2:93 உங்கள் ஈமான் உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே ஏன்?

இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" - A.K.A


இழிவான இச்செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகின்ற உங்கள் நம்பிக்கை எத்துணை விசித்திரமானது!- (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது 

உரையாடல் தொனியில் இருந்து இந்த வசனம் வரலாறு சொல்லும் தொனிக்கு மாறி உள்ளதை அறிவுள்ளவர்கள் புரிவார்கள்.

https://mdfazlulilahi.blogspot.com/2021/01/293.html




وَإِذْ  வஇ(ர்)து  
போது -சமயம் - நேரம் 


أَخَذْنَا அகதுனா
வாங்கினோம்

مِيثَاقَكُمْ மீதாககும் 
உங்கள் உறுதிமொழியை
 
وَرَفَعْنَا - வரFபஃனா
உயர்த்தினோம்

فَوْقَكُمُ - Fபவ்ஃககுமு 
உங்களுக்கு மேல்

الطُّورَ- அத்துார 
துார் (எனும் மலையை)

 خُذُوا - கு(ரூ)துா 
 பிடியுங்கள்
(கடைப்)
مَا மா
எதை
آتَيْنَاكُمஆதைனாகும் 
உங்களுக்கு கொடுத்தோம்
مَا آتَيْنَاكُم- மாஆதைனாகும் 

நாம் வழங்கியதை (வேதத்தை) - கொடுத்தோம் உங்களுக்கு

بِقُوَّةٍ - பிஃகுவ்வதின்  
பலமாக -வலுவாக -உறுதியுடன் 

وَاسْمَعُواவஸ்மஊ
செவிசாயுங்கள்
--------------
قَالُوا - வ ஃகாலுா  
கூறுகின்றனர் - கூறினார்கள்கூறுகிறார்கள்.-சொன்னார்கள்
سَمِعْنَا ஸமிஃனா 
செவியுற்றோம்

وَعَصَيْنَاவஅஸய்னா
மாறு செய்தோம்
وَأُشْرِبُوا - வஉஷ்ரிபூ 
ஊட்டப்பட்டார்கள்

فى فِ பீ (Fee) -  
ல். 

قُلُوبِஃகுலுாபி 
இதயங்கள் – உள்ளங்கள் - நெஞ்சங்கள்

هِمْ - ஹிம் 
அவர்களது – அவர்களின் – அவர்களுடைய

فِي قُلُوبِهِمُFபீஃகுலுாபிஹிமு
அவர்களின் உள்ளங்களில்

الْعِجْلَ -  அல் ஃஇஜ்ல
காளைக்கன்றை
بِكُفْرِهِمْபிகுFப்ரிஹிம்  
அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக
--------------------
قُلْ -  குல்
கூறுவீராக
بِئْسَمَاபிஃஸமா
கெட்டதை
يَأْمُرُكُم  யஃமுறுகும்  
உங்களுக்கு கட்டளையிடுகிறான் (ஏவுகிறான் - ஆணய்யிடுகிறான் - ஏவுகிறது)
بِهِபிஹி 
அதை
إِيمَانُكُمْஈமானுகும்
உங்கள் நம்பிக்கை
إِن كُنتُم இன் குன்தும் 
நீங்கள் இருந்தால் (இருந்திருந்தால் - இருப்பீர்களானால்)
مُّؤْمِنِينَமுஃமினீன
நம்பிக்கையாளர்களாக

وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُم بِقُوَّةٍ وَاسْمَعُوا ۖ قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ ۚ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُم بِهِ إِيمَانُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ ﴿٩٣﴾
தமிழ் நடையில் மொழிப்பெயர்ப்புகள் :

2:93. உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம்.22 "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்; மாறுசெய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது.19 "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக! - (PJதொண்டி


தூர் மலையை உங்கள் (முன்னோர்) மேல் உயர்த்தி "நாம் உங்களுக்குக் கொடுத்த(த் தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிப் பிடியுங்கள்; அதற்குச் செவி தாழ்த்துங்கள்" என்று (கட்டளையிட்டு, அதற்குக் கட்டுப்பட) வாக்குறுதி கேட்டோம். (அதற்கு அவர்கள்) "நாங்கள் செவி தாழ்த்தினோம்; எனினும் மாறு செய்வோம்" என்று கேலி பேசினார்கள். மாறு செய்த காரணத்தால் அவர்களின் உள்ளங்களுள் காளைக்கன்றின் மோகம் புகட்டப்பட்டது. நீங்கள் மெய்யான இறை நம்பிக்கையாளர்கள் எனில், உங்களுடைய (உள்ளத்தினுள் உறைந்து விட்ட மூட) நம்பிக்கை கட்டளையிடுவது மிகவும் கெட்டது (என்று உணர்ந்து கொள்வீர்கள்) என (நபியே!) நீர் கூறுவீராக! -(அதிரை ஜமீல்)


உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் செவிசாயுங்கள் என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூறுங்கள்.
செவியுற்றோம் மாறுசெய்தோம் என்று கூறினார்கள்
அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்றை ( வணங்கும் மோகம்) ஊட்டப்பட்டார்கள்
நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது என்று ( நபியே) கூறுவீராக (2:93)

தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே!) நீர் கூறும். - ஜான் டிரஸ்ட் 



உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்கு மேல் "தூர்" என்ற மலையை உயர்த்தி "உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப் பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்" என்று கூறியதற்கு (அவர்கள் "நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்" என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டுவிட்டது. "(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். - ( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

பிறகு உங்கள் மீது தூர் மலையை நாம் உயர்த்தி, நாம் உங்களிடமிருந்து பெற்றுக்கொண்ட உறுதியான ஒப்பந்தத்தை (சற்று) நினைத்துப் பாருங்கள். “உங்களுக்கு நாம் அருளுகின்ற அறிவுரைகளை வலுவாகக் கடைப்பிடியுங்கள். மேலும் (நம்முடைய கட்டளைக்குச்) செவிசாயுங்கள்” என்று நாம் கூறினோம். அதற்கு உங்கள் முன்னோர்கள் “நாங்கள் செவியேற்றோம்; ஆனால் மாறு செய்வோம்” என்று கூறினார்கள். அவர்களின் அசத்தியப்போக்கு எந்த அளவு முற்றியிருந்ததெனில், அவர்களுடைய நிராகரிப்பின் காரணத்தால் காளைக் கன்று வழிபாட்டின் மீது அவர்களின் உள்ளங்கள் மோகம் கொண்டிருந்தன. “நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தால், இழிவான இச்செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகின்ற உங்கள் நம்பிக்கை எத்துணை விசித்திரமானது!” என்று நீர் கூறும். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

 

உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கி, இன்னும் தூரை (சீனாய் மலையை) உங்களுக்குமேல் உயர்த்தியபொழுது, “உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை பலமாகப்பிடியுங்கள்; இன்னும், (அதை செவிசாய்த்துக் கேளுங்கள்” (என்று கூறியதையும் நினைவு கூருங்கள்) அதற்கவர்கள் “நாங்கள் செவியேற்றோம்) இன்னும், உம் கட்டளைக்கு நாங்கள் மாறு செய்தோம்” என்று கூறினார்கள். மேலும், அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுடைய இதயங்களில் ஒரு காளைக் கன்றின் அன்பினை புகட்டப்பட்டுவிட்டார்கள், நீங்கள் விசுவாசங்கொண்டோராக இருந்தால் எதைச்செய்யுமாறு உங்களுடைய விசுவாசம் தூண்டுகிறதோ அது மிகக் கெட்டது” என்று (நபியே!) கூறுவீராக!-

(அல்-மதீனா அல்-முனவ்வரா)


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு