1-7குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க எளிய வழி எது? பாகம் -1

குர்ஆனில் இடம் பெற்றுள்ள  வார்த்தைகளை அ(லீFப்), ப (அகர - Alphabetical)  வரிசையில்  தர   ஆரம்பித்துள்ளோம். 


குறிப்பிட்ட ஒரு வார்த்தை குர்ஆனில் எத்தனை இடங்களில்  இடம் பெற்றுள்ளன என்பதை  அடைப்புக்  குறிக்குள்  குறிப்பிட்டுள்ளோம்.    


(அகர) வரிசைப்படி  முதலில் உள்ள  ஆறு வித  வார்த்தைகளை  மட்டும் கூட்டிப் பார்த்தால் 102 வரும். இந்த ஆறு வார்த்தைகள் தான் 102 இடங்களில் மீண்டும் மீண்டும் வந்துள்ளன என்பதை அறிவீர்கள்.




ஏழாவதாக  உள்ளவை அபுன்   என்ற  வேர்ச் சொல்லில் இருந்து வந்தவை.

அபுன்  என்றால் தந்தை என்று அர்த்தம். 


அபூகும், அபாகும், அபீகும்  இந்த மூன்றுக்குமே உங்களுடைய தந்தை என்பதே பொருள்.  இது மாதிரிதான்  பெரும்பாலான  வார்த்தைகள் இருக்கும்.

இவற்றுக்கு முன்னால் வரும் அலீFப், வாவு, ய  போன்ற துணை   எழுத்துக்களை வைத்தும் வசனங்களை வைத்தும்

தந்தை, 
தந்தையாக,  
உங்கள் தந்தை ,  
நமது தந்தை,    
அவரது தந்தை,  
அவர்களின் தந்தை,   
அவர்களின்தாய்  தந்தை (பெற்றோர்) 
உங்கள் முன்னோர், 
எங்கள் முன்னோர்   (தந்தைகள்- பிதாக்கள்) 
இப்படியாக பொருள் வரும்.

அபுன் என்ற ஒரு  மூலச் சொல்லில் இருந்து   33 விதமான வார்த்தைகளாக 118  இடங்களில் வருகின்றன  தந்தை (பெற்றோர்)   சம்பந்தமான வார்த்தைகள்

முதல் 6 வார்த்தைகள்  அபுன் சேர்த்து 102  + 117= 219 வார்த்தைகள்.

220 இடங்களில்  வரும் வார்த்தைகளின்   மூலச் சொல் ஏழுதான். அவை தான் மீண்டும் மீண்டும்  வருகின்றன. 

ஆக குர்ஆன் முழுவதையும்  பொருளுணர்ந்து படிக்கவும் படித்துக் கொடுக்கவும்  படிக்க வைக்கவும் நாம் தெரிய வேண்டியது சுமார்   818 அரபு வார்த்தைகளே. 

இந்த உண்மையை அறிந்தால் மனம் பாரமாக இருக்காது.  குர்ஆனை பொருளுணர்ந்து படிக்க மனம் பாரமாகப் போகக் காரணம் என்ன?


திரு  குர்ஆனில் மொத்தம் 3,21,267 (மூன்று லட்சத்து இருபத்தி ஓர் ஆயிரத்து  இருநுாற்றி அறுபத்தி ஏழு எழுத்துக்கள் உள்ளன.

 ஜபர் (என்ற அகரம்)    53,223  இடங்களில் வருகிறது

ஜேர் (என்ற இகரம்) 39,582 இடங்களில் வருகிறது

பேஷ் (என்ற உகரம்;) 8804 இடங்களில் வருகிறது

'மத்து' என்ற நீட்டல் குறி 1771 இடங்களில் வருகிறது

'ஷத்து'என்ற அழுத்தல் 1274 இடங்களில் வருகிறது

'நுக்தா' (புள்ளி)க்கள் 1,05,684 எழுத்துக்களில் உள்ளன.

ஆக  531605 ஐந்து லட்சத்து முப்பத்தி ஒண்ணாயிரத்தி அறுநுாற்றி ஐந்து. இந்த மாதிரி  கணக்குகளை மதரஸாக்களில் பாடம்  என்ற பெயரால் நடத்துவதால். குர்ஆனை பொருளுணர்ந்து படிப்பது கடினம் என்று ஆரம்பத்திலேயே  பிஞ்சு உள்ளங்களில் பதிந்து  பாரமாக  ஆகி விடுகிறது.

மூல   வார்த்தைகள்  800 தான். அவற்றை தெரிந்தால் போதும் என்ற உண்மையை உணர்ந்து  படித்தால் மனப்பாரம் குறைந்து விடும்.  குர்ஆனை பொருளுணர்ந்து படிப்பது எளிதாகி விடும்.


1

اَبًّا

அப்(பன்)பா  (1)   

தீவனங்கள்                

80:31              

    

2أَبَدًا

அப(தன்)தா   (28)  

ஒருபோதும்           

2:95.    



3 اِبْرٰهٖمَ

இப்றாஹீம  (69)  

           இப்றாஹீம்

 2:125    



4 اَبَقَ அபஃக (1)  

         ஒளிந்தோடிய  

      37:140, 

5

الْاِبِلِ

இப்லி (2)

         ஒட்டகம்

     6:144.   

6

 اَبَابِيْلَۙ

அபாபீல (1)  

         கூட்டங்கூட்டமாக

       105:3. 

ஆறு வார்த்தைகளை பார்த்த நாம் 7வதாக   அபுன்  (தந்தை)   என்ற ஒரு  வேர்ச் சொல்லில் இருந்து 33  வகையாக  117 இடங்களில் திரும்பத் திரும்ப வரும் வார்த்தைகளை பார்ப்போம்.

7

 اَبًا

அபன் (1)

        1. தந்தை 

       12:78. 

7

  اَبَآ

அபா (1)

        2. தந்தையாக 

       33:40. 

7

 اَبَاكُمْ

அபாகும்  (1)

        3. உங்கள் தந்தை 

       12:80.


7

  اَبَانَا 

அபானா(7)  

         4.நமது தந்தை 

   12:8.   


7

  اَبَاهُ

அபாஹு (1)

         5. அவரது தந்தை 

       12:61.   



7

 اَبَاهُمْ 

அபாஹும் (1)  

   6. அவர்களின் தந்தை 

       12:16. 


7

 اَبَتِ

அபதி (8)  

   7.      என் தந்தை 

       12:4  


7

  اَ بُوْكِ

அபூகி(1)  
(பெண்பால்) 

    8.  உனது தந்தை   

       19:28 


7

 اَبُوْنَا

அபூனா  (1)  

     9.எங்கள் தந்தை 

       28:23.


7

  اَبُوْهُمْ

அபூஹும் (2) 

10.   அவர்களது தந்தை 

       12:68.  


7

  اَبُوْهُمَا 

அபூஹுமா (1) 

  11. அவர்களின் தந்தை

       18:82.  


7

  اَبِىْۤ

பீ (5)  

    12.   என் தந்தை 

       12:80. 


7

  اَبِيْكُمْ 

அபீகும் (4) 

   13.  உங்கள் தந்தை

       12:9  


7

 ابينا

அபீனா (1) 

   14. நமது தந்தை    

       12:8  


7

 اَبِيْهِ

அபீஹி (10)  

   15.   தம் (தன்)தந்தை 

       6:74. 

 
7

  اَبِيْهِمْ

அபீஹிம் (1)

16. அவர்களின் தந்தை 

       12:63.   


7

  اَبَوٰهُ

அபவாஹு  (2)  

 17.அவர்களின்தாய்  தந்தை

(பெற்றோர்)

       4:11.


7

  اَبَوَيْكَ 

அபவைக  (1)  

18  உனது தந்தையரான  

       12:6.


7

  اَبَوَيْكُمْ

அபவைகும் (1) 

19 உங்கள் தாய்  தந்தை   (பெற்றோர்)

       7:27  


7

  اَ بَوَيْهِ

அபவைஹி (3)  

20. அவர்களின் தாய்  தந்தை (பெற்றோர்)

       4:11. 


7

 اٰبَآءِ

ஆபாயி (1) 

 21.      தமது  தந்தையர் 

       24:31. 


7

  اٰبَآءَکُمْ

ஆபாயிகும் (3)  

22. உங்கள் முன்னோர்களை (தந்தையரை) 

       2:200.  


7

  اٰبَآءَنَا ؕ

ஆபாஃஅனா
 (10)  

23.  எங்கள் முன்னோர் 
 (தந்தைகள்- பிதாக்கள்)

       2:170. 

7

  اٰبَآءَهُمْ

ஆபாஃஅஹும் (7) 

24. அவர்களின் முன்னோர்   

       21:44.  


7

 اٰبَآؤُكُمْ

ஆபாஃஉகும் (10) 

  25.   உங்கள் பெற்றோர்   

       4:11 

  
7

 اۤ اٰبَآؤُنَا

ஆபாஃஉனா(12) 

26எங்கள் முன்னோர் 

       6:148. 


7

  اٰبَآؤُهُمْ

ஆபாஃஉஹும் (4) 

  27. உங்கள் பெற்றோர்   

      2:170. 


7

  اٰبَآٮِٕكَ

ஆபாஃயிக(1) 

 28.    உங்கள் தந்தை  

       2:133.


7 اٰبَآٮِٕكُمْஆபாஃயிகும்(4) 29. உங்கள் தந்தையர் 

 24:61.


7

  اٰبَآٮِٕنَا

ஆபாஃயினா(4)

  30. நமது முன்னோர்   

     23:24.


7

  اٰبَآٮِٕهِمْ

ஆபாஃயிஹிம்(5)

31.  அவர்களின் முன்னோர்  

     6:87.


7

  اٰبَآٮِٕهِنَّ

ஆபாஃயிஹின்ன(2)
(பெண்பால்)

32.  தமது தந்தையர்

     24:31.


7

  اٰبَآءِىْۤ

ஆபாஃயீ (1)

  33.     என் முன்னோர்

     12:38.



அபா , அபவ், அபய்ன, தஃபா போன்றவற்றை  அடுத்து பார்ப்போம்.


Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு