிக்கையை ஒட்டகம் அறுப்பதை வைத்து கணக்கு செய்து கொண்டார்கள்.

பின்பு அவர்களிடம் குறைஷிகளில் முக்கியமானவர்கள் அதாவது பிரமுகர்களில் யார் யார் வந்திருக்கிறார்கள்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர்கள்,  “உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் பக்த இப்னு ஹிஷாம், ஹக்கீம் இப்னு ஜாம்,(இவர் பின்னாளில் இஸ்லாத்தை தழுவி விட்டார்.) நவ்ஃபல் இப்னு குவைலித், ஹாரிஸ் இப்னு ஆமிர், துஅய்மா இப்னு அதி, நழ்ர் இப்னு ஹாரிஸ், ஜம்ஆ இப்னு அஸ்வத், அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம், உமய்யா இப்னு கலஃப் என தெரிந்த பெயர்களைச் சொன்னார்கள்.

இதுவெல்லாம் பெரிய பெரிய தலைவர்களாகவும் உயர்ந்த அந்தஸ்திலும் இருக்கக் கூடியவர்களின் பெயர்கள். இவர்கள் பின்னால் ஒவ்வொரு கூட்டம் இருக்கும். இப்படி முக்கியமானவர்களின் பெயர்களைச் சொன்னார்கள். இதற்கு மேல் இவர்களிடம் விபரங்கள் கேட்டால் கிடைக்காது. எனவே கைது செய்து கொண்டு வந்த அவர்களை விட்டு விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை இட்டார்கள். 

பிடித்து வரப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று தெரிந்து விட்டால். விசாரணைக் கைதிகளிடம் விசாரணை முடிந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? அவர்களை அழகிய முறையில் விட்டு விட வேண்டும். விடுதலை செய்து விட வேண்டும். 

இதுதான் ஆட்சியாளர்களுக்கும் அழகிய முன்மாதிரியான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழி முறை. இன்று கையாளாகாத ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்? விசாரணைக்கு ஒத்துழைத்த யாகூப் மேமன் போன்றவர்களை அநியாயமாக துாக்கில் போட்டுக் கொன்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

விசாரணைக் கைதிகளை விடுவித்த  நபி (ஸல்) மக்களை நோக்கி  இதோ! மக்கா தனது ஈரக் குலைகளை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கிறதுஎன்று உரை நிகழ்த்தினார்கள். சாதாரணமானவர்கள் வரவில்லை. ஈரக்குலை என்று எதற்கு சொல்வோம். ரொம்ப முக்கியமானதற்குத்தான் சொல்வோம்

ஆக அபுலஹ்பைத் தவிர ஒரு ஆள் இல்லாமல் எல்லாருமே சரியாக வசமாக வந்து மாட்டிக் கொண்டார்கள். சரியான ஆட்களையாக பார்த்து மக்கா வெளியே தள்ளி இருக்கிறது. இது நமக்கு ஒரு அருமையான வாய்ப்பு. இந்த நேரத்தை நாம் பயன்படுத்திக் கொண்டால் மக்கா ஒன்றும் இல்லாமல் ஆகி விடும். டம்மியாக போய் விடும். இந்த மாதிரி ரசூல்(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தி ஏற்பாடுகள் செய்து முடிக்கிறார்கள் இரவு ஆகி விடுகிறது.

இஷா நேரத்தில் பத்ரின் நீர் நிலைகளில் ஒரு நீர் நிலைக்கு அருகில் வந்து நபி (ஸல்) கூடாரம் அமைத்து தங்கினார்கள். ரசூல்(ஸல்) அவர்கள் தங்கி இருந்த இடத்திற்கு அப்பாலும் நீர் நிலைகள் இருந்தது. இதைப் பார்த்த ஒரு ஸஹாபி வந்து அல்லாஹ் உடைய துாதரிடத்தில் சில கேள்விகளைக் கேட்டார். அவர் யார் என்றால் போர் தந்திரங்களை நன்கறிந்த மதீனாவாசி. அல் ஹுபாப் இப்னு முன்திர் (ரழி) என்பது அவரது பெயா். என்ன கேட்டார்? எப்படிக் கேட்டார்?

அல்லாஹ்வின் தூதரே! இந்த இடத்தை நீங்கள் தீர்மானித்து உள்ளீர்கள். நாளை காலை போர் ஆரம்பம் ஆகப் போகிறது.  நீங்கள் தங்கியதைப் பற்றி எனக்குக் கூறுங்கள். நாம் இவ்விடத்தை விட்டு முந்தவோ அல்லது பிந்தவோ கூடாதா? அல்லாஹ் முடிவு செய்த இடமா இது? அல்லது இது உங்கள் சார்பான யோசனையும், போர் தந்திரமுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) இல்லை. இது ஒரு யோசனையும் போர் தந்திரமும்தான்என்றார்கள். அல்லாஹ் உடைய உத்தரவு எதுவும் இல்லை என்றார்கள்.

அதற்கு அவர் நாம் தங்கக் கூடிய பகுதியிலே ஒரு சில நீர் நிலைகள் கிணறுகள் இருக்கிறன. அதே மாதிரி இதற்கு அந்தப் பக்கமும் நீர் நிலைகள் கிணறுகள் இருக்கிறன. தண்ணீர் மிக முக்கியமான ஒன்று. அவர்களும் நாமும் இந்த இடத்தில் சந்தித்தால் அவர்களுக்கும் ஒரு சில நீர் நிலைகள் கிணறுகள் கிடைத்து விடும். அவர்களும் தண்ணீரின் பயனை அடையக் கூடியவர்களாக ஆகி விடுவார்கள். நமக்கும் அதே மாதிரி கிடைக்கும். வித்தியாசம் ஒன்றும் இருக்காது. அது மட்டுமன்றி இந்த இடம் மணற்பாங்கான இடமாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் அந்தப் பக்கம் பத்ர் என்ற இடத்திற்கு போய் விடுவோம். அங்கு போய் விட்டால் கட்டாந்தரையாக இருக்கும் என்றார்.

கட்டாந்தரை என்று சொன்னால் பாதத்துக்கு உறுதி கொடுக்கும். நாம் வெயிட்டான பொருளை சுமந்து கொண்டு. உறுதியான தரையிலும். மணலான இடத்திலும் நடந்து பார்த்தால் வித்தியாசமும் சிரமும் தெரியும். எனவே தரை உறுதியாக இருந்தால் பயனாக இருக்கும் என்ற யோசனையை அவர் சொன்னார். ரசூல்(ஸல்) அவர்கள் செய்த முடிவிலேயே குறுக்கிடும்பொழுது எப்படி அந்த ஸஹாபாக்கள குறுக்கிட்டு இருக்கிறார்கள்?  ரசூல்(ஸல்) அவர்கள் எப்படி பதில் சொல்லி இருக்கிறார்கள்?

இன்றை உலகின் நிலை என்ன? அதிகார வெறி பிடித்த அண்ணன்கள் சாதாரண பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சிநகராட்சி, மாநகராட்சி தலைவர்களாகவோ, மெம்பர்களாகவோ ஆகி விட்டால் போடும் ஆட்டம் என்ன? ஒரு முடிவை எடுக்கும்பொழுது. அதில் தொடர்பு உடைய யாருக்கும் எந்த உரிமையும் இருப்பது இல்லை. ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களை துாதராகவும் மாமன்னராகவும் ஏற்றுக் கொண்ட மக்களிடம் அவர் எப்படி நடந்து கொண்டுள்ளார்.
தொடரும் இன்ஷாஅல்லாஹ் http://mdfazlulilahi.blogspot.ae/2016/09/blog-post.html 
அடுத்த தலைப்பு 
                      ஹிஸ்புல்லாஹ்க்களா?  ஹிஸ்புஷ் ஷய்த்தான்களா?
                                    முந்ததைய தலைப்பு

கோவை முதல் மேலப்பாளையம் வரையிலான வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் எல்லாம் உண்மைக் குற்றவாளிகளா? 


Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.