எம் எஸ்சும் தடம்புரண்ட ஜும்ஆ உரையும். பாகம் 2

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.          

          அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

 ஜலீல்மதனி அவர்கள் காலமாகிவிட்டார்கள் திரும்ப வரமாட்டார்கள் என்ற தைரியத்தில்தான் எதெற்கெடுத்தாலும் சகோதரர் ஜலீல் மதனியை சொல்லுகிறீர்களே அவர்களால் உருவாக்கப்பட்ட நிர்வாகம்தான் இன்றுவரை உள்ளது தெரியுமா?

சிலர்கள் ஜாக்கிற்கு சென்றதினால் ஜலீல்மதனி சுகவீனப்பட்டிருக்கும் நேரத்தில் மஸ்ஜித் முபாரக் பொதுக்குழு கூடி சில மாற்றங்கள் செய்யப்பட்டன.  வேறொன்றும் இல்லை.அந்தமாதிரி நிர்வாகிகள் உங்களிடத்தில் இருக்கிறார்களா?இல்லையே!

தற்போது உங்களிடத்தில் இருப்பவர் களிடம் எந்த  பொறுப்பிலும் இல்லாதவர்கள் தான் சொந்த இலாபத் திற்காகத்தான் பள்ளியில் கிடந்தார்கள்.ஜலீல் மதனி காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றுவரை இருக்கின்றது.

ஜலீல்மதனி காலத்தில் மாதத்திற்கு ஒரு ஜும்ஆ நீங்கள் யாரை காபிர்,முஷ்ரிக் என்று சொல்லுகிறீர்களோ அந்த ஜாக்கைச் சார்ந்தவர்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள்.அந்த ஒன்றுதான் இப்போது மாற்றம் செய்யப் பட்டுள்ளது.மற்றபடி அவர் கனவை நினைவாக்கும் விதமாக பக்கத்திலுள்ள இடத்தை வாங்கி கட்டியிருக்கிறார்கள்.

இப்போது தெரிகிறதா?முபாரக்பள்ளிக்கான சம்பந்தம் யாருக்கு இருக்கின்றது யாருக்கு இல்லை என்பது. சகட்டுமேனிக்கு எம் எஸ்  பொய்யைச் சொல்லுகிறார். பொய்யை உரக்கச்சொன்னால் உண்மையா கிவிடுமோ?கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக்கிற்கும் தென்காசிக்காரனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கும் அப்துன் னாசருக்கும் பங்குண்டு என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? ஏன் இத்தனை வருடகாலமாக மேலப்பாளையத்தில் பணி செய்து கொண்டிருந்த இந்த தென்காசி எம் எஸ் சுலைமானே எதிர் கேள்வி கேட்கமுடியாது.அந்த பள்ளி மேலப்பாளையம் ஜாக்கிற்கு சொந்தமே தவிர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்குச் சொந்தமும் கிடையாது. 

அதேப்போல் அதற்குப் பக்கத்திலுள்ள கட்டிடமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்குக் கிடையாது.வேறொரு ரிஜிஸ்டர் எண்ணோடு மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாஅத்திற்குத்தான் சொந்தம்.ததஜவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது.  
     
      நாம் தமுமுகவில் இருக்கும்போது மஸ்ஜித் முபாரக் பிரச்சார மையமாக செயல்பட்டது. என்று எம் எஸ் ஜும்ஆவில் பாடியிருக்கிறார்.

     அவர் கூற்றின் பிரகாரம் இது தமுமுகவிற்கல்லவா சொந்தம். எப்படி ததஜவிற்கு சொந்தம் கொண்டாட முடியும்?குர்ஆன் வகுப்பு,ஜும்ஆ நடத்தினவர்களுக்கெல்லாம் மஸ்ஜித் முபாரக் சொந்தம் என்று சொல்லமுடியுமா?நீங்கள் எல்லோரும் தமுமுகவில் இருந்தது உண்மைதான்.

சகோதரர் பீஜே அவர்கள் முபாரக் பள்ளிக்கு வந்திருந்த போது ஜலீல் மதனியிடம் நம் மக்கள் சில ஆலோசனைகள் செய்வதற்கும் உட்கார்ந்து பேசுவதற்கும் இடமில்லைகீழே இருக்கக் கூடிய அலுவலகத்தை பயன்படுத்தக் கொடுங்களேன் என்று அனுமதி கேட்கிறார்.அதற்கு ஜலீல் மதனி அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

இயக்கங்களைக் கொண்டு இங்கு வராதீர்கள் என்று எச்சரிக்கையுடன் கூறினார்.அப்போது ஜலீல்மதனி அவர்கள் ஜாக்கின் மாவட்டத் தலைவராக இருந்தார்கள்.இதுதான் ஜலீல் மதனி அவர்கள் கொண்ட கொள்கை. இதை உங்களின் பீஜே அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அதனால் மஸ்ஜித் முபாரக் தமுமுகாவின் பிரச்சாரமையமாக செயல்படவில்லை என்பதுதான் உண்மை..இதற்கு இன்னொரு ஆதாரத்தையும் தரலாம் ஜலீல்மதனி இருக்கும் காலமெல்லாம் மாதம் ஒரு ஜும்ஆ ஜாக்கிற்கு ஒதுக்கிக் கொடுத்தார்கள்.அன்றைய ஜும்ஆ வசூலும் ஜாக்கிற்கு கொடுப்பார்கள்.இப்படித்தான் சென்றுகொண்டிருந்தது என்பது எம் எஸ்ஸுக்குத் தெரியாது.ஏனென்றால் அவர் குர்ஆன் வகுப்புக்கு வந்தார் அதற்கான தொகையும் வாங்கிச்சென்றுவிட்டார.

         தொடரும் தடம்புரண்ட ஜும்ஆ உரை.

                       இப்படிக்கு
                காதிர்கனி எம் ஐ எஸ் சி    .    ,                .    ,     

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.