இந்த உலகத்துல லஞ்சம் வாங்காத துறை இருக்கா??சொல்லு, நேர்மையான_போலீஸின்_ஆதங்கம்‬

பிறர் பொருளை அபகரிக்க உதவிட வேண்டி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க நெருங்காதீர்கள். (திரு குர்ஆன் 2:188, 4:161)

கோயில், சர்ச், பள்ளிவாசல் என எந்த நிர்வாகிகளுக்குள் பிரச்சனையாக இருந்தாலும் லஞ்சம் கொண்டு கொடுப்பது யார்?  ஒரு கூட்டத்துக்கு சொந்தமான வழிபாட்டுத் தலத்தை கள்ள பத்திரம் போட்டு களவாட துணை நில்லுங்கள் என லஞ்சம் கொண்டு கொடுத்தது யார்?  வழிபாட்டுத் தலங்களை களவாட லஞ்சம் கொடுக்கும் மத குருக்களை கடவுள் நாசமாக்குவாறாக. 


Manoj Kapoor    
ப்பிரியமுடன் வஸந்த்  இப்படி பலர்  போலீஸ் பற்றி தப்பா பேசுற நாய்களா? என்று துவங்கும் விமர்சனத்தை வெளியிட்டு உள்ளனர்.





காவல்துறையின் கண்ணீர் புலம்பல்

போலீஸ் பற்றி தப்பா பேசுற நாய்களா?நாங்க இந்த பிரச்சனை மட்டுமாடா நாங்க டியூட்டி பாக்றோம்.தமிழ்நாட்டுல எங்கு பிரச்சனை வந்தாலும் நாங்க போகணும்.இல்லைனா எங்க வேலை காலி,... 

நீ படிச்சு முடிச்சு ஒரு கம்பெனில வேலைக்கு போனா என்ன பண்ணுவ,அததான் நானும் பண்றேன்... எவன் ஓனரரா இருந்தாலும் நீ அவனுக்கு அடிமைதான்.அவன் சொல்றததான நீ கேட்கனும்..இல்லைனா வெளியே போடா நாயேன்னு சொல்லுவான்.

நீ முதலாளியா இருந்தாலும் அததான் பண்ணுவ.,.நீ தமிழ் நாட்டுல பெரிய ஆளா இருக்கலாம்.ஆனாலும் அரசாங்கத்த எதிர்த்து எதுவும் பண்ண முடியாது..ஒரு கம்பெனிக்கு எத்தனை ஓனர் வந்தாலும் நீ அவன கேள்வி கேட்க முடியாது, அவன் உன்ன என்ன வேணாலும் கேட்பான்...நாங்களும் அப்படித்ததான்.

அரசு பண்ற தப்புக்கு எங்கள பழி கெடா ஆக்குறாங்க...தமிழ் நாட்டுல எல்லா உயிர்க்கும் மரியாதை பாதுகாப்பு இருக்கு,எங்கள் உயிர்க்கு என்ன பாதுகாப்பு இருக்கு. நாங்க யாரையும் தேவை இல்லாம.அடிக்க மாட்டோம்,அசம்பாவிதம் நடக்கும் போதுதான் அடிப்போம்.

உடனே மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்கும்.....நடவடிக்கை எடுப்பாங்க...ஆனால் இதுவரை போராட்டம்,கலவரம்னு எத்தனை போலீஸ்காரங்க செத்து போயிருக்காங்க,எத்தனை காவலர்கள் கொல்லப்பட்டு இருக்காங்க,அப்பல்லாம் இந்த மனித உரிமைகள் ஆணையம் விடுப்பு விட்டுறாங்க,

எங்கள பணிக்கு சேர்க்கும் போது என்ன கட்டளை தெரியுமா?இந்தியாவில் எந்த மாநிலத்திலும்,எந்த இடத்திலும் 24 மணி நேரமும் பணி செய்வேன்.என உறுதியளிக்கிறேன்..இதுதான்,.உன்னால முடியுமா?எங்களால முடியும்.,

வெயில் காலத்துல நீ A/c ல இருப்ப நாங்க AC என பெயருடன் ரோட்டுல டியூட்டி பார்ப்போம்..குளிர் காலத்துல நீ நெருப்புல குளிர் காய்வ,நாங்க அப்பவும் ரோட்டுல நிப்போம்.மழை காலத்துல நீ வெளியவே வரமாட்ட,அப்பவும் நாங்க ரோட்டுலதான் நிற்போம்.

நீ கேட்கலாம் இந்த வேலைக்கு ஏன் போனன்னு?நாங்க இந்த வேலைக்கு வரலன்னா,நீ நிம்மதியா 3 வேலை சோறு உன் அம்மா கையிலயோ,பொண்டாட்டி கையிலயோ சாப்பிட முடியாது. போலீஸ்காரன்னா தொப்பை இருக்கும்னு கேலி பண்றல்ல,

3 வேலை சாப்பாடு கிடைக்கிறத சப்பிடுறோம்.தூக்கம் இருக்காது. நின்னு நின்னு கால் வலி,ஒரு நாளைக்கு 14 மணி நிப்போம்.லஞ்சம் வாங்குறோம்னு சொல்றீங்க,ஏன்டா தர,தர முடியாதுன்னு சொல்லிட்டு,கோர்ட் போய் கட்டுடா வெண்ண.,நீ கோர்ட் போனா லேட் ஆகும்,

மேனேஜர் அசிங்கமா திட்டுவான்,ஒரு நாள் Loss of pay.,கோர்ட் அபராதம் குறைந்தபட்சம் 1500,இதுக்கெல்லாம் பயந்து எங்ககிட்ட கால்ல விழாத கொறையா கெஞ்சி கூத்தாடி 200 300ன்னு நீ குடுத்துட்டு எங்களை லஞ்சம் வாங்குறாங்கன்னு சொல்றியேடா பரதேசி. தினமும் வேலைக்குதான போற, Brush பண்ற,Toilet..bath,dressing, and breakfast ....5 விஷயம் சரியா பண்றல்ல.

அதே மாதிரி License. Rc book.insurance, helmet, and don't drink&drive. இந்த 5 வேலையையும் ஒழுங்கா பண்ணு. நீ எல்லலாத்தையும் காட்டிட்டு போயிட்டே இரு. அதுக்கு வக்கில்லாத நாய் நீ பேச வந்துட்ட.முதல்ல நீயும் உங்க அப்பனும் நல்லபடியா சம்பாதிக்கிறிங்களா இந்த உலகத்துல லஞ்சம் வாங்காத துறை இருக்கா??சொல்லு, 

எல்லா துறையும் அறைக்குள்ள உட்காந்து வேலை பாக்குறான், அறைக்குள்ளேயே லஞ்சம் வாங்குறான்..அதனால யாருக்கும் தெரியல.நாங்கதான நடு ரோட்டுல வேலை பாக்குறோம், அதனாலதான் தெரு நாய் எல்லா எங்கள பாத்து கொளைக்குது...கல்லு கையில இருக்கு .,நேரம் வரட்டும் ஒரே அடி, அப்பறம் கொளைக்கவே முடியாது...

ஒரு நாள் தமிழ் நாடு போலீஸ் எல்லோரும் லீவு போட்டாங்ன்னா தெரியும்,எத்தனை கொலை,கொள்ளை, கற்பழிப்பு ,திருட்டு. ஆசீட் வீச்சு ,உன் குடும்பத்த உன்னனாலயே காப்பாத்த முடியாது. நகை பணம்.,சொத்து., சுகத்துக்காக,கூட பொறந்தவங்களையும், பெத்த தாய்,தகப்பனையும் கொலை பண்ற ஊர் இது.எங்கள எப்படி நல்லவன்னு சொல்லுவீங்க,

எல்லா துறையிலும் நல்லவர்களும் இருக்காங்க, கெட்டவர்களும் இருக்காங்க, தனக்காக ஒரு ரூ கூட சேர்க்காமல் மக்களுக்காக வாழ்ந்த காமராஜர் ,கக்கன், அண்ணா, எம்ஜீஆர், அனைவரும் அரசியல்ல இருந்தாங்க,தன் குடும்பத்துக்கு மட்டும் பணம் சேர்த்த கருணாநிதி ,ஜெயலலிதாவும் அரசியல்லதான் இருக்காங்க.

சிறந்த பெண் நீதிபதிளும் இங்கே இருக்காங்க,பெண்களை படுக்கைக்கு அழைத்த நீதிபதியும் இருக்காங்க,கேவலம் பணத்துக்காக,கெட்ட்வன நல்லவன்னு வாதாடி ஜெயிக்கிற வக்கீல் இங்க இருக்காங்க, மனிதாபிமானம் இல்லாம கொலை செஞ்சு உடல் உறுப்பை விற்கின்ற மருத்துவர்கள் இருக்காங்க,.So யாரும் யோக்கியம் இல்லை.,போய் வேலைய பாருங்கடா முட்டாள் ஜென்மங்களா!!!!!!!!!!!!!!!!



இவரை போல மாவட்டத்துக்கு ஒரு அதிகாரி இருந்தா அருமையா இருக்கும்
ஆஸ்ரா கர்க் அதிரடி ஆரம்பம்!


திருப்பூர் திகுதிகு

ஜூனியர் விகடனில் இருந்து...
மதுரையில் பல மாற்றங்களை உண்டாக்கிய எஸ்.பி. ஆஸ்ரா கர்க் இப்போது திருப்பூரில். 'எந்த ஊராக இருந்தால் என்ன.. எல்லாம் எனக்கு ஒன்றுதான்!’ என்று வந்த வேகத் திலேயே திருப்பூரிலும் சாட்டையைச் சுழற்ற ஆரம்பித்துவிட்டார்.
அதிரடி 1:
பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் போலீஸாரை அழைத்து மீட்டிங் போட்டார் ஆஸ்ரா கர்க்.
''திருப்பூர்ல நிறையக் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்காங்கன்னு எனக்கும் தெரியும்; உங்களுக்கும் தெரியும். ஏதோ சில காரணங்களுக்காக நீங்க இந்த விஷயத்தில் அக்கறை காட்டாம இருக்கீங்க. ஆனா, என்னோட முதல் டார்கெட்டே குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதுதான். இன்னும் உங்களுக்கு ஒரு மாசம் டைம். அதுக்குள்ள உங்க லிமிட்ல குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமப் பார்த்துக்கோங்க...'' என்றாராம். மீட்டிங் முடிந்ததும் ஒரு லிஸ்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு கிளம்பினார். அந்த லிஸ்ட்டில் இருந்த பேக்கரி, டீக்கடை, வசதியானவர்களின் வீடுகளுக்குப் போனவர், அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 30 குழந்தைத் தொழிலாளர்களை உடனே மீட்டு, முதல் அதிரடிக் கணக்கைத் தொடங்கினார்.
அதிரடி 2:
கடந்த வாரம் போக்குவரத்து ஆய்வாளர் திருநாவுக்கரசு, மணல் ஏற்றி வந்த ஒரு லாரி ஓட்டுநரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணத்தைப் பக்கத்தில் உள்ள ஒரு கடையில் தரச் சொல்லி இருக்கிறார். லாரி ஓட்டுநர் உடனடியாக எஸ்.பி-க்குத் தகவல் சொல்ல, அடுத்த அரை மணி நேரத்தில் ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.பி., மளிகைக் கடைக்காரரிடம் விசாரணை செய்தார். மளிகைக் கடைக்காரர் பயத்தில் உண்மையைச் சொல்லிவிட்டார். ஆய்வாளர் திருநாவுக்கரசுவை அங்கேயே சஸ்பெண்ட் செய்துவிட்டுக் கிளம்பினார். 'உங்க லிமிட்ல இருக்கும் கான்ஸ்டபிள் தொடங்கி இன்ஸ் பெக்டர் வரைக்கும் யாரும் லஞ்சம் வாங்காமப் பார்த்துக்கவேண்டியது உங்க பொறுப்பு. உங்களை நான் பார்த்துக்குவேன்...’ என்று டி.எஸ்.பி-களுக்கு புதிய உத்தரவு போட்டிருக்கிறாராம் ஆஸ்ரா கர்க்.
அதிரடி 3:
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் அங்கயற் கண்ணி. இவரது கணவர் மணிவண்ணனுக்கு சுமதி என்ற பெண்ணோடு கள்ளத் தொடர்பு இருந்திருக்கிறது. சுமதியுடன் சேர்ந்துகொண்டு தன்னைக் கணவர் கொடுமைப்படுத்துவதாக உடுமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார் அங்கயற்கண்ணி. உடனே மணிவண்ணன் மற்றும் சுமதி மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர் போலீஸார். முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளார் மணிவண்ணன்.
அதே நேரம் தன்னைக் கைது செய்யாமல் இருக்கவும் சுமதியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும் போலீஸை நாடி இருக்கிறார். இதற்காக பணம் கேட்டதாகவும் தகவல் பரவியது. ''உதவி ஆய்வாளர் பூர்ணிமாவிடம் பேரம் பேசி, இரண்டு லட்ச ரூபாய் வரை மணிவண்ணன் கொடுத்திருக்கிறார். அதன் பிறகும் பூர்ணிமா மேலும் பணம் கேட்டு நச்சரித்திருக்கிறார். இதனால் கடுப்பான மணிவண்ணன் நேராக எஸ்.பி-யிடமே முறையிட்டார். பணத்தோடு மணிவண்ணனை அந்த ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, பின்தொடர்ந்து காத்திருந்தார் கர்க்.'' என்றும் சொல்லப்படுகிறது.
மணிவண்ணன் ஸ்டேஷனுக்குள் போய் எஸ்.ஐ. பூர்ணிமாவுக்குப் பணத்தைக் கொடுத்தார். ஸ்டேஷனுக்கு வெளியே ஜீன்ஸ், டி-ஷர்ட்டில் காத்திருந்த எஸ்.பி-யை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. பணத்தைக் கொடுத்து விட்டு மணிவண்ணன் வெளியே வந்ததும், ஸ்டேஷனுக்குள் நுழைந்த எஸ்.பி., ''உன்கிட்ட மணிவண்ணன் கொடுத்த பணத்தை எடு...'' என்று கேட்டிருக்கிறார். உடனே, ''நீ யாரு..?'' என்று எகிறி இருக்கிறார் பூர்ணிமா.
''நான்தான் உங்க மாவட்ட எஸ்.பி., இப்போ எடும்மா'' எனக் கேட்க, பூர்ணிமாவுக்கு மயக்கம் வராத குறை. பணத்தைப் பறிமுதல் செய்து, பூர்ணிமாவை உடனடியாக சஸ்பெண்ட் செய்தார்.
ஆஸ்ரா கர்க்கிடம் பேசினோம். ''தப்பு செஞ்சா யாரா இருந்தாலும் தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும். போலீஸா இருந்தாலும் விட மாட்டேன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்புகொள்ளலாம். ரவுடிகளோ, காவல் துறை யினரோ அடாவடி செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும். சர்வீஸ் பண்ணத்தானே இந்த வேலைக்கு வந்திருக்கோம்...'' என்று கேட்கிறார் கர்க்.
அசத்துங்க!
- ம.சபரி

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.