2:92 தெளிவான சான்றுகளைக் கண்ட பின்னரும் அநீதி இழைத்து பாவம் செய்து அ நியாயக்காரர்களாக ஆனவர்கள் யார்?

وَلَقَدْ -  வலஃகத்



இது  தஃகீத் (உறுதிபடுத்தும்)  வார்த்தை  லஃகத்  என்பதற்கு  திண்ணமாக -திட்டவட்டமாக - நிச்சயமாக - உறுதியாக  என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.  

இப்படி மொழி பெயர்த்தவர்களே இதற்கு இது பொருள் அல்ல என்றும் கூறுகிறார்கள். 


லஃகத்  என்பது தஃகீத்  என்னும்  உறுதிபடுத்தும் சொல்லாகும். இதற்கு நிச்சயமாக போன்றவை  நேரடி பொருள் கிடையாது . -(அது இருந்துள்ளது)




جَاءَ -  ஜாஃஅ
வந்தார் (வந்தது)

كُم - கும் 
உங்களிடம்

مُّوسَىٰ மூஸா
மூசா

بِالْبَيِّنَاتِ -   பில் பையினாதி
தெளிவான சான்றுகளுடன் - ஆதாரங்களுடன் - தெளிவான அத்தாட்சிகளுடன் -அத்தாட்சிகளைக் கொண்டு


ثُمَّ - து(ஸு)ம்ம  
பின்னர் – பின்பு – பின்னும் - பிறகு -அப்பால்


اتَّخَذْتُمُ - த்தஃக(ர்)த்துமு 
எடுத்துக் கொண்டீர்கள் - நீங்கள் எடுத்துள்ளீர்கள் -கற்பனை செய்தீர்கள் - ஆக்கிக்கொண்டீர்கள்


الْعِجْلَ -  அல் ஃஇஜ்ல 
காளைக் கன்றை

 مِنْۢ - மின் 
இருந்து From -லிருந்து 
 بَعْدِ-  பஃஹ்தி 
பின் - பின்னர் - பிறகு
هِ - ஹி 
அவருக்கு

مِن بَعْدِهِ - மின்ம் பஃதிஹி 
அவருக்குப் பின்(னர்)  - அவருக்குப் பிறகு - அதன்பின்

وَأَنتُمْ - அன்தும்
நீங்களோ

ظَالِمُونَ ழாலிமூ(ன)ன்


وَلَقَدْ جَاءَكُم مُّوسَىٰ بِالْبَيِّنَاتِ ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِن بَعْدِهِ وَأَنتُمْ ظَالِمُونَ ﴿٩٢﴾

மொழிப்பெயர்ப்புகள்:

92. மூஸா தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். அவருக்குப் பின் அநீதி இழைத்து காளைக்கன்றைக் (கடவுளாக) கற்பனை செய்தீர்கள்.19 -(PJதொண்டி


காளைக்கன்றை ( தெய்வமாக) ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?


திண்ணமாக, மூஸா உங்க(ள் முன்னோர்க)ளிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்த பின்னரும் காளைக் கன்றை வணங்கியதால் பாவம் செய்த சமுதாயம் ஆனீர்கள். - (அதிரை ஜமீல்)


திட்டவட்டமாக மூசா தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார் பிறகு ஒரு காளைக்கன்றை ( தெய்வமாக) அவருக்குப் பின்னர் எடுத்துக் கொண்டீர்கள் நீங்களோ அ நியாயக்காரர்கள் (கடையநல்லுார்காரர்)


நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்; (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். - ஜான் டிரஸ்ட்

 

(இஸ்ராயீலின் சந்ததிகளே!) நிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையே கொண்டு வந்திருந்தார். ஆனால், நீங்களோ அதற்குப் பின்னும் ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். (இவ்வாறே ஒவ்வொரு விஷயத்திலும்) நீங்கள் (வரம்பு கடந்த) அநியாயக்காரர்களாகவே இருக்கின்றீர்கள். -

( ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி ,காரைக்கால்)

 

மேலும், மூஸா உங்களிடம் (எத்துணைத்) தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருந்தும், அவர் (உங்களை விட்டுத் திரும்பிச்) சென்ற உடனேயே நீங்கள் காளைக் கன்றை தெய்வமாக்கிக் கொண்டீர்கள். அந்த அளவுக்கு அக்கிரமக்காரர்களாய் நீங்கள் இருந்தீர்கள். - (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT)

 

மேலும், மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளை நிச்சயமாக கொண்டு வந்தார். அப்பால், அவருக்குப் பின்னர் நீங்கள் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக்கொண்டீர்கள்; அந்நிலையில் நீங்களோ அநியாயக்காரர்களாக இருக்கிறீர்கள்.-(அல்-மதீனா அல்-முனவ்வரா)





Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு