தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?

நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை.

தென்காசிக்காக மீட்டிங். தென்காசியில் மீட்டிங். இது போல் அறிவிப்பு செய்து தென்காசிக்கு அப்பால் பல ஊர், பல மைல்கள் தாண்டி கூட்டம் போட்டு தென்காசி என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விளம்பரம் தேடும் கூட்டம் ஒரு புறம். உண்மையை எழுதினால் எதை எழுதினாலும் விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்ற அறிவுரை ஒரு புறம். விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்று எழுதும் உள்ளங்களின் எண்ணம் நல்ல எண்ணம். போல் தோன்றலாம். ஆனால் அது இஸ்லாம் காட்டிய வழி அல்ல. நன்மையை சொல்லுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை அல்ல. நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அபுஜஹ்லை விமர்சிக்கவில்லை. அவனது துரோகச் செயல்களை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டவில்லை என நிரூபித்து விட்டால். தன்னை அபுஜஹ்லை விட மோசமானவன் என்று சொன்னவனை நாம் விமர்சிப்பதையும் அவனது சமுதாய விரோத செயல்களையும் அடையாளம் காட்டாமல் விட்டு விடுவோம்.

மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டுமா? வேண்டாமா? சிந்தியுங்கள்.

கோத்ரா ரெயிலை எரித்து விட்டு அதைக் காரணம் காட்டி குஜராத்தில் நடந்த மோடி ஆட்டம் பற்றி டெஹல்கா செய்தி வெளியிட்ட உடன் அதை பலர் திரும்பத் திரும்ப மெயிலாக அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். தன்னை அபுஜஹ்லை விட மோசமானவன் என்று சொன்னவன் கோத்ராவில் முஸ்லிம்கள்தான் ரெயிலை எரித்தார்கள் என்று 2002இல் சென்னை நேதாஜி நகர் பள்ளியில் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பேசினான். ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரைக் குறிப்பிட்டே குற்றச்சாட்டு வைத்தான். அப்பொழுது அபுஜஹ்லை விட மோசமான அவனின் அந்தப் பேச்சை நாம் மட்டுமே கண்டித்து விமர்சித்து மெயில் அனுப்பினோம். இன்று மோடியின் சதி திட்டம் அம்பலம் ஆன பிறகு மோடிக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் ஒருவனாக தன்னைக் காட்டிக் கொண்டிருக்கிறான். போராட்டங்களையும் அறிவித்து இருக்கிறான். அபுஜஹ்லை விட மோசமான இவனை, இந்த சமுதாய துரோகியை விமர்சித்து மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டுமா? வேண்டாமா? சிந்தியுங்கள்.

தென்காசி மக்கள் மன நிலைகள் வேறு விதமாக உள்ளது.

தென்காசி பிரச்சனைகளுக்கு வருவோம். தென்காசியில் இந்து முன்னணி குமார பாண்டியன் கொலை. த.மு.மு.க. மைதீன் சேட் கான் அவர்களை கொலை செய்ய முயற்சித்து நடந்த கொலை வெறி தாக்குதல். இரண்டு அணி மோதலில் அணிக்கு மூவர் வீதம் 6 பேர் கொல்லப்பட்டனர். இதுதான் தென்காசி பிரச்சனை என இன்றைய அரசும் இப்போதைய அரசு அதிகாரிகளும் எண்ணி உள்ளார்கள். எனவே இந்த அளவிலேயே அவர்கள் பார்வை உள்ளது. தென்காசி மக்கள் மன நிலைகள் வேறு விதமாக உள்ளது. நோன்புப் பெருநாளையொட்டி தென்காசிக்கு சென்றிருந்தோம். அப்பொழுதும் அதற்குப் பிறகும் தென்காசிவாசிகளிடம் பேசியதில் கிடைத்த தகவல்கள் இதோ.

நேரம் இல்லாதவர்கள் கூட்டத்துக்கு வரக் கூடாது.

ஓவ்வொரு கலவரத்தின் போதும் பீஸ் கமிட்டி எனும் பெயரால் கூட்டம் போடுகிறார்கள். அது சம்பிரதாயத்துக்காகவே கூட்டப்படும் கூட்டமாகவே இருக்கிறது. எந்த பயனும் இல்லை. பீஸ் போனவர்களை அழைக்கிறார்கள். பீஸ் கமிட்டி என்றால் என்னவென்றே தெரியாதவர்களை அழைக்கிறார்கள். பீஸ் கமிட்டி கூட்டம் என்றால் சமாதான கூட்டம் என்று கூட தெரியாமல் அது பரம்பரை பதவி என எண்ணக் கூடிய முட்டாள்களையும் அழைக்கிறார்கள். ஓட்டுக்காக இரண்டு பக்கமும் நடிப்பவர்களை அழைக்கிறார்கள். இத்துப் போன செத்துப் போன கபுரடி மண்ஷhக்களை அழைக்கிறார்கள். ஆக கூட்டுவது சமாதானத்தின் பெயரால். ஆனால் ஏற்படுத்துவதோ பிரச்சனையை. கூட்டுவது சமாதானக் கூட்டம் என்றால் அரசினரும் அதிகாரிகளும் நேரம் எடுத்து வர வேண்டும். நேரம் இல்லை எனில் கூட்டத்தைக் கூட்டக் கூடாது. அல்லது நேரம் இல்லாதவர்கள் கூட்டத்துக்கு வரக் கூடாது.

யாரையும் மனம் திறந்து பேச விடவில்லை.

26.10.07 தென்காசியில் பீஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. அமைச்சர், கலெக்டர், எஸ்.பி. எம்.எல்.ஏ. என கலந்த கொண்ட அந்தக் கூட்டத்தில் யாருக்கு நேரம் இல்லையோ தெரியவில்லை. இன்று வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் எனவே விரைவாக முடிப்பதாகக் கூறி உள்ளார்கள். இதை பி.ஜே.பி.யினர் விமர்சித்துள்ளனர். கூட்டியது சமாதானத்தின் பெயரால். ஏற்படுத்தியதோ பிரச்சனையை. கூட்டத்தில் அங்கே பாலம் கட்ட வேண்டும் இங்கே ரோடு போட வேண்டும் என முனிசிபல் கூட்டத்தில் பேசுவது போல் பேசினார்கள். யாரையும் மனம் திறந்து பேச விடவில்லை. மக்கள் மன நிலைகளை அறிந்து அவர்கள் கூறும் கருத்துக்களை கேட்க வேண்டும். மக்கள் விருப்பப்படி அவர்களை மனம் விட்டுப் பேச விட வேண்டும். மனம் திறந்து பிரச்சனைகளை பேசினால்தான். மனதில் உள்ளதை உள்ளபடி கொட்டினால்தான் உரிய தீர்வு காண முடியும். இதை உணர்ந்தவர்களாக கூட்டம் நடத்துபவர்கள் இல்லை.

உள்ளதை உள்ளபடி பேசுகிறவரை மேடை ஏற விடாமல் தடுத்து விடுகிறார்கள்.

இது மிகவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கருத்து. எங்கும் மனம் திறந்து பேசுகிறவர்களை, உள்ளதை உள்ளபடி பேசுகிறவர்களை பேச விடுவதில்லை. நாங்கள் ஐஸ் வைக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே அதிகாரிகளை அமைச்சர்களை, கலெக்டாகளை, எஸ்.பி, எம்.எல்.ஏ.க்களை ஐஸ் வைத்து பேசும் போலிகள்தான் பீஸ் கமிட்டி கூட்டம் எனும் பெயரால் நடத்தப்படும் கூட்டங்களில் பேச அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு அமைப்பின் மேடையாக இருந்தாலும் ஒருவர் உள்ளதை உள்ளபடி பேசுவார் என்றால் சதி திட்டங்கள் மூலம் உள்ளதை உள்ளபடி பேசுகிறவரை மேடை ஏற விடாமல் தடுத்து விடுகிறார்கள். இது நாம் கண்ட அனுபவமும் கூட.

அனைவரும் வேடதாரிகளாகவே இருக்கிறார்கள்.

இன்னொரு மீட்டிங் இப்தார் நிகழ்ச்சியாக ஐக்கிய ஜமாஅத் எனும் பெயரில் கொலைக் குற்றத்தில் சிறை தண்டனை பெற்றவரைக் கொண்டு முஸ்லிம்கள்(?) நடத்தினார்கள். அதில் பேசிய சாமியார் ஒருவர் முஸ்லிம்களுக்குரிய பாபரி மஸ்ஜிதை இந்துக்கள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். உட்சாக மடையர்களான சில முஸ்லிம்கள் இதை எஸ்.எம்.எஸ். பண்ணி பரபரப்பாக பரப்பி இருக்கிறார்கள். அதற்கு பதில் அனுப்பிய ஒரு அறிவாளி பாபரி மஸ்ஜிதை கட்டிக் கொடுக்க வேண்டாம். அதை வட நாட்டில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்வார்கள். தென்காசியில் உள்ள முஸ்லிம்களுக்குரிய பள்ளியை முஸ்லிம்கள் கட்ட தடையாக இருப்பவர்களில் இந்த சாமியாரும் ஒருவர். ஐக்கிய ஜமாஅத்தின் இப்தார் கூட்டத்pல் சாமியார் பேசியது மனம் திறந்த பேச்சா? அப்படியானால் தென்காசியில் உள்ள பள்ளியை முஸ்லிம்கள் கட்ட தடையாக உள்ளவர்களிடம் பேசி சரி செய்யட்டும் என கூறி இருக்கிறார். உடனே அந்த சாமியாரிடம் போய் பேசி இருக்கிறார்கள். முடியாது என்று கூறி விட்டார். ஆக சமாதனத்தின் பெயரால் கூடுபவர்கள் அனைவரும் வேடதாரிகளாகவே இருக்கிறார்கள்.

அப்பொழுது இருந்த நியாயமான அதிகாரிகள்.

தென்காசி பிரச்சனை இன்று நேற்று தோன்றியது அல்ல. 1969 ஆம் ஆண்டு தென்காசி பசாரின் பொது இடத்தில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து கோயில் உருவாக்கினார் காங்ரஸ் கட்சியில் இருந்த சொர்ணத் தேவர்; என்பவர். யார் இந்த சொர்ணத் தேவர்.? இவர்தான் இந்து முன்னணி குமார பாண்டியனின் தந்தை. அன்று காங்ரஸ் கட்சியில் இருந்தார். உடனே முஸ்லிம்கள் தரப்பில் போட்டிக்கு ஒரு தர்கா கட்டினார்கள். பிரச்சனை எழுந்தது. தென்காசி வரலாறு காணாத அளவுக்கு கலவரம் வெடித்தது. முஸ்லிம்களின் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது. சொத்துக்கள் அழிக்கப்பட்டது. அப்பொழுது இருந்த நியாயமான மேல் அதிகாரிகள் தர்காவையும் அப்புறப்படுத்தினார்கள். சொர்ணத் தேவர் தென்காசி பசாரின் பொது இடத்தில் கட்டிய பிள்ளையார் சிலையையும் அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகே அமைதி திரும்பியது.

தென்காசியை இந்து முஸ்லிம் கலவரக் காடாக ஆக்கியது.

1986 ஆம் ஆண்டு செய்யது குருக்கள் தாதா பீர் (உருதுவில் தாதா என்றால் பாட்டனார்) எனப்படுவோர் எடுத்து வந்த முஹர்ரம் பஞ்சா வழக்கம்போல் தென்காசியில் வலம் வந்தது. இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று என்பது தனி விஷயம். அப்பொழுது எம்.எல்.ஏ.வாக இருந்த காங்ரஸ் கட்சியைச் சார்ந்த வக்கீல் வெங்கட்ரமணன் வீடு இருக்கும் தெற்கு ரத வீதியில் வந்து கொண்டிருந்தது பஞ்சா. காங்ரஸ் கட்சியைச் சார்ந்த வக்கீல் வெங்கட்ரமணன் எம்.எல்.ஏ வீட்டு வாசலுக்கு வந்ததும் அந்த வீட்டிலிருந்து செருப்பு வந்து விழுந்தது. அப்பொழுது அந்த வீட்டினுள் இருந்தவர் சொர்ணத் தேவர். இவர் யார்? இவர்தான் இந்து முன்னணி குமார பாண்டியன் தந்தை. இதை மீண்டும் உங்கள் நினைவில் கொள்ளுங்கள். அன்று காங்ரஸ் கட்சியில் இருந்தார். அந்த செருப்பு வீச்சு தென்காசியை இந்து முஸ்லிம் கலவரக் காடாக ஆக்கியது.

அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தை ஒட்டி நாம் செய்த முயற்சியால் முஹர்ரம் பஞ்சா தென்காசியில் தடை செய்யப்பட்டது. மேலப்பாளையம் பஞ்சாவில் சிலம்பாட்டம் தடை செய்யப்பட்டது. http://mdfazlulilahi.blogspot.com/2007/01/blog-post_18.html
முஹர்ரம் பஞ்சா தடை செய்யப்பட்டது நல்ல காரியம்தான். ஆனாலும் எம்.எல்.ஏ வீட்டிலிருந்து செருப்பு வீச்சு. பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு. முஸ்லிம் பெண்களைப் பார்த்து முக்கால் உனக்கு எதற்கு முழுசும் நான் தாரேன் என போட்ட கோஷங்கள். இப்படியான இந்த ரணங்கள் இன்னும் முஸ்லிம்களிடம் ஆறவில்லை. எம்.எல்.ஏ வீட்டிலிருந்து செருப்பு வீசி விட்டு செய்த அந்தக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் கடைகள் சூறையாடப்படன. மரத்திலான சொருகு கதவுகள்தான் அப்பொழுது இருந்தன. ஒவ்வொரு கடைகளிலும் அந்த சொருகு கதவுகளைத் தவிர எதையும் விட்டு வைக்காமல் அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றனர்.

முஸ்லிம்களின் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை.

கூனி சாயப்பட்டறை. நக்கி ரைஸ் மில் ஏ.1 பீடி குடோன் என முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களும் போலீஸார் முன்னிலையிலேயே சூறையாடப்பட்டன. அழிக்கப்ட்டன கடை வீதிகளிலிருந்தவைகளுக்குத்தான் இந்த கதி என்றால் முஸ்லிம்களின் விவசாய நிலங்களையும் விட்டு வைக்கவில்லை. அம்பை ரோட்டில் சுடலை மாட சாமி கோயில் பின் புறம் உள்ள சுக்கன் மதார் அவர்களுக்கு சொந்த மான தென்னந் தோப்பு. பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தோப்புகள். இப்படி முஸ்லிம்களுக்கு சொந்தமான தேங்காய் மாங்காய் தோப்புகள். அனைத்தையும் குறி வைத்து கொள்ளை அடித்துச் சென்றதுடன். அவைகளை அழித்தும் சென்றனர். கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு அதைக் காரணம் காட்டி குஜராத்தில் நடந்த மோடி ஆட்டத்திற்கு முன் மாதிரியே தென்காசிதான் என்று சொன்னால் மிகையாகுமா?

100 வயதுடைய பெரிய கொடி மரம்.

தென்காசி அச்சன் புதுரில் உள்ள முஸ்லிம்கள் ஊர்க்கந்தூரி எனும் பெயரால் ஆண்டு தோறும் கொடி ஏற்றம் செய்வார்கள். இதுவும் இஸ்லாத்தில் இல்லாத பித்அத்களில் ஒன்று என்பது தனி விஷயம். இதற்காக 100 வயதுடைய பெரிய கொடி மரம் ஒன்றும் இருந்தது. 100 வருடமாக உள்ள அந்த கொடி மரத்தை இந்து தேசம் கட்சியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த சுப்ரமணி ஐயர் என்பவர் இந்து மதத்தின் பெயரால் உரிமை கொண்டாடினார். இப்பொழுது இந்து மக்கள் கட்சி எனும் பெயரால் உள்ள அந்தக் கட்சி அப்பொழுது இந்து தேசம் கட்சி என்ற பெயரில் இருந்தது.

அச்சன் புதூர் முஸ்லிம் இளைஞர்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டனர்.

1986 ஆம் ஆண்டு பஞ்சா மீது செருப்பு வீசி வம்பிழுத்தவர்களின் பின்னணிதான் இது என்பதை உணர்ந்த அச்சன் புதூர் முஸ்லிம் இளைஞர்கள் அறிவுப்பூர்வமாக செயல்பட்டனர். 100 வருடமாக கொடி ஏற்றி வரும் அந்த கொடி மரத்தை விட்டுக் கொடுப்பதாக இறங்கி வந்தனர். இப்படி துவங்கிய பேச்சு வார்த்தையில் 2 பேருக்குமே அந்த மரம் வேண்டாம். இனி இந்து தேசம் கட்சியை சார்ந்த சுப்ரமணி ஐயர் அச்சன் புதூருக்குள் நுழையவேக் கூடாது என உடன்படிக்கை செய்தனர். இந்த உடன்படிக்கைப்படி 100 வயதுடைய அந்த பெரிய ஊர்க்கந்தூரி கொடி மரம் வெட்டி அடியோடு அகற்றப்பட்டது. வேரும் வேரடி மண்ணும் அடையாளம் இல்லாமல் அகற்றப்பட்டது.

டி.எஸ்.பி. ராகவாச்சாரியார் தனது வீட்டோ பவரை பயன்படுத்தினார்.

அப்பொழுது டி.எஸ்.பி.யாக இருந்த ராகவாச்சாரியார் நடுநிலையாளர் போல் காட்டிக் கொண்டார். உள்ளுக்குள் இந்து தேசம் கட்சி சுப்ரமணி ஐயருக்கு ஆதரவாகவே செயல்பட்டார். கொடி மரம் வெட்டப்பட்ட பிறகும் சுற்று வட்டாரங்களில் இந்து தேசம் கட்சியின் சுப்ரமணி ஐயர் பிரச்சனைகளை உருவாக்கினார். பிரச்சனைகளுக்கு காரணமான இந்து தேசம் கட்சியின் சுப்ரமணி ஐயர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அளவுக்கு டி.எஸ்.பி. ராகவாச்சாரியார் தனது வீட்டோ பவரை பயன்படுத்தினார். அவரைப் பற்றிய நல்லெண்ணக் குறிப்பை எழுதி வைத்து விட்டார். தென்காசியிலிருந்து மாற்றலாகிய டி.எஸ்.பி. ராகவாச்சாரியார் கோவைக்குப் போனப் பிறகுதான் அங்கும் பிரச்சனைகள் ஏற்படுத்தப்பட்டன. செக் போஸ்ட்கள் உருவாகின.

முதலில் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்தார்கள்.

1994இல் தென்காசி இலஞ்சி குமாரசாமி கோயில் தேருக்கு தீ வைக்கப்பட்டது. தீ வைத்தவர்கள் யார் என்று காவல் துறை ஆய்வு செய்யும் முன்பே பச்சைத் துரோகிகளான முனாபிக் லீக்கின் தென்காசி பொறுப்பாளன் மண்ஷh என்பவன் ஜாக் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது பழி சுமத்தினான். 1994 ஆகஸ்டு 28இல் நடந்த ஜாக் இஜ்திமா நோட்டீஸை கொடுத்தான். அது தேரின் அருகில் கிடந்தது என்றான். அதனால் ஜாக் அமைப்பில் இருந்த முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் அதிகாரிகள் பிடித்தார்கள். நியாயமான மேலதிகாரிகள் தலையிட்டு முதலில் முஸ்லிம் இளைஞர்களை விடுதலை செய்தார்கள்.

ரோஸ் மஹாலில் பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

இலஞ்சி குமாரசாமி கோயில் தர்மகர்த்தா தேர்தலில் பழையவர்கள் தோற்று புதியவர்கள் வந்துள்ளார்கள். தேக்கு மரத்திலான தேரில் உள்ள பல தேக்குகளை பழைய தர்மகர்த்தாக்கள் விற்று இருக்கிறார்கள். அது கண்டு பிடிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்குள் உள்ள தகராறில் அவர்களே தீவைத்துக் கொண்டார்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. தமிழக அளவில் நடக்கவிருந்த மிகப் பெரிய கலவரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. பச்சைத் துரோகிகளான முனாபிக் லீக்கின் தென்காசி பொறுப்பாளன் மண்ஷh மூஞ்சில் கறி பூசப்பட்டது. மேலப்பாளையம் ஜாக் சார்பில் காவல் துறைக்கு நன்றி போஸ்ட்டர்கள் ஒட்டினோம். நன்றிக்குரிய போலீஸ் அதிகாரிகளுக்கு ரோஸ் மஹாலில் பாராட்டு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

பொய் குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

அதே கால கட்டத்தில் பாண்டியன் என்பவரது கடையின் கூரைக்கு தீ வைக்கப்பட்டது. தீ வைத்தவர்கள் யார்? முஸ்லிம் இளைஞர்கள்தான் தீ வைத்திருப்பார்கள் என்ற ரீதியில் போலீஸாரின் பார்வையை திருப்பி விட்டார்கள். நியாயமான அதிகாரிகளின் பார்வை மிகச் சரியான வழியில் போனது. கடையின் கூரைக்கு தீ வைக்கப்பட்ட பாண்டியன் என்பவர் இன்சூரன்ஸ் பேங்கில் லோன் எடுத்து இருக்கிறார். அதை கட்ட முடியாத பாண்டியன் திட்டத்தில் வந்ததே இந்த தீ. அவரே அவர் கடைக்கு தீ வைத்தார் என்பதை நியாயமான அதிகாரிகள் கண்டு பிடித்தார்கள். முஸ்லிம் இளைஞர்கள் மீதான பொய் குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்கள். நடக்கவிருந்த கலவரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது முனாபிக் லீக்கின் தென்காசி பொறுப்பாளன் மண்ஷh மூஞ்சில் கறி பூசப்பட்டது.

மய்யத் லீக்கினர் ஒரு முடிவுக்கும் வரவில்லை.

இதே கால கட்டத்தில்தான் முஸ்லிம்களே உங்கள் கடைகளை காலி செய்யுங்கள் இல்லையேல் உங்களை கொலை செய்வோம். இப்படிக்கு இந்து தேசம் கட்சி என்று முஸ்லிம் கடைகளுக்கு கடிதங்கள் வந்தன. இந்துக்களே உங்கள் கடைகளை காலி செய்யுங்கள் இல்லையேல் உங்களை கொலை செய்வோம். இப்படிக்கு முஸ்லிம் தற்கொலைப் படை. இப்படி இந்து கடைகளுக்கு கடிதங்கள் வந்தன. முஸ்லிம் கடைகளுக்கு வந்த கடிதங்கள் சம்பந்தமாக மய்யத் லீக்கினர் ஒரு முடிவுக்கும் வரவில்லை. ஆனால் இந்து கடைகளுக்கு வந்த கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து கடைக்காரர்கள் போலீஸில் கம்ளைண்ட் கொடுத்து விட்டனர். உடனே முஸ்லிம் இளைஞர்கள் பிடிக்கப்பட்டனர். அதன் பிறகுதான் மய்யத் லீக்கினர் முஸ்லிம் கடைகளுக்கு வந்த கடிதங்களை போலீஸில் கொடுத்தார்கள்.

அன்றும் ஒரு கலவரத்தை தென்காசி சந்தித்து இருக்கும்.

முஸ்லிம் கடைகளுக்கு வந்த கடிதங்களிலுள்ள எழுத்துக்களும் இந்து கடைகளுக்கு வந்த கடிதங்களிலுள்ள எழுத்துக்களும் ஒரே மாதிரியாக இருந்துள்ளதை போலீஸார் கண்டார்கள். அதன் பிறகுதான் முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்தி முறையான ஆய்வு செய்தனர். இதை எழுதியவன் இட்லி கடை குமார் என கண்டு பிடித்தனர். கோயில் அருகில் இட்லி கடை வைத்துக் கொண்டு விபச்சார தொழில் செய்ததால் அவனை காலி செய்ய இந்துச் சகோதரர்கள் முயற்சி செய்துள்ளனர். எனவே கலவரத்தை தூண்டி அவர்களை பழி வாங்க இட்லி கடை குமார் முயற்சி செய்துள்ளான். இந்துக் கடைகளுக்கும் கடிதம் அனுப்பியதால்தான் விரைவில் உண்மை வெளி வந்தது. இல்லையெனில் அன்றும் ஒரு கலவரத்தை தென்காசி சந்தித்து இருக்கும். இப்படிப்பட்ட தென்காசியில் சமீப காலமாக மீண்டும் கலவரங்கள் வர குமார பாண்டியன் கொலைதான் காரணம் என்பது போல் படம் காட்டப்படுகிறது. உண்மை அதுவல்ல.

தென்காசியில் மீண்டும் கலவரங்கள் வர காரணமாக ஆனது.

களவாடிய பத்திரிக்கைக்காரனும் இது மாதிரிதான் செய்தி வெளியிட்டுள்ளான். அவன் பொய்யன் என்பது உலகறிந்த உண்மை. மத துவேஷங்களை தூண்டி குளிர் காய எண்ணிய சமூக விரோதிகள் சதி திட்டம் போட்டார்கள். முஸ்லிம் பெண்களை குறி வைத்து இழுத்துச் சென்று விடுவது என்பதுதான் அவர்கள் போட்ட அந்த சதி திட்டம். அவர்கள் திட்டப்படி பல முஸ்லிம் பெண்களை இழுத்துச் சென்றார்கள். முஸ்லிம் பெண்களை இழுத்துச் செல்லும் செயல்களை முன்னின்று செய்தவர்கள் இந்து முன்னணியினர். தலைமை வகித்தது குமார பாண்டியன். நூர்ஜஹான் ஆண்டாள் ஆனாள். நவ்ஷத்நிஸா ரஞ்சிதாவாக ஆனாள். என போட்டோவுடன் பத்திரிக்கையிலே செய்தி வெளியிட்டார்கள். அவற்றை தென்காசி பசார் வீதிகளில் ஒட்டினார்கள். இந்த செயல்கள்தான் தென்காசியில் மீண்டும் கலவரங்கள் வர காரணமாக ஆனது.

ஒவ்வொரு சமுதாயமும் அடையாளம் காண வேண்டும்.

இதனைச் சொல்லிக் காட்டி முஸ்லிம் இளைஞர்களை சில மவுலவிகள் உசுப்பி விட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களின் மானப் பிரச்சனையாக ஆக்கினார்கள். இன்று ஜிஹாது பெயரால் இருப்பவர்களில் இருவர் குமார பாண்டியன்களுக்கு துணை நின்றவர்கள்தான் என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்கள் தரப்பில் உள்ளது. முஸ்லிம் என்பவன் நியாயத்தையே பேச வேண்டும். இன உணர்வு பார்ப்பவன் இஸ்லாமியனே இல்லை என இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி உள்ளார்கள். சொந்த விரோதத்தில் மோதி விட்டு அதற்கு மதச் சாயம் பூசி ஆதாயம் தேடுபவர்களை ஒவ்வொரு சமுதாயமும் அடையாளம் காண வேண்டும்.

ஒவ்வொரு நோக்கம் இருந்திருக்கிறது.

எந்தக் கட்சியாக இருந்தாலும் எதிர் கட்சியாக ஆகி விட்டால் கலவரம் வராதா என ஏங்குபவைகளாகவும். கலவரத்தை தூண்டக் கூடியவைகளாகவும்தான் உள்ளன. அது மாதிரிதான் சொந்த விரோதத்தில் மோதி விட்டு அதற்கு மதச் சாயம் பூசி ஆதாயம் தேடுபவர்களும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் ஒவ்வொரு நோக்கம் இருந்திருக்கிறது. தென்காசி பிரச்சனைக்குரியதாக ஆகும்பொழுதெல்லாம் அதன் சுற்று வட்டாரங்களில் வியாபாரம் நன்கு பெருகி இருக்கிறது. எனவே இப்பொழுது தென்காசியின் சுற்று வட்டாரங்களில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த வியாபாரிகள் இந்த மத வெறியர்களை தூண்டி வருகிறார்கள். எனவே இதையும் ஒவ்வொரு சமுதாயமும் அடையாளம் காண வேண்டும். எது எப்படியோ இன்று தென்காசி பிரச்சனை உலகளாவிய பிரச்சனையாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்திய நாட்டின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

பி.ஜே.பியும் இந்து முன்னணியும் தென்காசியை மதப் பிரச்சனையாக ஆக்கி வருகிறது. அதனால் எதிர் தரப்பு உலகளாவிய பிரச்சனையாக ஆக்கி வருகிறது. தீவிரவாதத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லை என பகிரங்கமாகக் கூறி விட்டு அந்தரங்கத்தில் அதுதான் இஸ்லாம் என பரப்பி வருபவர்கள் இருக்கிறார்கள். ஐ.எஸ்.ஐ. என்ற பாகிஸ்தான் உளவு அமைப்பு இந்தியாவில் ஊடுறுவி இந்திய பொருளாதாரத்தை அழிக்க, ஒழிக்க, சீரழிக்க முயற்சி செய்கிறது. இது புதிய ஒன்று அல்ல. இந்தியாலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததிலிருந்து உள்ள பிரச்சனை அது. ஐ.எஸ்.ஐ. யின் தீவிர வாதம் மதம் சார்ந்தது அல்ல. ஐ.எஸ்.ஐ. இந்தியர்களைத்தான் பாகிஸ்தானிகளைப் போல் காட்டி பலி இடுமே தவிர பாகிஸ்தானிகளை களத்தில் இறக்காது. ஆனால் அல் கொய்தா அப்படி அல்ல. அவர்களே களத்தில் இறங்குவார்கள். தென்காசி பிரச்சனை உலகளாவிய அல் கொய்தா பிரச்சனையாக ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய நாட்டின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் விருப்பப்படி அவர்களை மனம் விட்டுப் பேச விட வேண்டும். மனம் திறந்து பிரச்சனைகளை பேசினால்தான். மனதில் உள்ளதை உள்ளபடி கொட்டினால்தான் தென்காசி பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காண முடியும்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.