APJ (ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015)

இறந்தவர்களை ஏசாதீர்கள்
இறந்தவர்களை நீங்கள் ஏசாதீர்கள்! ஏனெனில் அவர்கள் (வாழும் போது) செய்த செயல்களுக்கான பலனை அவர்கள் (மண்ணறை வாழ்க்கையில்) அடைந்து விட்டனர்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: நஸாயீ 1920, புகாரி 1393,

2002 பெப்ரவரி 27,  அன்று அயோத்தியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த சபர்மதி தொடர்வண்டியை,  கோத்ரா தொடர்வண்டி நிலையத்தின் அருகே சதிகாரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதில், அந்த தொடர்வண்டியில் பயணம் செய்துக் கொண்டிருந்த 57பேர் தீயில் கருகி இறந்தனர். அதைக் காரணமாக காட்டி  குஜராத் கலவரம் நடந்தது.


அப்துல் கலாம்2002 ஜூலை 25   முதல் 2007 ஜூலை25  முடிய ஜனாதிபதியாக பணியாற்றினார்.

1980 ஜுலை 18 அன்று SLV3 ராகெட் காலை 8 மணிக்கு ஏவப்பட வேண்டும் அன்று காலை 4 மணிக்கே தொழுது துஆ கேட்டுள்ளார் அப்துல் கலாம்

அது பற்றி கேட்டதற்கு நாம் என்னதான் உழைத்தாலும் அதன் வெற்றிக்கு இறைவனின் அருளும் வேண்டும் அல்லவா என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல் கலாம்

அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. 

இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் எனும் வரிகளாகும்.இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

கலாமின் சாதனைகளைாக உலகம் பலவற்றை சொல்லலாம். அவர் சொல்லும் சாதனை. ஹைதராபாத் நிம்ஸ் மருத்துவமனையில் கால் இல்லா சிறுவர்கள் அணியும் மெட்டீரியல் கால்களைத்தான். நான்கு கிலோவாக இருந்த மெட்டீரியல் கால்களை நானுாறு கிராமாக ஆக்கி கொடுத்ததைத்தான்.

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை அப்துல் கலாம் கண்டுபிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகையில் மொகல் தோட்டத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட்டார். பதவி ஏற்பு விழாவில் சிறுவர்களை கலந்து கொள்ளச் செய்தார்.

பதவி காலம் முடிந்து வெளியேறும்போது எந்தப் பரிசு பொருட்களையும் எடுத்துச் செல்லவில்லை.

அப்துல் கலாம் உறவினர்கள் டெல்லி வந்து தங்கி இருந்த செலவுகளை அரசு கணக்கில் எழுதாமல் அவரே செலவு செய்தார்.


ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது என்று பலர் எழுதியுள்ளனர்.
இந்த புகழ்ச்சியை ஜாகிர் உசேன், முஹம்மது இதாயதுல்லாஹ், பக்ருத்தீன் அலி அஹ்மது என பலருக்கும் செய்துள்ளனர். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இது பெரிய விஷயமல்ல.

* ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

* அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி நல்ல நாள், கெட்ட நாள் எது?’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ’பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லைஎன்றார்.

* நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அது போல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம் என்றும் பலர் கூறுகின்றனர்.

கீழக்கரையில் பெண் பேசி திருமணம் ஏற்பாடு நடந்தது. அப்பொழுது அமெரிக்க உளவுத்துறை அப்துல் கலாமை கொண்டு வந்தால் 150 கோடி டாலர் என அறிவித்தது. குறிப்பிட்ட ஒரு அமைப்பு மூலம்  அவரை கடத்த ஏற்பாடு நடந்தது.

அதனால் ராமேஸ்வரத்தில் வைத்து திருமணம் நடத்தக் கூடாது என்று இந்திய அரசு கூறியது. பாதுகாப்பை பலப்படுத்தியது. அத்துடன் திருமணம் நின்று விட்டது என்றார். நாம் வறுமைதான் காரணம் என்று கேள்வி பட்டோமே என்றோம். இல்லை என்று சீனி முஹம்மது  கூறினார்.


இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான். இதற்கு காரணம் அசைவத்திற்கு எதிரானவர் என்ற காரணம் அல்ல.

1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது என்பதுதான் உண்மை.

* ’நான் யார் தெரியுமா’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை . ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூவை அகற்றி சோதித்த போதுசிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

29 செப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று "தனித் திரையிடப்பட்ட" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமானக் குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், "தனித் திரையிடப்பட்ட" சோதனை நிபந்தனையின் கீழ் சரி என்று கூறி, அவரது வெளிச்சட்டை மற்றும் காலணிகளை அவர் "ஏர் இந்திய" விமானம் ஏறிய பிறகு சோதனைக்கு கேட்டனர். 13 நவம்பர் 2011 வரை இச்சம்பவம் வெளி வரவில்லை. இச்சம்பவம் பொதுச் சீற்றத்தை நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்தியா பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முன் 2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை விலக்கு பட்டியலில் கலாம் இருந்த போதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் "காண்டினெண்டல் ஏர்லைன்ஸ்" ன் அடிப்படை பணியாளர்கள் அவரை ஒரு சாதாரண பயணியைப்போல் சோதனைக்கு உட்படுத்தினர்

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.