நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் -விரயமாகும் மக்கள் பணம்



நேற்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் "நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் " என்று அறிவித்துள்ளார். 
          இந்த மணிமண்டபத்தை அரசின் சார்பாக, மக்கள் வரிப்பணத்தை கொட்டி, உருவாக்குவதால்,  மக்களுக்கு என்ன இலாபம்? 
     அவர் தலை சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அந்த நடிப்பதற்காக 
அந்தக்காலத்தில் மிகப் பெரிய ஊதியத்தை சிவாஜி, பெற்றுள்ளார். அந்த ஊதியத்தை தயாரிப்பாளர்கள் மக்கள் திரைப்படம் பார்ப்பதற்கு கொடுத்த பணத்தின் மூலம் தான் கொடுத்துள்ளார்கள். 
   அவரின் உழைப்பிற்கு,  அப்போதே மக்கள் தக்க சண்மாணம் வழங்கி விட்ட நிலையில், மீண்டும் சிவாஜிக்கு மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி மணிமண்டபம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? 
  அப்படி என்ன,  அவர் தேச விடுதலைக்காக வெள்ளையனிடம் குண்டடிபட்டு இறந்தாரா? 
      இன்று நாட்டுக்காக பாடுபட்ட வ.உ.சி யின் வாரிசுகள் கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
  சினிமாவில் நடித்த சிவாஜி,  அதன் மூலம் மிகப்பெரிய வருவாயை சம்பாதித்து விட்டு தானே இறந்தார்? 
   அவரது குடும்பத்திற்கு இன்று அளவு கடந்த சொத்துக்கள் இருக்கின்றதே!  அவரது மூத்த மகன் இன்று பல சினிமா படங்களை தயாரித்து மிகப்பெரிய கோடீஸ்வரனாகத் தானே உள்ளார்? 
அவரது,  இன்னொரு மகன் பிரபுவும் 30 வருடங்களாக சினிமா உலகில் சம்பாதித்து கொண்டு தானே இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் விளம்பரங்கலிலும், சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றார்.
  பிரபுவின் மகன் விக்ரம்பிரபு கூட இன்று முக்கிய நடிகராகத் தானே உள்ளார். 
   சுதந்திரத்திற்கு பாடுபட்ட ஒருவரின் குடும்பமாவது,  அந்த தியாகத்தை பயன்படுத்தி கோடிகளை குவிக்க முடியுமா? 
   நாட்டுக்காக தன் குடும்பம்,  வளர்ச்சி, சொத்துக்களை இழந்தவர்களில் உயிருடன் இருப்பவர்கள் பென்சன் பணத்தை தவிர எந்த சுகத்தை கண்டு விட்டனர்?
    அப்படித்தான் அவர் நடிகர் சிவக்குமார் அவர்களை போல, கல்விக்கு செலவு செய்தாரா? 
அவர் மகன் சூர்யாவை போல அகரம் பவுண்டேசன் என்று ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவினாரா? 
  நகைசுவை நடிகர் விவேக்கைப் போல,  ஒரு கோடி மரங்களை நடுவேன் என சபதமெடுத்து,  நடிப்பு தொழிலை கெடுத்து கொண்டு ஊர்,  ஊராக சுற்றினாரா? ராகவாலாரண்ஸ் போல, மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு கொடுத்தாரா?
     இறுதிக்காலம் வரை சினிமாவில் நடித்து பொருளீட்டியதை தவிர பெரிதாக மக்களுக்கு என்ன செய்தார் சிவாஜி?
    அவர் பாணியிலேயே சொல்வதென்றால், 
"அவர், வயலுக்கு வந்தாரா? நாத்து நட்டாரா? கல்விக்கு உதவினாரா?  ஊனமுற்றோர்கு உதவினாரா? " என்ற கேள்விகள் தானே, நமக்குள் எழுகின்றது.!
    அதுமட்டுமா? சில கட்சிகளிலும் எதாவது பதவி கிடைக்காதா என்று காத்திருந்து ஏமாந்து விட்டு, பிறகு சொந்தமாக கட்சியையும் ஆரம்பித்து பார்த்தவர்தானே அவரும்! அதன் பின் பாடுபட்டு உழைத்த காசுக்கு பங்கம் வந்து விடுகின்ற பயத்தில், சொந்தக்கட்சிக்கே கல்லறை கட்டியவர்தான் நடிகர்திலகம்.
   இன்று எத்தனை பள்ளி கூடங்கள் பாழடைந்து கிடக்கின்றன? எத்தனை அரசு பேருந்துகள் ஓட்டை ஒடிசலாக ஓடிக்கொண்டு இருக்கின்றன?
   இதெல்லாம்,  கண்ணுக்கு தெரியாத அரசுக்கு, இந்த மாதிரி மக்கள் பணத்தை விரயமாக்கும் சிந்தனைகள் மட்டும் எப்படித்தான் உதிக்கின்றன என்பது விளங்கவில்லை.
     மொத்தத்தில் சுதந்திரத்துக்காக போராடியவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் நடுத்தெருவில் விட்டு, விட்டு.. சுதந்திரத்துக்காக போராடியவர்களை போல அரிதாரம் கட்டி நடித்தவர்களை, அரசாங்கம்  மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவது அர்த்தமற்றது. ((நன்றி)

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.