TNTJவின் பெண்கள் மதரஸா பயம் நிறைந்தது; பலன் குறைந்தது ஏகத்துவம் ஒப்புதல்.

12 ஆண்டுகளுக்கு முன் நாம் கூறிய குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ள  ஏப்ரல் 2015 ஏகத்துவம் தலையங்கம்

மழலையரைக் காக்க மதரஸாக்கள் நடத்துவோம்! என்ற தலைப்பில்

ஆனால் பெண் ஆலிமாக்களை உருவாக்கும் இந்தத் துறை பயம் நிறைந்தது; பலன் குறைந்தது. பாடம் நடத்துகின்ற அல்லது நிர்வாகம் செய்கின்றவர்களை ஷைத்தான் வழிகெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. அல்லாஹ் காப்பானாக! அதனால் பெண்கள் மதரஸாக்களில் கவனம் செலுத்துவதை விட காலை, மாலை சிறுவர் சிறுமியருக்கான மதரஸாக்களை நடத்துவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். என்று எழுதி உள்ளார்கள்.
 
TNTJவின் பெண்கள் மதரஸா பயம் நிறைந்தது; பலன் குறைந்தது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர்
 

இது அனுபவ ரீதியான எழுத்து என்பது மட்டுமல்ல சமீபத்திய
தவ்ஹீத் வேஷத்தில் ஒரு நித்யானந்தா என்ற செய்திகளை உண்மைபடுத்தக் கூடியதாகவும் உள்ளது.

 
 குபுரா மேட்டர் வந்தபொழுது   

ஏகத்துவம் டிசம்பர் 2011

ஏகத்துவம் டிசம்பர் 2011
தலையங்கம்

கொள்கைவாதிகளைக் குறி வைக்கும் ஷைத்தான்

ஒருவர் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்த மாத்திரத்தில் அவரை நோக்கி பொதுமக்களின் புலனாய்வுப் பார்வை பொழுதனைத்தும் பின்தொடரத் தொடங்கி விடும். நம்முடைய கடந்த கால வாழ்க்கைப் பக்கங்களை நாம் கூட மறந்து விடுவோம். ஆனால் ஏகத்துவத்தின் எதிரிகள் அதை நமக்கு முன்னால் புரட்டிப் போடுவர்.
அதள பாதாளம் வரை போய் நம்முடைய அந்தரங்க வாழ்க்கையின் அணு அளவு அசைவையும் அம்பலமாக்கி விடுவர்
 
ஏகத்துவப் பிரச்சாரம் என்ற மாத்திரத்தில் இந்தப் பார்வை தானாக வந்து விடும். இந்த அடிப்படையில் பார்க்கும் போது ஓர் அழைப்பாளரின் கடந்த கால வாழ்க்கை, ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு ஒரு சரியான முதலீடும் மூலதனமும் ஆகும். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை அப்படித் தான் மூலதனமாக அமைந்தது.
 
ஆனால் அழைப்புப் பணி துவங்கியதற்குப் பின்னால் அப்பழுக்கற்றவர்களாக, ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் தவ்ஹீதுக்கு வந்த பின்னர் ஏற்படக் கூடாது.
 
குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் நம்மை நாம் மிகவும் கவனமாகக் காத்துக் கொள்ள வேண்டும்.
 
இன்று அழைப்பாளர்கள் என்று சொல்லும் சிலர் பெண்கள் விஷயத்தில் தான் பலியாகி விடுகின்றனர். அதனால் நாம் புகாரியில் வரும் இந்த ஹதீஸைக் கவனத்தில் கொண்டு கவனமாகச் செயல்பட வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
ஆண்களுக்குப் பெண்களை விட அதிகமாக இடரüக்கும் (வேறு) எந்தச் சோதனையையும் எனக்குப் பிறகு நான் விட்டுச் செல்லவில்லை.
அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி 5096
 
தமிழ்நாட்டில் மதரஸாக்கள் உள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். "ஊரில் உள்ளவர்களுக்கு ஒரு ஷைத்தான்; ஓதுகின்ற பிள்ளைக்கு ஒன்பது ஷைத்தான்' என்பார்கள். மதரஸா மாணவர்களின் சேட்டைக்காக மக்கள் இவ்வாறு சொன்னாலும் ஏகத்துவ அழைப்புப் பணிக்கும் இது பொருந்தும்.
 
ஏனைய ஆட்களிடம் ஷைத்தான் விளையாடுவதை விட ஏகத்துவவாதிகளிடம் அதிக அளவில் முற்றுகையிட்டு விளையாடுவான்.
அழைப்புப் பணி தொடர்பான விவகாரங்கள் மட்டுமின்றி, கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை காரணமாக தீர்ப்பு கோரி இந்த ஜமாஅத்தை நம்பி எத்தனையோ வழக்குகள் வருகின்றன. இந்தக் குடும்பப் பெண்களின் நம்பிக்கையைப் பாழாக்குகின்ற விதமாக நம்மிடத்தில் எந்த நாசச் சிந்தனையும் வந்து விடாமல் நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டும்.
 
தொலைபேசியில் மார்க்கத் தீர்ப்பு கோருகின்ற பெண்களிடம் கூட நாம் மார்க்க விளக்கங்களைத் தாண்டி வேறு எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளக்கூடாது.
 
பெண் விவகாரத்தில் மட்டுமில்லாமல் ஏனைய பிரச்சனைகளிலும் நாம் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
நாம் போதிப்பது தூய்மை! பரப்புவது தூய்மை! அதற்கு மாற்றமாக நாம் நடந்து கொள்ளக் கூடாது
 
என்று எழுதி குபுரா மேட்டரை உண்மைப்படுத்தியது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Thursday, April 16, 2015, 11:24
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளுக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள் முகநூல் வழியாக பரப்பபடுவது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை யார் தவறு செயதாலும் அதற்கு என்ன நடவடிக்கை உண்டோ அதை எடுக்கும். அதில் சமரசம் செய்யாது. எனவே மாநில நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்துவோர் அதற்கான ஆதாரங்களுடன் மேலாணமைக்குழுவுக்கு புகார் அனுப்பி விசாரணைக்கு ஒத்துழைக்க முன் வந்தால் உரிய முறையில் விசாரித்து தயவு தாட்சனையுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்னஞ்சல் முகவரி: shamsulluha@gmail.com
இப்படிக்கு
எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி

இந்த அறிவிப்பின் அடிப்படையில்தான்

மேலாண்மைக்குழுவின் முக்கிய அறிவிப்புபடி நடவடிக்கை எடுப்பீர்களா?

என்ற கடிதம் அனுப்பி உள்ளோம். இப்பொழுது கோர்ட்டுகள் முக்கியமான வழக்குகளை தாங்களாகவே முன் வந்து எடுத்துக் கொள்கின்றன.
 
இந்த அறிவிப்பு வழக்கமான நாடகம் இல்லை எனில் லுஹா தன்னையே சாடசியாகக் கொண்டு தானாகவே  நடவடிக்கை எடுப்பார்.
 

 

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.