வேஷம் கலைந்தது

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
வெளியீடு
பேராசிரியர் எஸ். எச். அமீருத்தீன்
அமீர் வில்லா
26, ஜானகிராம் காலனி
அரும்பாக்கம், சென்னை – 600 108.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!

சமீபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திலிருந்து பி.ஜே. வெளியேறிய சம்பவம் தமிழக முஸ்லிம்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பி.ஜே. த.மு.மு.க.விலிருந்து விலகினாரா? அல்லது விலக்கப்பட்டாரா? அவரின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன? கொள்கை மோதல் என்று அவர் தரப்பிலிருந்து கூறப்படுவது சரியா? அல்லது உள் அந்தரங்கமான வேறு காரணம் எதுவும் உண்டா? இக்கேள்விகளுக்கு சரியான விடை காணவே இப்பிரசுரம் எழுதப்பட்டுள்ளது. இங்கு எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் ஆதாரங்கள் உண்டு. எதுவும் ஊகத்தின் அடிப்படையில் எழுதப்படவில்லை. அவரைக்குறித்து காழ்ப்புணர்ச்சி எதுவும் எனக்கில்லை. நடந்த சம்பவங்களும் அதன் பாதிப்புகளுமே அசைக்கு முடியாத ஆதாரங்களாய் விளங்குகின்றன. ஆகவே அச்சம்பவங்களை கோர்வை செய்து நடுநிலை நின்று ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இதனை வாசகர்கள் விருப்பு, வெறுப்புக்கு ஆளாகாமல் திறந்த மனதுடன் படிக்க வேண்டுகிறேன்.

மேலே கேட்கப்பட்டுள்ள கேள்விகள் சிலவற்றுக்கு த.மு.மு.க. தலைமை விடையளித்து செய்திமடல் ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் சொல்லப்படாத சம்பவங்களும், செய்திகளும் உண்டு. அவைகளை வெளியிட கழகத்தின் கண்ணியம் அவர்களுக்குத் தடையாக இருந்திருக்கலாம். ஆனால் மக்கள் முழு உண்மையையும் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்று கருதும் நான் அவைகளை கூடுதலாக உங்கள் முன் வைக்கிறேன். ஏனெனில் சமுதாயத்தை பிரிவினைப்படுத்தி சீரழிவுக்கு ஆளாக்கும் தன்னலப் போலிகளை அடையாளம் காட்டுவது சமூக சேவகர்களின் கடமையாகும். கபட சிந்தனையுடைய சமயவேடதாரிகளின் வேஷம் கலைக்கப்பட்டு அவர்களது சுயரூபத்தை மக்களுக்கு காட்டுவதும் நம் எல்லோருடைய கடமையாகும்.

இங்கு எழுதப்பட்டுள்ள சில வார்த்தைகள், வாசகங்கள் கடுமையானவை என சிலர் கருதலாம். ஆனால் அவைகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல. சொல்லவரும் கருத்தின் ஆழத்தையும், வேகத்தையும் உணர்த்துவதே அவைகளின் நோக்கம். திருடுபவனை திருடன் என்றுதான் சொல்ல வேண்டும். விபச்சாரம் செய்பவனை விபச்சாரி என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் மென்மையான வார்த்தைகளைப் போட்டு கருத்துச் சிதைவு செய்ய நான் விரும்பவில்லை.

சுதந்திர இந்தியாவில் சிறுபான்மை சமூகத்தில் அரசியல் போலிகள் இருந்திருக்கிறார்கள். ஏன் இன்னும் கூட அதிகமாகவே இருக்கிறார்கள். அவர்களின் சமூக அரசியல் நடவடிக்கைகளே, அவர்களின் போலித்தன்iமையை மக்களுக்குக் காட்டிக் கொடுத்து விடுகின்றது. கடந்த அரை நூற்றாண்டுகளாக சமூகத்தைப் பகடைக்காயாக வைத்து அரசியல் நடத்தியவர்கள் உண்டு. அவர்கள் சமுதாய நன்மைகளை ஆளும் வர்க்கத்திடம் அடகு வைத்துவிட்டு, தங்களின் சொந்த நலன்களை பெருக்கிக் கொண்டதை இந்த சமுதாயம் கண்டது. அதன் விளைவுதான் த.மு.மு.கவின் பிறப்பும் எழுச்சியுமாகும். 1995ல் வெளி உலகில் அறிமுகத்துக்கு வந்த த.மு.மு.க. மிகக் குறுகிய காலத்தில் தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ பேரியக்கமாக மாறியது. அதற்கு காரணம் அது அனைத்து முஸ்லிம்களின் நலனையே கருத்தில் கொண்டு செயல்பட்டதுதான்.

மார்க்கத்தின் பெயராலும் மக்கள் சுரண்டப்பட்டார்கள். மார்க்கம் அனுமதிக்காத பல அனாச்சார பழக்க வழக்கங்களும், சடங்கு சம்பிரதாயங்களும் மக்களிடையே புகுத்தப்பட்டு ஆலிம்கள் என்போர் தங்களை வளர்த்துக் கொண்டார்கள். இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்படாத அக்கால கட்டத்தில் இவையெல்லாம் பரவலாக நடந்து வந்தன. ஆலிம்களின் ஏழ்மையும், இல்லாமையும் அதற்கு ஒரு காரணம் எனலாம். அவர்கள் அனைவரும் சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஆதரவுக்கும், அனுதாபத்திற்கும் உரியவர்கள். அவர்களின் ஏழ்மையைப் போக்கி, கண்ணியப்படுத்தி அவர்களுக்குரிய அந்தஸ்தைக் கொடுக்க வேண்டியது சமூகத்தின் கடமை. அக்கடமையை இச்சமூகம் சரிவர செய்யத் தவறிவிட்டது. ஆனால், இன்று நிலைமை பரவலாக மாறி வருகிறது. முஸ்லிம் சமுதாயம் ஆலிம்கள் விஷயத்தில் அக்கரை காட்டத் துவங்கியுள்ளது. ஆலிம்களும் யதார்த்த நிலையை உணர்ந்து தங்களை மாற்றித் திருத்திக் கொண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் இயக்கங்களின் தாக்கம் அனைவரையும் பரவலாகவே பாதித்திருக்கின்றது.

ஆனால் எந்த காலத்திலும் இந்த ஆலிம்கள் மார்க்கத்தின் பெயரால் வேடம் தரித்து திட்டமிட்டு செயல்பட்டு இயக்க ரீதியாக பொருள்களை குவித்தார்கள் என்றோ, சொத்துக்களைச் சேர்த்தார்கள் என்றோ நாம் சொல்ல முடியாது. பிறமத சமுதாய மக்களிடையே மலிந்துக் காணப்படும் போலிச்சாமியார்களைப் போன்று முஸ்லிம் சாமியார்களைக் காண்பது அரிது. எந்த ஆலிமும் இதுவரை செய்யாத ஒன்றைத்தான் இன்று அந்த உலவி செய்து புதிய வரலாறு படைக்கப் பார்க்கிறார்.

மேடைகளில் பி.ஜே. இப்படி முழங்குவதுண்டு. 'மனிதர்களில் விலை போகாதவர்கள் யாருமில்லை. ஆனாலும் அவர்களுக்கு ஒரு விலையுண்டு'. சில ஆயிரங்களுக்காக கொள்கைளை வீசி எறியும் அரசியல்வாதிகளை அல்லவா அண்ணன் இப்படி சாடுகிறார் என்று நாம் அப்போது இறுமாந்து இருந்தோம். ஆனால் தன்னிலை விளக்கம்தான் அவர் அளிக்கிறார் என்பது அப்போது நமக்குத் தெரியவில்லை. கோடிகள் சேர்ந்தாலும் கொள்கையை விட்டு அவர் ஓடமாட்டார் என்று நாம் நம்பினோம். ஆனால் அவரோ நம்மை ஏமாளிகள் என்று எண்ணி நையாண்டி செய்திருக்கிறார் என்பது நமக்கு இப்போது புரிகிறது. இன்று சில லட்சங்களுக்காக கொள்கையைத் துறந்து நம்முகத்தில் எல்லாம் கரியைப் புசி ஏமாற்றி இருக்கிறார். நாடகம் நடித்து, நம்பிக்கைத் துரோகமும் செய்துவிட்டார். த.மு.மு.க.வை விட்டு விலகியவர், அதற்கு சொந்தமான டிரஸ்டு சொத்துக்களை மட்டும் விட்டு விலகமாட்டேன் என்று விதண்டாவாதம் புரிகிறார். அதற்காக 'கர்பலா யுத்தம் நடத்துவேன்' என்று ஆர்ப்பரிக்கிறார். தன்னை 'அபூஜஹ்லைவிட கொடியவன்' என்று கூறி மிரட்டிப் பார்க்கிறார். 'த.மு.மு.க.வை அழித்து விடுவேன்' என்று சூளுரைக்கிறார். உண்மையில் அவர் சொன்னதுபோல் அவருக்குரிய விலை அச்சொத்துக்களில் அவருக்கு கிடைத்துவிட்டது போலும். அச்சொத்துக்ளின் மொத்த மதிப்பு என்னவோ ரூபாய் 60 லட்சமே இருக்கும். அவரையோ நாம் உயர்வாக மதித்தோம். கோடான கோடிகளுக்கும் விலை போகாதவர் என்று எண்ணினோம். ஆனால் அவரோ 'என்விலை இதுதான்' என்று தன்னை தரம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இவ்வளவு காலமும் சுமார் 60 லட்சம் பெருமானமுள்ள டிரஸ்டு சொத்துக்கள் இருப்பது கீழ்மட்ட நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் தெரியாது. இது தலைமை நிர்வாகம் புரிந்த மிகப்பெரிய தவறாகும். ஆரம்பகாலத்தில் த.மு.மு.க. வளர்ச்சியை ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சிகள் வரை யாரும் விரும்பவில்லை. முஸ்லிம்கள் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டால் அவர்களின் வாக்கு வங்கிக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதே அவர்களின் கவலை. 'லட்டர்பேடு' சமுதாய கட்சிகளும் தங்களை மக்கள் ஓரம்கட்டி ஒதுக்கிவிடுவார்கள் என்றும் அஞ்சின. இவ்வளவு எதிர்புகளுக்கிடையில்தான் த.மு.மு.க. வளர்ந்தது. த.மு.மு.க. தடை செய்யப்படும் ஆபத்தும் அப்போது இருந்தது. அதனால்தான் கழகத்தின் பெயரில் டிரஸ்டுகள் அமைக்கப்படாமல், தனியாக டிரஸ்டுகள் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டன. ஒருக்கால் த.மு.மு.க. தடை செய்யப்பட்டாலும், டிரஸ்டுகள் முடக்கப்பட மாட்டாது. இது சட்டம் வழங்கிய பாதுகாப்பாகும். த.மு.மு.க. தொண்டர்களுக்கும், ஆதரவு தந்த பொதுமக்களுக்கும் இந்த டிரஸ்டு சொத்துக்களின் விபரம் தெரியாது இருப்பதை இப்போது பி.ஜே. தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். சென்ற ஆண்டு த.மு.மு.க. பெயரிலேயே ஒரு டிரஸ்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, முன்னாலிருந்த டிரஸ்டு சொத்துக்களை அதன் பெயருக்கு மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகளை பி.ஜே. தடுத்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

த.மு.மு.க. அறக்கட்டளைக்கு முந்தைய சொத்துக்கள் மாற்றப்பட்டு இருந்தால் அல்லது அந்த டிரஸ்டுக்கு பி.ஜே. தலைவராக இல்லாது இருந்திருந்தால் அவர் ஒருபோதும் த.மு.மு.க.வை விட்டு விலகிப்போயிருக்க மாட்டார். டிரஸ்டு சொத்துக்களை அபகரிக்கும் நோக்கமே அவர் த.மு.மு.க.வை விட்டு விலகுவதற்கு காரணம் என்று நாம் கூறுவதற்கு அவர் அதற்காக எடுத்து வைக்கும் சொத்தையான வாதங்களே சான்றுகளாகும்.

தன்னை முன்னிறுத்தியே டிரஸ்டு சொத்துக்கள் வாங்குவதற்கு நிதி திரட்டப்பட்டது என்றும், தமக்காகவே அந்நிதியை மக்கள் கொடுத்தார்கள் என்றும், அதனால் அந்த டிரஸ்டுகளுக்கு தானே அதிபதி என்றும் ஊர்தோறும் சென்று ஒப்புவித்த வருகிறார். அவர் அவ்வாறு கூறுவதற்கு சான்றுகள் சாட்சிகள் உண்டா என்று நாம் அவரைக் கேட்கிறோம். ஆனால் அந்நிதியைத் திரட்டியவர்கள் அவர் கூறுவதற்கு எதிர்மாறாகவே தீர்மானங்கள் போட்டு நிறைவேற்றி இருக்கிறார்கள். கணிசமான நிதி திரட்டிய தமாம் வாழ் சகோதரர்கள் மற்றும் ரியாத், ஜித்தா வாழ் சகோதரர்களும் ஆங்காங்கே தனித்தனித் தீர்மானங்களை ஏக மனதாக நிறைவேற்றி பி.ஜே.க்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதே சவுதியில் இருந்து நிதி வசூலில் பங்காற்றிய நானும் மற்றும் சிலரும் அவர்களின் தீர்மானங்களை அங்கீகரிக்கும் நேரடி சாட்சிகளாக இங்கு இருந்து கொண்டிருக்கிறோம். இந்நிலையில் அத்தீர்மானங்களை மதித்து பி.ஜே. மரியாதையாக டிரஸ்டுகளின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதே நாகரீகமும், நற்பண்புமாகும்.

வாதத்திற்காக அவர் கூற்றை நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும், அதிலிருக்கும் போலித்தன்மையை அறிந்து கொள்ளுங்கள். கார்கில் சண்டையில் உயிர்துறந்த சிப்பாய்கள் குடும்ப நல உதவிக்கே அன்றைய பா.ஜ.க. அரசு பல வழிகளில் மக்களிடம் நிதி திரட்டியது. கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சினிமா நடிக, நடிகைகளும் அதில் பெரும் பங்காற்றினார்கள். ஆங்காங்கே பல ஊர்களில் விளையாட்டுக்களும், கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு நிதி குவிக்கப்பட்டது. எந்த நோக்கத்திற்காக அந்த நிதி திரட்டப்பட்டதோ, அதற்கே அந்த கலைஞர்கள் மறுப்பின்றி கொடுத்தார்கள். தங்களை முன்னிறுத்தியே மக்களை அந்த நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டை வாங்கச் செய்தார்கள். ஆகவே அதில் தங்களுக்கு பங்கிருக்கிறது என்று அவர்கள் யாரும் கேட்கவில்லை. அப்படிச் சொல்வது நியாயமுமில்லை. சட்டப்படியும் சரியானதில்லை என்பது யாவரும் அறிந்தது. ஆனால் சினிமா நடிக, நடிகைகள் கூட சொல்லாத வார்த்தைகளைத்தான், இன்று பி.ஜே. டிரஸ்டு சொத்துக்கள் பற்றி சொல்லிக்கொண்டுத் திரிகிறார். அப்படி சொல்வதற்கு வேட்கப்படாத அவரது தன்மைதான் நமக்கு வேதனை அளிக்கிறது.

டிரஸ்டு சொத்து பற்றி பி.ஜே. இப்போது முன்வைக்கும் அதே வாதத்தைத்தான் முன்னொரு சமயம் கோவை பாஷhவும் கூறினார். அப்போது த.மு.மு.க.நிர்வாக அலுவலகமும், உணர்வு பத்திரிக்கை அலுவலகமும் புரைசவாக்கம் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்தது. த.மு.மு.க.வின் முயற்சியினால் 'தடா' கைதிகள் அப்போது விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். பாஷhவும் மற்றும் சிலரும் சென்னையில் தங்கி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. 'தடா' கைதிகளை முன்வைத்து த.மு.மு.க. நிதி திரட்டுகிறது என்றும், ஆகவே அதில் தமக்கு பங்கு வேண்டும் என்றும் பாஷh த.மு.மு.க. நிர்வாகிகளிடம் பிரச்சினை எழுப்பிக் கொண்டிருந்தார். (இதனை பி.ஜே. கோவை குற்றப் பத்திரிக்கை வாக்குமூலத்திலும் கூறியுள்ளார்) அது சமயம் நான் விடுமுறையில் தாயகம் வந்திருந்தேன். என்னிடம் பி.ஜே. பாஷhவின் பிரச்சினையை விளக்கிக் கூறினார். அவரிடம் நான் போய் பேசி, சமாதானப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொன்டார். எனது உரையாடலுக்குப் பின் பாஷh தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதன்பின் அவர் தனித்துப் போய்விட்டார். தனியாக செயல்பட்டார். தனக்கு பிரத்யேகமாக நிதி தரவேண்டும் என்று பிரசுரங்கள் மூலம் மக்களிடம் விண்ணப்பித்துக் கொண்டார். அன்றைய தினம் பாஷh செய்த எந்த ஒரு காரியம் சரியில்லை என்று பி.ஜே. கண்டித்தாரோ, அதே செயலை இன்று வெட்கமின்றி டிரஸ்டு சொத்துக்கள் பற்றி கூறி வருகிறார். அவரின் செயல் எவ்வளவு முரண்பாடு கொண்டது என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

முஸ்லிம் மீடியா டிரஸ்டின் ஆரம்பகால சேர்மனாக இருந்த எஸ்.எம்.பாஷh எனும் மற்றொரு பாஷhவின் கதையை உணர்வு பத்திரிக்கை குரல் 42 ல்(ஜுன் 25 ஜுலை 1) எழுதியிருப்பதை படித்துப் பாருங்கள். எஸ்.எம்.பாஷh சேர்மன் பதவியை ராஜினாமா செய்து விட்ட பிறகு, தாம் அதற்கு சேர்மனாக தேர்வு செய்யப்பட்டதாக பி.ஜே. சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், எஸ்.எம். பாஷh இப்போது பா.ஜ.கவில் இருப்பதாகவும் ஒரு உண்மையைப் போட்டு உடைக்கிறார். அதாவது த.மு.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த எஸ்.எம்.பாஷh, நாணயமாக தார்மீக பொறுப்பில் இருந்த தமது சேர்மன் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். பா.ஜ.க. பிரமுகருக்கு இருந்த நாணயமும் நேர்மையும் யோக்கியதையும் தமக்கு இல்லை என்பதை மார்க்க பட்டம் பெற்ற உலவி ஒப்புக் கொள்வதுதான் வேடிக்கை.

சமுதாய நலனை சொந்த நலனுக்காக அழிக்க நினைக்கும் அந்த உலவி யார்? என்பதை இனியேனும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். திருச்சி அபூ அப்துல்லாஹ்வினால் விரட்டப்பட்டு, ஜாக்கிலிருந்தும் துரத்தப்பட்டு, ஆரம்பத்தில் தொண்டியில் கேட்பாரற்று கிடந்தவரை சென்னைக்கு கொண்டு வந்தோம். வாழ்க்கை வசதிகளை செய்து கொடுத்தோம். புரசைவாக்கம் அடுக்குத் தட்டு வீடு ஒன்றில் குடும்பத்துடன் குடியமர்த்தினோம். அண்ணன் கீழே. த.மு.மு.க, உணர்வு அலுவலகங்கள் மேலே. உணர்வலைகள் (உணர்வு தலையங்கம்) கீழிருந்து மேலே பொங்கியது. நெஞ்சில் கைவைத்து இப்போது சொல்லுங்கள். உணர்வு யாருக்குச் சொந்தம்? த.மு.மு.க.விற்கா? அல்லது தவ்ஹீத் ஜமாத்திற்கா? பழனிபாபா படுகொலைக்குப்பின் அண்ணன் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்தோம். பஸ், இரயில்களில் பயணம் செய்வதை தடுத்தோம். டாட்டா சுமோவை அவருக்காக காத்திருக்க வைத்தோம். பாதுகாப்பு வளையம் ஒன்றும் அமைத்துக் கொடுத்தோம். இவற்றை எல்லாம் செய்து கொடுத்த 'த.மு.மு.க தவ்ஹீது' தொண்டர்களை அண்ணனுக்கு இப்போது நினைவில்லையோ?

புரசைவாக்கம் அலுவலகத்தில் போலீஸ் கெடுபிடி நீடித்தது. கட்டிட சொந்தக்காரர்களின் நெருக்குதலும் தளரவில்லை. அதனால் அங்கிருந்து விரட்டப்பட்டோம். மண்ணடியில் தஞ்சம் புகுந்தோம். இரண்டு ஆண்டுகளில் இது நான்காவது இடம். முதலில் கொடுங்கையூர். அடுத்து வேப்பேரி. பின்னர் புரசைவாக்கம். இப்போது மண்ணடி. இங்கேயும் வாடகைக்கு இடம் கொடுக்க மறுத்தார்கள். உண்மையில் ஆதரவு தந்தவர்களும் கூட அரசின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடுமோ என்று அஞ்சினார்கள். அந்நிலைமையில்தான் த.மு.மு.க.விற்கு சொந்த கட்டிடம் அமைக்க வேண்டும் என்ற ஆவேசம் பிறந்தது. அதுதான் முஸ்லிம் டிரஸ்டு. அண்ணனுக்கு இதுவெல்லாம் நினைவில்லையோ? நடுநிலையாளர்களே இப்போது சொல்லுங்கள் 'தவ்ஹீது ஜமாஅத்'க்கும், முஸ்லிம் டிரஸ்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று?

உண்மையில் இக்காரியங்கள் எல்லாம் நடைபெற்று முடிந்த நேரத்தில் - அதாவது டிரஸ்டுகள் அமைக்கப்பட்டு, சொத்துக்கள் வாங்கப்பட்டபோது உலவியின் வழிகாட்டுதலில் தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பே கிடையாது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது அமைப்பு ரீதியாக இருந்த ஓர் 'தவ்ஹீத் ஜமாஅத்' கமாலுத்தீன் மதனி தலைமையில் உள்ள 'ஜாக்' மட்டுமே ஆகும். இன்று பி.ஜே. டிரஸ்டு சொத்துக்கள் தமது வழிகாட்டுதலில் உள்ள 'தவ்ஹீத் ஜமாஅத்'க்கு மக்கள் சேர்த்துக் கொடுத்தது என்று வாதிடுகிறார். நடுநிலையாளர்களே! சற்று சிந்தித்துப் பாருங்கள்! இல்லாத ஓர் அமைப்பின் நலனுக்கு யாரும் டிரஸ்டுகள் அமைப்பார்களா? அல்லது அப்படி அமைக்கத்தான் யாரும் முன்வருவார்களா? இல்லை, இதன் பெயர் சொல்லித்தான் யாரும் வசூல் செய்ய முடியுமா? இல்லாத ஓர் அமைப்பை இருந்தது என்று பி.ஜே. இப்போது கற்பனை செய்கிறார். அல்லது பகிரங்கமாகவே வெட்கமின்றி பொய் சொல்கிறார்.

இன்று பி.ஜே. த.மு.மு.க.விற்கு சொந்தமான முஸ்லிம் மீடியா டிரஸ்ட் மற்றும் முஸ்லிம் டிரஸ்டு சொத்துக்களை அபகரிக்கும் கெட்ட நோக்கத்துடன்தான் த.மு.மு.க.வை விட்டு விலகிக் கொண்டார் என்றே நாம் கருதும்படி இருக்கிறது. கொள்கை மோதல் என்று சொல்வதெல்லாம் வரட்டுவாதம். பித்தலாட்டம். உண்மைக்கு மாற்றமானவை. வாதத்திற்காக அவர் சொல்வதை நாம் இங்கு ஒப்புக்கொள்வதாக வைத்துக் கொள்வோம். ஜாக் என்னவோ அக்காலம்தொட்டு, இக்காலம்வரை த.மு.மு.க.வுடன் உடன்பாடு கண்டதில்லை. த.மு.மு.க.வின் வளர்ச்சி தவ்ஹீது பிரச்சாரத்தை பாதித்து விட்டது என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. அதே குற்றச்சாட்டை இன்று பி.ஜே. இன்று த.மு.மு.க.மீது வீசுகிறார் அல்லவா? அவர் கூறுவது உண்மையென்றால், த.மு.மு.க.வை விட்டு விலகியவர் தமது பரிவாரங்களுடன் தாய்சபை ஜாக்கில் இணைந்து தவ்ஹீது பிரச்சாரத்தை பலப்படுத்துவதுதானே நியாயமும், முறையுமாகும். அவ்வாறில்லாமல், அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்றிருந்ததை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று போலியாக பெயரை மாற்றிக் கொண்டு த.மு.மு.க.வின் பிம்பமாக, பினாமியாக செயல்பட நினைப்பது எவ்வளவு அர்ப்பத்தனம், போலித்தனம் என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

ஆகவேதான் கடந்த கால அவரின் வரலாற்றை ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் வருகிறோம். முஃமீன்களுக்கு பொது வாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் ஒன்றுதான் என்று கூறுவார்கள். ஆனால் அந்த வகையில் சேர்ந்தவரல்ல இந்த பி.ஜே. என்பதுதான் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறும் சாட்சியங்கள். கவர்ச்சிமிகு பேச்சால் அப்படி ஒரு மாயத் தோற்றத்தையே அவர் இந்நாள்வரை மக்களிடையே ஏற்படுத்தி வைத்திருந்தார் என்றே நம்பும்படி இருக்கிறது.

தமிழகத்தில் தவ்ஹீது கொள்கை முளைவிட்டு வளரத்துவங்கிய காலம் அது. திருச்சியிலிருந்து அந்நஜாத் மாத இதழ் வெளிவந்து கொண்டிருந்தது. அதன் ஆசிரியராக அப்போது பி.ஜே. பொறுப்பேற்றிருந்தார். ஆனால் குறுகிய காலத்துக்குள் அபூ அப்துல்லாவுடன் பிரச்சினையை வளர்த்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். அத்துடன் நிற்காமல் அபூ அப்துல்லா மீது அவதூறு பேசினார். பின்னர் ஜாக்கில் நுழைந்தார். அங்கு வளர்ந்தார். அல்-ஜன்னத் பத்திரிக்கை மூலம் பலருக்கும் அறிமுகமானார். முடிவில் அங்கிருந்தும் நகன்றார். தமக்கென்று ஒரு கூட்டம் சேர்ந்ததும் கமாலுத்தீன் மதனி மீது ஊழல் குற்றம் சுமத்தினார். இதுதான் மக்களுக்கு வெளிப்படையாக தெரிந்த செய்திகள். ஆனால் அவ்விரு இடங்களிலிருந்து பி.ஜே. விலகிய காரணத்தை ஆழமாய் ஆராய்ந்தால் ஓர் உண்மை நமக்கு பளிச்சென்று படுகிறது. அது என்னவென்றால் அவ்விரு இடங்களிலுமே நிதி ஆதாரம் அவர் கட்டுப்பாட்டில் இல்லை. முயன்றும் அது அவர் கையில் கொடுக்கப்படவில்லை. வைக்கப்படவேண்டிய இடத்திலேயே அவ்விருவரும் அவரை வைத்திருந்தார்கள். இவைதான் பி.ஜே. அவ்விருவர் மீதும் காழ்ப்புணர்ச்சிக் கொள்ள காரணமாய் இருந்தது.

நிதி கட்டுப்பாடுதான் போட்டிக்கும், மோதலுக்கும் காரணமில்லையென்றால், கொள்கைவாதிகளிடையே வேறு என்ன குழப்பமிருக்க முடியும்? அதுவும் ஆரம்ப காலத்தில் பொது நன்மையைக் கருதி விட்டுக்கொடுத்து பிரச்சினையைப் பேசி தீர்த்துக் கொள்ள மாட்டார்களா? எதிர் எதிர் அணிகளாய் நின்று ஏசித்தான் பகையை வளாத்துக் கொள்ள வேண்டுமா? மாற்றுமத அரசியல் வாதிகளுக்கு இருக்கும் மனப்பக்குவம் கூட இவர்களுக்கு இல்லையா? இப்படி ஆயிரமாயிரம் கேள்விக்கணைகள் நம் உள் மனதைத் துளைத்தெடுக்கின்றன. ஆனால் பி.ஜே.யின் தாவும் குணத்தை ஆராய்பவர்களுக்கு அவரின் கபட சிந்தனை விளங்கவே செய்யும்.

ஆனால் த.மு.மு.க.வில் அவர் அமைப்பாளராக இருந்தார். அதனால் கழக சார்பான டிரஸ்டுகளுக்கு தலைவராக ஆக்கப்பட்டார். தன்னை தக்லீத் (கண்மூடி பின்பற்றும்) செய்யும் சிலரையும் கூட அந்த டிரஸ்டில் உறுப்பினராக நியமித்துக் கொண்டார். டிரஸ்டுகள் வளர்ந்தன. அந்த வளர்ச்சியுடன் பி.ஜே.யின் கபட சிந்தனையும் வளர்ந்தது.

ஒருமுறை திருச்சியில் நடந்த பொதுக்குழுவில் த.மு.மு.க.வை விட்டு விலகப்போவதாக அறிவிப்பு செய்தார். அதுகேட்டு உண்மையில் அனைவருமே ஆடிப்போனார்கள். கீழ்மட்டத் தொண்டரிலிருந்து, மேல்மட்ட நிர்வாகிகள் வரை அனைவரிடமிருந்தும் தன்மீது அனுதாப, ஆதரவு அலை வீசுவதை கச்சிதமாகப் பதிவு செய்துகொண்டார். (இதுவெல்லாம் ஒரு நாடகம் என்பது பின்னால் தெரிய வந்தது) சில காலம் ஓடியது. பின்னர் மனம் திறந்த மடல் என்ற பெயரில் ஒன்றை வீசிவிட்டு கொஞ்சகாலம் விலகியே இருந்தார். அப்போது குர்ஆனுக்கு உரை எழுதி முடித்தார். ஒரு தனி மனிதனைச் சுற்றி ஓர் இயக்கம் வளரக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடனும், அடுத்த தலைமுறைத் தலைவர்கள் உருவாகவும் வழிவிட்டு அல்லவா ஒதுங்குகிறார் என்று என் போன்றோர் அவரது விலகலை வரவேற்றோம். பாராட்டினோம். ஆனால் நடந்தது என்ன? விலகியவர் விலகவில்லை. தாமே திரும்பி வந்தார். வந்தவரை ஏன் வந்தீர்கள்? என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் அவர் திட்டமிட்டு ஏதோ ஒன்றுக்காக செயல்படுகிறார் என்பதை மட்டும் சிலரால் யூகிக்க முடிந்தது.

த.மு.மு.க.வின் அமைப்பாளர் பொறுப்பில் இருக்கும்போதே அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஓர் அமைப்பையும் தனக்காக உருவாக்கிக் கொண்டார். அதில் தன்னை தக்லீத் செய்யும் ஆலிம்களின் கூட்டத்தை உள்ளடக்கிக் கொண்டார். அவரது கணிப்பில் இப்போது அவருக்கு காலம் கனிந்திருக்க வேண்டும். ஆகவே, சமூக அரசியல் சதுரங்கத்தில் வேகமாக காய்களை நகர்த்தத் துவங்கினார். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுக்கும், த.மு.மு.க. நிர்வாகிகளுக்குமிடையே மோதல்களை உருவாக்கினார். அதன் மூலம் த.மு.மு.க. நிர்வாகிகளின் நாடித்துடிப்பை சில காலம் அளந்து பார்த்தார். பிளவு என்று வந்தால் அவர் பக்கம் நிற்பவர்கள் யார்? ஆதரிப்பவர்கள் யார்? என்பதை கணித்துக் கொண்டார். (மேலப்பாளையம் த.மு.மு.க. சார்பாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஊர்தி தொடக்க விழா சம்பந்தமாக நடந்த மோதலும், சென்னையில் நடைபெற்ற 'Pநயஉந' கண்காட்சியில் த.மு.மு.க. தொண்டர்கள் கலந்து கொள்ள தடைவிதித்து பிரச்னை செய்ததும் எனது கூற்றுக்கு ஆதாரங்கள்).

பின்னர், கழகத்தின் கிளை நிர்வாகிகள் சிலரிடையே அவரைப் பற்றிய ஒரு செய்தி ரகசியமாக தெரிவிக்கப்படுவதற்கு அவரே வழி வகுத்தார். செய்தி என்னவென்றால் த.மு.மு.க.வின் தற்காலத் தலைவரையும், பொதுச் செயலாளரையும், நீக்கிவிட்டு தலைவர் இடத்தில் பாக்கரையும், பொதுச்செயலாளராக ஏ.எஸ். அலாவுத்தீனையும் அமர்த்துவதோடு, அன்வர் பாஷhவை பொருளாளர் பதவியில் புகுத்துவது என்பதுதான். அதாவது மொத்தத்தில் த.மு.மு.க.வை முழுமையாக அவரது முழு கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது. அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களைக் களைவது. அப்படி அவர் நினைத்தது போல நடந்து விட்டால் த.மு.மு.க. டிரஸ்ட் சொத்துக்களை அவர் விருப்பம்போல் ஆட்டிப் படைக்கலாம் அல்லவா? இதுதான் அவர் வகுத்த சதித்திட்டம். இத்திட்டத்ததிற்கு அவர் எதிர்பார்த்தபடி கிளை நிர்வாகிகளிடையே வரவேற்பு இல்லை. மாறாக சிலர் அவருக்கே போன் செய்து எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

தாம் போட்ட சதித்திட்டம் நிறைவேறாது என்பதைக் கண்ட பி.ஜே. அச்செய்தியை வதந்தி என்றும், அவதூறு என்றும் கூறி அதை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நிர்வாகத்தை வற்புறுத்தினார். பி.ஜே. பிளேட்டை திருப்பிப் போடுகிறார் என்பது எல்லோருக்குமே விளங்கியது. இருப்பினும் நிர்வாகிகளுக்கு விழி பிதுங்கியது. தர்ம சங்கடத்துக்கு ஆளானார்கள். இங்கு நான் பி.ஜே.யைக் கேட்க விரும்புவது ஒன்றுதான். கிளை நிர்வாகிகள் சிலர் இப்படி ஓர் அவதூறு செய்தியை பரப்புகிறார்கள் என்றோ அல்லது தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டார்கள் என்றோ அறிந்த நீங்கள் அவர்களை உடனே அழைத்து கண்டிக்க வேண்டியதுதானே? உண்மையை எடுத்துக் கூறி அவர்களை திருத்துவதுதானே? அதற்கு உங்களுக்கு தகுதி இல்லையா? என்பதுதான்.

இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால் பிரச்சினையை சுமூகமாக தீர்ப்பதற்கு அவர் தயாராக இல்;லை. மாறாக, அதை பூதாகரமாக வளரவிட்டு அந்தக் காரணத்தைக் கூறி த.மு.மு.க.வை விட்டு விலகப்போவதாக நாடகம் ஆடுவதுதான். இந்த முறை அப்படியும் நாடகம் ஆடிப்பார்த்தார். ஆனால் யாரும் அவரை சட்டைச் செய்யவில்லை. அவர் சட்டையைப் பின்னாலிருந்து பிடித்துக் கொண்டிருந்த பாக்கரும், அலாவுதீனும், அன்வர்பாஷhவும் அவர் பக்கம் சாய்ந்தார்கள். அது அவர் எதிர்பார்த்ததுதான். முன்கூட்டி கணித்ததுதான். இனிமேல் அவர்கள் சதி வெற்றி பெறாது என்ற நிலையில், த.மு.மு.க.வை விட்டு விலகி விட்டதாக திருச்சியில் நடந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் அறிவிப்பு செய்தார்கள். விலகுவதற்கு கொள்கை காரணமென்றார்கள். அனால் த.மு.மு.க.வை விட்டு விலகியவர்கள் அதன் சொத்துக்களை விட்டு விலக மனம் இல்லாமல் முரண்டு பிடிக்கிறார்கள். முஸ்லிம் மீடியா டிரஸ்டுக்குச் சொந்தமான உணர்வு வார இதழை எடுத்துக்கொண்டு அக்கிரமமாய் செயல்படுகிறார்கள். ஒற்றுமை இதழை முடக்கி விட்டார்கள். ஆனால் மக்கள் ஆதரவை இழந்துவிட்ட காரணத்தால், வடமரைக்காயர் தெரு அலுவலகத்திற்கு வருவதற்கு அஞ்சுகிறார்கள். கீழ்தளத்தில் ஞாயிறு மாலையில் நடந்து வந்த பி.ஜே.யின் பயான் இப்போது அங்கு நடைபெறுவதில்லை. அரண்மனைக்காரன் தெருவில் ஒரு பள்ளிவாசலை மாத வாடகை(ரூபாய் 14,000)க்கு எடுத்துக்கொண்டு வெள்ளிக்கிழமைகளில் குத்பா பிரசங்கம் செய்து வருகிறார். அதற்கு விளம்பரங்கள் மண்ணடிதோறும் ஒட்டப்படுகின்றன. இதற்கிடையில் த.மு.மு.க. நிர்வாகிகளை குறிப்பாக தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை வாதத்திற்கு அழைத்ததாக ஒரு செய்தி பரப்பப்பட்டது. 'கைப்புண் பார்க்க கண்ணாடி ஏன்?' என்று அவர்கள் அதை ஒதுக்கிவிட்டு, கழக கிளைகளை வலுப்படுத்தத் துவங்கிவிட்டார்கள். புதிய வார இதழ் ஒன்றையும் முனைப்புடன் கொண்டு வந்து விட்டார்கள். அதுதான் 'மக்கள் உரிமை'. மகுடமாய் திகழ்கிறது. கூட்டம் கலைந்து கலகலத்துப்போன பி.ஜே. இப்போது கூட்டம் சேர்க்க அதிகமாக வெளியூர்களுக்கு போகிறார். அங்கேல்லாம் கூடும் அப்பாவி மக்களிடம் மார்க்கப் பிரச்சாரமும் செய்வதில்லை. மாறாக சதி செய்து தன்னை த.மு.மு.க.விலிருந்து பலவந்தமாக வெளியேற்றிவிட்டதாக புலம்புகிறார். உண்மையை நிலைநிறுத்த முபாஹலா (அல்லாஹ்வின் சாபம் பொய்யர்கள் மீது விழட்டும்) வுக்கு அழைப்பு விடுக்கிறார். 'பொய்யனுக்கு சத்தியம் என்பது சர்க்கரை பொங்கல்' என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது பி.ஜே. விஷயத்தில் சாலப்பொருத்தம்.

நபிகளாரின் 23 ஆண்டுகால நபித்துவ வாழ்க்கையில் ஒரேயொரு முறை முபாஹலாவிற்கு அல்லாஹ்வால் கட்டளையிட்பட்டுள்ளார்கள். நஜ்ரானிலிருந்து பெருமானாரை காணவந்த கிருஸ்துவ குழுவினரை பல நாட்கள் மஸ்ஜிதுந் நபவியில் நபிகளார் தங்க வைத்திருந்தார்கள். அது சமயம் இருவருக்கும் நடந்த விவாதப் பொருள் இறைத்தன்மை பற்றியதாகும். விவாதம் பல நாட்கள் நடந்தும் முற்றுப்பெறாத நிலையில் இறைவன் முபாஹலாவிற்கு எதிர் தரப்பினரை அழைக்கும்படி நபிகளாருக்கு கட்டளையிடுகிறான். இந்த விபரம் அருள்மறை குர்ஆனின் 3வது அத்தியாயம் ஆல இம்ரானின் 61வது வசனத்திலிருந்து விரிவாக சொல்லப்படுகிறது. கிருஸ்துவக்குழு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்காக நபிகளார் அவர்களை சபிக்கவில்லை. 'நாங்கள் முஸ்லிம்கள்' (அதாவது அல்லாஹ்விற்கு வழிப்பட்டவர்கள்) என்பதற்கு நீங்களே சாட்சிகளாய் இருங்கள் என்று கூறி விவாதத்தை அழகாக முடிக்கிறார்கள். இதன் பின்னரும்;கூட எத்தனையோ கொள்கை வழி எதிர் தரப்பினரை பெருமானார் எதிர் கொண்டிருக்கிறார்கள். விவாதங்கள் புரிந்திருக்கிறார்கள். உதாரணம் கூறுவதென்றால் யூதர்களுடன் அவர்கள் நடத்திய விவாதங்களைக் கூறலாம். அப்போதெல்லாம் அவர்களை முபாஹலாவிற்கு பெருமானார் அழைக்கவில்லை. முபாஹலாவிற்கு கிருஸ்துவரை அழைத்த சந்தர்ப்பம் வேறு. அல்லாஹ் அப்படி அழைக்கும்படி அவர்களுக்கு கட்டளையிட்டான். அதைத்தான் செய்தார்கள். நபிகளார் பிற சந்தர்ப்பங்களில் தாமே அழைக்கத் துணியாத ஒன்றைத்தான் பி.ஜே. கடைச்சரக்கு வாங்குவதற்கு அழைப்பது போல சகோதர முஸ்லிம்களை அழைக்கிறார். இதுவெல்லாம் அவருக்கு தெரியாதா என்ன? நன்கு தெரியும். விளங்கும். ஆனால் பித்தம் தலைக்கேறி விட்டது. என்ன பேசுகிறோம். என்ன எழுதுகிறோம் என்பதே தெரியாத ஒரு பரிதாப நிலையில் அவர் இன்று இருந்து கொண்டிருக்கிறார் என்றே நாம் புரிந்து கொள்கிறோம்.

முபாஹலாவிற்கு அழைப்பது என்பது பி.ஜே. கடைப்பிடிக்கும் மலிவு விளம்பரமாகும். உண்மையில் அவருக்கு அதில் அக்கரை இருந்தால் அந்நஜாத் பத்திரிக்கை ஆசிரியர் அபூ அப்துல்லாஹ்வின் அழைப்பை அவர் ஏற்றிருக்க வேண்டும். அதனை ஏற்காது கடந்த ஆறுமாதங்களாக ஓடி, ஒளியும் பி.ஜே. மற்றவர்களை முபாஹலாவிற்கு அழைப்பது என்பது நகைப்பிற்குரியது.

பி.ஜே.யின் கடந்தகால பொதுவாழ்வை ஆராய்ந்தால், அவர் எந்த ஓர் அணியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இருந்ததாக சரித்திரமில்லை. த.மு.மு.க.வில் மட்டும்தான் கடந்த பத்து ஆண்டுகளாக பல சிக்கல், சிதறல்களுக்கிடையே அவர் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. அவரின் மன ஓட்டத்துக்கு எதிராக இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்திருப்பதற்கு காரணம் இல்லாமலில்லை. த.மு.மு.க.வை அவர் பலவாறு தமது சொந்த விருப்பு, வெறுப்புக்கேற்றபடி பயன்படுத்த முடிந்திருக்கிறது என்பதே அந்தக் காரணம். மற்ற இடங்களில் அதை அவரால் அவ்வளவு எளிதில் செய்ய முடியவில்லை. அதனால் ஆரம்பத்திலேயே எதிர்ப்புக்கு ஆளாகி அங்கிருந்து விரட்டப்பட்டிருக்கிறார்.

உதாரணம் கூறுவதென்றால் ஜாக்கில் இருக்கும்போது த.மு.மு.க.வில் அமைப்பாளராக அவர் பொருப்பேற்றதும் (ஊழகெடiஉவ ழக ஐவெநசநளவ) அதாவது இயக்கநலனில் அக்கரை மோதல் ஏற்படும் என்று காரணம் கூறி கமாலுத்தீன் மதனி அவரை ஜாக்கிலிருந்து அகற்றினார். கமாலுத்தீன் மதனி எடுத்த துணிகர முடிவை பி.ஜே. மீது எடுக்க த.மு.மு.க. தலைமை பல நேரங்களில் தவறிவிட்டது. அதனால் த.மு.மு.க.வின் சட்டவிதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவராகவும், மேம்பட்டவராகவும் அங்கு அவர் ஆக்கப்பட்டார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் கடந்த 2000-ல் நடைபெற்ற தவ்;ஹீது மாநாட்டிற்குப் பிறகு அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் என்ற ஒரு அமைப்பை பி.ஜே. உருவாக்கினார். அதுவே பிற்காலத்தில் இரு அணிகளுக்கிடையே அக்கரை நலனில் மோதல் (ஊழகெடiஉவ ழக ஐவெநசநளவ) ஏற்பட காரணமாய் இருந்தது எனலாம். அந்த அமைப்பு ஏற்பட்ட பிறகு பி.ஜே.யின் போக்கு மாறியது. அவரின் செயல்பாடுகள் அவருக்கோ, அன்றி கொள்கை சகோதரர்களுக்கோ பெருமை சேர்ப்பதாக இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து தவ்ஹீது அமைப்புகளையும் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்து விட வேண்டும் என்ற ஓர் ஆவேசத்துடன் அவர் செயல்படத் துவங்கினார். ஒன்று நாம் நினைத்தது நடக்க வேண்டும். இல்லையெனில் அந்த அமைப்புகளை அழிக்க வேண்டும். இதுவே அவரின் குறிக்கோளாய் இருந்தது.

ஜாக் நிர்வாகத்திலிருந்த பல அமைப்புகளில் உள்பூசல்களை உருவாக்கி அந்த அமைப்புகள் சீரழிய காரணகர்த்தாவாய் அவர் விளங்கினார். காரைக்கால் புஷ;ரா மகளிர் அரபிக் கல்லூரியில் அவரின் மறைமுக திருவிளையாடல்களை நேரில் அறிந்தவன் நான். தமது செல்வாக்கிற்கும், கட்டுப்பாட்டிற்கும் வராத பள்ளிகளையும் கல்லூரிகளையும் கபளீகரம் செய்வதற்கு ரவுடித்தனங்களையும் கட்டவிழ்த்து விடுவதற்கு அவர் தயங்கியதில்லை. ஒரு தனியார் நிர்வாகத்தில் உள்ள சென்னை பெரம்பூர் ஜாமியா ஆயிஷh பெண்கள் கல்லூரியில் நடந்த சம்பவங்கள் அதற்கு சான்று பகரும். அவர் குறிவைத்து தாக்கியதெல்லாம் தவ்ஹீது அமைப்புகளையே என்பதை நினைவில் வையுங்கள். இதுதான் தவ்ஹீது கொள்கையை வளர்க்கும் லட்சணமா?

அவரின் அத்துமீறிய செயல்பாடுகள் த.மு.மு.க.விற்கே கெட்டப்பெயரை ஈட்டித் தந்தது. கமாலுத்தீன் மதனி முதல் பெரம்பூர் கல்லூரி முதல்வர் ஹாபிஸ் அப்துல் ரஹீம் வரை தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் த.மு.மு.க.வையே பழி சொல்லுகிறார்கள். காரணம், த.மு.மு.க. மற்றும் தவ்ஹீத் தொண்டர்களையே அவர் தமது கைங்கரியங்களுக்குப் பயன்படுத்தினார் என்று அவர்கள் கூறுகிறார்கள். அது என்னவோ ஓரளவு உண்மைதான். ஆனால் இன்று பி.ஜே. த.மு.மு.க. வேறு, தவ்ஹீது வேறு என்று பேசுகிறார். அவரின் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வோம். இன்று பி.ஜே. த.மு.மு.கவிலிருந்து விலகிப்போய்விட்டார். த.மு.மு.க.விற்கு அவரால் ஏற்படுத்தப்பட்ட அவப்பெயரையும், களங்கத்தையும் அவரே சுமந்துகொண்டு இங்கிருந்து போய்விட்டார். த.மு.மு.க.வை அவரே சுத்தப்படுத்திவிட்டார். அதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்துவோம்.

இவ்வளவையும் அந்த உலவி ஒரு பக்கம் செய்வார். மறுபக்கம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பேசுவார். அவருடைய சொல்லும் கருத்துடன், கருத்தொற்றுமை காணாதவர்களை ஓரம்கட்டுவார். உதாசீனப்படுத்துவார். ஒரு பக்கம் தீவிரவாதம் கூடாதென்பார். மறுபக்கம் அராஜகங்களை அரங்கேற்றுவார். ஒருபுறம் வட்டி கூடாதென்பார். மறுபக்கம் அமானித மோசடிக்கு புதுவிளக்கம் கொடுப்பார். கருப்பு பணம் ஆகுமென்பார். அவரது நாவுக்கும் நெஞ்சுக்கும் சம்பந்தமில்லை. வாக்கு ஒன்று பேசும். மனம் ஒன்று நினைக்கும். இப்படி முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் பி.ஜே. இப்படிப்பட்ட ஒரு தலைமையின் கீழ் எந்த அமைப்பும் நீடித்து நிலைக்காது. சமுதாயம் சீர் பெறாது. அவரது கல்வியும், அறிவாற்றலும் மற்றவர்களுக்கே பயன்பட்டுள்ளது. அவருக்கு அவைகளால் எந்த பயனும் இல்லை. அவரைப் பொறுத்தவரை அவைகள் அவரிடம் தோற்றுவிட்டன.

லுழரவா ஐனெயை இளைஞர் இந்தியா என்ற பெயரில் த.மு.மு.க. மாணவர் இயக்கம் ஏற்படுவதை பி.ஜே. தடுத்தார். அதற்கு அவர் கூறிய காரணம் விசித்திரமானது. 'இன்று இவர்களை தனித்து செயல்படவிட்டால், நாளை த.மு.மு.க.வை கைபற்றிக் கொள்வார்கள். அல்லது த.மு.மு.க.விற்கு எதிராக அணி அமைத்து செயல்படுவார்கள்' என்பதே அப்போது அவர் கூறியக் காரணம். த.மு.மு.க.வை கைப்பற்ற சதிசெய்து தோல்வி கண்ட பி.ஜே. அதிலிருந்து விலகிப்போய் அதற்கு எதிராக அணி அமைத்து இப்போது செயல்படுகிறார். ஒவ்வொரு காலகட்டத்தில் எந்தக் காரியங்களை தவறு என்று பி.ஜே. 'பத்வா' அளித்தாரோ, அந்த காரியங்களை பிற்காலத்தில் அவர் செய்யத் தயங்கியது இல்லை. இது அவரது கயமைத் தன்மைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு. இப்படித்தான் 'எம்.ஜி.எம். விடியல் வெள்ளி குழுவினர் மீதும் த.மு.மு.கவிற்கு எதிராக அவர்கள் செயல்படுவதாகவும், குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார். அதுபற்றி அவர் பேசிய கேஸட்டுக்கள் சவுதி எங்கும் பரப்பப்பட்டு அவர்களையும் த.மு.மு.கவை விட்டு அந்நியப்படுத்தியது. த.மு.மு.கவிற்கு அவரால் ஏற்பட்ட நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்பதை எடுத்துக்காட்டவே இவைகளை நான் குறிப்பிடுகிறேன். இந்த உண்மையை அவரே ஒரு வகையில் ஒப்புக்கொள்வதுதான் விநோதம். த.மு.மு.க. நிர்வாகிகளுக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட 'கண்ணியவான்கள் ஒப்பந்தம்' (புநவெடநஅநn யுபசநநஅநவெ) ல் பிற அமைப்புகளில் உள்ளவர்கள் த.மு.மு.க.வில் சேராமல் இருப்பதற்கு தாமே காரணம் என்று அவர் கைப்பட எழுதிய ஒப்பந்த நகல் தெரிவிக்கிறது. வேறு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்று கூறிவிட்டு அதற்கு மாறாக அளவில்லா காழ்ப்புணர்ச்சியுடன் த.மு.மு.கவிற்கு எதிராக செயல்படும் பி.ஜே. ஒரு கண்ணியமான மனிதர் அல்ல.

இவ்வளவு உண்மைகளுக்குப் பிறகும், இன்னும் சில அப்பாவிகள் அந்த நச்சுமர நிழலில் இளைப்பாற நினைத்தால் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்களே! சுவனச் சோலையிலும் மனிதனுக்கு (ஆதம்(அலை)) ஆகாத கனிகள் காய்த்த மரம் இருந்தது போல், மார்க்க அறிஞர்கள் மத்தியிலும் கூட போலிகளும், வேடதாரிகளும் இருப்பது என்னவோ இறைவனின் நியதி போலும்! ஆகவே அப்போலிகளை இனம் காண்பதும், வேடதாரிகளை ஒதுக்குவதும் நல்லவர்களின் கடமையாகும்.

இப்போது பி.ஜே.யைச் சுற்றி வட்டமிடும் 'தக்லீத்' ஆலிம்கள் நீங்கலாக, அவர் ஊன்றி நிற்கும் முக்காலி(கள்) யார் என்பதையும் நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். அதில் ஒருவர் சிம்மக்குரலார். ஜடாமுடி வளர்த்து, மக்கள் முன் அறிமுகமான கீழக்கரைவாசி. வாசிப்பு ஏதுமில்லாது, அண்ணன் அசத்திய கேஸட்டுகளை விற்று வருவாய் தேடுபவர். மற்றவர் 'ஆயிரத்து ஒன்னு' அரபு நாட்டுக் கதையில் வரும் அற்புத விளக்கு கண்டவர். மாயபூதம் தோன்றி தன்னை காப்பாற்றும் என்ற பேதமை கொண்டவர். மற்றவர் பாஷh-அரசர்தான். முஸ்லிம் டிரஸ்டுக்கு வாங்கிய இடத்தை டிரஸ்டிடம் ஒப்படைக்காமல் காலம் கடத்தி வருவபர். அதற்கு பகரமாக பிச்சை காசாய் ரூ.15,000, மாதம்தோறும் த.மு.மு.க. நிர்வாகத்துக்கு நேற்றுவரை கொடுத்து வந்தவர். இப்போது அதையும் கொடுக்காமல் ஏப்பம் விடுபவர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது பழைய மொழி. கழகம் இரண்டுபட்டால் பாஷhவுக்கு கொண்டாட்டம் என்பது புதிய மொழி.

ஆகவே இனி அவரை ஒரு பொருட்டாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. கடந்த காலத்தில் அவர் மார்க்கத்திற்கும், சமுதாயத்திற்கும் செய்த சேவைகளுக்காக அவரை மன்னிப்போம். மறந்துவிடுவோம். ஆனால் ஒன்றை மட்டும் நான் அவருக்கு அழுத்தமாய் எச்சரிக்கிறேன். த.மு.மு.க.டிரஸ்டு சொத்துக்களை உருவாக்கியதில் கணிசமான பங்கு கொண்டவன் நான். அச்சொத்துக்களை அவர் அபகரிக்க நினைத்தால் மறுமை நாளில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அவர் மீது வழக்குத் தொடருவேன். நீதி கேட்டு மன்றாடுவேன். என்னுடன் தோளோடு தோள் நின்று டிரஸ்டு சொத்தை உருவாக்கப் பாடுபட்ட மற்ற சகோதரர்கள் விடுத்த எச்சரிக்கையையே நானும் இங்கு பதிவு செய்கிறேன்.

'எவர்கள் தங்கள் மார்க்கத்தை (தங்கள் இஷ;டப்படி பலவாறாக)ப் பிரித்து (அவர்களும்) பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ, அவர்களுடன் உங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது. அவர்கள் செய்து கொண்டிருந்த (இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான்'. (அருள்மறை குர்ஆனின் 6வது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம்).

'இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக!' (அருள்மறை குர்ஆனின் முதல் ஸுரத்துல் பாத்திஹாவின் 1ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் வசனங்கள்.)

hவவி:ஃஃறறற.pதஎளவஅஅம.உழஅ என்ற வெப் சைட்டில் மேற்கண்ட ஆக்கம் இடம் பெற்றுள்ளது. கீழ் காணும் வசனங்களையும் நவீன தக்லீதுகளின் பார்வைக்கு வைக்கிறோம்.
33:66 .நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ''ஆ, கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே!'' என்று கூறுவார்கள்.
33:67 .''எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்'' என்றும் அவர்கள் கூறுவார்கள்.
33:68 .''எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக் அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக'' (என்பர்).

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.