2:84 ஊரா? நாடா? வீடா? ஆய்வுடன் மொழி பெயர்ப்புகளை படித்தீர்களா?
இவற்றில் எது சரி? என்கிறது உங்கள் ஆய்வு? இந்த வசனத்தில் தியாரிகும் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதற்கு 1.அன்வாறுல் குர்ஆன், 2. ஸலாமத், 3.மலிவு பதிப்பு, 4.திரீயெம் ஆகிய நான்கு பதிப்பகத்தார் உங்கள் நாடுகள் என்று மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். 1. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் -IFT, 2. அதிரை ஜமீல் ஆகியோர் ஊர் என்று மொழி பெயர்த்துள்ளார்கள். 1. ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி 2. P.J. 3. K.S. ரஹ்மதுல்லாஹ் இம்தாதி , 4. ஜான் டிரஸ்ட், 5.பஷாரத் 6.உமர் ஷரீப் காஸிமி 7. றஹ்மத் 8. அல்-மதீனா அல்-முனவ்வரா 9. தாருஸ்ஸலாம் , ரியாத் ஆகிய 9 வெளிியீடுகளிலும் உங்கள் வீடுகள் ( இல்லங்கள்) என்று மொழி பெயர்த்துள்ளார்கள். தார் என்பது ஊர், நாடு, வீடு, மறுமை வீடு, இவ்வுலகம் மறு உலகம் என்று இடத்துக்கு தக்கவாறு பல பொருள்கள் தரக் கூடிய வார்த்தைதான். இந்த வசனத்தின் இந்த இடத்தில் வீடு என்பதே பொருத்தமான மொ...