தோற்றுவாயா? வெற்றியின் கீதமா? புகழ் என்பதா? நன்றி என்பதா?
அல் பாத்திஹா அத்தியாயத்தின் 7 வசனங்களை தமிழில் மொழி பெயா்த்தவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு வித வார்த்தைகளால் மொழி பெயா்த்துள்ளார்கள்.
https://mdfazlulilahi.blogspot.com/2021/01/blog-post_23.html
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... (P.J.)
1:1 (துன்யாவில் சகலருக்கும்) கருணை புரிபவனும் (ஆகிறத்தில் ஈமானுள்ளவர்களுக்கு மட்டும்) அருள் பாலிப்பவனுமான அல்லாஹு(தஆலா)வுடைய திருநாமத்தால் (இதை ஓத ஆரம்பஞ் செய்கின்றேன்.) - (S.S.முஹம்மது அப்துல் காதர் பாகவி
பொங்கும் கருணையாளன், தொடர் கிருபையாளன்
அனைவரின் மீதும் மிக்க இரக்கமும் கருணையுமுள்ள அல்லாஹ்வின் திருப் பெயரால்... துவங்குகிறேன் (ஸலாமத்)
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்... -
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் என்பதைச் சோ்த்து தான் அல் பாத்திஹா அத்தியாயத்தின் (7) ஏழு வசனங்கள் என்ற கருத்துடையவர்களும் சோ்க்காமல்தான் ஏழு வசனங்கள் என்ற கருத்துடையவர்களும் இருக்கிறார்கள்.
اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ
அல்ஹம்து லில்லாஹி றப்பில் ஆலமீ(ன)ன்
1.அனைத்துப் புகழும், அகிலங்கள் அனைத்தி(னையும் படைத்துப் பரிபக்குவப் படுத்துகி)ன்(ற) இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது.- (திரீயெம் பிரிண்டர்ஸ்)
1. அனைத்து புகழும், அகிலத்தாரின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே உரியது.(A.முஹம்மது சிராஜுத்தீன் நூரி)
1. சர்வ புகழும் அல்லாஹ்வுக்கே சர்வ உலகங்களையும் (படைத்துப் பரிபாலித்து) இரட்சிப்பவன். (அன்வாருல் குா்ஆன்)
1:2 எல்லாப் புகழும் அனைத்துலகிற்கும் ரப் ஆகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். -(I.F.T)
2. அனைத்துப் புகழும், அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹுக்கே உரியது. –(இக்பால் மதனி)
“அல் ஃபாத்திஹா” வுக்கு முதன்மையானது என்ற பொருள் தரக் கூடிய தோற்றுவாய் என்று ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி முதல் PJ வரையிலான முதர்ஜிமீன் (மொழி பெயர்ப்பபளர்)களும் மொழி பெயர்த்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு கூட்டம் மட்டும் வெற்றியின் கீதம் என்று மொழி பெயர்த்துள்ளது.
அதுபோல் அல்ஹம்து க்கு எல்லாரும் புகழ் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ததப்பருல் குர்ஆன் என்ற புதிய சமுதாயம் பதிப்பகம் வெளியீட்டில் நன்றி என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.
அதற்கு 7:43. 10:10 14:39. ஆகிய வசனங்களை ஆதாரமாகக் காட்டி இந்த இடங்களில் பொருத்தமான வார்த்தை நன்றி என்பது தான் என்று கூறி உள்ளார்கள்.
அதன்படி நன்றி என்றே மொழி பெயர்த்துள்ளார்கள்.
அல்ஹம்து ல் மட்டுமல்ல இது போல பலவற்றை புதிய சமுதாயம் வெளியீட்டில் காணலாம்.
அல்ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது. திருக்குர்ஆனிலேயே இந்த அத்தியாயம் குறித்துச் சிறப்பித்துக் கூறப்பட்டிருக்கிறது. பார்க்க 15:87 (P.J. 2002)
الْحَمْدُ - அல்ஹம்து
புகழ் - எல்லா(அனைத்து)ப் புகழும் - புகழ் யாவும் - சர்வ புகழும்
لِلّٰهِ -லில்லாஹி
அல்லாஹ்வுக்கே.
رَبِّ - றப்பி
பராமரிப்பவன்
الْعَالَمِينَ- அல் ஆலமீ(ன)ன்
அகிலங்கள்
Comments