ஷிர்க்கை விட கொடிய, மகா மோசமான, பெரும்பாவமான மாபவாச் செயல் பற்றி குர்ஆனில் கூறப்படவில்லையா?
உம்மாவுடன் உம்ராவுக்கு வந்தவரே இன்னுமா உறக்கம்? நீங்கள் பீ.ஜே க்கு எதிராக தருவதாகச் சொன்ன சி.டி. ஆதாதரங்கள் எங்கே?
https://mdfazlulilahi.blogspot.com/2021/01/blog-post_16.html
யாருக்கும் பயந்து பதில் போடாமல் இருக்கவில்லை. டாக்டர் அறிவுறுத்தல் படி ரெஸ்ட்டில் உள்ளேன்.
குர்ஆன் சம்பந்தமான அறிவு அறவே இல்லாதவர்கள் ஷிர்க்கை விட கொடிய செயல் என்று குர்ஆனில் இல்லை என்பது போல பரப்பி வருகிறார்கள். அதனால் இந்தப் பதிவு.
அப்பனுக்கு (கடவுளுக்கு) பாடம் சொன்ன சுப்பையா என்ற கொள்கை உடைய 4வது வீட்டுக்காரர்கள் இருக்கிறார்கள். அது போன்ற கொள்கை உடையவர்களின் சந்தேகங்கள் கேள்விகள் அத்தனைக்கும் எனது உரையிலேயே பதிலும் விளக்கமும் இருக்கிறது.
சுய சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொண்டு சுய சிந்தனையற்று காப்பி பேஸ்ட் கம்பெனி நடத்தி வருபவர்கள்.
அறியாமைக் கூட்டத்தை அறிஞர்கள் குழு என்று ஏற்று இருப்பவர்கள். இப்படியானவர்கள் எல்லாம் நேற்றைய எனது ஜும்ஆ உரையை முன் பின் வெட்டி. ஷிர்க்கை
விட கொடியது பற்றி குர்ஆனில் கூறப்படவில்லை என்பது போல் பரப்பி வருகிறார்கள். கூகுல் ஆலிம் என்ற பட்டமும் வழங்கி உள்ளார்கள். கூகுல் ஆலிம்கள் யார்? என்று பார்ப்போம்.
49:16. வசனத்தில் உள்ள அதுஅல்லிமூனல்லாஹ பிதீனிகும்? என்பதற்கு உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? என்று பீ.ஜே.யைத் தவிர யாருமே மொழி பெயர்க்கவில்லை.
அறிவிக்கிறீர்களா? என்றே எல்லாருமே மொழி பெயர்த்துள்ளார்கள் என்று புளித்துப் போன வாதத்தை வைத்துள்ளார்கள். இப்படி சொல்பவர்கள் பொய்யர்கள். அதற்குரிய ஆதாரங்களை இணைத்துள்ளேன்.
எந்த ஒரு தர்ஜமாவையும் படிக்காமலேயே எல்லா தர்ஜமாக்களையும் படித்ததாக கதை அடிப்பார்கள். இதை நேற்றையை உரையிலும் சொல்லிக் காட்டி இருந்தேன். அது போன்ற கப்ஸா ஸாஹிபுகள் தான் இந்தக் கப்பியையும் கழட்டி விட்டிருக்கிறார்கள்.
பீ.ஜே. மட்டுமே இப்படி மொழி பெயர்த்து இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும். அது சரியா தவறா என்றுதான் பார்க்க வேண்டும்.
அரபுமொழியை அரைகுறையாக படித்தவர்களால். தாய் மொழி தமிழிலேயே ததிகினதோம் தாளம் போடுவர்களால் பீ.ஜே. மொழி பெயர்ப்பின் அருமையை அறிய முடியாது. குர்ஆனை ஆய்வுடன் படிக்கத் தெரியாது.
ஷிர்க் (இணை வைத்தல்) என்றால் சமமாக வைத்தல் என்று பொருள்.
அல்லாஹ்வின் துாதர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஒரு சர்ச்சை ஒரு பிரச்சனை வரும்போதுதான் ஆயத்து, ஹதீஸ் மூலம் சட்டம் சொல்வார்கள்.
எங்கள் இமாம்களின், அறிஞர்களின் சிறப்பு என்னவென்றால் இனி மேல் வரக் கூடிய பிரச்சனையை யோசித்து சட்டம் வகுப்பது என்று வழிகெட்டக் கூட்டத்தினர் உளரித் திரிகிறார்கள். இது ஷிர்க்கை விட கொடியதா இல்லையா? சமமாக வைத்ததற்கே நிரந்தர நரகம் என்றால்.
சமமாக வைத்தல் என்ற நிலையிலிருந்து அதற்கு ஒரு படி மேலே வைத்து அல்லாஹ்வும் துாதரும் சொல்லாத வருங்கால சட்டங்களை தங்கள் அறிஞர் குழு சொல்லும் என்றால் இது ஷிர்க்கை விட பெரிய பாவமா இல்லையா?
இது போன்ற செயல் உடையவர்களைப் பார்த்துதான் அல்லாஹ் கேட்கிறான்.
அதுஅல்லிமூனல்லாஹ பிதீனிகும்?
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? என்று.
அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்றால் அல்லாஹ்வுக்கே பாடம் நடத்துபவர்கள். அல்லாஹ்வுக்கு தெரியாத மார்க்கத்தை சொல்லி கொடுப்பவர்கள் என்றுதானே அர்த்தம்.
சமமாக வைத்ததற்கே நிரந்தர நரகம் என்றால். அல்லாஹ்வுக்கும் மேலே வைத்து விட்டவர்களுக்கு?
அறிவு உள்ளவர்கள் அறிவார்கள் புரிவார்கள். அறிவு இல்லாமல் அறிஞர்கள் குழு என்று பிதற்றித் திரிபவர்களும் அவர்களது ஆதரவாளர்களும். ஷிர்க்கைவிட மேலான பாவத்துக்குரிய தண்டனை எதுவோ அதை அனுபவிக்கும் போது தான் புரிவார்கள்.
Comments